(ஆகஸ்டு 30, 2008 வியாழக்கிழமை மாலையில் ஐவரிகாஸ்டின் ஆபிட்ஜானுக்கு அருகிலுள்ள அன்யாமாவில் பிரசங்கிக்கப்பட்டது)
1சரி, நமது வேதாகமங்களில் இப்போது மத்தேயு 24:24 ஐ எடுத்துக்கொள்ளலாம்... "ஏனெனில் கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி கூடுமானால் தெரிந்துகொள்ளப் பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்." இதை மனதில் வையுங்கள்: "கள்ளக்கிறிஸ்துக்களும், கள்ளத்தீர்க்கதரிசிகளும்...!"
2முதலில், அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்றால் என்ன? தன்மீது ஒரு அபிஷேகத்தை கொண்டிருக்கிற ஒரு நபர்தான் அபிஷேகம் பண்ணப்பட்டவர்! மேலும் அந்த அபிஷேகமானது, 1 கொரிந்தியர் 12-ம் அதிகாரத்தின் எந்தவொரு வரத்தையும் வெளிப்படுத்துவதற்கு அவரை வழிநடத்தும். ஒரு அபிஷேகம்பண்ணப்பட்டவன் வேதாகமத்தின் ஒரு குறிப்பிட்ட வசனத்தால் அறிவிக்கப்பட்டவனாகவோ அல்லது பரலோகராஜ்ஜியத்தின் திறவுகோல்களைக் கொண்டுள்ளவனாகவோ இருக்கமாட்டான்!
3ஒரு அபிஷேகம் பண்ணப்பட்டவன் என்றால், செய்தி எதுவுமின்றி அற்புதங்களோடும் அதிசயங்களோடும் வருகிறவனான ஒரு மனிதன் தான் அல்லது ஒரு ஸ்திரி கூடத்தான்! மேலும் அவர்களது அற்புதங்களுக்கு அளவே கிடையாது; சில மரித்த ஜனங்களைக் கூட அவர்களால் எழுப்ப முடியும், காய்ந்துபோன கோல்களை சில சர்ப்பங்களாக மாற்றின யந்நேவையும் யம்பிரேவையும் வேதாகமத்தில் நாம் காண்கிறோம். மோசேயைப் போலவே, அவர்கள் காய்ந்துபோன கோல்களை ஜீவ ஜந்துக்களாக மாற்றினர்! ஆனால் அவர்களைப்போலல்லாமல், மோசே வார்த்தையை, மனுக்குலம் முழுவதற்கும் ஒரு செய்தியை உடையவனாக இருந்தான்.
4இப்பொழுது, இதை கவனியுங்கள்: ஒரு அபிஷேகம் பண்ணப்பட்டவன், அவனுடைய பெயர் அதை குறிப்பிடுவதுபோலவே முதலாவது ஒரு அபிஷேகத்துடன் வருகிறான். அது அவனுடைய சொந்த சொத்தாக உள்ளது. அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்றால்: தன்மீது ஒரு அபிஷேகம் கொண்டுள்ளவரெவரோ அவர் என்று பொருள்! ஆனால் வார்த்தையைப் பொறுத்தவரை, தீர்க்கதரிசி செய்தியாளர்களிடம் நாம் அதைப் பார்க்கிறவண்ணம், ஒரு அபிஷேகம் பண்ணப்பட்டவன் ஒரு தலைமுறையினருக்காக வார்த்தையின் ஒரு குறிப்பிட்ட வெளிப்பாட்டோடு வரமுடியாது. ஆனால் அவன் ஏற்கனவே இருக்கிற வார்த்தையோடு வருகிறான்.
5ஒரு அபிஷேகம் பண்ணப்பட்டவன் "எழுதியிருக்கிறது" அல்லது "இப்படியும் எழுதியிருக்கிறது" என்னும் இரண்டு காரியங்களுடன் வருகிறான்! இந்தக் கருத்தில் அவனது வாழ்த்துதல் கூட வேதாகமத்திலுள்ள ஒரு வசனமாக இருக்கலாம். அது அப்படியல்லவென்றால், "ஷாலோம்" என்றபிறகு, "பவுல் கொரிந்தியருக்கு எழுதிய வசனங்களால் நான் உங்களை வாழ்த்துகிறேன்! 2 தீமோத்தேயுவின் வசனங்களால் நான் உங்களை வாழ்த்துகிறேன்" என்றவாறு அது உள்ளது.
