en-en
fr-fr
es-es
pt-pt

Kacou 85 (Kc.85) : தீர்க்கதரிசியின் வெகுமதி
(மார்ச் 01, 2009, ஞாயிற்றுக்கிழமை காலை அன்று அட்ஜேம், அபிட்ஜன்- ஐவரி கோஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
1 நல்லது, நான் தீர்க்கதரிசியின் வெகுமதியைப் பற்றி பேச விரும்புகிறேன். ஏனென்றால், பூமியில் ஒரு தீர்க்கதரிசி வந்தவுடன், பூமியானது அதன் பலனைப் பெறுகிறது. ஆனால் நான் என்ன சொன்னாலும், தீர்க்கதரிசியின் வெகுமதி நித்திய ஜீவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார், “ஆமென்!” என்கிறார்கள]. தீர்க்கதரிசியின் வெகுமதி ஒரே ஒரு விஷயத்தில் சுருக்கப்பட்டுள்ளது: நித்திய ஜீவன். பெற்றோர், மக்கள், பட்டணம், தீர்க்கதரிசியின் தேசம் மற்றும் முழு பூமிக்கும் வெகுமதி அளிக்கப்படுகிறது, அது தான்: நித்திய ஜீவன்.
2 யூதர்களைப் போலவே, பூமியிலுள்ள ஒவ்வொரு மக்களும் ஒரு தீர்க்கதரிசியைப் பெறுவார்கள் அதற்காக வெகுமதி பெறுவார்கள்! ஆப்பிரிக்கர்களும் இதில் அடக்கம்! ஆன்மீக வல்லமையின் ஏவுதலின் கீழ் ஒரு மனிதனால் குணமடையலாம், அற்புதங்களைச் செய்யலாம் அல்லது வரவிருக்கும் விஷயங்களை அறிவிக்க முடியும், நல்ல அல்லது கெட்ட விஷயங்களை ஒரு ஆப்பிரிக்கனும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் நான் இதைச் சொல்கிறேன்! அவர் கடவுளின் சார்பாக அவற்றைச் செய்யும்போது, இந்த மனிதன் ஒரு தீர்க்கதரிசி, ஆனால் அது பிசாசினிடத்திலிருந்து வந்தால், அவன் ஒரு ஆடை அணிந்து கையில் ஒரு வேதாகமத்தை வைத்திருந்தாலும் கூட அவன் ஒரு மாந்திரீக பூஜாரி.  [ஆசிரியர் குறிப்பு: சபையார், “ஆமென்!” என்கிறார்கள்].
3 ஒரு தீர்க்கதரிசியாக, இயேசு பேதுருவை நோக்கி, சேவல் கூவுகிறதற்கு முன்னே, நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்றார்.! இதற்கு நீங்கள், "ஆனால் இயேசு உண்மையிலேயே தேவனுடைய குமாரன் என்றால், பேதுரு அவரை மறுதலிக்க கூடாதபடிக்கு ஏன் அவர்  அவ்வாறு செய்யவில்லை?" என்று சொல்வீர்கள். சமீபத்தில், அமெரிக்காவில் வில்லியம் பிரன்ஹாம் என்ற ஒரு பெரிய அமெரிக்க தீர்க்கதரிசி ஒரு பெண்ணிடம், "நீங்கள் நிச்சயமாக அதிகாலை 4 மணியளவில் இறந்துவிடுவீர்கள்!" என்றார்.
4 அழுகைகள், பிரார்த்தனைகள், அந்த பெண்ணின் வேண்டுதல்கள், மருந்து, விழிப்பு ஜெபம் மற்றும் எல்லாவற்றையும் தாண்டி, காரியங்கள் அந்த வழியில் நடந்தன. நீங்கள் பார்க்கிறீர்களா? ஒருவேளை நான் வந்து, "சகோதரி, உங்கள் தந்தையோ அல்லது உங்கள் தாயோ உங்களை சூனியத்தால் விற்றுவிட்டதாக கடவுள் கூறுகிறார், பெற்றெடுக்கும் போது நீங்கள் இறந்துவிடுவீர்கள்!" என்று சொன்னால், ஒரு வேளை மக்கள் என்னை மதிக்ககூடும்! ஆனால் என்னால் அதைச் செய்ய முடியாது, ஏனென்றால் நான் ஒரு மாந்திரீக பூஜாரியோ அல்லது குடும்பங்களைப் பிரிக்கும் ஒருவனோ அல்ல!  [ஆசிரியர் குறிப்பு: சபையார், “ஆமென்!” என்கிறார்கள்].
