(2003 ஜனவரி 12 ஞாயிற்றுக்கிழமை லோக்காட்ஜ்ரோ, அபிட்ஜான்-ஐவரிகாஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
1உலகச் சபைகளின் (எக்யூமெனிக்கல்) மாநாட்டைப் பற்றி பேச விரும்புகிறேன். தீர்க்கதரிசிகள் அதைப் பற்றி பேசினர், இது ஜனவரி 9, 2003 அன்று நடந்தது. ஒரு வரலாற்று அடையாளம் கொடுக்கப்பட்டது. வேதாகமமும் குர்ஆனும் சந்தித்து கொண்டன. கத்தோலிக்கர்கள், புராட்டஸ்டன்டுகள், சுவிசேஷகக் கூட்டத்தினர்கள், வெளிப்படுத்தப்பட்ட அல்லது மறுசீரமைக்கப்பட்ட சபைகள், முஸ்லிம்கள், பௌத்தர்கள், மாஹிகரியினர், ரோஸிகுருசியர்கள், பாரம்பரிய மதங்கள், எக்காங்கர், பஹாய் நம்பிக்கையினர், அரசியல்வாதிகள், மாயமந்திர முறைமையினர் ... எல்லோரும் டிரிச்வில்லியில் (Treichville) உள்ள விளையாட்டுக்களின் அரண்மனையில் ஜெபிப்பதற்கு ஒன்றுகூடினர். யாரிடம் ஜெபிப்பதற்கு? எனக்கு தெரியாது! அது எனது புரிந்துகொள்ளுதலுக்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறது. அது சபைகளின் ஒரு கூட்டமைப்புக்கும் அப்பாற்பட்டது. அது ஒரு மனிதனால் கற்பனை செய்ய முடியாத ஒன்று.
2தீர்க்கதரிசிகளின் முன்மாதிரியைப் பின்பற்றி, பூர்வ காலங்களில் எனக்கு முன்னால் இருந்த அனைவரின் மாதிரியையும் பின்பற்றி, நான் அங்கு இருந்தேன். அங்கே தீர்க்கதரிசிகளைக் கண்டுபிடிப்பேன் என்று நினைத்தேன், ஆனால் ஒருவரும் இல்லை. இந்த வரலாற்று சந்திப்பில் உண்மையுள்ள மனிதர்கள் எங்கே? விளையாட்டு அரண்மனைக்கு எதிராக அங்கே தேவனுடைய கோபத்தின் இடிகளும் மின்னல்களும் இருப்பதை என்னால் வெளிப்பாட்டினால் காணமுடிந்தது. பிறகு நான் ஒரு கிரகணத்தை பார்த்தேன். அனைத்து கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் மற்றும் மாயமந்திர முறைமையினர் குடியரசு தலைவருடன் சேர்ந்து, அவர்கள் சமாதானத்திற்காக ஜெபித்தனர். அவர்கள் எந்த தெய்வத்தினிடம் ஜெபித்தனர்? எனக்கு தெரியாது!
3அடுத்த நாள், நான் ஒரு சுவிசேஷப் பத்திரிகையில், இந்த தூஷணமான தலைப்பை கண்டேன்: "வேதாகமம் குர்ஆனுடன் இணைந்தது"; கார்டினல் பெர்னார்ட் ஆக்ரே, இமாம் இட்ரிஸ் கவுடூஸ், ரெவரண்டு எடிமூ ஜேக்கப், மெத்தடிஸ்டு சபையின் தலைவர் ரெவரண்டு பெஞ்சமின் போனி ... அவர்கள் அனைவரும் பத்திரிகையின் முதல் பக்கத்தில், கரத்தோடு கரம் சேர்த்து அங்கு இருந்தனர். சாத்தான் தான் இந்த சபைகளின் தேவன் என்றும் வௌவால் தான் அவர்களின் ஆன்மீக சின்னமாக இருக்கிறது என்றும் நான் எப்போதும் சொன்னதில்லையா? ஐவரிகோஸ்டு மற்றும் ஆபிட்ஜானின் இருதயமான பிலாதெயோவின் (plateau) இருதயத்தில் தேவன் சில வௌவால்களை வைக்கவில்லையா?
