



Kacou 84 (Kc.84) : இரண்டு வித்துக்களின் வெளிப்படுதல்
(பிப்ரவரி 5 2009, வியாழக்கிழமை மாலை அபிட்ஜன்- ஐவரி கோஸ்டுக்கு அருகிலுள்ள அன்யாமாவில் பிரசங்கிக்கப்பட்டது)
1 … பூமியின் மேல் இரண்டு வித்துக்கள் இருப்பதை நாம் அறிவோம்! ஆதாம் மூலமாக கடவுளின் வித்தான ஆபேல் மற்றும் சர்ப்பத்தின் மூலமாக பிசாசின் வித்தான காயின், இந்த மாலை வேளையில் அதை பற்றி தான் நான் பேச விரும்புகிறேன். ஆனால் முதலாவதாக, ஒரு சகோதரி தனது குழந்தையை அவமதித்தாலோ அல்லது புண்படுத்தும் வார்த்தையைச் சொன்னாலோ, செய்தி அதைத் தடைசெய்கிறது என்ற உண்மையின் ஒழுங்கிற்கு நீங்கள் அவளை அழைக்க வேண்டும். அவள் அதை தொடர்ந்தால், மூப்பர்கள் அவளை விசாரிக்க வேண்டும்! அது ஒரு கீழ்ப்படியாமையின் செயல்!
2 இப்போது நினைவில் கொள்ளுங்கள், கடவுள் ஒரு தீர்க்கதரிசியை பூமியின் மேல் அனுப்ப முடிவு செய்தால், அது பூமியில் இன்னுமாக சத்தியம் இல்லை என்பதினால் தான். முழு உலகமும் அனைத்து தேவாலயங்களும் சோதோம் மற்றும் எகிப்தாக மாறும்போது கடவுளின் தீர்க்கதரிசி பூமியின் மேல் இறங்குகிறார். இந்த தீர்க்கதரிசி தேவனுடைய ராஜ்யமாகவும் அவருடைய தலைமுறையில் இரட்சிப்பின் ஒரே ஆதாரமாகவும் வருகிறார். [ஆசிரியர் குறிப்பு : சபையார் "ஆமென்" என்கிறார்கள் என்கிறார்கள்].
3 இன்று மாலை, பூமியில் உள்ள இரண்டு வித்துக்களின் வெளிப்படுதல் பற்றி நான் சிறிது பேச விரும்புகிறேன். ஒரு கடவுளின் வித்து மற்றும் பிசாசின் வித்து. ஆனால் முதலில் கிறிஸ்தவத்தில், மத்தேயு விசுவாசத்தின் சிங்கங்களுடன் பூமியில் கிறிஸ்தவத்தை திணிக்க வல்லமையில் முன்னேறுவதைக் காண்கிறோம்! 680 லட்ச கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்ட போது, செம்மறி ஆட்டுக்குட்டியின் காலத்துடன் மாற்க்கின் நற்செய்தி வருகிறது! அதன் பிறகு அது லூக்காவின் சுவிசேஷ புத்தகம், இரட்சிப்பானது மனிதனின் மனதில் இருந்து பெந்தேகோஸ்தே விசுவாசத்திற்கு செல்கிறது! இறுதியாக யோவானின் புத்தகம், தீர்க்கதரிசன விசுவாசம், கழுகின் காலம்! மேலும் அனைத்தும் தேவனுடைய புத்திரர்கள் மூலம், அதாவது, தலைமுறை தலைமுறையாக அவர்களுடைய காலத்தின் நற்செய்தியை விசுவாசித்து ஜீவிக்கின்ற பரிசுத்தவான்களுடைய உண்மையான விசுவாசத்தின் வெளிப்படுதலாக இருக்கின்றது. அவர்கள் மரித்தவர்களை விசுவாசிக்கவில்லை, ஆனால் ரோமர் 16.15 இல் எழுதப்பட்டுள்ளபடி உயிருள்ள ஜனங்களில். [ஆசிரியர் குறிப்பு : சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
4 ஆனால் நான் இந்த பொருளுக்குள் செல்வதற்கு முன், நான் பதிலளிக்க இங்கே ஒரு கேள்வி உண்டு… கேள்வி: “சகோதரர் பிலிப்பு, உங்கள் தலையீடு ஒன்றில், பில்லி பால் பிரன்ஹாம் இரட்சிக்கப்படுவார் என்று நீங்கள் கூறியது உண்மையா?” அவரும் ஜோசப் பிரன்ஹாமும் இரட்சிக்கப்படலாம் என்று நான் நினைத்தேன். ஆனால் விசுவாசம் முன்னேறுகிறதினால், இறுதியில் அவர்கள் இரட்சிப்படைய முடியாது என்பதை உணர்ந்தேன், ஏனென்றால் இது நடுராத்திரி சத்தத்தின் நேரம், அவர்கள் இரட்சிக்கப்பட தங்களுடைய காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசியை அவர்கள் விசுவாசிக்க வேண்டும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
