(நவம்பர் 09, 2008 ஞாயிற்றுக்கிழமை அட்ஜேம், அபிட்ஜன்- ஐவரி கோஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
1 மத்தேயு 25:6! நாம் அனைவரும் மத்தேயு 25:6 ஐ விரும்புகிறோம்! மத்தேயு 25:6 யோசுவா 6 உடன் ஒப்பிடத்தக்கது! ஆரம்பத்தில், இன்று நடுராத்திரி சத்தம் என்னவாக இருக்கின்றதோ அது அங்கே பவுலுடன் ஒலித்தது, ஆனால் அது ஒரு எக்காளமாக, இதோ, மணவாளன், அவரைச் சந்திக்க புறப்படுங்கள் என்றது ! இதே சுத்த கன்னிகை மணவாளனை சந்திக்க புறப்பட்டது! மத்தேயு 25:1 கூறுகிறதாவது, "அப்பொழுது பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப்புறப்பட்ட பத்துக்கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும்."!
2 அது மத்தேயு 25:7 அல்ல, மாறாக மத்தேயு 25:1. ஒரே தரம் மாத்திரமே அவர்கள் தங்கள் தீவட்டிகளைப் ஏற்றினார்கள் என்று கூறியிருக்கிறது அதை அவர்கள் பவுலின் எக்காள சத்தத்தில் ஏற்றினார்கள், மார்டீன் டி டூர்ஸ் இன் எக்காள சத்தத்தில் ஏற்றினார்கள், கொலம்பன், மார்ட்டின் லூதர், ஜான் வெஸ்லி, வில்லியம் பிரன்ஹாம் மற்றும் மத்தேயு 25:6 இன் சத்ததத்தோடு எடுத்துக்கொள்ளப்படுதல் வரைக்கும் உள்ள எக்காள சத்தத்திற்கு ஏற்றுவார்கள்.
3 முதலாவதாக அது ஒரே ஒரு ஒற்றை கன்னிகை மாத்திரமே புறப்பட்டு சென்றது! நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே மணவாளனுக்கு ஒப்புக்கொடுத்தேன்! என்று பவுல் கூறினார், யோசுவா அவர்களைப் அவர்களுடைய கூட்டத்தினரோடு, பிரிப்பதற்கு முன்பு அவர்கள் ஒரே ஒரு ஒற்றை கன்னிகையில் பத்து கன்னிகளாக இருந்தனர். மோசே அவர்களை கிறிஸ்துவுக்கு சுத்த கன்னிகை என்று அழைப்பதற்கு முன்பே, பன்னிரண்டு கோத்திரங்களாக இருந்தனர்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
4 பழைய உடன்படிக்கையில், உயிருள்ள தீர்க்கதரிசிகள் ஜனங்களை அஞ்ஞான மததத்திலிருந்து வெளியேறச் செய்தார்கள், ஆசாரியர்கள் அவர்களை மீண்டும் அதற்குள் கொண்டு வந்தார்கள்! நீங்கள் பார்க்கிறீர்களா? உயிருள்ள தீர்க்கதரிசி ஜனங்களை குறிசொல்லும் ஆவியிலிருந்து வெளியேறச் செய்கிறார், ஆசாரியர்கள் அவர்களை மீண்டும் அதற்குள் கொண்டு வருகிறார்கள்! உயிருள்ள தீர்க்கதரிசி அவர்களை புறப்பட செய்கிறார், ஆசாரியர்கள் அவர்களைத் திரும்பக் கொண்டு வருகிறார்கள்! உயிருள்ள தீர்க்கதரிசி அவர்களை புறப்பட செய்கிறார், ஆசாரியர்கள் அவர்களைத் திரும்பக் கொண்டு வருகிறார்கள்! பவுல் அவர்களை புறப்பட செய்கிறார், அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள் மற்றும் அவருடைய காலத்தின் போதகர்கள் அவர்களைத் திரும்பக் கொண்டு வருகிறார்கள்! கடவுள் மற்றொரு தீர்க்கதரிசியை அனுப்புவது அவசியமாக இருக்கின்றது. இதுதான் இம்மட்டுமாக இருந்தது மேலும் எடுத்துக்கொள்ளப்படுதலில் அவர் வரும் வரைக்கும் அது இப்படி தான் இருக்கும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
5 மத்தேயு 25:1 மற்றும் மத்தேயு 25:5-க்கு இடையில், ஏழு காலங்களும் ஏழு எக்காளங்களும் உள்ளன! யோசுவா 6-ன் எக்காளம் ஊதின இந்த ஏழு ஆசாரியர்கள் தீர்க்கதரிசிகளாக இருக்கிறார்கள்! ஒரு தீர்க்கதரிசி ஆசாரியனாக இருக்கிறான், இயேசு தாமே பிரதான ஆசாரியனான மெல்கிசேதேக்கு! நீங்கள் பார்க்கிறீர்களா? ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் ஆசாரியனாக இருக்கிறான், ஆனால் ஒரு ஆசாரியன் தீர்க்கதரிசி செய்தியாளனல்ல. நீங்கள் பார்க்கிறீர்களா?