6ஆனால் ஒரு தீர்க்கதரிசிச் செய்தியாளன், அவனது பெயர் குறிப்பிடுவதுபோலவே வார்த்தையுடன் வருகிறான். எபிரெயுவில் ரபீ என்றால் போதகர் என்று அர்த்தம், ஆனால் தீர்க்கதரிசிக்கு எபிரெயுவில் நபீ என்றும், எழுத்துப்பிரகாரமாக அதன் பொருளானது: "ஒரு தெய்வத்தின் பேச்சாளன்" என்றுமாம். ஒரு தீர்க்கதரிசி நான்கு காரியங்களுடன் வருகிறான், அவையாவன: "எழுதப்பட்டிருக்கிறதே", "இப்படியும் எழுதப்பட்டிருக்கிறதே", "கர்த்தர் உரைக்கிறதாவது", "நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்"! நீங்கள் பார்க்கிறீர்களா? ஒரு அபிஷேகம் பண்ணப்பட்டவன் வேதாகம வசனங்களோடு வருகிறான், அவன் கூறுகிறவை அனைத்தும் வேதப்பூர்வமாக இருக்கவேண்டும் ஆனால் தீர்க்கதரிசியானவன் மறைவான இரகசியங்களின் வெளிப்பாடுகளைக் கொண்டுவருகிறான்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
7ஒரு அபிஷேகம் பண்ணப்பட்டவனுக்கு ஒரு எழுதப்பட்ட வார்த்தையைக் கூட மாற்ற உரிமையில்லை. அவன் அதை பயன்படுத்த மட்டுமே செய்யவேண்டும்! ஒரு பிஷப், ஒரு ரெவரண்ட், ஒரு பாஸ்டர், ஒரு அப்போஸ்தலன், ஒரு சபை-தீர்க்கதரிசி, ஒரு சுவிசேஷகன் அல்லது ஒரு போதகன் அற்புதங்களைச் செய்யத் துவங்கி, அதேநேரத்தில் அவனது காலத்தின் தீர்க்கதரிசி கூறுவதன் எதிரொலியாக அவன் இருக்கவில்லையென்றால், அவன் ஒரு அபிஷேகம் பண்ணப்ப்பட்டவனும் சாத்தானின் ஊழியக்காரனுமாக இருக்கிறான். அவன்தானே தேவனைச் சேவிப்பதாக நம்புகிறான், அவன் உத்தமமாக இருக்கிறான், அவன் வெளிப்பாடுகளைக் கொண்டிருக்கிறான் ஆனால் அவனொரு பிசாசின் ஊழியக்காரனாக இருக்கிறான். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
8ஆனால் ஒரு தீர்க்கதரிசியோவெனில்: "ஏதேனிலுள்ள ஒரு நதியைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், ஆனால் அது ஒரு இயற்கையான நதியைப்பற்றின காரியமல்ல ஆனால் அது ஒரு ஆவிக்குரிய நதியைப்பற்றின காரியம் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்!" என்று கூறலாம். தீர்க்கதரிசியோவெனில்: "இரண்டு தூதர்கள் சோதோமுக்கும் கொமோராவுக்கும் போனார்கள் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் ஆனால் அந்த இரண்டு தேவதூதர்கள் காபிரியேலும் மிகாவேலுமோ அல்லது பில்லி கிரஹாமும் ஆஸ்பானுமோ அல்ல ஆனால் எலியாவும் மோசேயுமாம் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்!" என்று கூறலாம். நீங்கள் பார்க்கிறீர்களா?
9ஒரு தீர்க்கதரிசி ஒரு புதிய வெளிப்பாட்டோடு வருகிறான், எழுதப்பட்டிராதவைகளைக் கூட அறிவிக்கிறான்! அவன் வேதாகமத்தின் தொடர்ச்சியாக இருக்கிறான், அவன் தேவனுடைய வெளிப்பாட்டின் தொடர்ச்சியாக இருக்கிறான்! தீர்க்கதரிசியானவன் இப்படியாக, "வேதாகமத்தின் அத்தகைய தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதல் நானே, வேதாகமத்தின் இந்த பாகமும் எனக்குத் தொடர்புடையது!" என்று சொல்லமுடியும்.