4ஆனால் ஜனவரி 9 அன்று என்ன நடந்தது? ஜனவரி 9 ம் தேதி வெகு சீக்கிரமே, ஏற்கனவே அங்கிருந்த போலீஸார் மற்றும் ஆயுதமேந்திய காவலர்களுடன் நானும் இருந்தேன், அந்த அரண்மனைக்கு எதிராக வேதாகமத்தை உயர்த்திய வண்ணம், நான் மெகாபோனில் தொடர்ந்து இவ்வாறாக: "இன்றைய தினம் காலையில் தேவனுடைய எதிரிகள் இந்த இடத்தில் ஒன்றுகூடப் போகிறார்கள்! இந்த காலையில் தேவனுடைய மற்றும் இந்த நாட்டினுடைய எதிரிகள் இந்த இடத்தில் ஒன்றுகூடப் போகிறார்கள்!" என்று கத்திக்கொண்டே இருந்தேன். ஜனங்களோவெனில் "தேவனுடைய நண்பர்கள் மற்றும் எதிரிகள் ..." என்று சொல்லும்படி என்னைக் கேட்டுக்கொண்டனர். ஆனால், நான் அவர்களை கவனிக்கிறதில்லை என்பதையும் அவர்களால் என்னிடம் செல்வாக்கு செலுத்த முடியவில்லை என்பதையும் கண்டபோது, ஜனங்கள், "அம்மனிதனுடைய வார்த்தை எங்களுக்கு தொந்தரவாக உள்ளது, அது எங்களுக்கு பின் இருக்கும் போது எங்களால் ஜெபிக்க முடியாது! அவனை கைது செய்யுங்கள்!" என்று சொல்லி போலீஸ்காரர்களையும் ஆயுதமேந்திய காவலர்களையும் எனக்கு எதிராக தூண்டிவிட்டனர், போலீஸ்காரர்கள் முயற்சித்தும் ஆனால் நான் விட்டுக் கொடுக்கவில்லை.
5சுமார் 9 மணியளவில், ஒரு போலீஸ் அதிகாரி அரண்மனையிலிருந்து வெளியே வந்து தூண்டுதலின் பேரில் என்னை கைது செய்ய வந்தார், ஆனால் நான் விட்டுக் கொடுக்கவில்லை. நாங்கள் சில வார்த்தைகளை பரிமாற்றம் செய்துகொண்டோம், அவர் புரிந்து கொண்டார். நான் அவரிடம், "ஐயா, நீர் உமது எஜமானன் சார்பாக இங்கிருக்கிறீர், நானும் என்னுடைய எஜமானர் சார்பாக இங்கிருக்கிறேன்” என்றேன். பின்னர் வேறு இரண்டு போலீஸ்காரர்கள் வந்தனர், ஆனால் நான் 10 மணி வரை என்னை அவர்களிடம் விட்டுக் கொடுக்கவில்லை. தொடர்ந்து 10.30 வரை அப்படித்தான் இருந்தது.
6பின்பு அங்கே, சபைகளின் கூட்டமைப்பின் தேசிய செயலாளராக இருக்கிறேன் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட, நீண்ட கருப்பு அங்கி அணிந்திருந்த ஒருவர் அரண்மனையிலிருந்து அங்கு வந்தார். அவர் ஏற்கனவே தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவைப் பற்றி கேள்விப்பட்டிருந்தார், ஆனால் அது நான் தான் என அவருக்குத் தெரியாது. அவர், "காலையிலிருந்து நீங்கள் இந்த வாக்கியத்தை மட்டுமே திரும்பத் திரும்பச் சொல்கிறீர்கள். குடியரசுத் தலைவர் மற்றும் அதிகாரிகள் இங்கிருக்கும் போது இது நமது சபைகளைப் பற்றிய ஒரு நல்ல பிம்பத்தை கொடுக்காது” என்றார். நான் தொடர்ந்தால், என்னை கைதுசெய்யுமாறு போலீஸாரிடம் கூறினார். அவர்களின் தலைவன் தனது சேனையிடம்: "அவன் மீண்டும் தொடர்ந்தால், அவனை கைதுசெய்யுங்கள்" என்றார்.
7நான் அவரிடம், "நான் தொடர விரும்பினால், அதை செய்வேன், ஏனென்றால் வேதாகமம் ஒரு இராணுவச் சீருடைக்கு அடிபணியாது! இங்கு இருக்கும்படிக்கு என்னை நியமித்து அனுப்பியது நீங்களா?” என்றேன். என்னை கைதுசெய்ய தயாராக உள்ள போலீஸ்காரர்களால் நான் சுற்றிவளைக்கப் பட்டிருந்தேன், நான் மிகவும் கடுமையாகப் பேசினேன், அவர்: "அவனை கைதுசெய்ய வேண்டாம், ஆனால் அவனது மெகாஃபோனை அவனிடமிருந்து பறித்துவிடுங்கள்!" என்பதை திருத்தி கூறினார். என் மெகாஃபோன் என்னிடம் இருந்து எத்தனை முறை பறிக்கப்பட்டது என்பதை நான் அறியேன்.