6 ஏழு எக்காளங்களுக்குப் பிறகு, 6 வது வசனத்தில் மீண்டும் ஒரு சத்தம் வந்தது, "இதோ மணவாளன் வருகிறார்; அவரை சந்திக்க புறப்படுங்கள்"! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. பழைய ஏற்பாட்டில், யோசுவா 6 இல் ஏழு எக்காளங்கள் ஒலிக்கின்றன, அதன் பிறகு ஒரு சத்தம். இந்த பக்கத்திலும், ஏழு எக்காளங்கள் மத்தேயு 24: 31 ல் அறிவிக்கப்பட்டதைப் போல ஒலிக்கின்றன, அதன் பிறகு ஒரு சத்தம்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
7 அதன்பிறகு, நடுராத்திரி சத்தம் சந்திரனுடனும் சூரியனுடனும் ஒலிக்கிறது, இது மத்தேயு 25:6 இன் பெரிய கழுகினுடைய இடது இறக்கை மற்றும் வலது இறக்கையுடன் வருகிறது, நியாயப்பிரமானமும் கிருபையும் மூன்றாவது தரிசனத்தின் வார்த்தைகளில் இரண்டு குறிப்புகளுடன் வருகிறது! நீங்கள் பார்க்கிறீர்களா? இதனால்தான் நான் வெளிப்படுத்துதல் 6:9 முதல் 11-ஐ வாசிக்க விரும்புகிறேன்!
8 நான் இவ்வாறு வெளிப்படுத்துதல் 6:9 முதல் 11 மற்றும் மீண்டும் மத்தேயு 25:1-ஐ வாசிக்க போகிறேன்… மிக நல்லது, ஆகவே நான் வெளிப்படுத்துதல் 6:9 முதல் 11 வாசிக்க போகிறேன்… "அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினாலும் தாங்கள் கொடுத்த சாட்சியினாலும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின் கீழேப் பார்த்தேன். அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமும் உள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடம் எங்களுடைய இரத்தத்தைக்குறித்து எவ்வளவு காலங்கள் நியாயத்தீர்ப்புச் செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று அதிக சத்தமாகக் கேட்டார்கள். அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அவர்கள் தங்களைப்போலக் கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்களுடைய உடன்பணியாளர்களும் தங்களுடைய சகோதரர்களுமானவர்களின் எண்ணிக்கை நிறைவாகும்வரை இன்னும் கொஞ்சக்காலம் காத்திருக்கவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது."