5 கடவுள் இறையாண்மை உடையவர், மீடாவை தனது மணமகன் வில்லியம் பிரன்ஹாமிடம் கொண்டு வர முடியும். ஆனால் வில்லியம் பிரன்ஹாமிற்குப் பிறகு வரும் தீர்க்கதரிசியின் வெளிப்படும் காலம் வரை நீங்கள் வாழ்ந்திருந்தால், நித்திய ஜீவனைப் பெற அந்த உயிருள்ள தீர்க்கதரிசியை நீங்கள் விசுவாசிக்க வேண்டும். [ஆசிரியர் குறிப்பு : சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
6 மீடாவைப் பற்றி பேசுகையில், என்னுடைய கிராமத்தின் தலைவர் மரித்தபோது, அவரது கல்லறை கட்டும் வேளையில், ஏராளமான பொருட்கள் இருந்ததால், இரட்டை கல்லறைகள் கட்டப்பட்டன! ஒன்று அவருக்கும் மற்றொன்று இன்னும் உயிருடன் இருக்கும் அவருடைய மனைவிக்கும்! காலப்போக்கில், ஒரு புதிய இடம் புதிய கல்லறையாக நியமிக்கப்பட்டது, மேலும் மரித்த அனைவரும், தலைவரின் குழந்தைகள் உட்பட புதிய கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டனர்! காலப்போக்கில், தலைவரின் மனைவி மரித்தபோது, அவர் தனது கணவருடன், பழைய கல்லறையில் அவருக்காக தயார் செய்யப்பட்ட கல்லறையில் சேர்க்கப்பட்டார்! நீங்கள் பார்க்கிறீர்களா?
7 ஆனால், பில்லி பால் மற்றும் ஜோசப் பிரன்ஹாம் ஆகியோர் வில்லியம் பிரன்ஹாமுடன் கூட்டி சேர்க்கப்படுவார்கள் என்று சொல்வது இன்று ஒரு உயிருள்ள தீர்க்கதரிசி இருக்கும்போது, அது சாத்தியமில்லை. [ஆசிரியர் குறிப்பு : சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. அப்பொல்லோ யோவான் ஸ்நானகனின் மகன் போல இருந்தான், ஆனால் பவுலின் காலத்தில், அவன் பவுலை விசுவாசத்தான்! அப்போஸ்தலர் 19-ஆம் அதிகாரத்தில் பவுல் அவனுக்கு மீண்டும் ஞானஸ்நானம் கொடுத்தார். மேலும் நீங்கள் ஒரு தீர்க்கதரிசியின் குமாரனாக இருந்து அந்தத் தீர்க்கதரிசி மரிக்கும் வேளையில் அவனுக்கு பிறகு மற்றொரு தீர்க்கதரிசி வந்திருக்கும்போது நீங்கள் இரட்சிக்கப்படுவதற்கு என்று அவருக்குப் பின் வந்த இந்த தீர்க்கதரிசியில் விசுவாசம் வைத்து புதிய ஞானஸ்நானத்தை பெறவேண்டும்
8 நல்லது, இரண்டு வித்துக்களின் வெளிப்பாட்டைப் பற்றி நான் பேச விரும்புகிறேன்! ஆனால் ஒரு நினைவூட்டலாக, புதிதாக மனம் மாறிய ஜனங்களிடம் நான் இதை சொல்ல விரும்புகிறேன்:… யோவான் ஸ்நானகனின் ஊழியம் என்னவாக இருக்கும் என்று ஏசாயா, தீர்க்கதரிசி அறிவித்து, சொன்னான், ஆனால் யோவான் ஸ்நானகனை இனங்கண்டுகொள்ள நீங்கள் தேவனுடைய வித்தாக இருக்க வேண்டும்! யோவான் ஸ்நானகன் ஒரு ஊழியத்தின் முன்னோடியாக இருந்ததைப் போலவே, வில்லியம் பிரன்ஹாமின் ஊழியமும் நடுராத்திரி சத்தத்திற்கான வழியை ஆயத்தம் செய்தது. வில்லியம் பிரன்ஹாம் எனது ஊழியத்தின் முன்னோடியாக அனுப்பப்பட்டார்! ஆனால் இந்த ஒவ்வொரு கட்டத்தையும் கண்டறிந்து ஏற்றுக்கொள்ள உங்களுக்கு விசுவாசமும் ஆவியும் தரிசனத்தின் புத்திசாலித்தனமும் இருக்க வேண்டும்!