5 நான் பிரசங்கித்த எல்லாவற்றிற்கும் மேலாக, நான் மரிக்க மாட்டேன் என்று யாராவது நினைத்தால் அல்லது எனக்கு முன் யாராவது மரிக்க முடியாது என்றால், அது ஒரு அவமானம்! கடவுள் இறையான்மையுடையவர் என்று நான் விசுவாசிக்கிறேன். அவரே எல்லாவற்றிற்கும் முற்றிலுமானவர் மற்றும் எல்லாவற்றுக்கும் எஜமானர்! அவர் விரும்பியதைச் செய்ய அவருக்கு சுதந்திரம் உண்டு! அவர் என்னிடம், "நான் இங்கே உங்களுக்கு என்ன கூறினேனோ, அதைச் சொல், அங்கே நான் கூறினதை சொல்லாதே" என்று சொல்லலாம்!
6 ஆமோஸ் 3:7, ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார் என்று கூறுகிறது! இரகசியங்களை வைத்திருக்கக்கூடிய ஒருவரிடம் ஒருவர் நம்பிக்கை வைக்கிறார்! [ஆசிரியர் குறிப்பு: சபையார், “ஆமென்!” என்கிறார்கள்]. தெரிந்து கொள்ளப்பட்ட டஜன் கணக்கானவர்கள் எனக்கு முன்பாகத் திரும்புவார்கள், பின்னர் நான் திரும்புவேன், கடவுள் கதவை அடைப்பார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். மிக முக்கியமான விஷயம், விசுவாசத்தை ஒருபோதும் மறுக்காமல் ஒரு வெற்றியாளராக பந்தயத்தை முடிப்பது. [ஆசிரியர் குறிப்பு: சபையார், “ஆமென்!” என்கிறார்கள்].
7 இப்போது, நான் அனைவருக்கும் எதிரானவன், அனைவரும் எனக்கு எதிரானவர்கள் என்பதை கவனியுங்கள்! இங்குள்ள தேவாலயங்கள், அங்குள்ள அரசு, இது நான் உயிருடன் இருக்கும் வரை முடிவடையாத ஒரு போர்! இயேசு, "பிதாவே, அவர்களை மன்னியுங்கள், ஏனென்றால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அறியாதிருக்கிறார்கள் என்றார்." ஆனால் அதன் வெகுமதியை அவர்கள் பெற்றார்கள்! 70 ஆம் ஆண்டில் ஹிட்லர், ஸ்டாலின் மற்றும் முசோலினி வரை நாடுகடத்தப்பட்டபோது, யூதர்கள் தீர்க்கதரிசிகளை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது!
8 இன்று, கப்பர்நகூம் கடலின் ஆழத்தில் உள்ளது. தேவாலயங்கள், அரசாங்கம் அல்லது மற்றவைகள், அவை ஒரே காரியமாக இருக்கின்றது, ஒவ்வொன்றும் வெகுமதி அளிக்கப்படுகின்றன. ஆகையால் என்னுடைய கிராமம், என் ஜனங்கள், என் தேசம் மற்றும் முழு பூமியும் என் நிமித்தம் ஆசீர்வதிக்கப்பட அல்லது சபிக்கப்பட வேண்டும் என்பது தவிர்க்க முடியாததாக இருக்கின்றது! [ஆசிரியர் குறிப்பு: சபையார், “ஆமென்!” என்கிறார்கள்].
9 இப்போது, நான் எரேமியா 26:8 முதல் 9-ல் சில காரியத்தை வாசிக்க போகிறேன்: "சகல ஜனங்களுக்கும் சொல்ல யெகோவா தனக்குக் கற்பித்தவைகளையெல்லாம் எரேமியா சொல்லி முடித்தபோது, ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் சகல ஜனங்களும் அவனைப்பிடித்து: நீ சாகவே சாகவேண்டும். இந்த ஆலயம் சீலோவைப்போலாகி, இந்த நகரம் குடியில்லாமல் பாழாய்ப்போகும் என்று, நீ கர்த்தருடைய நாமத்திலே தீர்க்கதரிசனம் சொல்வானேன் என்று சொல்லி, ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய ஆலயத்திலே எரேமியாவுக்கு விரோதமாய்க் கூடினார்கள்.! " நீங்கள் பார்க்கிறீர்களா?
10 ஒரு தீர்க்கதரிசியாக எரேமியா தங்களுக்கு பொருந்தாத விஷயங்களைக் கண்டதும் சொன்னதும், அவர்கள் அவனைக் கொல்ல விரும்புகிறார்கள்!  யாராவது ஒருவர் வந்து தங்களுடைய வேலையில் பல பதவி உயர்வுகளைப் பெறுவார் என்று சொல்ல வேண்டும் என்று பிசாசின் புத்திரர்கள் விரும்புகிறார்கள்! தான் அனுப்புகிறவர்களை மனிதர்கள் விரும்புவதில்லை என்று கடவுள் அறிவார், இதனால்தான் சங்கீதம் 105:15 ல் அவர் அறிவித்திருக்கிறார்: "நான் அபிஷேகம்பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள் என்றார்.." 1 நாளாகமம் 16:21 முதல் 22-ல், அவர்களையொடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், அவர்கள் நிமித்தம் ராஜாக்களைக் கடிந்துகொண்டு,  நான் அபிஷேகம்பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்குசெய்யாமலும் இருங்கள் என்றார்.!" நீங்கள் பார்க்கிறீர்களா? கடவுள் கூறுகிறார்: என் தீர்க்கதரிசிகளை விட்டுவிடுங்கள்! அவர்களைப் பற்றி நல்ல விஷயங்களைச் சொல்ல கூட நான் உங்களுக்கு அனுமதிப்பதில்லை! அவர்களை விட்டுவிடுங்கள்! கடவுள் தம் தீர்க்கதரிசிகளால் ராஜாக்களைக் கண்டித்தார் என்று வேதாகமம் கூறுகிறது!