9 இன்று காலை, நான் குறிப்பாக கிருபையைப் பற்றி பேசப் போகிறேன், ஏனென்றால், ஒரு தூதன் இறங்கி வரும்போது, இரட்சிப்பின் கதவுகள் பரலோகத்தில் இருப்பதைப் போன்று பூமியிலே திறக்கப்பட்டது மட்டுமல்லாமல் ஆனால் கிருபையும் வழங்கப்படுகிறது! செய்தியின் ஒரோ ஒரு செய்திக்கூற்றை யாரோ ஒருவர் ஏற்றுக்கொள்ளாத மாத்திரத்திலேயே, அவர் இந்த கிருபையை மறுத்து, செய்தியிலிருந்து என்றென்றும் வெளியேற்றப்படுவார் என்று நான் சமீபத்தில் முடிவு செய்துள்ளேன். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
10 சரி, நான் இப்போது மத்தேயு 25:1 ஐப் வாசிக்கின்றேன் ... "அப்பொழுது பரலோகராஜ்யம் தங்களுடைய எண்ணெய் விளக்குகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாக இருக்கும்." அப்போது அவர்கள் எவரால் புறப்பட்டு சென்றார்கள்? பவுலினால்! பவுல் சத்தமிட்டான்… பவுல் வெளியே வந்தபோது, தெரிந்து கொள்ளப்பட்டவர்கள், “இதோ மணவாளன் வருகிறார், அவரை எதிர் கொண்டு போக புறப்படுங்கள்", என்று ஒரு சத்தத்தைக் கேட்டனர். காலங்களினுடாக, ஒவ்வொரு செய்தியாளனும் மணவாளனை சந்திக்க மட்டுமே மணவாட்டி அழைத்திருக்கின்றனர்! ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மத்தேயு 25:6-ல் ஒரு சத்தத்தை பற்றி குறிப்பிடும்போது, அது எளிமையாக மத்தேயு 25:6-ன் தூதனுக்கு கொஞ்சம் இடமளிப்பதாகும்! இல்லையென்றால், மத்தேயு 24 ஐப் போலவே, மத்தேயு 25 ஏழு முத்திரைகளையும் சம்பந்தப்படுத்துகிறது! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
11 இப்போது, கிறிஸ்துவின் மணவாட்டியாக இருக்கும் இந்த பத்து கன்னிகைகளிடம் மீண்டும் வருவோம்! அவர் அவர்களை நேசிக்கிறார்; இதனால்தான் அவர் அவர்களுக்கு சில தீர்க்கதரிசி செய்தியாளர்களை அனுப்புகிறார்! அவர்களால் தான் அவர் தீர்க்கதரிசி செய்தியாளர்களை அனுப்புகிறார்! ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் பூமியில் வரும்போது, அது ஏதேனுக்குத் திரும்பவதாகும் ஏனெனில் கடவுள் தம்முடைய மணவாட்டிக்கு சுதந்தரமாகக் கொடுத்த இடம் ஏதேன், அது கடவுளின் பிரசன்னம்! அவள் அங்கே, நீரோடை மற்றும் கீழ்நிலையிலும், பெரிய ஆற்றின் நான்கு கிளைகளிலும் நீராடுகிறாள்! ஒரு தலைமுறையின் தீர்க்கதரிசி செய்தியாளன் பூமியை விட்டு வெளியேறும்போது, கடவுள் இந்த தலைமுறைக்கு ஏதேனுக்குள் நுழைவதை அடைத்துப் போடுகிறார்! நீங்கள் பார்க்கிறீர்களா?
12 மேலும், இது நான்கு நீரோடைகள் ஒரு பெரிய ஆற்றில் பாய்வதை பற்றிய கேள்வி அல்ல ஆனால் மகத்தான நதிதான் எபேசிய நீரோடைகளில் அதாவது எபேசியர் 4:11 இன் ஊழியங்களில் பாய்கிறது என்று கூற வேண்டும்.
13 ஒரு தலைமுறையில், அந்த தலைமுறையின் தீர்க்கதரிசி செய்தியாளரின் வார்த்தையின் தண்ணீர் தான் நான்கு நீரோடைகளில் பாய்கிறது, அவை எபேசியர் 4:11 இன் நான்கு ஊழியங்கள்: அப்போஸ்தலர், சபை தீர்க்கதரிசி, சுவிசேஷகர் மற்றும் போதகர்.
14 இதை தவிர, நீங்கள் பிரசங்கிக்கப் போகிற அனைத்தும் மனிதர்களின் கற்பனையே. ஒரு தீர்க்கதரிசி செய்தியாளருக்கு வெளியே, கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷ மற்றும் பிரன்ஹமிஸ்ட் பிரசங்கங்கள் யாவும் மனிதர்களின் கற்பனைகள். மோசே என்ற மகத்தான நதிதான் அவருடைய காலத்தில் ஆசாரியர்களுக்குள் பாய்ந்தது. இயேசு கிறிஸ்து என்ற பெரிய நதி தான் அவர் நிறுவிய அப்போஸ்தலர்களுக்குள் பாய்ந்தது.