9 வில்லியம் பிரன்ஹாமின் செய்தியை நாம் ஒரு அஸ்திவாரமாக பயன்படுத்துகிறோம், ஏழாவது முத்திரையில் பக்கம் 31 இல் கூறியதாவது, "அன்று நான் பார்த்த பொழுது, ஒரு மூலையில் பெட்டியை போன்ற ஒரு சிறிய ஸ்தலம் இருந்தது. நீங்கள் புகைப் படத்தில் காணும் அந்த ஒளியானது எனக்கு மேல் காணப்பட்ட ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தது". பிரன்ஹாமிஸ்டுகளிடம் இருக்கும் எந்தவொரு வார்த்தையின் வித்தும் வில்லியம் பிரன்ஹாமிற்குப் பிறகு மற்றொரு ஊழியத்தை எதிர்பார்க்கும்!
10 மேலும் வில்லியம் பிரன்ஹாம் கூறும்போது, “… மேலும் சபினோ கேன்யனில், "இதுதான் மூன்றாம் இழுப்பு." என்றார் அதனுடன் மூன்றுமகத்தான காரியங்கள் சம்பந்தப்பட்டுள்ளன; அவைகளில் ஒன்று இன்று எனக்கு.. அல்லது நேற்றுவெளிப்பட்டது, மற்றொன்று இன்றைக்கு வெளிப்படுத்தப்பட்டது, முன்றாவது என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை ஏனெனில் அது அறியாத மொழியில் எழுதப்பட்டு இருந்தது ஆனால் நான் நின்ற வண்ணம் அங்கேயே நேராக அதையே பார்த்துக்கொண்டிருந்தபோது, இது தான் வருகிறதான முன்றாம் இழுப்பு".
11 யோவான் ஸ்நானகனின் காரியத்தை போலவே, அவனுக்குப் பிறகு ஒரு மகத்தான ஊழியம் வருவது இன்னுமாக உறுதிப்படுத்தப்படுகிறது! அதற்கு யோவான் ஸ்நானகன், "அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல." என்று கூறினான்! மேலும், யோவான் கூறியதாவது, "அவர் பெருக்கவும் ஆனால் நான் சிறுகவும் வேண்டும்.
12 மேலும் வில்லியம் பிரன்ஹாம் மேற்கொண்டு கூறுகிறார், இன்னும் ஏழாவது முத்திரையில், "… என்ன நடக்கப் போகிறது - என்ன நடக்கப் போகிறது என்று எனக்குத் தெரியவில்லை. எனக்குத் தெரியாது. பரலோகம் அமைதியாக்கப்பட்டதினால், அந்த ஏழு இடி முழக்கங்கள் இரகசியத்தை கொண்டிருக்கிறது என்று சற்று அறிந்து கொண்டேன், (எல்லோரும் புரிந்து கொண்டீர்களா?) இது நேரமாகவும் இருக்கலாம். இது மணி வேலையாகவும் இருக்கலாம்., காட்சியில் எழும்ப வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கும் இந்த மகத்தான நபர் காட்சியில் எழும்பக்கூடும். ஒருவேளை ஜனங்களை வார்த்தைக்கு திருப்ப முயன்ற என்னுடைய ஊழியம் ஒருகால் அதற்கு அஸ்திவாரமாக அமைந்திருக்கும்; அது அவ்விதமாக இருந்தால், நான் உங்களை விட்டு ஒரேடியாக செல்ல நேரிடும். ஒரே சமயத்தில் நாங்கள் இருவர் இருக்க முடியாது. பாருங்கள்? அப்படியிருக்க நேர்ந்தால், அவர் பெருகவேண்டும் நான் சிறுக வேண்டும் "[ஆசிரியர் குறிப்பு : சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. இப்போது உங்கள் கூற்றுப்படி, பிரன்ஹாமிஸ்டுகளே, இந்த பத்திகள் எடுத்துக் கொள்ளப்படுதலுக்காக வரப்போகிற இயேசு கிறிஸ்துவைப் பற்றியதா அல்லது பூமியில் வேறொரு ஊழியத்திற்காகவா?