11 இன்று, யாராவது என்னை வாய்மொழியாகவோ அல்லது அவரது செயல்களினாலோ தாக்கினால், நான் பதிலடி கொடுக்க மாட்டேன், ஆனால் அவர் மரிக்கும் வரை அதற்கு அவர் கிரயத்தை செலுத்துவார், அவருடைய பிள்ளைகள் அதற்காக கிரயத்தை செலுத்துவார்கள், அவருடைய பிள்ளைகளின் பிள்ளைகள் தலைமுறை தலைமுறையாக அதற்காக கிரயத்தை செலுத்துவார்கள் இல்லையெனில் நான் ஒரு தீர்க்கதரிசி அல்ல மேலும் ஏப்ரல் 24, 1993 அன்று கடவுள் என்னிடம் பேசவில்லை என்பதாகும்! [ஆசிரியர் குறிப்பு: சபையார், “ஆமென்!” என்கிறார்கள்]. நீங்கள் பார்க்கிறீர்களா?
12 நான் அழிக்க வரவில்லை ஆனால் இரட்சிக்கவே வந்திருக்கிறேன், நான் சபிக்க வரவில்லை, ஆனால் ஆசீர்வதிக்கவே வந்திருக்கிறேன் என்பதால், என்னை அனுப்பிய பரலோகங்களின் தேவனிடம் அவர்கள் என்னிடம் சொல்வது மற்றும் செய்வதையெல்லாம் திருப்பி என்னையும் உங்களையும் ஆசீர்வதிக்கும்படியாக நான் எப்பொழுதும் கேட்கின்றேன்! மேலும் அவர் இந்த வேலையை மிகச் சிறந்ததாக மாற்றுவாராக! நான் ஒரு சிறுவனாக இருந்ததிலிருந்து அது தான் எப்போதும் என் குறிக்கோளாக இருந்தது! அவர்கள் எனக்குச் செய்யும் தீமைக்காக கடவுள் அவர்களுக்குத் தீங்கு செய்யக்கூடாது, ஆனால் அவர்கள் எனக்குச் செய்யும் தீங்கிற்காக அவர் எனக்கும் உங்களுக்கும் ஆசீர்வாதத்தை தருகிறார். [ஆசிரியர் குறிப்பு: சபையார், “ஆமென்!” என்கிறார்கள்].
13 அதைப் பொறுத்தவரை, மக்களுக்கு தீய நோக்கங்கள் இருப்பதாலும், நடுராத்திரி சத்தத்தின் எதிரிகள் ஏராளம் என்பதாலும் தான்; அத்தகைய நபர் அத்தகைய ஒரு நாளில் அத்தகைய நேரத்தில் இறந்துவிடுவார் என்று சொல்லாவிட்டால் அல்லது "இந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள், ஏனென்றால் அத்தகைய ஒரு நாளில்  அந்த மணி வேளையில் இங்கு ஒரு விபத்து ஏற்படும்" என்று ஒரு தீர்க்கதரிசி கூறும்போது ஆச்சரியப்பட முடியாது… பல எடுத்துக்காட்டுகள் வேதாகமத்தில் உள்ளன!
14 வரவிருக்கும் காரியங்களை அறிவிக்க முடியாவிட்டால் அவர் ஏன் "தீர்க்கதரிசி" என்று அழைக்கப்படுகிறார்? அவர் எதுவும் சொல்லாததினாலும், அவர் முன்கூட்டியே எதையும் அறிவிக்காததாலும் அவர் ஒரு தீர்க்கதரிசி இல்லை என்று நீங்கள் கூறுவீர்கள்! விபத்து ஏற்படவில்லை என்றால், அவர் ஒரு கள்ள தீர்க்கதரிசி என்று நீங்கள் கூறுவீர்கள்! விபத்து ஏற்பட்டால், "இது ஒரு தியாகம்" என்று நீங்கள் சொல்கிறீர்கள், அவர் அதை ஏற்படுத்தினாரா? இந்த விஷயத்தைப் பொறுத்தவரை, அவர் என்ன செய்ய வேண்டும்? ஆனால் என்னுடைய செய்தி உங்களை கண்டனம் செய்கிற காரணத்தினால் நீங்கள் அதைச் செய்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். [ஆசிரியர் குறிப்பு: சபையார், “ஆமென்!” என்கிறார்கள்].