15 இன்று, இந்த தலைமுறையில் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவின் செய்தி தான் அப்போஸ்தலர்கள், சபை தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள் மற்றும் இந்த தலைமுறையின் போதகர்களிடம் பாய வேண்டும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. ஆனால் ஆவிக்குரிய ரீதியில், ஒரு நதி தன்னை ஒரு பெரிய நதியாகும்படியாக தனக்குள் பாய முயன்றால், அது மரணத்தைத் தரும். வில்லியம் பிரன்ஹாமின் செய்தியில் எவால்ட் ஃபிராங்கின் நதி பாய்வதை நீங்கள் காணும்போது, அவை பலிபீடமும் வார்த்தையும் தலைகீழாக மாறியவையாகும். இவ்வாறு, பானையில் விஷம் இருப்பதை அறிந்து கொள்ளுங்கள், தீர்க்கதரிசி எலிசா மட்டுமே அதை குணப்படுத்த முடியும்! நீங்கள் பார்க்கிறீர்களா?
16 எலிசாவின் காலத்தில், கில்கால் தேசமெங்கும் பஞ்சம் ஏற்பட்டது, தீர்க்கதரிசிகளின் புத்திரர்களும் கூட மூலிகைகள் மற்றும் காட்டு கொடிகளை உணவாகக் கொண்டனர். எலியாவின் தீர்க்கதரிசியின் தகுதியான குமாரர்கள் எலிசாவிடம் அங்கு பானையில் விஷம் இருக்கிறது என்று முறையிட முடிந்தது ! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
17 எலிசா அவர்களுடைய கண்களை திறந்தான், பானையில் மரணம் இருக்கிறது என்று அவர்கள் சத்தம் இட்டனர்! இதை வெளிப்படுத்த ஒரு உயிருள்ள தீர்க்கதரிசி செய்தியாளன் தேவை: ஜேம்ஸ் மன்னன், டாம்சன், செமூர், புதிய உலக மொழிபெயர்ப்பு, லூயிஸ் செகாண்ட், ஸ்கோஃபீல்ட் வேதாகமங்கள் மற்றும் கத்தோலிக்கர்களின் தோம்ப வேதாகமம் ஆகியவை சாத்தானால் அச்சிடப்பட்டவை! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
18 ஆனால் இந்த பத்து சுத்த கன்னிகளைப் பாருங்கள்! அவர்கள் பூமியின் அனைத்து தேசங்களிலிருந்தும், மொழிகளிலிருந்தும், கோத்திரத்திலிருந்தும் வருகிறார்கள். நான் மத்தேயு 25:6-ன் தீர்க்கதரிசி செய்தியாளன் என்றால், எல்லா தேசங்களிலிருந்தும், பூமியின் எல்லா மொழிகளிலிருந்தும், கோத்திரத்திலிருந்தும் இந்த செய்திக்கு புருஷர்கள் வந்து ஞானஸ்நானம் பெறுவார்கள், ஜான் வெஸ்லியின் கொள்ளு பேரன்களான வெள்ளை மனிதர்களும் அடங்குவர், மார்ட்டின் லூதர், வில்லியம் பிரன்ஹாம் மற்றும் பலரும்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
19 இந்த பத்து கன்னிகைகள் ஆவியினாலும் ஆத்துமாவாலும் ஜிவிப்பவர்கள்! ஒரு வெளிநாட்டவர் எவ்விதமாக தன்னுடைய இதயத்தை தனது தாய்நாட்டையும் அவரது உறவினர்களையும் நோக்கி இருப்பதை போலவே, இந்த பத்து கன்னிகைகளும் எப்போதும் பரலோகத்திற்கு நேராக தங்களின் ஆவியும் ஆத்துமாவும் திரும்பியிருக்கும். அவர்களுக்கு தங்களுடைய மாமிசத்தை விட ஆத்துமா வலிமையாய் இருக்கும். அவர்களின் ஆத்துமா உயிருடன் இருக்கிறது! அவர்களின் மனசாட்சி அவர்களின் மாம்சத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது!
20 இந்த உலகத்தின் மகிமைகள் அவர்களுக்கு மாயைகளாக இருக்கின்றது.. அவர்களுடைய இதயம் தங்கள் தேசத்தின் ராஜாவிற்கோ அல்லது அவர்களின் தேசத்தின் ஸ்திரத்தன்மைக்கும், வளர்ச்சிக்கும் அல்ல, ஏனென்றால் அவர்கள் அங்கு வெளிநாட்டவர்! அவர்கள் சுத்திகரிக்கப்பட்டு, வெண்மையாக்கப்பட்டு அவர்களுடைய மணவாளனாகிய கிறிஸ்துவுக்காக புடமிடபட்டுள்ளார்கள்,! அவர்கள் அரசியலுக்காக பாடுபடவோ அல்லது மரிப்பதற்க்காகவோ உருவாக்கப்படவில்லை! அவர்கள் கால்பந்துக்காக பாடுபடவோ அல்லது மரிப்பதற்க்காகவோ உருவாக்கப்படவில்லை!