10தீர்க்கதரிசியால், "மோசே அதைச் சொன்னான் ஆனால் இப்பொழுது, நான் இதை உங்களுக்குச் சொல்லுகிறேன்!" என்று சொல்ல முடியும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. அப்போஸ்தலனாகிய பேதுரு, "நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்!" என்று சொன்னான். ஆனால் இப்பொழுது, "நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே மீட்டளிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்!" என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
11நானொரு உண்மை தீர்க்கதரிசியேயானால் பிறகு வேறு எந்த ஞானஸ்நானமும் தவறானது தான்! நீங்கள் பார்க்கிறீர்களா? "எபேசியர் 4:11 ல் ஐந்து ஊழியங்கள் உள்ளன என்று உங்களுக்கு உரைக்கப்பட்டிருக்கிறது ஆனால் வார்த்தைக்கு நான்கு ஊழியங்கள் மட்டுமே உள்ளன என்று நான் உங்களுக்கு சொல்கிறேன்!" என்று என்னால் கூறமுடியும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. வில்லியம் பிரன்ஹாமும் அவரது சந்ததியும் ஜேம்ஸ் மன்னன், ஸ்கோஃபீல்டு, லூயிஸ் செகண்டு,... வேதாகமங்ளைப் பயன்படுத்தியிருந்தபோதிலும் இரட்சிக்கப்பட்டனர் ஆனால் ஜேம்ஸ் மன்னன், ஸ்கோஃபீல்டு மற்றும் லூயிஸ் செகண்டு ஆகியவை இன்று நரகத்திற்கு போவதற்கான பாஸ்போர்ட்டாக உள்ளன என்று நான், தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு, உங்களுக்குச் சொல்லுகிறேன். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
12தேவனுடைய வார்த்தையைப் பற்றிய குறிப்பிட்ட வெளிப்பாடுகளைப் பொருத்தவரையில் ஒரு அபிஷேகம் பண்ணப்பட்டவனுக்கு செய்வதற்கு எதுவும் இல்லை! அவன், "உன் பெயர் இது என்று தேவன் எனக்கு வெளிப்படுத்துகிறார், உனக்கு வேலை கிடைக்கும், உனக்கு ஒரு கணவன் கிடைப்பான், நீ ஒரு குறிப்பிட்ட தேதியில் ஒரு ஆண் பிள்ளையை பெற்றெடுப்பாய், அவன் பெயர் இதுவாக இருக்குமென்று தேவன் எனக்கு வெளிப்படுத்துகிறார்!" என்றெல்லாம் மிகச் சரியாகச் சொல்ல முடியும். அவன் செய்யக்கூடியதெல்லாம் அவ்வளவுதான். உண்மைக்கு அல்லது பொய்மைக்கு, இரண்டில் ஒன்றுக்கு ஜனங்களை வழிநடத்த மட்டுமே அவனால் முடியும்; ஏனென்றால் ஜனங்களை கிறிஸ்துவிடம் வழிநடத்துகிறவனான தீர்க்கதரிசி செய்தியாளனுக்குப் புறம்பாக பூமியின் தீர்க்கதரிசிகள் மற்றும் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் மத்தேயு 24:24 ன் ஆட்களாக இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும், அவர்கள் உண்மையானவர்களாக இருந்தாலும் அல்லது பொய்யானவர்களாக இருந்தாலும், எப்பொழுதும் ஜனங்களை ஏதோ ஒன்றினிடத்திற்கு வழிநடத்துகின்றனர்.
13காலத்திரைக்கு அப்பாலான அந்த தரிசனத்தில், வில்லியம் பிரன்ஹாம் கர்த்தர் இருக்கிற இடத்தை பற்றி கேட்டபோது, "முதலில் அவர் உம்மிடம் வருவார், மேலும் நீர் பிரசங்கித்த வார்த்தையின்படியே நீர் நியாயந்தீர்க்கப்படுவீர், பின்னர், நீர் எங்களை அவருக்கு அர்ப்பணிப்பீர். நீர் நடப்பித்த அற்புதங்களின்படியல்ல ஆனால் நீர் பிரசங்கித்த வார்த்தையின்படி நீர் நியாயந்தீர்க்கப்படுவீர், பிறகு உமது செய்தியை விசுவாசித்தவர்களான நாங்கள் நீர் எங்களை அவருக்கு அர்ப்பணிப்பீர்!" என்று அவருக்கு சொல்லப்பட்டது.