13 யோவான் ஸ்நானகன் ஒரு ஊழியத்திற்கான வழியைத் ஆயத்துபடுத்துவதற்காக முன்னோடியாக அங்கே அனுப்பப்பட்டான், இந்த பக்கத்தில், வில்லியம் பிரன்ஹாமின் செய்தியும் அவருக்குப் பின் வரும் ஒரு தீர்க்கதரிசிக்கு வழியைத் ஆயத்தப்படுத்துவதற்காக அனுப்பப்பட்டது. அதை தெளிவுபடுத்துவதற்காக, வில்லியம் பிரன்ஹாம் 1963-இல் கூறியதை, "பாருங்கள், இது மூன்று நிமிடங்கள் என்றால், அவருடைய வருகைக்கு மூன்று நிமிடங்களுக்கும் குறைவாகவே உள்ளது. பாருங்கள், அது நமக்கு முப்பது ஆண்டுகளாக இருக்கும், அல்லது அந்த ஒழுங்கில் ஏதாவது இருக்கும்". 1963 கூட்டல் முப்பது ஆண்டுகள், அது 1993 ஐ உருவாக்குகிறது மற்றும் ஏப்ரல் 24, 1993 இல், சபினோ கனியனின் "அறியாத மொழியின் வியாக்கியானத்திற்காக அவர் இறங்கினார். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
14 நடுராத்திரி சத்தத்தை பற்றி பேசுகையில், வில்லியம் பிரன்ஹாம் "ஒன்றிணைக்கும் நேரமும் அடையாளமும்" என்ற செய்தியில் "... இந்த நடுராத்திரி சத்தத்திற்காக நாம் ஆயத்தமாகுவோம். நீங்கள் நினைக்காத மணி வேளையில் அது வரும். அங்கே ஒரு சத்தமானது இருக்கும், அது அவிசுவாச உலகத்தில் அல்ல; அது ஒரு இரகசியமாக இருக்கும் ". என்று கூறுகிறார். கச்சிதமாக 1 இராஜாக்கள் 19 இல் இருந்ததைப் போலவே, பெரிய சுவிசேஷ கூச்சல்களின் வேளையில் ஒரு மென்மையான, மெல்லிய மற்றும் இரகசியக சத்தமாக இருந்தது,! கடவுளின் எந்த வித்தும் அதைப் புரிந்துகொள்ளும்! [ஆசிரியர் குறிப்பு : சபையார் "ஆமென்" என்கிறார்கள்] .
15 இப்போது, உபவாசங்கள் மற்றும் ஜெபங்களைப் பற்றி பேசுகையில், இரட்சிப்பின் மகத்தான வல்லமை உபவாசத்திலும் ஜெபத்திலும் இருக்க முடியாது, இல்லையெனில் பெந்தேகோஸ்தேயினர்களும் சுவிசேஷகர்களும் இரட்சிப்பின் திட்டத்தை நிறைவு செய்திருப்பார்கள், அனைவரும் எடுத்துக் கொள்ளப்பட்டு இருப்பார்கள்! மேலும் பெந்தெகோஸ்தினரான லூக்கா தான் வெளிப்படுத்துதல் புத்தகத்தை எழுதியிருப்பார்! அது லூக்காவின் வெளிப்படுத்தின சுவிசேஷ புத்தகமாக இருந்திருக்கும், அந்த வெளிப்படுத்தின சுவிசேஷ புத்தகம் வெறுமனே தெய்வீக சுடர் களையும் ஒளி பிரகாசத்தை பற்றி மட்டுமே பேசும்! தன்னுடைய சுவிசேஷத்தை காட்டிலும் அதிசயத்தில் அதிகமாக மகிமை கொண்டிருக்கும் ஒரு வெளிப்படுத்துதல் புத்தகம்.