21 மேலும் இரவு கேளிக்கை விடுதி, மதுக்கூடங்கள், பொது விடுதிகள் மற்றும் சிகரெட் ஆகியவை அவர்களுக்காக உருவாக்கப்படவில்லை, ஏனெனில் அவர்களுடைய ஆத்துமாக்கள் கடவுளின் ஆத்துமாக்கள். அவர்கள் மகத்தான ராஜாவின் மணவாட்டி! ஒவ்வொரு முறை சத்தமிடும்பொழுது, அவர்கள் கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கிலிருந்து புறப்படுகிறார்கள், அவர்கள் தங்கள் காலத்தினுடைய வார்த்தையை அடையாளம் கண்டு கொள்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் வார்த்தையினால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. இந்த செய்தியில் ஏதோ ஒன்று அவர்களை ஈர்க்கிறது. ஆழத்தை ஆழம் அழைக்கிறது! அவர்கள் ஒருபோதும் ஒரு கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷக அல்லது பிரன்ஹாமிஸ்ட தேவாலயத்திற்குள் செல்லமாட்டார்கள்.
22 அவர்கள் கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் மற்றும் வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் கழுகுகளின் இறக்கைகளின் மேல் வருகிறார்கள்! அவர்கள் நடுராத்திரி சத்தத்தின் குரலின் தாளத்திற்கு வருகிறார்கள்! எந்த காற்றும் அவர்களை தக்கவைக்க முடியாது! எந்த பெற்றோரின் உணர்வோ நட்போ அவர்களைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது! நாடுகளுக்கிடையேயான தூரம் அவர்களுக்குத் தடையாக இருக்காது! அவர்களின் தோலின் நிறம் அவர்களுக்குத் தடையாக இருக்காது! மொழிகளில் உள்ள வேறுபாடுகள் அவர்களுக்குத் தடையாக இருக்காது! எந்த நதியும் அவர்களைத் தடுக்க முடியாது!
23 சூரியனின் வெப்பமும் இரவின் புத்துணர்ச்சியும் அவர்களைத் தக்கவைக்க முடியாது! அவர்கள் வெற்றி பெறுவதால் அவர்களின் இருதயமும் ஆத்மாவும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கின்றன ஏனெனில் அவர்கள் ஜெயம் கொண்டார்கள்! அவர்கள் வேதனையில் இல்லை, அவர்கள் ஒருபோதும் வலியில் இல்லை, அவர்கள் ஒருபோதும் வலியில் இருக்க போவதுமில்லை! செய்தியின் காரணமாக, பூமியின் பாடுகள் இருந்தபோதிலும், அவர்கள் ஒருபோதும் துக்கிப்பதில்லை! அவர்கள் கொண்டிருக்கும் நித்திய சந்தோஷமும், ஆறுதலும், நம்பிக்கையும் ஒருபோதும் அழியாது! அவர்கள் ஒருபோதும் தூங்கவுமில்லை, அவர்கள் ஒருபோதும் தூங்கவும் மாட்டார்கள்! அவர்கள் ஒருபோதும் மரித்ததுமில்லை, அவர்கள் ஒருபோதும் மரிக்கப் போவதுமில்லை! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
24 அவர்கள் பாவத்திற்கும் தீட்டுக்கும் எதிரிகள், ஏனென்றால் காற்று, புயல்கள் மற்றும் பாலைவனத்தின் மணல் ஆகியவை தொடர்ந்து மூடும் போது, பரிசுத்தத்தின் மூலமாகவே இடுக்கமான பாதையின் தொடர்ச்சியை அவர்கள் காண முடியும்! அவர்கள் சுத்தமானவர்கள், அவர்கள் ஒருபோதும் தங்கள் கணவர்களிடமிருந்து எதையும் மறைத்ததில்லை. அவர்கள் இருதயம் தூய்மையானது, சாத்தானால் அவர்களைக் குற்றம் சாட்ட முடியாது என்பதால் அவர்கள் நம்பிக்கையுடன் சபையில் அமர்ந்திருக்கிறார்கள்! அவர்கள் அறிக்கையிட எந்த பாவங்களும் இல்லை, மீட்பின் நாளுக்காக பரலோகத்தின் வெளிச்சம் தொடர்ந்து அவர்கள் மீது பிரகாசிக்கிறது! காற்றும், புயலும் பாலைவனத்தின் மணலும் அவர்களுடைய பரிசுத்தத்தினாலும் கடவுள்மீதுள்ள அன்பினாலும் அவர்கள் மீது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