15 இருப்பினும், உங்களுடைய தீர்க்கதரிசிகள், "ஆட்சிக்கவிழ்ப்பு இருக்கும்" என்கிறார்கள்! அது நிகழும்போது, "அவர் ஒரு உண்மையான தீர்க்கதரிசி; அவர் அதை முன்கூட்டியே எங்களுக்குச் சொன்னார்!" என்று நீங்கள் சொல்வீர்கள்.  ஆனால் அது நானாக இருக்கும்போது, நடுராத்திரி சத்தத்தின் நிமித்தம், "அவனைக் கைப்பற்றுங்கள், அவர் சதித்திட்டத்தில் இருக்கிறான்" என்று கூறுவீர்கள். ஆனால் நான் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் பார்க்கிறீர்களா? நமக்கு என்ன நடக்கிறது என்பது புதிதல்ல என்பதைக் காட்ட நான் வேதாகமத்திலிருந்து ஒரு பத்தியைப் வாசிக்கப் போகிறேன். எரேமியா 26:8 முதல் 9-ல், அதை இப்பொழுது தான் நாம் வாசித்தோம், எரேமியா ஒருபுறம் தனியாக இருந்தான் மறுபுறத்தில் ஆசாரியர்கள், தீர்க்கதரிசிகள், கத்தோலிக்கர்கள், புராட்டஸ்டன்ட்டுகள், சுவிசேஷகர்கள் மற்றும் எல்லா மக்களும் அவனுக்கு எதிராக தீர்க்கதரிசியின் வெகுமதியைப் பெறுவதற்காக இருந்தார்கள். .
16 எரேமியா 26:11 கூறுகிறதாவது, "அப்பொழுது ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும், பிரபுக்களையும் சகல ஜனங்களையும் நோக்கி: இந்த மனுஷன் மரண ஆக்கினைக்குப் பாத்திரன்; உங்கள் செவிகளாலே நீங்கள் கேட்டபடி, இந்த நகரத்துக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொன்னானே என்றார்கள்.! " அவர்கள் முதலில் அவனை சிறைக்கு அனுப்பினார்கள், பின்னர் அவர்கள் அவனை ஒரு குழிக்குள் எறிந்தார்கள், எரேமியா 38:6-ல், “அப்பொழுது அவர்கள் எரேமியாவைப் பிடித்து, அவனைக் காவற்சாலையின் முற்றத்திலிருந்த அம்மெலேகின் குமாரனாகிய மல்கியாவினுடைய துரவிலே போட்டார்கள்; எரேமியாவைக் கயிறுகளினால் அதிலே இறக்கிவிட்டார்கள்; அந்தத் துரவிலே தண்ணீர் இல்லாமல் உளையாயிருந்தது, அந்த உளையிலே எரேமியா அமிழ்ந்தினான். " அவையாவும் அவன் மரிக்கும்படியாக செய்த முயற்சி ஆகும்! எரேமியா எரேமியா 26:15-ல் அவர்களிடம், "ஆகிலும் நீங்கள் என்னைக் கொன்றுபோட்டால், நீங்கள் குற்றமில்லாத இரத்தப்பழியை உங்கள்மேலும் இந்த நகரத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் சுமத்திக்கொள்வீர்களென்று நிச்சயமாய் அறியுங்கள்; இந்த வார்த்தைகளையெல்லாம் உங்கள் செவிகளிலே சொல்லக் கர்த்தர் மெய்யாகவே என்னை உங்களிடத்திற்கு அனுப்பினார் என்று சொன்னான்.
17 நீங்கள் பார்க்கிறீர்களா? இன்று, யார் என்னைக் கொலை செய்வார்கள் என்பது முக்கியமல்ல, கத்தோலிக்கர்கள், புராட்டஸ்டன்ட்டுகள், சுவிசேஷகர்கள், பிரன்ஹாமிஸ்டுகள், ஐவோரின்களாகிய நீங்கள் அனைவரும், ஆப்பிரிக்கர்கள், ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள் மற்றும் பலர் தான் இதைச் செய்திருப்பீர்கள்! நீங்கள் மறந்துவிடுவது என்னவென்றால், நான் ஏற்கனவே பிரசங்கித்தேன், நீங்கள் யார் என்று நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன், நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்! [ஆசிரியர் குறிப்பு: சபையார், “ஆமென்!” என்கிறார்கள்].
18 நான் பயணம் செய்ய விரும்பியபோது, பெல்ஜியம் என்னிடம், "ஐயா, தீர்க்கதரிசி! நீங்கள் விசாவைப் பெற தகுதியற்றவர் என்று உங்கள் தேசத்தால் தெரிவிக்கப்படுகிறீர்கள், அதாவது, நீங்கள் விசா வழங்கப்பட வேண்டிய நபர் அல்ல, நீங்கள் உங்கள் தேசத்தின் பொது ஒழுங்கு, தேசிய பாதுகாப்பு மற்றும் ஐவரி கோஸ்டுக்கும் எங்களுக்கும் இடையிலான சர்வதேச உறவுகளுக்கு அச்சுறுத்தலாக கருதப்படுகிறது! எனவே நாங்கள் உங்களுக்கு விசாவை வழங்கவில்லை!" சுவிட்சர்லாந்திலும் அதே காரியம் தான்! அனைத்தும் தேவாலயங்களின் அமானுஷ்ய கையின் கீழ் உள்ளது! அதே வேளையில் ஐவரி கோஸ்டின் அனைத்து பாதிரியார்கள் மற்றும் போதகர்கள் அவர்கள் விரும்பும் போதெல்லாம் பயணம் செய்கிறார்கள்.
