en-en
fr-fr
es-es
pt-pt

Kacou 83 (Kc.83) : வெள்ளை குதிரையின் சவாரி வீரன்
(ஞாயிற்றுக்கிழமை 04 பிறகு புதன்கிழமை ஜனவரி 07 2009 அன்று யோப்போகோன்-குவைத், அபிட்ஜன்-ஐவரி கோஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
1 கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக! அவருடைய வார்த்தையைக் கேட்க்கும்படியாக மீண்டுமாக நாம் இங்கே இருப்பது ஒரு சிலாக்கியம்!
2 கட்டாட்ஜியில் நிகழ்ந்த தேவதூதர்களின் பாடலின் சாட்சியை இங்கே நான் படிக்க விரும்புகிறேன். இது ஐவரி கோஸ்டில் உள்ள தேவர்களின் கூட்டு சபையின் ஐம்பதாம் ஆண்டு இதழில் உள்ளது. கட்டாட்ஜியில் நடந்த தேவதூதர்களின் பாடலை குறித்து விரிவாக அவர்கள் தெரிவித்துள்ளனர். நான் அதை வாசிக்க போகிறேன்: "... இரவு 10 மணியளவில், பாமாலைகள் நமக்கு கேட்கப்பட்டன, அதினுடைய பிறப்பிடத்தை நாமறியோம் . மிஷனரிகளின் இடத்தில் இருந்த விசுவாசிகள் அப்போது கிராமத்தை நோக்கி ஓடினார்கள், கிராமத்தில் இருந்தவர்கள் எதிர் திசையில் ஓடினார்கள். ஒவ்வொரு குழுவும் துதிப்பாடல்கள் எங்கிருந்து வந்தன என்பதைத் தேடிக் கொண்டிருந்தனர்.
3 சத்தங்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் சென்றன, அவை மேலே இருந்து வருவதை அவர்கள் கேட்டனர். ஒரு மெழுகுவர்த்தி போன்ற சிறிய தீப்பிழம்புகள் காற்றில் தெரிந்தன. இறுதியாக, ஜன கூட்டத்தினர் அவர்களுடைய மதப் பிரிவுகளைப் பொருட்படுத்தாமல், கிராம சதுக்கத்திற்குச் சென்று, தீப்பிழம்புகளைப் பார்த்து, மெல்லிசைகளைக் கேட்டன. மொழியானது புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது, ஆனால் மெல்லிசை இனிமையாக இருந்தது.
4 ஒரு குறிப்பிடத்தக்க நேரத்திற்கு பிறகு, பாடல் சத்தமும் தீப்பிழம்புகளும் மறைந்துவிட்டன. இந்த நிகழ்வுக்குப் பிறகு, ஆவிக்குரிய நடவடிக்கை அதிகரித்து வருவதாக நிரூபிக்கப்பட்டது. ஏராளமான மதமாற்றங்கள் இருந்தன. எல்லா பகுதிகளிலும் உள்ள ஜனத்தொகை கட்டாட்ஜியை நோக்கிச் சென்றனர், அவர்களின் மாந்திரீக பொருட்களை எரிக்கும் படியாக கொண்டு வந்து தங்கள் ஜீவியத்தை இறைவனுக்காக அர்ப்பணித்தனர்…
5 இந்த கிராமத்தில் எப்பொழுதாகிலும் தேவதூதர்கள் பாடியதை தேவர்களின் கூட்டு சபையில் எத்தனை விசுவாசிகள் அறிவார்கள்? எத்தனை பேரால் இந்த கிராமத்தின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியும்? ஐவரி கோஸ்ட்டின் "தேவர்களின் கூட்டு சபையின்" சபை பரிணாமத்தை நினைவுபடுத்தும் இந்த வரலாற்று மற்றும் முதல் தர நிகழ்வை வெளிக்கொணர்வதன் மூலம், இந்த நிகழ்வை குறித்து பலருக்கும் தெரியாது என்று நாம் உறுதியாக நம்புகிறோம். இது பெரும்பான்மையான ஜனக் கூட்டத்தினரால் கவனிக்கப்படாமல் போகிறது.