25 அவர்கள் ஆசீர்வதிக்கப்படகடவர்கள்! அவர்கள் தங்கள் காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசியைப் பெற்றதால் அவர்கள் ஆசீர்வதிக்கப்படகடவர்கள், மேலும் அவர்கள் அவருடைய வார்த்தையைக் கடைப்பிடிக்கிறார்கள். அவர்கள் இந்த வார்த்தையின் வெளிச்சத்தில் நடப்பதாலும், தேவனுடைய கிருபை அவர்களுடைய இருதயத்தின் நீதியின் காரணமாக அவர்கள்மீது தொடர்ந்து நிலைத்திருக்கும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
26 அவர்கள் ஆசீர்வதிக்கப்படகடவர்கள் ஏனெனில் அவர்கள் முழுவதும் கிருபையினால் நிறைந்தவர்கள் அவர்கள் அவர்களுடைய காலத்தில் ஆசீர்வதிக்கப்படகடவர்கள் ஏனெனில் அவர்களால் கிருபையானது அளவில்லாமல் வழங்கப்படுகிறது ஆகையால் கிருபையை அதை கேட்காதவர்களுக்கூட கிருபையானது வழங்கப்பட்டது. பலிபீடத்தின் கீழ் இருக்கும் இலட்சக் கணக்கான யூதர்கள் ஹிட்லர், முசோலினி மற்றும் ஸ்டாலின் ஆகியோரின் கீழ் கொல்லப்பட்டனர் மற்றும் பூமியின் குடிகள் மீது பழிவாங்கக் கேட்கிறார்கள், அவர்கள் கல்யாண வஸ்திரத்தை பெறுகிறார்கள்! ராஜாவின் ஊழியர்களாகவும் பணிப்பெண்களாகவும் மரிந்த அந்த யூதர்கள் அதே ராஜாவின் குமாரர்களாகவும் குமாரத்திகளாகவும உயித்தெழுவார்கள்! ஏன்?
27 கிருபையானது அதிகமாக வழங்கப்பட்டது ஏனெனில் கலியாண வஸ்திரமானது அதை கொண்டிருக்கும்படியாக உரிமை இல்லாதவர்களுக்கு கூட இலவசமாக கொடுக்கப்பட்டது அவர்கள் யூதர்கள், நியாயப்பிரமாணத்தை தவிர வேறு எதுவும் அவர்கள் அறியார்கள்! கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்! அந்த யூதர்கள், "எங்களின் இரத்தத்தை ஜெர்மன், ரஷ்ய, போலிஷ், பிரஞ்சு, ஸ்பானிஷ் மீது மட்டுமல்ல, பூமியிலுள்ள அனைவர் மீதும் பழிவாங்க வேண்டும் என்றார்கள்!"
28 மத்தேயு 27:25-ற்க்கு இணங்க அந்த யூதர்களுக்கு அதை காண்பிப்பதற்கு பதிலாக, சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவின் இரத்தமே அவர்கள் மீது விழுந்தது, அவர்களுக்கு வெண்மையான வஸ்திரம் வழங்கப்பட்டது! நீங்கள் பார்க்கிறீர்களா? நடுராத்திரி சத்தத்தை கேள்விப்படாத உங்களுடைய உறவினர் ஒருவேளை உங்களை மகிமையில் சந்திக்கும்படி கடவுள் அவ்வளவதிகமாய் கிருபையை அளிக்கின்றார்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
29 அவர்கள் பரிசுத்த தூதர்களின் மேற்பார்வையில் கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும், வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் வருகிறார்கள்! அவர்கள் நடுராத்திரி சத்தத்தின் வேகத்தில் வருகிறார்கள்! அவர்களுடைய இருதயமும் ஆத்துமாவும் பாவத்தை வெறுக்கின்றன! அவர்களின் பாஷை தெரு பாஷை அல்ல! அவர்கள் கன்னிகைகளாக இருப்பார்கள், அவர்களால் பாவம் செய்ய முடியாது! மகா பரிசுத்த மணவாளனை சந்திக்க புறப்படுகிறார்கள்! அவர்களுடைய கையில், சிகரெட் இல்லை, மதுபானம் இல்லை, தலையில் பொய்யான முடி இல்லை, கால்சட்டை இல்லை, நகச்சாயம் மற்றும் உதட்டுச்சாயம் இல்லை…