16 யோவானுடைய ஸ்தானத்தில் லூக்கா இருந்திருந்தால், வெிப்படுத்துதல் 19:10 தவிற,வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு அதிகாரத்தில் இருக்கும் தூதனுக்கு முன்பாக பணிந்து கொண்டிருப்பான்! நீங்கள் பார்க்கிறீர்களா? வெளிப்படுத்துதல் 18:1 ல், அந்த வல்லமையுள்ள தூதன் எவ்வளவு பிரகாசமாக இருக்கிறான் என்பதைக் காணும்போது, அவர் பணிந்து கொண்டிருப்பார்! வெளிப்படுத்துதல் 10:1-ல், அந்த தூதன் இறங்கி, தனது வலது பாதத்தை கடலிலும், இடதுபுறம் பூமியிலும் வைத்து போது, லூக்கா பணிந்து கொண்டிருப்பார்! அவர் 1933 இல் ஓஹியோ ஆற்றில் பணிந்து கொண்டிருப்பார்! அது பெந்தேகோஸ்தே காலத்தில் இருந்ததால் அது சரிதான். [ஆசிரியர் குறிப்பு : சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
17 மேலும், உலகின் அஸ்திவாரத்திற்கு முன்பே மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவானுக்கு வெளிப்படுத்துதல் புத்தகத்தை அனுபவிக்க வழங்கப்பட்டபோது, அவர்கள் தீர்க்கதரிசன வார்த்தைக்கு யோவானைத் தவிர தோல்வியுற்றனர், என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். அது தான் உயர்வானதும் மற்றும் கடவுளுடைய பாவனை செய்ய முடியாத அடையாளம், கடவுளின் வித்துக்களையும் பிசாசின் வித்துக்களையும் வெளிப்படுத்தும் தனித்துவமானது! [ஆசிரியர் குறிப்பு : சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
18 பூமியின் மேல் எப்போதும் இரண்டு வித்துக்கள் இருந்துள்ளன. மோசே மரித்தபோது யோசுவா அங்கே நின்று நின்றுக்கொண்டிருந்தான், இஸ்ரவேல் புத்திரர் மோசே தான் தீர்க்கதரிசி என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள், மோசே தான் எங்களுடைய தீர்க்கதரிசி, மோசே மரித்து போகவில்லை, மோசே எல்லாவற்றையும் வெளிப்படுத்தியுள்ளார், மோசே அனைத்தையும் எழுதியுள்ளார், வேறொரு தீர்க்கதரிசிக்கு இன்னும் ஒருபோதும் இடம் இருக்காது என்றனர்! ஆனால் தேவனுடைய வித்துக்கு ஜோசுவா என்ற உயிருள்ள தீர்க்கதரிசியை முற்றிலுமானதாக கொண்டிருந்தது.
19 அதன்பிறகு, மீண்டுமாக ஒரு தீர்க்கதரிசி எழும்பினார், தீர்க்கதரிசி எலியா. எலியா தீர்க்கதரிசி பூமியை விட்டு வெளியேறியபோது, அங்கே இரண்டு வித்துக்களின் வெளிப்படுதல் இருந்தது, அங்கே பிசாசின் புத்திரர்கள் நின்றுகொண்டு எலியா தான் எங்களுடைய தீர்க்கதரிசி என்று சொன்னார்கள். எலியா மரிக்கவில்லை, அவர் எடுத்துக்கொள்ளப்பட்டார், அவர் இன்னும் ஜீவிக்கின்றார். ஆனால் தேவனுடைய வித்து முற்றிலுமானதை கொண்டிருந்தது, அது உயிருள்ள தீர்க்கதரிசி எலிசா. அதே காரியம் தான் இன்றும் உள்ளது.