19 ஒரு தீர்க்கதரிசி பூமியில் இருக்கும்போது, பூமியின்குடிகள் ஆசீர்வதிக்கப்படுவதற்கு அல்லது சபிக்கப்படுவதற்காக செயல்படுவார்கள்… மேலும் மனிதனுக்கு கடவுளின் மிகப் பெரிய வெகுமதியும் மிகப் பெரிய பரிசும் இரட்சிப்பாகும், இரட்சிப்பு என்பது ஒரு தீர்க்கதரிசியால் மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள்! நித்திய ஜீவன் என்பது ஒரு தலைமுறையில் தீர்க்கதரிசியின் வெகுமதி. [ஆசிரியர் குறிப்பு: சபையார், “ஆமென்!” என்கிறார்கள்].
20 மேலும், நீங்கள், ஐவோரியர்களே, ஆப்பிரிக்கர்களே, ஐரோப்பியர்களே, அமெரிக்கர்கள் மற்றும் மற்றவர்களே, நீங்கள் பிசாசின் குமாரரும் மற்றும் குமாரத்திகளாக இருக்கிறீர்கள்! நீங்கள் புதரில் ஊர்ந்து செல்லும் சர்பத்தின் மனித சந்ததியினராக இருக்கிறீர்கள்! நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள், ஆனால் நடுராத்திரி சத்தம் ஒவ்வொரு கண்டத்திலும், ஒவ்வொரு தேசத்திலும், ஒவ்வொரு மொழியிலும், கோத்திரத்திலும், பூமியிலுள்ள ஜனங்களுக்கும், ஆப்பிரிக்காவின் தொலைதூர காடுகளிலும் ஒலிக்கும். [ஆசிரியர் குறிப்பு: சபையார், “ஆமென்!” என்கிறார்கள்].
21 இப்பொழுது, தீர்க்கதரிசிகள் ஏன் மலைகளின் மேல் செல்கிறார்கள்? மனுஷகுமாரர்களிடம் சொல்வதற்கு எதுவும் இல்லாததால் அவர்கள் மலைகள் மீது செல்கிறார்கள்! அவர்கள் சொல்வதற்கு அல்லது வெளிப்படுத்துவதற்கு ஏதாவது இருக்கும்போது, அவர்கள் திரும்பி வருகிறார்கள்! அவர்கள் இனிமேல் மனுஷகுமாரர்களிடம் என்றென்றும் சொல்ல ஒன்றுமில்லை என்று இருக்கும்போது, கடவுள் அவர்களை அழைத்துச் செல்கிறார். இதனால்தான் தீர்க்கதரிசிகள் மலைகளுக்கு தனிமை படித்துக்கொண்டு போகின்றனர்.
22 மோசே சீனாய் மலைக்கு தனிமை படுத்திக்கொள்வார், எலியா கார்மல் மலைக்கு சென்று தனிமை படுத்திக்கொள்வார், சாலொமோன் மோரியா மலையில் யெகோவாவின் வீட்டைக் கட்டினார். இயேசு ஒலிவ மலைக்கு சென்று தனிமை படுத்திக்கொள்வார், மேலும் லூக்கா 22:39 ல் வேதாகமத்தில் கூறினபடியாக பின்பு அவர் புறப்பட்டு, வழக்கத்தின்படியே ஒலிவமலைக்குப் போனார். நீங்கள் பார்க்கிறீர்களா? பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட, இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேரையும் நிற்கக்கண்டேன்! ஆமென்!
23 வேதாகமத்தின் இந்த விலைமதிப்பற்ற பத்திகளைப் படிக்காமல் என்னால் முடிக்க முடியாது: ஆமோஸ் 3:7: "கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்." [ஆசிரியர் குறிப்பு: சபையார், “ஆமென்!” என்கிறார்கள்]. 2 நாளாகமம் 20:20: "அவர்கள் அதிகாலமே எழுந்திருந்து, தெக்கொவாவின் வனாந்தரத்திற்குப் போகப் புறப்பட்டார்கள்; புறப்படுகையில் யோசபாத் நின்று: யூதாவே, எருசலேமின் குடிகளே, கேளுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள், அப்பொழுது நிலைப்படுவீர்கள்; அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள், அப்பொழுது சித்திபெறுவீர்கள் என்றான்.!" [ஆசிரியர் குறிப்பு: சபையார், “ஆமென்!” என்கிறார்கள்].