30 அவர்கள் அதே வேகத்தில் நடப்பதையும், ஒரே பாடலைப் பாடுவதையும் என்னால் காண முடிகிறது! ஏனெனில் சுவிட்சர்லாந்து, ஜெர்மனி மற்றும் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் வில்லியம் பிரன்ஹாமின் காலத்தில் வேகத்தை உடைத்தார்கள் மற்றும் வேகத்தை உடைக்கச் காரணமாக இருந்தவர்கள் இப்போது சுற்றி எங்கிலும் இல்லை! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. அவர்களிடம் ஒரே வேதாகமம், ஒரே உடை, ஒரே மொழி உள்ளது. உங்களுடைய வேதாகமத்தில் ஒரு குறிப்பிட்ட பக்கத்தை திறக்கவும் என்று அவர்களிடம் சொன்னால், அவர்கள் அனைவரிடமும் ஒரே விதமான பக்கம் இருக்கும்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
31 அவர்களுடைய இளவயதின் முதன்மையில் வருகிறார்கள் ஏனெனில் முதுமையும் குழந்தை பருவமும் மறைந்துவிட்டது அவர்கள் அழகாகவும் பிரகாசமாகவும் இருக்கிறார்கள்! வயல்களில் ஈசாக்கு ரெபேக்காவைச் சந்திக்கச் சென்றதைப் போல அவர் அவர்களைச் சந்திக்க வருவார்! அவர்கள் வருகிறார்கள், கம்பீரமாக, தங்கள் தேசங்களின் பதாகைகளின் கீழ் மீண்டும் வருவார்கள்! கால காலமாக துன்புறுத்தல்கள் இருந்தபோதிலும், அவர்கள் கள்ள சபைகள் மற்றும் அவர்களின் காலத்தின் சபைகளின் தவறான தலைவர்கள் மீது ஜெயம் பெற்றனர். அவர்களுடைய தூதன் அவர்களைக் கொண்டிருந்ததால் எந்த மனிதனும் அவர்களை வஞ்சிக்கவில்லை!
32 அவர்களை வழிநடத்த கடவுள் எப்போதும் ஒரு தூதனை, ஒரு தீர்க்கதரிசி செய்தியாளரை பூமியில் அனுப்பியுள்ளார். யெகோவா ஒரு தீர்க்கதரிசியைக் கொண்டு இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்; ஒரு தீர்க்கதரிசியினால் இஸ்ரவேல் பாதுகாக்கப்பட்டது. தலைமுறை தலைமுறையாக, ஒரு உயிருள்ள தீர்க்கதரிசி செய்தியாளர் மூலம் கடவுள் எப்போதும் தனது ஜனங்களை பாதுகாத்து வருகிறார். அவர் பழைய ஏற்பாட்டில் அதைச் செய்தார், அவர் பூமியில் இருந்தபோது அதைச் செய்தார், அவர் எப்போதும் அதைச் செய்வார், ஏனென்றால் அவர் நேற்றும், இன்றும் என்றென்றும் மாறாதவராக இருக்கிறார். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
33 ஓ! அவர்கள் மிகவும் அழகானவர்கள், மிகவும் கம்பீரமாக இருக்கிறார்கள்! அவருடைய ஆவி அவர்களிடத்தில் இருப்பதால் அவர்கள் வேறு ஏதும் இல்லாமல் அவருடைய சித்தத்தை மட்டுமே செய்கிறார்கள்! அவர்கள் அவருடைய சித்தத்தை நிறைவேற்றி, அவர் சொல்வதற்கு முன்பு அவர் விரும்பும் இடத்திற்குச் செல்கிறார்கள், ஏனென்றால் அவருடைய ஆவி அவர்களில் இருக்கிறது! அவர்கள் மிகவும் அழகாகவும் சுத்தமாகவும் இருக்கிறார்கள், என் விருப்பம் என்னவென்றால், அவர்கள் அவருடையதாக மட்டுமே இருக்க வேண்டும், ஏனென்றால் அவர் என் எஜமானர், நான் அவரை நேசிக்கிறேன்! அவருக்கும் அவர்களுக்கும் ஆசீர்வாதமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலத்திற்கும் இருப்பதாக! உன்னதமான மற்றும் உயர்வான அனைத்தும் என் எஜமானாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே இருப்பதாக! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