20 இரண்டு வித்துக்களும் பூமியில் எப்போதும் வெளிப்பட்டுள்ளன. இரட்சிப்பு அடைய ஒருவர் ஒரு மரித்த தீர்க்கதரிசியை விசுவாசித்தால், பிறகு கிறிஸ்தவம் தவறானது. இது சாத்தியமில்லை! இது வெறுமனே பிசாசின் வித்தினுடைய வெளிப்படுதலாகும். எடுத்துக் கொள்ளப்படுதல் இன்னும் நடக்காத வரை, ஒவ்வொரு தலைமுறையினருக்கும் பூமியில் ஒரு உயிருள்ள தீர்க்கதரிசி எப்போதும் இருப்பார். பூமியில் தேவனுடைய பிள்ளைகள் இருக்கும் வரை, அவர்களை வழிநடத்த பூமியில் எப்போதும் ஒரு உயிருள்ள தீர்க்கதரிசி இருப்பார். [ஆசிரியர் குறிப்பு : சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
21 வெளிப்படுத்துதல் 22 ல், "பின்பு, அவர் என்னை நோக்கி: இந்த வசனங்கள் உண்மையும் சத்தியமுமானவைகள், சீக்கிரமாய்ச் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, பரிசுத்த தீர்க்கதரிசிகளின் கர்த்தராகிய தேவனானவர் தம்முடைய தூதனை அனுப்பினார்... நான் கேட்டுக் கண்டபோது, இவைகளை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன்." இந்த தேவதூதனும் வெளிப்படுத்துதல் 22-இன் வார்த்தைகளும் யாத்திராகமம் 23-ல் உள்ளதைப் போலவே இருக்கின்றன! நீங்கள் பார்க்கிறீர்களா?
22 யோவான் புத்தகத்தின் மூலம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வார்த்தையின் மேதையாக தோன்றுகிறார்! ஒரு கிரேக்க தத்துவஞானியைப் போல வார்த்தையை கையாளக்கூடியவர் அல்ல, ஆனால் கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு போதகர்கள் தங்களுக்கென சாதகமாக கையாளுகிறார்கள் என்ற வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளை அவரிடமிருந்து புறப்படுகிறது! [ஆசிரியர் குறிப்பு : சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
23 வார்த்தை மாம்சமானது என்று இயேசுவின் சீடராகவும், அப்போஸ்தலராகவும் யோவான் மட்டுமே அறிந்திருக்கிறார்! அவர் தனது நற்செய்தியைத் தொடங்குகிறார்… “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது …அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் செய்தது”.
24 எலியா மற்றும் மோசேயுடன் மறுரூபமாகுதல் போன்ற அனைத்து முக்கியமான நிகழ்வுகளிலும் யோவான் இருந்தார்! சீஷனாகிய யோவானை தான் இயேசு நேசித்தார் என்று வேதாகமம் கூறுகிறது மற்றும் அவர் நேசிக்கிறவர்களிடத்தில் தன்னுடைய இரகசியங்களை அவர் மறைப்பதில்லை. ஆகவே, அப்போஸ்தலர்களிடமிருந்தும் சீஷர்களிடமிருந்தும், கர்த்தராகிய இயேசுவை யாராவது நன்கு அறிந்தவர் என்றால் அது அப்போஸ்தலன் யோவான் தான், மேலும் பத்மு தீவில் இருந்ததும் யோவான் தான்! யோவானின் சுவிசேஷத்தை வாசியுங்கள், இயேசுவின் அற்புதங்களுக்கு அவர் அதிக கவனம் செலுத்தவில்லை! நீங்கள் பார்க்கிறீர்களா? இது வார்த்தையின் பரிமாணம். அங்கே வார்த்தையின் நான்கு பரிமாணங்கள் இருந்தன!
25 நீங்கள் மாற்கின் காலத்தில் இருந்திருந்தால், பட்டயம், அக்கினி மற்றும் ரோமானிய பட்டாக்கத்தி ஆகியவற்றின் முன் கடவுளை மகிமைப்படுத்தி இருப்பீர்கள், ஏனென்றால் அந்த நேரத்தில் பரிசுத்தவான்களின் விசுவாசம் அவர் கடவுளின் ஆட்டுக்குட்டி என்பதைக் காட்டியது. "2 இராஜாக்கள் 1 ல், எலியாவின் கடவுள் அகசியாவின் ஐம்பதுகளுக்கு எதிராக வானத்திலிருந்து அக்கினியை அனுப்பியபோது நாங்கள் மட்டும் ஏன் கொல்லப்படுகிறோம்?" என்று நீங்கள் ஒரு போதும் சொல்லமாட்டீர்கள். "தானியேலின் கடவுள் சிங்கங்களின் வாயை மூடும்போது காட்டுப்பன்றிகளும் காட்டு விலங்குகளும் எங்களை ஏன் துண்டுகளாக கிழிக்கின்றன?" என்று நீங்கள் ஒரு போதும் சொல்லமாட்டீர்கள். "நம்மிடையே லட்சக்கணக்கானவர்கள் ஏன் ஈட்டினால் விழுங்கப்படுகிறார்கள் அதேவேளையில் தானியேல் 3 இல், மேஷாக், ஷத்ராக் மற்றும் ஆபேத்-நெகோ ஆகியோரின் தேவன் அக்கினியின் மீது அதிகாரம் இருப்பதாகத் தெரிகிறது?" என்று நீங்கள் ஒரு போதும் சொல்லமாட்டீர்கள்.