8அன்று காலையில், அனைத்து மதப் பிரிவுகளும் அங்கு இருந்தன. அந்த வரிசையில், பபோவ் உடையணிந்த சில முஸ்லீம்களையும், சில கத்தோலிக்கர்களையும், எக்காங்கர், மற்றும் பலரையும் பார்த்தேன் ... அங்கிருந்த அனைவரும் ஜெபிப்பதற்காக வராதவர்கள்போல என்னையே பார்த்தார்கள். அவர்கள் ஜெபிக்க வந்திருக்கிறபோது, நான் அவர்களுக்கு பிசாசாக இருப்பதுபோல அவர்கள் என்னைப் பார்த்தார்கள்.
9மேலும் சபைகளின் கூட்டமைப்பின் செயலாளரின் வார்த்தையானது போலீசாருக்குள் பேய்களை அனுப்புவது போல இருந்தது ஏனெனில் அவர்கள் ஆவேசமடைந்திருந்தனர். அங்கே இராணுவ வீரர்கள், ஆயுதமேந்திய போலீஸார் மற்றும் போலீஸ்காரர்கள் இருந்தனர். அந்த இராணுவ வீரர்களிடையே சகோதரர் பேப்ரைஸின் (Brother Fabrice) தந்தையான, ஒரு பிரன்ஹாமிஸ்டும் இருந்தார். இருப்பினும், முன்னதாகவே, அரண்மனை வாயிலில் இந்த சபைகளின் கல்வெட்டை நான் பார்த்திருக்கிறேன்.
10சபைகளின் கூட்டமைப்பில் உறுப்பினராக இருக்கக்கூடிய ஒரு சபையினுடைய உறுப்பினராக நீங்கள் இருந்தால், அந்த நாளில் நீங்கள் அங்கு இல்லையென்றாலும் தேவனுக்கு முன்பாக நீங்கள் குற்றவாளிதான்.
11ஜனவரி 9 அன்று சபைகளானது பிசாசுகளின் ஒரு வலுப்படுத்துதலை பெற்றுக்கொண்டன, அது ஏனென்றால் மத்தேயு 25:6 ன் ஊழியத்தினிமித்தம், பரிசுத்தவான்களின் எழுப்புதலானது அதன் ஸ்தானத்தில் உள்ளது. ஏற்கனவே நமக்குள்ளே இருக்கிற இந்த அபிஷேகம் இந்த எழுப்புதலை தூண்டிவிடும். மேலும் இந்த எழுப்புதல் சபைகளின் கூட்டமைப்புகள் என்னும், இந்த சாத்தானின் கேலிச்சித்திரத்தால் எதிர்க்கப்படும், அது செம்மறி ஆட்டுத்தோல் போர்த்தின மந்திரவாதிகளின் சகோதரத்துவங்களேயன்றி வேறொன்றும் இல்லை என்று கர்த்தருடைய வார்த்தையால் நான் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.
12சபைகளின் கூட்டமைப்பின் அதிகாரியான, நீண்ட கருப்பு அங்கி அணிந்த அந்த மனிதன் கல்லறையான அரண்மனையிலிருந்து, பெருவெள்ளத்து பிசாசுகளோடு வெளியே வந்து, அவைகளை போலீசாருக்குள் அனுப்பப்பட்டதையும் நீங்கள் கவனிக்கலாம். நீங்கள் பார்க்கிறீர்களா? மத்தேயு 8:28 முதல் 34 ஐ பாருங்கள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கதரேனருடைய நாட்டின் பையித்தியக்காரனை குணமாக்கியபோது, அதே பிசாசுகள் பன்றிகளுக்குள் நுழைந்தன, பின்னர் தண்ணீர்களுக்குள் ... பின்னர் மேய்ப்பர்களிடத்தில் ... பின்னர் கர்த்தராகிய இயேசுவை வெளியே துரத்திவிட்ட கிராமவாசிகளுக்குள்ளும் நுழைந்தன.