14"பவுல் பிரவேசித்தால் நாமும் பிரவேசிப்போம் ஏனெனில் அவன் செய்ததைப் போலவே நானும் அனேக அற்புதங்களை செய்தேன்" என்று வில்லியம் பிரன்ஹாம் கூறவில்லை. ஆனால் அவர், "பவுல் பிரசங்கித்த பிரகாரமாகவே நான் பிரசங்கித்தேன்!" என்றார். நீங்கள் பார்க்கிறீர்களா? அபிஷேகம் பண்ணப்பட்டவர்களுக்கு அங்கே இடமில்லை ஏனெனில் அது வார்த்தையை பற்றிய காரியமாக இருக்கிறது. ஆதியிலே வார்த்தை இருந்தது, சகலமும் வார்த்தையினால் சிருஷ்டிக்கப்பட்டது. மேலும் நாம் நியாயந்தீர்க்கப்படப்போவது வார்த்தையினால் தான். மேலும் பூமியிலே நீங்கள் விசுவாசித்த வார்த்தையின்படியே, நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள் அல்லது ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவீர்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
15நோவாவின் காலத்தில், உண்மையான அபிஷேகம்பண்ணப்பட்ட எவனும் நோவாவின் பேழைக்கே ஜனத்தை வழிநடத்தவேண்டியவனாக இருந்தான்! ஏன்? ஏனென்றால் அந்த நேரத்தில், யோவான் 6:28 முதல் 29, அது நோவாவாக இருந்தது! ஒரே மெய் தேவனான யேகோவாவையும் அவர் அனுப்பின அவனையும், அதாவது நோவாவையும் அடையாளம் கண்டுகொள்வதே தேவனுக்கு ஏற்ற கிரியையாக இருந்தது! மேலும் "தேவன், தம்முடைய நேச தீர்க்கதரிசியான நோவாவை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் ஜலப்பிரளயத்தில் அழிந்து போகாமல் இரட்சிக்கப்படும் பொருட்டு அவனை அவர் அனுப்பி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்." என்பதே யோவான் 3:16 ஆக இருந்தது. நீங்கள் பார்க்கிறீர்களா? ஒரு அபிஷேகம்பண்ணப்பட்டவனால், தனது காலத்தின் உயிர்வாழும் தீர்க்கதரிசியின் செய்திக்கு மட்டுமே மனுக்குலத்தை வழிநடத்த முடியும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
16டாமி ஆஸ்பான் வெளிநாட்டில் பிரசங்கிக்கையில், தன்னை விசுவாசிக்கிற யாவரையும் அவன் ஏதாவது சுவிசேஷக சபைக்கு வழிநடத்துகிறான்! நீங்கள் பார்க்கிறீர்களா? உண்மையான கிறிஸ்துக்கள் (true christs) விசுவாசிகளை தங்களுடைய மணிவேளையின் செய்திக்கு நடத்துவார்கள் மாறாக கள்ளக் கிறிஸ்துக்கள் (false christs) விசுவாசிகளை ஒரு சபையை அல்லது வேதாகமத்தை நோக்கி நடத்துவார்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
17டாமி ஆஸ்பான் மத்தேயு 24:24 ன் ஒரு அபிஷேகம் பண்ணப்பட்டவனாக இருக்கிறான்! மோரிஸ் செருல்லோ மத்தேயு 24:24 ன் ஒரு அபிஷேகம் பண்ணப்பட்டவனாக இருக்கிறான்! கத்தோலிக்கர்களின் எழுப்புதல் கூட்டங்கள் கூட சக்தி வாய்ந்த அபிஷேகம் பண்ணப்பட்ட மனிதர்களைக் கொண்டுள்ளது! ஒருவன் செய்தி எதுவுமில்லாதவனாக இருந்து அற்புதங்களை நடப்பிக்கிறானென்றால், அவன் ஒரு தீர்க்கதரிசியல்ல ஆனால் அவனொரு அபிஷேகம் பண்ணப்பட்டவன். அவனை பயன்படுத்துகின்ற அந்த ஆவி அது ஒரு பொருட்டே அல்ல, அவனது பழக்கவழக்கங்கள் ஒரு பொருட்டே அல்ல, அவன் ஒரு அபிஷேகம் பண்ணப்பட்டவனாக இருக்கிறான். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