26 ஆனால் சகோதரர்களே, அதற்குப் பதிலாக, அவர்கள் கடவுளின் வித்துக்கள் ஆக இருந்ததால், பரிசுத்தவான்களின் விசுவாசம் மற்றும் அவர்களின் காலத்தின் ஆவிக்கு ஏற்ப ஜெயகீதங்களுடன், தீப்பிழம்புகள், வாள், மிருகங்கள் மற்றும் பட்டாக்கத்திக்கு முன்னால் முன்னேறினார்கள். [ஆசிரியர் குறிப்பு : சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. அந்த காலகட்டத்தில் அறநூற்று என்பது லட்சத்திற்க்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதாக வரலாறு கூறுகிறது!
27 நீங்கள் பெந்தேகோஸ்தேயினரான லூக்காவின் காலத்தைச் சேர்ந்தவராக இருந்தால், இயேசு கிறிஸ்துவை அற்புதங்களின் மூலமாக மட்டுமே நீங்கள் காண்பீர்கள், இதனால் நீங்கள் எந்த ஒரு சுவிசேஷ போதகரையும் இன்று கடவுளின் ஊழியக்காரராக அழைப்பீர்கள்! நீங்கள் வில்லியம் பிரன்ஹாமுக்கு முன் தலைவணங்குவீர்கள், அவருடைய பெயரில் ஞானஸ்நானம் பெறுவீர்கள், மேலும் நீங்கள் கடவுளின் ஊழியக்காரர்களாக டாமி ஆஸ்போர்ன், மோரிஸ் செருல்லோ, ரெய்ன்ஹார்ட் பொன்கே மற்றும் பென்னி ஹின்னை அழைப்பீர்கள்! நீங்கள் பார்க்கிறீர்களா? அதுதான் அந்த மணி வேலையின் பரிசுத்தவான்களின் பரிணாமமாக இருந்தது! யாரோ சிலர் சில அற்புதங்களைச் செய்திருந்தால், அது கடவுளாலோ அல்லது பிசாசினாலோ, அவர் அசாதாரண அற்புதங்களைச் செய்திருந்து, அவருக்கு அழைப்பு மற்றும் பணி நியமனம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர் கடவுளின் ஊழியக்காரன் என்று அழைக்கப்பட்டான்!
28 ஏப்ரல் 24, 1993 இன் தரிசனத்தில், கலப்பு இனப் பெண்ணின் வடிவத்தில் அந்த பிரன்ஹாமிஸ்டு வேசியை நான் ஏன் பார்த்தேன் என்று எனக்குத் தெரியவில்லை! ஆனால் அதை கவனியுங்கள், நீங்கள் பிரன்ஹாமிசத்திற்குள் இரட்டை நிறத்தைக் காண்பீர்கள்: ஒரு பெந்தேகோஸ்தே வித்து மற்றும் ஒரு வார்த்தையின் வித்து! விசுவாசத்தில், போக்குகளில், நடத்தைகள் மற்றும் பிறவற்றில், பிரன்ஹாமிஸ்டுகளுக்கு இரட்டை வண்ணம் உள்ளது!
29 நடுராத்திரி சத்தத்தின் ஆரம்பத்தில் நான் சந்தித்த இருபது பிரன்ஹாமிஸ்டுகளில், பதினெட்டு பேர் வில்லியம் பிரன்ஹாமின் ஒவ்வொரு அதிசயத்தையும் துல்லியமாக தொடர்புபடுத்தினார்கள், "அறியாத மொழி என்றால் என்ன?" என்றார்கள். அறியாத மொழியைப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது! இன்னும் அவர்கள் வில்லியம் பிரன்ஹாமின் ஒவ்வொரு அற்புதத்தையும் தொடர்பு படுத்துகின்றனர். சரீர பிரகாரமாக, அந்த கலப்பு இன இயல்பு பெந்தேகோஸ்தே முத்திரைகளின் தாக்கம்!