6 ஆயினும், வேறொரு உலகில், கட்டாட்ஜி ஒரு புனித பூமியாக இருக்கும், அங்கு மக்கள் வழிபடுவதற்கும், ஆண்டு விழாக்களைக் கொண்டாடுவதற்கும் கூடிவருவார்கள். அது நம்முடைய நோக்கம் அல்ல; இந்த வரலாற்று நிகழ்வினுடைய முழு அலட்சியம் மற்றும் அறியாமையை குறித்து நாம் ஆச்சரியப்படுகிறோம், இது வேறு ஏதேனும் ஒரு இடத்தில் இருந்திருந்தால் கட்டாட்ஜி யாத்திரைக்கான நிலமாக மாறியிருக்கும் ... ". ஜூலை 2008 இல் வெளியிடப்பட்ட "ஐம்பதாம் ஆண்டு நிறைவு விழா" இதழிலிருந்து எடுக்கப்பட்டது.
7 தேவர்களின் கூட்டு சபை காரியங்களை எவ்விதமாக பொருத்துகிறார்கள் என்பதை இந்த செய்தித்தாள் மூலம் நீங்கள் காணலாம்! எவால்ட் ஃபிராங்கின் கத்தோலிக்க பணி உட்பட பிரன்ஹாமிஸ்டுகள் அதைப் பற்றி பேசும்போதும் காரியம் இதே தான்! நீங்கள் பார்க்கிறீர்களா? இது 1956 அல்லது 1961 அல்லது 1972 இல் இருந்தாலும், இந்த தேவதூதர்கள் கட்டாட்ஜியில் பாடியதற்கான முக்கியமான விஷயம் என்னவெனில், அது கிறிஸ்துவை வெளிப்படுத்த வேண்டிய தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவின் பிறப்பு மற்றும் ஊழியத்தினால்தான்! ஒரு தேவாலயத்திற்காக தேவதூதர்கள் பூமியில் எங்கேயாவது பாடியதாக ஒருபோதும் சொல்லப்படவில்லை! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
8 மிக நல்லது, இப்போது நான் வெளிப்படுத்துதல் 19 அதிகாரத்தில் 6-ஆம் வசனம் துவங்கி வாசிக்கப் போகிறேன். அதைப் பற்றி தான் நான் பேச விரும்புகிறேன்… “அப்பொழுது திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம்போலவும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தமுண்டாகி: அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார். நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக்கேட்டேன். சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே.
9 பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான். அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான்". ஆமென்!
10 நீங்கள் சிலவற்றை கவனிக்க விரும்புகிறேன். யோவான் எடுத்துக்கொள்ளப்பட போகிற மணவாட்டிக்கு ஒப்பாக இருக்கின்றான். புத்தியுள்ள கன்னிகைகளின் வகையில் யோவான் முதலாவதாக இருக்கின்றான். யோவான் இந்த சத்திய வார்த்தைகளையெல்லாம் கண்டபோது, அவனை ஆராதிக்கும் படியாக தேவதூதன் முன் முழங்காலில் விழுந்ததை இங்கே காணலாம். தேவதூதன் அவனை நோக்கி: நான் இயேசு அல்ல, ஆனால் நான் இயேசுவை வெளிப்படுத்துகிறேன். தேவனை தொழுது கொள் என்றான்!" அது தான் கடவுளின் எழுதப்பட்ட வார்த்தை! அவருடைய தொடையில் ஏதோ எழுதப்பட்டுள்ளது அதை நீங்கள் மணவாட்டியின் எண்ணிக்கையில் இல்லாவிட்டால் உங்களால் பார்க்கவோ புரிந்துகொள்ளவோ முடியாது!