18இப்போது யாராவது ஒரு அழைப்பு, பணிநியமனம், செய்தி ஆகியவைகளை கொண்டவனாக இருந்தால், அந்த மனிதன் ஒரு தீர்க்கதரிசி! உங்களுக்கு தெரிகிறதா? மார்மோன்களுடைய ஒழுங்குமுறைகளின் நிறுவனரான ஜோசப் ஸ்மித் ஒரு தீர்க்கதரிசிதான், யேகோவா சாட்சிகளின் நிறுவனரான சார்லஸ் ரஸ்ஸல் ஒரு தீர்க்கதரிசிதான், முகமதுவும் கூட ஒரு தீர்க்கதரிசிதான், ஆனால் அவர்களுடைய செய்திகளினிமித்தம் அவர்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளாக இருக்கிறார்கள்! நீங்கள் பார்க்கிறீர்களா? தோற்றத்தின் அமைப்பில், அவர்கள் தீர்க்கதரிசிகளாக இருக்கின்றனர் ஏனெனில் அவர்கள் செய்திகளை கொண்டிருக்கின்றனர். ஒரு இறைத் தன்மையின் (divinity) செய்தித்தொடர்பாளர்களாக அவர்கள் இருக்கின்றனர் ஆனால் அவர்களுடைய செய்திகள் பொய்யாக இருப்பதினால் மொத்தத்தில் அவர்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளாக இருக்கின்றனர்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
19இப்போது ஒரு காரியத்தை கவனியுங்கள்: ஒரு தீர்க்கதரிசியானவன் ஒரு அபிஷேகம் பண்ணப்பட்டவனாக இருக்கிறான் ஆனால் அபிஷேகம் பண்ணப்பட்ட ஒருவன் ஒரு தீர்க்கதரிசியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! பத்திரிக்கையாளர்களின் உதாரணத்தை நான் எடுக்கிறேன்! ஒரு பத்திரிக்கையாளர் ஒரு நிகழ்ச்சி-தொகுப்பாளராக இருக்கிறார் ஆனால் தொலைக்காட்சியில் அல்லது வானொலியில் நீங்கள் பார்க்கிற அனைத்து நிகழ்ச்சி-தொகுப்பாளர்களும் பத்திரிகையாளர்கள் அல்ல! அவர்களுக்குள்ளே பத்திரிக்கையாளர்களும் நிகழ்ச்சி-தொகுப்பாளர்களும் உள்ளனர், அதை அவர்கள் அறிவர் ஆனால் அவர்களை பார்த்துக் கொண்டிருக்கிற நமக்கு, அது தெரியாது! நீங்கள் பார்க்கிறீர்களா?
20ஆபபிரிக்காவில், மருத்துவத் தொழிலைச் சேர்ந்த ஒருவரை அல்லது வெள்ளை அங்கியில் இருக்கிற ஒரு மனிதனை நாம் கண்ட மாத்திரத்தில், நாம் அவரை ஒரு மருத்துவர் அல்லது சிகிச்சையாளர் என்று அழைக்கிறோம், ஆயினும் ஒரு ஆண் செவிலியர் ஒரு மருத்துவர் அல்ல! நீங்கள் பார்க்கிறீர்களா? தீர்க்கதரிசியாக இருப்பதென்பது, நீங்கள் ஒரு அழைப்பும், பணி நியமனமும், ஏற்கனவே வேதாகமம் கூறியதை திரும்பக்கூறுவதாக இறாத ஒரு செய்தியையும் கொண்டிருக்கிறீர்கள் என்பதாம். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
21ஆயினும் ஒரு அபிஷேகம் பண்ணப்பட்டவன் அசாதாரண சுகமளிக்கும் ஊழியத்தோடும், முழு வேதாகமத்தையும் மனப்பாடம் செய்து கூறிக்கொண்டு, பெரிய அதிசயங்கள் மற்றும் அற்புதங்கள் செய்துகொண்டு வர முடியும்; மேலும் வேதாகமமானது, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அவர்கள் அப்படி செய்வார்கள் என்று கூறுகிறது! ஆனால் அவர்களைக் கவனியுங்கள், கிறிஸ்தவர்களை மறு-ஞானஸ்நானம் செய்விப்பதற்கு பதிலாக, அவன் அவர்களுடைய ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறதை நீங்கள் காண்பீர்கள். சபைகள், அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள், போதகர்கள் மற்றும் மேய்ப்பர்கள் ஆகியோருடன் அவன் இணைந்துசெயல்படலாம், மேலும் அவர்களுக்குள்ளே புகழ்பெற்றவனாகவும், செல்வாக்கு மிக்கவனாகவும் கூட இருக்கலாம், ஆனால் அவர்களுக்கு மறு-ஞானஸ்நானம் அளிக்க அவர்களால் முடியாது.