30 நான் உங்களுடன் பேசிக்கொண்டிருக்கும் வேளையில், இந்த வார்த்தையின் வித்து இங்கே நடுராத்திரி சத்தத்தில் இருக்கின்றது. அவள் அங்கே இருந்தாள், மேலேயும் கீழேயும் நடந்து, நடுராத்திரி சத்தத்திற்கு முன்பு ஏதோவொன்றுக்காகக் காத்திருந்தாள்! அவளுக்கு என்ன என்று தெரியாது ஆனால் அவள் ஏதோவொன்றுக்காக காத்திருந்தாள்! அது எங்கிருந்து, எப்படி வரும் என்று அவளுக்குத் தெரியாது, அவளுக்குத் தெரியாது ஆனால் அவள் அதற்காகக் காத்திருந்தாள்! [ஆசிரியர் குறிப்பு : சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
31 நீங்கள் இந்த தலைமுறையில் தேவனுடைய வித்தாக இருந்தால், நீங்கள் வெளிப்படுத்துதல் 19:10 ஐ நிறைவேற்றுவீர்கள் மற்றும் நீங்கள் வித்தியாசமாக நடந்துகொள்வீர்கள்! ஏனென்றால் ஒருவர் குருடராகவோ அல்லது சப்பாணியாகவோ இருந்து சொர்க்கத்திற்குச் செல்லலாம், ஒரு ஆரோக்கியமான மனிதன் நரகத்திற்குச் செல்ல முடியும்! உயிர்த்தெழுப்பப்பட்ட ஒருவர் கூட மரித்து நரகத்திற்குச் செல்ல முடியும், ஆனால் அவருடைய காலத்தின் வாக்குதத்தங்களினால் விடுவிக்கப்பட்ட ஒரு ஆத்துமா ஒருபோதும் மரிக்காது! நீங்கள் பார்க்கிறீர்களா?
32 மக்கள் பிசாசுகளால் பீடிக்கப் பட்டிருக்கிறார்கள், ஒரு இரவுக்கு இரண்டு அல்லது மூன்று சொப்பனங்களை கொண்டுள்ளனர். அவர்கள் ஐந்தாவது பரிமாணத்தில் உள்ளனர்; அவர்கள் நரகத்தின் சாத்தியத்தில் உள்ளனர் அதேவேளையில் தொடர்சியாக உபவாசமிருந்து ஜெபிக்கின்றார்கள், இருப்பினும் வில்லியம் பிரன்ஹாமின் ஒவ்வொரு மேற்கோளையும் உங்களுக்கு ஓதிக் காட்டலாம்! அவர்கள் சுத்தமாக இருப்பார்கள், நன்கு உடை அணிந்திருப்பார்கள் ஆனால் அவர்கள் பிசாசுகள்! அவர்கள் வேதாகமத்தின் ஒவ்வொரு பகுதியையும் உங்களிடம் நிறுத்தற்குறிகளுடன் மேற்கோள் காட்டலாம் மற்றும் தினமும் காலையில் இரவு நேர மாசுபாடுகளுடன் எழுந்திருப்பார்கள், புணர்ச்சியின் வித்தினால் தீட்டானவர்கள்! அதையும் மீறி, அவர்கள் இரட்சிப்பிற்காக தங்கள் காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசியைத் தேடுவதற்குப் பதிலாக உணர்ச்சிகளைத் தேடுகிறார்கள். பிசாசின் வித்து உணர்ச்சிகளைத் தேடுகிறது, அதே சமயம் கடவுளின் வித்து வார்த்தையைத் தேடுகிறது, ஏனென்றால் அவள் வார்த்தையால் சிருஷ்டிக்கப்பட்டாள். அவள் வார்த்தையின் வித்து, அவளுடைய காலத்தின் வார்த்தை அவள் இதயத்தில் எதிரொலிக்கிறது, ஆழம் ஆழத்தை அழைக்கிறது. [ஆசிரியர் குறிப்பு : சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
33 கடவுள் இன்றும் என்றும் என்றென்றும் உங்களை ஆசீர்வதிப்பாராக, கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக! ஜெபத்திற்காக நாம் எழுந்து நிற்க முடியும்…