34 ஏழு முறை வரைக்கும், மணவாளனுக்காக காத்திருந்தபோது, அவர்கள் சோர்வாக இருந்தார்கள், ஆனால் அவர்கள் ஒருபோதும் தூங்கவில்லை ஏனெனில் அவர்கள் அவரை நேசித்தார்கள்! அவர்கள் ஏழு முறை நித்திரை மயக்கம் அடைந்தார்கள், ஆனால் அவர்கள் ஒருபோதும் தூங்கவில்லை! அவர்கள் ஒருபோதும் தூங்கவில்லை, அதனால்தான் அவர்கள் தங்களுடைய காலத்தின் வஞ்சகர்கள் வருகிறதை கண்டார்கள். அவர்கள் ஒருபோதும் விழுந்து போவதில்லை ஏனெனில் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கிருபையானது நித்திய கிருபையாகும் மேலும் அவர்கள் மீது உள்ள ஆசீர்வாதத்திற்கு முடிவே இல்லை! அவர்கள் அவருடைய சித்தத்தை முழுமையாக செய்வார்கள் ஏனெனில் அவருடைய ஆவி அவர்களில் இருக்கின்றது! அவர்கள் பூமியிலும் பரலோகத்திலும் ஆசீர்வதிக்கப்படகடவர்கள், அவர்களுடைய வித்து இப்போதும் என்றென்றும் எதிரிகளின் வாசல்களை சுதந்தரித்துக் கொள்ளும்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
35 அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், அவர்கள் பிள்ளைகளும் அவர்களுடைய கர்ப்பத்தின் கனிகளும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்களது பிள்ளைகள் கிறிஸ்மஸ் தாத்தாக்களால் வஞ்சிக்கப்பட்டவர்களல்ல. அந்த அனைத்து விக்கிரக பூசாரிகளும், உலகத்தை சுற்றி பயணித்து ஒவ்வொரு வருடத்தின் முடிவிலும் கூட்டங்களை ஏற்பாடு செய்கிற அந்த அனைத்து ரெவரண்ட்களும் கிறிஸ்மஸ் தாத்தாவாக இருக்கின்றனர். அது ஆபிரிக்காவிலானாலும், அமெரிக்காவிலோ, ஆசியாவிலோ, அல்லது ஐரோப்பாவிலோ ஆனாலும், அவர்கள் கிறிஸ்மஸ் தாத்தாக்களாக இருக்கிறார்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
36 அவர்கள் வஞ்சகர்களாக இருக்கின்றனர் மேலும் அவர்கள் ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் மனிதர்களை எவ்வாறு வஞ்சிக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். அவர்கள் கிறிஸ்மஸ் தாத்தாக்களாக இருக்கின்றனர்; உங்களது பிள்ளைகள் அவர்களை நோக்கி, அவர்களது அழைப்புகளும் பணிநியமனங்களும் என்ன என்றும், அவர்களைப் பற்றி வேதாகமம் எங்கு பேசுகிறது என்றும் கேட்க வேண்டியவர்களாக உள்ளனர். அவர்களது வார்த்தைகளை பாருங்கள். அவர்களின் சுவரொட்டிகளை பாருங்கள் மேலும் அவர்கள் ஆண்டின் இறுதியில் என்ன செய்கிறார்கள்! அது என்ன? அவர்கள் கிறிஸ்மஸ் தாத்தாக்களாக உள்ளனர்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
37 ஆரம்பத்தில் இருந்தே, தீர்க்கதரிசிகளுடைய குறுகிய பாதையைத் தேர்ந்தெடுத்தவர்கள் மற்றும் பூமியின் மேல் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் துன்பங்களும் இருந்தபோதிலும் பரிசுத்தவான்கள் முடிவு வரை பற்றிக் கொள்வார்கள்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. அவர் பூமியில் துன்பப்பட்டார், அவர்களும் பூமியில் தலைமுறை தலைமுறையாக துன்பப்படுவார்கள். ஒரு நாள், அனைவரும் பரலோகத்தில் ஒரே மேசையைச் சுற்றி உட்கார்ந்துகொள்வார்கள், அது நித்திய ஆறுதலாக இருக்கும். ஆமென்! நன்றி ஆண்டவரே!