13பூர்வகால முதற்கொண்டு, கடவுள் எழுப்பியவர்கள் எல்லாம் ஒரே போல செயல்பட்டனர், ஏனென்றால் கடவுளின் வேலையானது பணத்துக்குக் கீழ்ப்பட்டதல்ல. கோயில்களில் தங்கியிருந்து நியாயந்தீர்ப்பதும், கண்டிப்பதும், நீங்கள் சிறந்தவர்கள் என்று சொல்வதும் கடவுளின் வேலை அல்ல, அது வஞ்சனையின் மற்றுமொரு வடிவமாகும். தீர்க்கதரிசிகளும், அப்போஸ்தலர்களும் மற்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் தங்களுடைய ஊழியங்களில் நமக்கு கற்றுக் கொடுத்தவைகள் இதுவல்ல. சத்தியம் சவால்விட்டு தன்னைத்தானே களத்தில் திணித்துக் கொள்ளும், ஒரு சபையிலோ அல்லது விழிப்பு ஜெபங்களிலோ அல்ல, ஆனால் களத்தில்.
14உங்களிடத்தில் இல்லை என்றால், நடந்து செல்லுங்கள்! இந்த நாள் வரை ஒரு மனிதன் எனக்கு கொஞ்சம் அரிசி வீட்டிற்குக் கொண்டுவந்ததை தவிர ஒருவரிடமும் பணத்தை வாங்காமல் தான் இதுவரை நான் எல்லா இடங்களிலும் பிரசங்கித்திருக்கிறேன். ஆயினும், காசோலைகள், வீடுகள், வாகனங்கள் மற்றும் பிறவற்றை பெற்றுக்கொள்ளாத, இந்த சபைகளுடைய ஒரு சுவிசேஷகனையோ ஒரு தீர்க்கதரிசியையோ நான் கண்டதில்லை.
15உன்னிடம் இல்லாததை நீ இச்சியாதிருப்பாயாக. இந்த நற்செய்தியினிமித்தம், நான் உங்களுடன் குறுகிய பாதையை தெரிந்து கொண்டுள்ளேன், எனவே உறுதியாக நிற்போம்! பரலோகம் அவர்களுக்கு அடைக்கப்பட்டிருந்தால், வழியை கண்டுபிடிப்பது அவர்களுடைய ஆஸ்திகளால் அல்ல. உலகத்தோற்றத்திற்கு முன்பாக அது பரலோகத்திலிருந்து உங்களுக்குக் கொடுக்கப்படவில்லை என்றால், மத்தேயு 25:32 முதல் 35 ன் ஒரு கலசத் தண்ணீரை தெரிந்துகொள்ளப்பட்டவன் ஒருவனுக்கு உங்களால் கொடுக்க இயலாது. பச்சை மரத்திற்கு செய்யப்பட்டதே பட்ட மரத்திற்கும் செய்யப்படும். வேலைக்காரன் தன எஜமானனை விட பெரியவனல்ல. நீங்கள் பார்க்கிறீர்களா?
16ஜனவரி 9 அன்று, ஏழு முதல் பத்து மணி வரை நான் சத்தமிட்டேன், அவர்கள் தூக்கி எறிந்த மீதியான தண்ணீருக்காக நான் ஏங்கினேன், ஆனால் யாராவது அதை எனக்கு கொஞ்சம் கொடுக்கத் துணிந்திருந்தால், கூட்டம் அவருக்கு எதிராக சென்றிருக்கும். நீங்கள் பார்க்கிறீர்களா? ஜெபிப்பதற்கு வராதவர்கள்போல, அவர்கள் அனைவரும் வெறுப்புடன் என்னை பார்த்துக்கொண்டிருந்தனர். காயீனின் பார்வைகள்! நீங்கள் பார்க்கிறீர்களா? பபோவ் உடைகளில் முஸ்லீம்கள், மெத்தோடிஸ்டுகள், கத்தோலிக்கர்கள், பாப்டிஸ்டுகள் என நான் அடையாளம் கண்டுகொண்ட முகங்கள் இருந்தன. என் மைத்துனன், என் உறவினர் க்ளவுடைனின் (Claudine) கணவரான ஒரு மெத்தோடிஸ்ட் பிரசங்கியான அவரும் வரிசையில் இருந்தார், மற்றும் பபோவ் (bubu) உடையில் ஒரு முஸ்லீம் இருந்தார்... உங்களால் காணமுடிகிறதா? சில வெள்ளாடுகள், பன்றிகள், கோழிகள், நாய்கள் ஒன்றிணைந்தன..