24 இப்போது, ஓசியா 12:13 கூறுகிறது: "கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியைக் கொண்டு இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; தீர்க்கதரிசியினால் காக்கப்பட்டான்."  [ஆசிரியர் குறிப்பு: சபையார், “ஆமென்!” என்கிறார்கள்]. இப்போது, மத்தேயு 10:41 உடன் நான் முடிக்கிறேன், "தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்; நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான்".  [ஆசிரியர் குறிப்பு: சபையார், “ஆமென்!” என்கிறார்கள்].
25 இந்த ஊழியத்தில், அநேகர் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள், ஒரு தீர்க்கதரிசியாக என்னைப் பெற்றதற்காக அல்லது நமக்கு நன்மை செய்ததற்காக சில அஞ்ஞானிகளும் கூட இரட்சிக்கப்படுவார்கள் என்று நான் நம்புகிறேன்.
26 சமீபத்தில், நான் என் கிராமத்தில் இருந்தேன், எங்களிடமிருந்து வெகு தொலைவில் வாழ்ந்த ஒரு பெண் என்னைப் பார்க்க வந்தார். நான் அவளுக்காக மனதுருக்கும் கொண்டு, அவளை நோக்கி: என்ன வேண்டுமானாலும் என்னிடம் கேள் என்றேன். அதற்கு அவள் , "நான் இனிமேல் குடி போதைக்கு ஆளாகாதபடி எனக்காக ஜெபியுங்கள், என் வாழ்க்கை மாறக்கூடும்படியாக ஜெபியுங்கள்! மேலும் எனக்கு மிகவும் பசியாக இருப்பதால் கொஞ்சம் உணவு வாங்கவும் கொஞ்சம் பணம் கொடுங்கள்."என்றாள் இப்பொழுது, ஜெபத்திற்கும் பணத்திற்கும் இடையில் ஒரு தேர்வு செய்யும்படியாக அவளிடம் சொன்னேன், ஏனென்றால் அவளுடைய ஒரே ஒரு வேண்டுதலுக்கு தவிர என்னால் பதிலளிக்க முடியவில்லை! அதற்கு அவள், "நீங்கள் எனக்கு கொஞ்சம் பணம் கொடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்!" என்றாள். அன்றைக்கு போதுமான உணவை வாங்க நான் அவளுக்கு கொஞ்சம் பணம் கொடுத்தேன். இன்னொரு முறை நான் என் கிராமத்தில் இருந்தபோது, அவள் எனக்கு முன் வந்து, "என்னிடம் கருணை காட்டுங்கள், இந்த நேரத்தில் நான் ஜெபத்தை மட்டுமே கேட்கிறேன்!" என்றாள். நான் அவளிடம், "சரி, ஆனால் பணத்தை என்னிடம் விரும்ப கொண்டு வாருங்கள், இதனால் நீங்கள் கேட்கும் ஜெபத்தை நான் உங்களுக்கு வழங்க முடியும்!" என்றேன். அவள் மிகவும் ஏழ்மையானவள் என்பதால் அவளால் அதை கொண்டு வர முடியவில்லை!
27 அவள் குறிப்பாக புருஷர்கள் மற்றும் என் கூட்டத்தாரின் சரியான மாதிரியாக இருக்கிறாள்! "எனக்கு கொஞ்சம் பணம் கொடுங்கள்" என்று ஒருவர் கடவுளிடம் சொல்ல முடியவில்லை என்றால், ஒருவர் தனது தீர்க்கதரிசியிடம் "எனக்கு கொஞ்சம் பணம் கொடுங்கள்" என்று எப்படி சொல்ல முடியும். அதைச் செய்வது ஒரு சாபக்கேடு.  [ஆசிரியர் குறிப்பு: சபையார், “ஆமென்!” என்கிறார்கள்].
28 நல்லது, நமக்கு இன்னும் சில நிமிடங்கள் உள்ளன, மற்றொரு கேள்விக்கு இங்கே பதிலளிக்க விரும்புகிறேன்! சகோதரர் பிலிப்பு, பெரிய வெள்ளை சிங்காசனத்தின் நியாத்தீர்ப்பில், புஸ்தகங்கள் திறக்கப்பட்டன மற்றும் ஒரு புஸ்தகமும் திறக்கப்பட்டது என்று வேதாகமம் கூறுகிறது. இந்த என்ன புஸ்தகங்கள்? நல்லது, நான் அதைப் வாசிக்க போகிறேன்… வெளிப்படுத்துதல் 20:12… நான் 11 வது வசனத்துடன் தொடங்குகிறேன்: “பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.  மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்."