11 யோவானைப் பாருங்கள், வேதாகமத்திலும் இரட்சிப்பின் வரலாற்றிலும், மக்கள் யோவானின் மனப்பான்மையை கொண்டிருந்தார்கள், ஆனால் அது எப்போதும் அற்புதங்களுக்கும் அதிசயங்களுக்கும் முன் தான்! அப்போஸ்தலர் 14:8 முதல் 15-ல் உள்ள இந்த மனிதர்களைப் பாருங்கள்… நான் இதைப் படிக்கப் போகிறேன்: “லீஸ்திராவிலே ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் சப்பாணியாயிருந்து, ஒருபோதும் நடவாமல், கால்கள் வழங்காதவனாய் உட்கார்ந்து, பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு: நீ எழுந்து காலூன்றி நிமிர்ந்து நில் என்று உரத்த சத்தத்தோடே சொன்னான். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான். பவுல் செய்ததை ஜனங்கள் கண்டு, தேவர்கள் மனுஷரூபமெடுத்து நம்மிடத்தில் இறங்கிவந்திருக்கிறார்கள் என்று லிக்கவோனியா பாஷையிலே சத்தமிட்டுச் சொல்லி,. நீங்கள் பார்க்கிறீர்களா? ஆனால் இங்கே வெளிப்படுத்துதல் 19:8-ல் முதன்முறையாக, தேவனுடைய வார்த்தையின் காரணமாக யாரோ ஒருவர் அவர் முகம் குப்புற விழுகிறார், ஏனெனில் தேவனுடைய குமாரர்கள் வார்த்தையிலிருந்து புறப்பட்டு வருகிறார்கள்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
12 வார்த்தையின் முழுமையும் மற்றும் தெய்வத்துவமாகிய இயேசுவின் அப்போஸ்தலனாக யோவான் இருந்தான், மேலும் அவன் அவரை அறிந்திருந்தான். அந்த எழுதப்பட்ட வார்த்தையைப் பார்க்கும் படியாக அவனுக்கு கொடுக்கப்பட்ட போது, அந்த தருணத்திலேயே இந்த வார்த்தைகள் தேவதூதரிடமிருருந்து பறப்பட்டு வந்ததென்றும் மேலும் இயேசு கிறிஸ்து தான் இன்னோரு வடிவத்தில் உள்ள இந்த தூதன் என்று கணக்கீடு செய்தான்! அதற்கு யோவான், '"அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான் ".
13 தூதன் யோவானிடம், யோவானே இல்லை! தேவனைத் தொழுதுகொள்., ஏனென்றால் இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான், அதாவது தீர்க்கதரிசியின் எந்த ஆவியும் இயேசுவின் பிரத்தியச்சமாகும். மோசே, ஏசாயா, எரேமியா… ஆகியோர் உன்னதமான கடவுளுடைய பிரத்தியட்சங்களின் பகுதியாகும்! பவுல், ஐரேனியஸ், கொலம்பா, மார்ட்டின் லூதர், ஜான் வெஸ்லி, உல்ரிச் ஸ்விங்லி, ஜான் கால்வின், வில்லியம் பிரன்ஹாம்… ஆகியோர் உன்னதமான கடவுளின் பிரத்தியட்சங்களின் பகுதியாகும்! வகையினர் இயேசு கிறிஸ்துவுக்கு மட்டுமே பணிந்துக் கொள்ளுங்கள், சர்வவல்லமையுள்ள கடவுளுடைய ஒரே முழுமையான வெளிப்படுதலாகும் ! தீர்க்கதரிசி செய்தியாளர்கள் பூமியின் மேல் தேவனுடைய பிரத்யட்சமாக இருக்கிறார்கள் , அவர்களில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தேவனுடைய முழுமையாக இருக்கின்றார்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