22ஆனால் ஒரு உண்மையான தீர்க்கதரிசி செய்தியாளன் யாருடனும் இணைந்துபோகவோ அல்லது சமரசப்பட்டுபோகவோ முடியாது, தன்னை தாழ்த்துவதற்கு மறுக்கிற பர்னபாவோடும் கூட அவன் விளையாடமாட்டான்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
23மத்தேயு 24:24 ன் இந்த தீர்க்கதரிசிகளும் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களும் இதினிமித்தம் எபேசியர் 4:11 ன் ஊழியங்களாக இருக்கின்றனர் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்! அப்போஸ்தலர் நடபடிகள் 13:1 காண்பிக்கிறதுபோலவே அங்கே உண்மையான தீர்க்கதரிசிகள் இருக்கிறார்கள். தனது காலத்தின் தீர்க்கதரிசி செய்தியாளன் கூறியதின் வரம்புகளுக்குள்ளேயே தரித்திருக்கிற அதேவேளையில் தீர்க்கதரிசி செய்தியாளன் கூறியவற்றின் தெளிவான மற்றும் உயர்வான வெளிப்பாட்டைக் கொண்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்! மேலும் அவனது பிரசங்கம், அது அவனது காலத்தின் உயிர்வாழும் தீர்க்கதரிசியின் செய்தியாக இருக்கிறது.
24அப்போஸ்தலர் நடபடிகள் 8 ல் உள்ள பிலிப்பு போல, தீர்க்கதரிசி செய்தியாளனின் செய்தியை முன்னுக்கு கொண்டுசெல்லுகிற அபிஷேகம் பண்ணப்பட்டவர்களும், ஜனங்களை தங்களிடமோ அல்லது அவர்கள் அறிந்திராத ஒரு தீர்க்கதரிசியிடமோ, அவர்களது பிறப்புக்கு முன்னமே மரித்துப்போன ஒரு தீர்க்கதரிசியிடமோ வழிநடத்துகிற கள்ள அபிஷேகம் பண்ணப்பட்டவர்களும் எப்பொழுதும் அங்கே இருக்கிறார்கள். உபாகமம் 13:1 கூறுகிறதைப் போலவே, கள்ளத்தீர்க்கதரிசிகள் எப்பொழுதும் ஜனத்தை ஒரு சபையை நோக்கி அல்லது அவர்களது காலத்தின் செய்தியைத் தவிர வேறு எதையாவது நோக்கி வழிநடத்துகிறார்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
25முடிவாக, ஒரு அபிஷேகம் பண்ணப்பட்டவனுடைய பணியானது அவனுடைய நாட்டின் எல்லைகளுக்குள்ளேயே இருக்கும் என்பதை மறுபடியும் நினைவில் வையுங்கள். அவர்களுடைய உலகங்களின் கடையாந்தரங்கள் என்பது அவர்களுடைய நாட்டின் எல்லைகளாக இருக்கிறது மேலும் அவர்கள் தங்களுடைய நாட்டைவிட்டு வெளியே செல்லும்போது, அது ஒத்துழைப்புக்காகத்தான்.
26கடந்த ஞாயிற்றுக்கிழமை, நான் ஒரு தீர்க்கதரிசியைச் சந்திக்க நேர்ந்தது, அவன் சோகமான கண்களுடன் உட்கார்ந்திருந்தான், அனைவரும் மது அருந்தியவர்களாகவும், அவனது ஆட்கள் சாராய வாடைவீசுகிறவர்களாக, தங்கள் கரங்களில் சிகரெட்டுகளை பிடித்துக் கொண்டிருந்தனர். இன்னும் சிலர் குட்டை கால்ச்சட்டை அணிந்தவர்களாகவும், பெண்கள் கால்ச்சட்டைகளும், அகம் புறம்பாக காணத்தக்க உடைகளும் அணிந்தவர்களாக உதட்டுச் சாயங்களுடனும் நகப்பூச்சுக்களுடனும் இன்னும் மற்றவைகளுடனும் இருந்தார்கள். இந்த தீர்க்கதரிசி பன்றி வளர்ப்பவனேயன்றி வேறொன்றுமல்ல.
27கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டுத் தலைவர்கள் தேவனுக்கு முன்பாக பன்றி வளர்ப்பவர்களேயன்றி வேறொன்றுமல்ல. எதாவதொரு நாளில், அவர்கள் அனைவரும் ஓரினச்சேர்க்கையில் முடிவடைவார்கள். நான்காயிரம் விசுவாசிகள் எனக்குண்டு என்று இந்த குடிகார தீர்க்கதரிசி கூறலாம். முழு போதையில் இருந்த அவன், "மது அருந்துவது பாவம் என்று யார் சொன்னது? இயேசுவின் முதல் அதிசயம் என்ன?" என்றான். மேலும் அவன், "விபச்சாரம் நரகத்துக்கு வழி நடத்துமானால் பிறகு இயேசுவின் இரத்தம் எதற்காக? வேதாகமத்தை நன்றாகப் படியுங்கள், பரிசுத்த ஆவிக்கு எதிரான தூஷணமே நரகத்திற்கு இட்டுச் செல்கிறது! ... பிரன்ஹாம் தான் கடைசி தீர்க்கதரிசி ...!" என்றான். முழு போதையில் தான் அவன் அதை சொல்லிக் கொண்டிருந்தான். என்னைப் பொறுத்தவரை, அது ஒரு பன்றி வளர்ப்பவனேயன்றி வேறொன்றுமல்ல.
28அத்தகையவர்கள், பட்டினிகிடப்பதை நீங்கள் கண்டு, உங்கள் மீதமுள்ள உணவை குப்பைத் தொட்டியில் எறிந்தாலும், நீங்கள் பாவம் செய்யவில்லை, ஏனென்றால், "உன்னைப் போலவே உன் அயலானையும் நீ நேசிக்க வேண்டும்" என்று தேவன் சொல்லும்போது, அவர் பிசாசைக் குறிக்கவில்லை! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
29சகோதர சகோதரிகளே, சர்ப்பமும் பன்றியும் நமது அயலகத்தார் அல்ல! நீங்கள் பார்க்கிறீர்களா? ஆதாமும் ஏவாளும் அதைப் புரிந்துகொண்டிருந்தால், ஏதனில் காரியங்கள் அந்தவிதமாக இருந்திருக்காது! நீங்கள் பார்க்கிறீர்களா? உன்னுடைய அயலான் என்பது "நான் தேவாலயத்திற்கு செல்ல விரும்புகிறேன், ஆனால் நான் புகைபிடித்தலுக்கு அல்லது குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறேன்" என்று கூறும் ஒருவன் தான்!
30உன்னுடைய அயலான் என்பது, "நான் திருச்சபைக்குச் செல்ல விரும்புகிறேன், ஆனால் என் வாழ்க்கை ஒரு கிறிஸ்தவளாக இருக்க தகுதியற்றத, நான் மிகவும் அசுத்தமானவள்!" என்று கூறும் அந்த சிறு பெண் தான். இதுதான் உங்கள் அயலான். ஆனால் வேதாகமத்தைச் சுமந்து திரிகிர எவரேனும், வேதாகமத்தில் எழுதப்பட்டிருக்கிற அனைத்தையும் பின்பற்றுவதன் மூலம் அவன் பரலோகத்திற்குச் செல்வான் என்று எண்ணுகிறானெனில், அது பிசாசின் குமாரன் தான்; அது சர்ப்பத்தின் சந்ததி. அந்த ஒன்று உங்களது அயலான் அல்ல. பரிசேயரும் சதுசேயர்களும், செலோத்தேயினர்களும், எசேனியர்களும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மற்றும் அப்போஸ்தலர்களின் அயலகத்தார் அல்ல.