17சகோதரர்களே, தங்களைத்தாமே தீர்க்கதரிசிகளென்று அழைத்துக் கொள்கிறவர்களுக்கு பயப்படாமல் பிரசங்கியுங்கள். மாயவித்தையின் அதே ஆவிகளால் அவர்கள் தங்களை சபைகளில் ஸ்திரப்படுத்தி கொண்டிருக்கிறார்கள். மத்தேயு 24:24-ல் வேதாகமம் அதை முன்னறிவித்துள்ளது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
18அனைத்து ஊழியங்களிலும், தீர்க்கதரிசி செய்தியாளனின் கடந்தகாலம், அவரது பிறப்பிலிருந்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஒரு பாஸ்டரின் வாழ்க்கையும் கூட! திருமண உடன்படிக்கைக்கு வெளியே அல்லது திருமணத்திற்கு முன் ஒரு பிள்ளையை பெற்றிருப்பானாகில் அவன் பாஸ்டர் ஆக முடியாது. அவன் ஒரு பாஸ்டரின் வேலையை செய்ய முடியும் ஆனால் அவன் ஒரு பாஸ்டராக இருக்க முடியாது. ஒரு சுவிசேஷகனுக்கு அதுசரி, ஆனால் ஒரு பாஸ்டருக்கு அல்லது தீர்க்கதரிசிக்கு இல்லை. அவனது மனைவி கீழ்படியாதவளாகவோ அல்லது திருமணத்துக்கு வெளியே பிள்ளை பெற்றவளாக இருந்தாலும் காரியம் அதேதான். எரேமியா 1:5, நியாயாதிபதிகள் 13:3 முதல் 4, லூக்கா 1:13 முதல் 15… ஐ பாருங்கள்.
19நீங்கள் ஒரு கொள்ளைக்காரனாக, ஸ்திரீகளை அறிந்தவனாக, மதுபானங்கள் அருந்தினவன் அல்லது புகைபிடித்தவனாக இருந்து, பிறகு ஒரு பாஸ்டராக அல்லது தேவனுடைய தீர்க்கதரிசியாக ஆகமுடியாது, நீ பெற்றிருக்கும் தரிசனங்கள் ஒரு பொருட்டே அல்ல. ஒரு நேரத்தில் அவன் ஒரு பாஸ்டரின் வேலையை செய்யலாம் ஆனால் அவன் பாஸ்டர் ஆக முடியாது. அவ்வளவுதான் அது.
20ஒரு தீர்க்கதரிசி அல்லது ஒரு பாஸ்டர், அதற்கு ஒரு நற்சாட்சி தேவைப்படுகிறது ... நீங்கள் சில கடமைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள், இல்லை என்றால், அமைதியாக இருங்கள்! நீங்கள் பார்க்கிறீர்களா ? தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவைப் பற்றி கேள்விப்பட்ட பிறகு, இந்த நிலைகளில் உங்களைக் காண்பீர்களெனில், இனிமேல் இந்த செய்தியில் நீங்கள் பாஸ்டராக இருக்க முடியாது. இந்த நிலையில் வந்தவர்களைப் பற்றி நான் பேசவில்லை. ஆனால் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்ட இத்தருணத்திலிருந்து அல்லது இந்தச் செய்திக்கு நீங்கள் வந்த பிற்பாடு மறுபடியும் நீங்கள் இந்த காரியங்களைச் செய்ய உலகத்திற்கு மீண்டும் திரும்பி இருந்தால், நீங்கள் இந்த செய்தியில் மீண்டும் ஒரு பாஸ்டராக இருக்க முடியாது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
21அவ்வாறே, திருமணத்திற்கு முன்பாகவே நீங்கள் ஒரு பாஸ்டராக இருக்கிறீர்கள் என்றால், ஒரு கன்னிகையையே ஆசாரியன் மனைவியாக கொள்ளவேண்டும் என்று நியாயப்பிரமாணம் கூறுகிறது. லேவியராகமம் 21:13 முதல் 14 / எசேக்கியேல் 44:22.
22பரலோகத்திலிருந்து தேவன் உங்களுக்குக் கொடுக்காததை, நீங்கள் ஆசைப்படக்கூடாது. பரலோகத்தில், காபிரியேலின் மாபெரும் ஊழியத்தை பெற விரும்பிய தேவதூதர்கள் அனைவரும் பூமியில் தள்ளப்பட்டதை நினைவில் வையுங்கள். பூமியிலுள்ள ஒரு வேலைக்காக தேவன் உங்களை அனுப்பியிருந்தால், அவர் உங்களை இந்த அழிவின் மத்தியிலும் வைத்திருப்பார். ஊழியம் என்பது உண்மையை பிரசங்கிப்பதோ அல்லது சத்தமிடுவதோ அல்லது ஜனங்ளுக்கு முன்னால் குதிப்பதோ அல்ல, ஆனால் அது ஒரு ஜீவியமாக இருக்கிறது.