14 அதேபோல், தேவதூதர்கள் பூமியில் தேவனுடைய வெளிப்படுதலாக இருக்கிறார்கள், ஆனால் அவர்களில், தேவன் தாமே உடன்படிக்கையின் தூதனாக இருக்கின்றார்! மத் 25:6 - இன் செய்தியாளனும், காக்குவ் பிலிப்புவும் அதே நபராக இருக்கிறதை போல அது அதே நபராக இருக்கின்றது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
15 இப்போது நான் எனது பொருளுக்கு திரும்பி வருகிறேன், இங்கு மூன்று வகையான மக்கள் அமர்ந்திருப்பதைக் கவனியுங்கள்: புத்தியுள்ள கன்னிகைகள், புத்தியில்லாத கன்னிகைகள் மற்றும் கலப்பின கூட்டம். கலப்பின கூட்டம் பிசாசுக்குரியது. இப்போது, என்ன நடக்கிறது? பலமான காற்று வரும் பொழுது, கலப்பின கூட்டத்தின் கூச்சல்கள் பார்க்கும்படியாக தெரியும், ஆனால் புத்தியில்லாத கன்னிகைகளுக்கு யாவும் அவர்களின் இதயத்திற்குள் நடக்கிறது! நீங்கள் பார்க்கிறீர்களா?
16 செய்தியின் முதல் கட்டத்தில், "எங்கள் அன்பான சகோதரர் பிலிப்புவின் தேவன்!", "சகோதரர் பிலிப்புவின் தேவன்!", "சகோதரர் பிலிப்பின் தேவன்!" என்று கேட்க ஆரம்பிக்க முடிந்தது… அது என்னுடைய காதுக்கு இனிமையாக ஒலிக்கவில்லை ஆனால் அதைத் தடை செய்ய எனக்கு மனதில்லை! அதை கேட்கும்போது புத்தியுள்ள கன்னிகைகள் மகிழ்ச்சியடைந்தனர், புத்தி இல்லாதவைகள் கொஞ்சம் கோபித்துக் கொண்டிருந்தது, ஆனால் காலம் செல்ல செல்ல, அவர்கள் பழகத் தொடங்கினர், பழகிக் கொள்ள ஆரம்பித்தார்கள், பழகுவதன் மூலம் அவர்கள் அதை மோசமாகக் பார்க்கவில்லை! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
17 இப்போது, நாம் ஒரு பொருளுக்கு மீண்டும் வருவோம்: யோவானிடம், "ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள்" என்று கூறப்பட்டது. அதுதான் மத்தேயு 25-ன் கலியாண உவமை, அதற்குப் பிறகு, "இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள்" என்று கூறப்படுகிறது. அவர் அதைப் பற்றி அறிந்ததும், " தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு போல எந்த மனிதனும் பேசினதில்லை!" என்று சத்தமிட்டான் பிறகு அவன் தேவதூதனுக்கு முழு இருதயத்தோடும் பணிந்து கொள்ளும்படி ஆர்வத்துடன் அவர் முழங்காலில் விழுந்தார்.
18 ஆனால் புத்தியில்லாத கன்னிகைகளுக்கு இந்த காரியத்தை பற்றின சரியான புரிதல் இருந்தது, புத்தியுள்ள கன்னிகைகள் கூறின விதமாக சகோதரர் பிலிப்பு அல்ல என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள், ஆனால் அவர்கள் கவனிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக அவர்கள் முழங்காலில் விழுந்தார்கள். அவர்கள் புத்தியுள்ள கன்னிகைகளின் உணர்ச்சிவசத்தால் தாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்று  உணர்ந்தார்கள். அவர்கள் இருதயத்தில், அவர்கள் அதை செய்ய விரும்பவில்லை, ஆனால் அந்தோ, அவர்கள் சில உணர்ச்சி வெறியர்களுடன் இருந்தனர்!