31அந்த நபர்கள் உங்களை பாவத்திற்கு வழிநடத்தலாம், அது உங்களை அறியாமலே வெளிப்படையான பாவ அறிக்கைக்கு வழிநடத்தலாம்! ஏதேனிலே அவர்களுடைய பாட்டனாரைப் போலவே, பாவத்துக்கு அவர்கள் திறமை வாய்ந்தவர்கள்! அவர்கள் உங்களிடம் இனிப்பு பானங்கள் கேட்கலாம், நீங்கள் அவர்களை விட்டு வெளியேறியவுடன், அவர்கள் இந்த இனிப்பு பானங்களை பியர்களாக (beers) மாற்ற கடைக்குத் திரும்பிவிடுவார்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
32நல்லது, முடிப்பதற்காக நமது தலைமுறையின் புத்தகத்தில் ஒரு பத்தியை வாசிப்பேன். அது காக்குவ். 23 ல் உள்ளது "... நீங்கள் அறிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால், அந்த விபச்சார செயலின் போது, சர்ப்பமானது அதனுடைய மனித சரீரத்தை முழுமையாகக் கொண்டிருந்தது. ஆனால், புதரிலுள்ள அந்த பாம்பு, நான் எனது மகள் அன்னாளின் தகப்பனாக இருப்பதுபோல காயீனின் தகப்பனாக இருக்கிறது. எலும்பின் எலும்பும், மாம்சத்தின் மம்சமும். புதரில் நீங்கள் காணக்கூடிய அந்த ஊர்வனமானது இந்த செய்தி கண்டனம் செய்கின்ற மற்றும் மனந்திரும்பாதவர்களான அனைவருடைய மூதாதையராக இருக்கின்றது.
33மரபனுச் சோதனை செய்யவும், நான் தவறாக என்ன சொல்கிறேன் என்று என்னிடம் கூறவும் நான் விஞ்ஞானிகளுக்கு சவால் விடுகிறேன்! ஒரு பாம்பானது கொல்லப்படுமானால், இந்த கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகள் அங்கத்தினர்கள் அந்த பாம்புக்காக ஒரு பக்தியான எண்ணத்தை கொண்டிருப்பார்கள் என்று சொன்னேன். உங்களுக்கு தெரியுமா, ஆப்ரிக்காவிலே, அநேக கோத்திரத்தார் சில மிருகங்களை சாப்பிட மாட்டார்கள் ஏனெனில், கடந்த காலத்திலே, அவர்களுடைய முன்னோர்கள், ஒரு குறிப்பிட்ட காரியத்தின் போது, தானாகவே மறுரூபமாகிவிட்டதாக அல்லது அந்த மிருகமாக மாற்றப்பட்டதாக அவர்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. அது உண்மை தான்... அது ஒரு மிருகம் ஆனால் அது மனித கோத்திரத்தின் மூதாதையராக இருக்கிறது. ஒரு மிருகமாக ஆவதற்கு முன்னால் அவனுக்கு சில பிள்ளைகள் இருந்ததென்றால், அவன் இப்பொழுதும் அந்த பிள்ளைகளுக்கு தகப்பனாகத்தான் இருக்கிறான். அதுதான் ஏதேன் தோட்டத்தில் சம்பவித்தது. மேலும் இன்றைக்கு, ஒரு பிரன்ஹாமிஸ்டு ஒரு மலைப்பாம்பின் அல்லது ஒரு வலுசர்ப்பத்தின்... பிணத்தின் முன் வனங்குகிறான், அது சரிதான்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
34காக்குவ் செவெரினின் இறுதிச்சடங்கில் கல்லறையைச் சுற்றிலும் பாம்புகள் எவ்வளவு குறிப்பிடத்தக்கவிதமாக பிரதிநிதித்துவம் பெற்றன என்பதைக் கவனியுங்கள். அந்த பாம்பு காக்குவ் செவெரினின் இறுதிச் சடங்குக்கு வந்தது. அது ஒரு உறவினனின் இறுதிச் சடங்குக்கு வந்தது. காக்குவ் செவெரினின் மனைவி ஒரு செய்தித்தாளில், அது மற்றவைகளை போன்றே இயற்க்கையான ஒரு பாம்பாக இருந்தது எனக்கூறினாள்! சரியாக! இது மற்றவைகளை பொன்று ஒரு இயற்கையான பாம்புதான் ஆனால் அது காக்குவ் செவெரினின் மற்றும் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களான அனைவரின் மற்றும் இந்த கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகள் உட்பட இஸ்லாமியம் மற்றும் யூதம் ஆகியவற்றின் தீர்க்கதரிசிகளுடைய மூதாதையர்! கேட்கிறதற்குக் காதுள்ளவன் எவனோ, அவன் கேட்கக்கடவன்!