29 நல்லது, நான் சொல்லப்போவது ஒரு வெளிப்பாடு, மேலும் இந்த இரகசியத்தை தானியேலின் ஆவியானவர் தான் வெளிப்படுத்தகூடும் என்று நான் விசுவாசிக்கிறேன்! தானியேல் 7:10 கூறுகிறதாவது, "அக்கினி நதி அவர் சந்நிதியிலிருந்து புறப்பட்டு ஓடினது; ஆயிரமாயிரம்பேர் அவரைச் சேவித்தார்கள்; கோடாகோடிபேர் அவருக்கு முன்பாக நின்றார்கள்; நியாயசங்கம் உட்கார்ந்தது; புஸ்தகங்கள் திறக்கப்பட்டது." ஆமென்! இங்கேயுள்ள  அக்கினி நதியும், வேதாகமம் முழுவதும் உள்ள  சிவந்த வானமும், வெளிப்படுத்துதல் 15:2-ன் அக்கினிகலந்த கண்ணாடிக் கடல்போன்ற ஒரு கடலும் ஒன்றுதான்:  தானியேல், எலியா மற்றும் இயேசு கிறிஸ்துவின் ஆவிகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட தெய்வீக நியாயத்தீர்ப்பு தான் இங்கு ஊழியம் செய்து கொண்டிருக்கிறது!  [ஆசிரியர் குறிப்பு: சபையார், “ஆமென்!” என்கிறார்கள்].
30 இந்த வெளிப்பாடு வேறு எங்கேயாவது இருக்குமானால், பிறகு அதை குறித்து நானறியேன்… நான் சொல்லப் போவதை நீங்கள் விசுவாசிக்வோ அல்லது மறுக்கவோ சுதந்திரமாக இருக்கிறீர்கள், ஆனால் இது தான் சரியான சத்தியம்! வெளிப்படுத்துதல் 20:12 நிறைவேறியது, நிறைவேற்றப்பட்டு வருகிறது, மேலும் பூமியில் எப்போதும் நிறைவேறும்! "சகோதரர் பிலிப்பு, இது பெரிய வெள்ளை சிங்காசனத்தின் நியாயத்தீர்ப்பு! இது வர இருக்கின்றது" என்று நீங்கள் சொல்கிறீர்கள், நான் உங்களுக்கு கூறுகிறேன்: இல்லை, ஐயா! வெளிப்படுத்துதல் 20:12 வருகிறது, ஆனால் வெளிப்படுத்துதல் 20:12 தற்போது பூமியில் உள்ளது!  [ஆசிரியர் குறிப்பு: சபையார், “ஆமென்!” என்கிறார்கள்].
31 தலைமுறை தலைமுறையாக, தீர்க்கதரிசி-செய்தியாளன் பூமியில் இறங்கும்போது, அது உயிருள்ளவர்களை நியாயந்தீர்க்க பூமியில் இறங்கும் வெள்ளை சிங்காசனத்தின் நியாத்தீர்ப்பாகும். இதே நியாத்ததீர்ப்புதான் பரலோகத்தில் கடவுளுக்கு முன் ஒரு நாள் மீண்டும் நடக்கும்.  [ஆசிரியர் குறிப்பு: சபையார், “ஆமென்!” என்கிறார்கள்].
32 ஏசாயா பூமியில், ஜீவ புஸ்தகத்தைப் பிரசங்கிக்கும்போது, அது தான் அவனுடைய செய்தி மற்றும் அந்த புத்தகங்கள் தான் ஆபேலிலிருந்து அவனுக்கு முன் வந்த தீர்க்கதரிசிகளாகும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிரசங்கிக்கும்போது, அது அதே காரியமாக இருந்தது. பவுல் பிரசங்கிக்கும்போது, அது அதே காரியமாக இருந்தது. மேலும் இன்றைய ஜீவ புஸ்தகம், அது தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவின் புஸ்தகம் மற்றும் புஸ்தகங்களானது ஆபேலில் இருந்து ஏசாயா, மோசே, எரேமியா மற்றும் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவின் முன் வந்த அனைத்து தீர்க்கதரிசிகளும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள்.  [ஆசிரியர் குறிப்பு: சபையார், “ஆமென்!” என்கிறார்கள்].
33 நல்லது, இப்பொழுது இதை பின் தொடருங்கள்: முதலில், ஆதியில் முதலாவதும் மற்றும் ஒரே ஒரு புத்தகம் மட்டுமே ஆதியிலிருந்த மக்களுக்காக கடவுளுக்கு முன்பாக இருந்தது, அது ஆபேலின் செய்தி புத்தகம்! ஒரு தலைமுறையும் பின் ஒரு தலைமுறையும் கடந்தது, ஒரு தலைமுறையும் இன்னொரு தலைமுறையும் சென்றுக் கொண்டிருந்தன. பிறகு ஏனோக்கின் காலத்தில், ஏனோக்கிற்கு முன்பிருந்த தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள் அனைத்தும் திறக்கப்பட்டு, இப்போது ஜீவ புத்தகமாக இருந்த ஏனோக்கின் புத்தகம் திறக்கப்பட்டது! நோவாவின் காலத்தில், ஏனோக்கின் புத்தகங்கள் மற்றும் நோவாவுக்கு முந்தைய தீர்க்கதரிசிகள் அனைத்தும் திறக்கப்பட்டன, இப்போது ஜீவ புத்தகமாக இருந்த நோவாவின் புத்தகம் திறக்கப்பட்டது! மோசேயின் காலத்தில், நோவாவின் புத்தகங்களும் மோசேக்கு முந்தைய தீர்க்கதரிசிகளும் திறக்கப்பட்டன, மேலும் ஜீவ புத்தகமான மோசேயின் புத்தகம் திறக்கப்பட்டது! ...