19 புத்தியுள்ள கன்னிகைகள் இப்படியாக சொன்னபோது: "சகோதரர் பிலிப்பு தான் இயேசு கிறிஸ்து என்று நீங்கள் நம்புகிறீர்களா, மனத்தாழ்மையால் அவர் அதைச் சொல்லவில்லை?" அதற்கு புத்தியில்லாத கன்னிகைகள் கவனிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக "ஆமென்!" என்றனர்! காலம் செல்ல செல்ல, புத்தியில்லாதவைகள் அது அவர்களுக்கு ஒன்றுமில்லை என்கிற அளவிற்கு அந்த விஷயத்தை பழக்கப்படுத்திக்கொள்ளத் தொடங்கினர்! நீங்கள் பார்க்கிறீர்களா? புத்தியுள்ளவைகள் அதைச் செய்யக்கூடாது என்றபோதிலும், சில சமயங்களில் ஒரு உயர்ந்த புரிதலானது  தேவதூதரின் ஸ்தானத்தில் கடவுளை வைக்கின்றது என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்! ஆகவே சில சமயங்களில் தூதன் தாமே கடவுளாக  இருக்கின்றார். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
20 உதாரணமாக, யாத்திராகமம் 23-ல் தேவன் இஸ்ரவேலை நோக்கி சொன்னபோது "வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்.  அவர் சமுகத்தில் எச்சரிக்கையாயிருந்து, அவர் வாக்குக்குச் செவிகொடு; அவரைக் கோபப்படுத்தாதே; உங்கள் துரோகங்களை அவர் பொறுப்பதில்லை; என் நாமம் அவர் உள்ளத்தில் இருக்கிறது.  நீ அவர் வாக்கை நன்றாய்க் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்வாயாகில், நான் உன் சத்துருக்களுக்குச் சத்துருவாயும், உன் விரோதிகளுக்கு விரோதியாயும் இருப்பேன்." 
21 அந்த விஷயங்கள் நடக்கும்போதும், நீங்கள் இருந்தீர்கள், மேலும் நீங்கள் எப்படி நடந்துகொண்டீர்கள் என்பதையும் நீங்கள் பார்த்தீர்கள்! நீங்களே உங்களுடைய இருதயங்களின் ஒரே சாட்சிகள்! நீங்கள் அதைப் பற்றி கோபமாக உணர்ந்தால், நீங்கள் அதை அறிவீர்கள்! நீங்கள் யோவானை போல நடந்து கொண்டீர்கள் என்றால், நீங்கள் அதை அறிவீர்கள்! ஆனால் "நீ அதைச் செய்யாதபடிக்கு பார் ..." என்று தேவதூதன் சொன்ன மாத்திரத்திலேயே,  அது ஒருபோதும் செய்யப்படாதது போல எந்த தடயத்தையும் விடாமல் ஒரே நேரத்தில் நின்றுவிடுகிறது!
22 தேவதூதனுடைய சத்தத்திற்கு முன்பு, புத்தியில்லாத கன்னிகைகளும், கலப்பு கூட்டத்தினரும் உணர்ச்சிவசத்தினால் புத்தியுள்ள  கன்னிகைகளுடன் இதைச் செய்தார்கள். புத்தியுள்ளவர்கள் அதை நிறுத்திவிடுவார்கள் ஆனால் அவர்கள் அதை தொடருவார்கள். அவர்கள் மீது ஒரு கண் வைத்திருங்கள், அதுதான் காரியம் என்பதை நீங்கள் காண்பீர்கள்! புத்தியுள்ள கன்னிகைகளை அவ்வாறு செய்யும்படியாக கடவுளுடைய வல்லமை தான் வழிநடத்தியது, மேலும் "நீ அதை செய்யாத படிக்க பார் ..." என்று கடவுள் சொன்னதினால் அவர்கள் அதை தொடர இயலாது. நீங்கள் பார்க்கிறீர்களா?