23இப்போது பரலோகத்தின் தேவன் மனிதகுலத்திற்குச் சொல்லும் இந்த உவமையை கவனியுங்கள். தேவன் தனக்கு மிகவும் விசுவாசமில்லாத ஒரு கிராமத்தை குருட்டுத்தன்மையால் தாக்கினார். ஆனால் அவருடைய இரக்கத்தால், அவர்களை குணப்படுத்துவதற்காக அவர் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார். ஆனால் அவர்கள் தீர்க்கதரிசியிடம், "குருடானதிலிருந்து நாங்கள் எல்லாவற்றையும் இலவசமாகவே பெற்றுக்கொள்கிறோம், முழுஉலகமும் எங்கள் மீது அக்கறை கொண்டுள்ளதால், இனிமேலும் நாங்கள் பார்வை அடைய விரும்பவில்லை.” என்றனர். மேலும், “தேவனுக்கு முன்பாக எங்களுக்காக மன்னிப்பு கேளுங்கள் மற்றும் தேவன்தான் உம்மை அனுப்பினார் என்பதற்கு என்ன ஆதாரம்?” என்றனர்.
24ஒரு நாள் பக்கத்து கிராமத்தினர் ஒன்று கூடி: "நாம் விவசாயம் செய்கிறோம், நாம் துன்பப்படுகிறோம், நிலமானது நமக்கு எதையும் கொடுப்பதில்லை. பசியால் நாம் மடிகிறவேளையில், குருட்டு கிராமத்தில் எல்லாம் மிகுதியாக உள்ளன. வாருங்கள், அவர்களை கொன்று, அவர்களுடைய நிலத்தையும் அவர்களுக்கு நாம் கொடுத்த எல்லாவற்றையும் கைப்பற்றுவோம்.” என்றனர். உச்சி வெயில் நேரம் அவர்கள், சில கைத்தடிகளையும் எடுத்துக்கொண்டு, குருட்டு கிராமத்தின் நடுவில் சென்று: “எங்களிடத்தில் வாருங்கள்; நாங்கள் மூட்டைகளில் அரிசியுடனும், கொஞ்சம் எண்ணெய் மற்றும் துணிகளுடனும் வந்திருக்கிறோம்... நாங்கள் சபைகளின் சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகள், நாங்கள் கிறிஸ்துவில் உங்கள் சகோதரர்கள்" என்று சத்தமிட்டனர். அவர்கள் வெளியே வந்தனர் ஆனால் தீர்க்கதரிசி அவர்களை கண்டு, தன் குடும்பத்தாரோடு ஓடிப்போனார்.
25பதுங்கியிருந்த அக்கம்பக்கத்தினரும் வெளியே வந்து அவர்களை கொல்லத் தொடங்கினர். சிலர்: ”கருணை காட்டுங்கள், ஆ…. கருணை!!!!” என்று கத்தினர். அவர்கள் இப்படி கைகளை முன்னால் நீட்டிக் கத்தி கொண்டிருந்தார்கள். மற்றவர்களோ: "என்ன நடக்கிறது?" அவர்களை நிறுத்துங்கள்!!! அவர்களை நிறுத்துங்கள்!!! அவர்களை நிறுத்துங்கள்!!!" என்று கத்தினர். சகோதரர்களே, அது சோகமாக இருந்தது. குருட்டு கிராமம் அழிக்கப்பட்டது. மிகுந்த வேதனையில் அவர்கள் எல்லோரும் கூச்சலிட்டனர், " நாங்கள் பார்வை அடைய வேண்டும், அந்த தீர்க்கதரிசி எங்களுக்கு வேண்டும், அந்த தீர்க்கதரிசி எங்கே? நாங்கள் மீண்டும் பார்வை அடைய விரும்புகிறோம் ..." என்றனர். வெளியே வராதவர்களும் கூட கொல்லப்பட்டனர். நீங்கள் பார்க்கிறீர்களா?
26நோவாவின் நாட்களில் சம்பவித்தது போலவே, இந்த அவிசுவாசமான தலைமுறைக்கும் அதன் சபைகளுக்கும் சம்பவிக்கும். கேட்கிறதற்குச் செவியுள்ளவன் எவனோ அவன் கேட்கக்கடவன்.