34 ஒரு தலைமுறையில் ஜீவ புத்தகம் என்பது அந்த தலைமுறையின் தீர்க்கதரிசியின் புத்தகமாகும். [ஆசிரியர் குறிப்பு: சபையார், “ஆமென்!” என்கிறார்கள்]. அவருக்கு முன் வந்த தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள் அனைத்தும் மதிப்பற்றவை; அவை வெறுமனே ஒரு அடித்தளமாக மட்டுமே செயல்படுகின்றன. நீங்கள் பார்க்கிறீர்களா?
35 முதலாவதாக, ஒவ்வொரு மக்களுடனும், ஒவ்வொரு தலைமுறையினருடனும், ஒவ்வொரு தீர்க்கதரிசியுடனும் உலகத்திற்கு அஸ்திவாரம் இடுவதற்கு முன்னமே யாவும் கடவுளின் சிந்தையில் நடந்தது! இரண்டாவதாக, அது உலகத்தின் அஸ்திவாரம் இடுவதற்கு முன்னமே அது எவ்விதமாக தேவனுடைய சிந்தையில் நடந்ததோ அவ்விதமாக அதே மக்கள், அதே தலைமுறை மற்றும் மாம்சத்தில் உள்ள அதே தீர்க்கதரிசிகளுடன் பூமியில் நடந்தது! மூன்றாவதாக, உலகத்தின்  அஸ்திவாரம் இடுவதற்கு முன்னமே தலைமுறை தலைமுறையாக கடவுளின் மனதில் தோன்றிய அதே மக்கள், அதே தலைமுறைகள் மற்றும் அதே தீர்க்கதரிசிகளுடன் உயிர்த்தெழுதலில் அது நடக்கும்!  [ஆசிரியர் குறிப்பு: சபையார், “ஆமென்!” என்கிறார்கள்].
36 பரலோகத்தில் ஒரு நியாயதீர்ப்பு இருந்தது, அதில் சாத்தானும் அவனது தேவதூதர்களும் டாமி ஆஸ்போர்ன், மோரிஸ் செருல்லோ, யோங்கி சோ, பென்னி ஹின் மற்றும் அனைவருமே கண்டனம் செய்யப்பட்டு பூமியில் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் வஞ்சிப்பதற்காக பூமிக்கு வந்தார்கள், பூமியில் தலைமுறை தலைமுறையாக தீர்க்கதரிசிகளுடன் ஒரு நியாயதீர்ப்பு இருக்கிறது. மேலும் காலங்களின் முடிவில் ஒரு நியாயத்தீர்ப்பு இருக்கும், நித்திய கண்டனத்திற்காக பெரிய வெள்ளை சிங்காசனத்தின் நியாத்தீர்ப்பு.
37 எனவே "நற்செய்தி" அல்லது "ஜீவ புத்தகம்" என்று அழைக்கப்படும்படியாக எந்த புத்தகமும் இல்லை. சகோதரரே, பிசாசு உங்களை கனவு காண விட வேண்டாம்! வார்த்தையானது எளிமையில் வெளிப்படுகிறது! கர்த்தராகிய இயேசுவுக்கு முன்பாக யோவான் ஸ்நானகன் மலைகளை நேராக்குவார் என்று வேதாகமம் கூறும்போது, சில எரிமலைகள் அல்லது பூகம்பங்களைக் காண எதிர்பார்க்க வேண்டாம்!
38 நான் ஐவரி கோஸ்டிற்கு வெளியே எந்த பயணமும் மேற்கொள்ளவில்லை என்றாலும் ஆபிரிக்காவின் இன்ன இன்ன நாட்டிலும், மற்றும் உலக நாடுகளிலும் நடுராத்திரி சத்தத்தின் சில கூட்டங்களை நீங்கள் காணும்போது, நான் ஏற்கனவே ஆப்பிரிக்கா மற்றும் முழு உலகிலும் நடந்து கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். [ஆசிரியர் குறிப்பு: சபையார், “ஆமென்!” என்கிறார்கள்]. இப்போது, பொது ஆர்ப்பாட்டங்களிலிருந்து வெகு தொலைவில், பூமியில் ஒரு இரகசிய காரியத்தை நிறைவேற்றுவார் என்று கடவுள் கூறும்போது, அது என்னவாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ஆமென்! தீர்க்கதரிசனங்கள் நம் கண் முன்னே நிறைவேறுகின்றன. ஆமென்!
--:--
--:--