23 தீர்க்கதரிசன ஆவி தீர்க்கதரிசிக்கு உட்பட்டது! நீங்கள் அதைச் செய்திருந்தால், இப்போது அதைச் செய்யாதீர்கள்! ஏனென்றால், தூதன் பேசியவுடனேயே, தேவதூதனுக்கு பணிந்து கொள்ளும் எந்த தடயமும் மறைந்துவிடும்! "அதை செய்யாதபடிக்கு பார்" என்று தேவதூதன் சொல்வதற்கு முன்பு நீங்கள் செய்யாதது எதுவோ அதை செய்ய வேண்டாம் ஏனெனில் பாவனை செய்வது ஒரு பிசாசாகும். ஒரு சகோதரி அல்லது சகோதரர், அவர் ஒரு போதகராக இருந்தாலும், பாடல் தலைவராக இருந்தாலும் தேவதூதனின் சத்தத்தை விட வெகுதூரம் சென்றால், அது ஒரு பிசாசு! அது இசையும் பாடல்களும் நின்ற பின்னும் அவன் நடனமாடி கொண்டிருப்பது போலாகும்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
24 அஞ்ஞானிகளை பாருங்கள், டிசம்பர் 26 அல்லது 27 ஆம் தேதிகளில் யாராவது ஒருவர் தொடர்ந்து "மெர்ரி கிறிஸ்மஸ்" என்று வாழ்த்துக்களை கூறி, கிறிஸ்துமஸ் நட்சத்திரங்களை அவரது வீட்டில் வைத்தால், அவர் சில சந்தேகங்களைத் எழுப்புவது இயல்பானது! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
25 இப்போது நான் மிக முக்கியமான ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்: மற்ற நாடுகளில் ஞானஸ்நானத்திற்காக காத்திருக்கும் அனைவரையும் பார்த்து சில வேதனையை உணர்ந்தேன். அவர்களுடன் பேசுங்கள், அவர்கள் அனைவரும் ஞானஸ்நானம் மற்றும் வெளிப்படையான பாவ அறிக்கையுடன் நம்மை போன்று செய்தியுடன் இணங்க விரும்புகிறார்கள் என்பதை நீங்கள் காண்பீர்கள்! ஒரு குழு ஒரு விதத்தில் செய்தியைப் பின்பற்றுவதும் இன்னொரு குழு மற்றொரு விதத்தில் செய்தியை பின்பற்றுவது நல்லதல்ல, அதே நேரத்தில் இருவரும் அதை முழுமையாக விசுவாசிக்கிறார்கள்.
26 நம்மை போல் விசுவாசிக்கிற சில முழு சபையும் ஞானஸ்நானம் பெறவில்லை என்பதை நினைவில் கொள்ளும்போது, நான் வருத்தப்படுகிறேன், அது நீங்கள் தூங்குவதை கூட தடுக்கும்! சகோதரரே, மற்ற நாடுகளில் சில ஞானஸ்தானங்கள்,  பரிசுத்த திருவிருந்து, மற்றும் வெளிப்படையான பாவ அறிக்கைகள் இருப்பதைக் கேட்கும் முன், நாம் விழிப்பு கூட்டங்கள்,  பரிசுத்த திருவிருந்தை கொண்டு மகிழ்ச்சியாக இருக்க முடியாது இருக்க முடியாது, சந்தோஷப்படக்கூடாது, பரிசுத்த ஒற்றுமையைக் கொண்டிருக்க முடியாது! நம்முடைய தேவனாகிய கர்த்தர் இந்தச் செய்திக்கு அழைப்பவர்களை அப்போஸ்தலர் 2:37 முதல் 38 ஆனது தூரத்திலுள்ள அனைவருக்குமான உரிமை! நம்முடைய தேவனாகிய கர்த்தர் அவர்களுக்கு இந்த உரிமையை அளிக்க வேண்டும் என்பதே நம்முடைய ஜெபம். ஜெபத்திற்காக இப்போது நாம் எழுந்து நிற்போம்.
--:--
--:--