



Kacou 86 (Kc.86) : என்கிறார்கள் கூர்நுனி கோபுரத்தின் உச்சியின் மேல்
(மே 24,2009 அன்று அட்ஜாம், அபிட்ஜன்-ஐவரி கோஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
1 நல்லது, வழக்கம் போல், எனக்கு இங்கே பல கேள்விகள் உள்ளன… முதலாவது, சகோதரர் பிலிப்பு, நாங்கள் ஒரு சகோதரனை பாலியல் பாவத்திற்காக தள்ளிவிட்டோம், அதன்பிறகு மூன்று மாதங்கள் கழித்து, அவர் அந்தப் பெண் இல்லாமல் திரும்பி வந்தார். நாம் என்ன செய்ய வேண்டும்? இப்போது அதற்க்கான பதில் இங்கே: அவர் அந்தப் பெண்ணுடன் திரும்பி வந்து, அவள் கர்ப்பமாக இல்லை என்று சபைக்கு முன்பாக அறிவித்தால், நீங்கள் சகோதரருக்காக ஜெபிக்கலாம். ஆனால் அவர் அவளுடன் திரும்பி வரவில்லை அல்லது அவர்கள் இருவரும் மீண்டும் தீட்டுப்படுத்தப்பட்ட நிலையில் திரும்பி வந்தால், அவர் ஒரு சகோதரர் அல்லது அவர்கள் ஒரு சகோதரராகவும் சகோதரியாகவும் இருக்கிறார்கள், ஆனால், இந்த பாவத்திற்காக நீங்கள் ஜெபிக்க முடியாது!
2 நல்லது, இப்பொழுது இன்னொரு கேள்வி, சகோதரர் பிலிப்பு, எங்களுடைய நகைகளை நாங்கள் என்ன செய்ய வேண்டும்? தங்கம் மற்றும் நகைகள் குறித்து, நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவற்றை மறுவிற்பனை செய்யவோ, அவற்றை உங்களுடைய சொத்தாக வைத்திருக்கவோ அல்லது ஒருவருக்கு கொடுக்கவோ உங்களுக்கு சுதந்திரம் உள்ளது! உங்கள் வீடுகளிலோ அல்லது வங்கியிலோ பல விலைமதிப்புமிக்க உடைமைகளை வைத்திருக்க உங்களுக்கு சுதந்திரம் உள்ளது, ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரு சகோதரர் அல்லது சகோதரி வெறும் வயிற்றில் தூங்கும்போது, அது உங்களுக்குத் தெரியாவிட்டாலும் பாவமாகக் கருதப்படுகிறது. போதகர்களே, நீங்கள் அதை அறிக்கையிட வேண்டும்.
3 நல்லது, யாரோ ஒருவர் என்னிடம் நான் ஏன் உபவாசம் மற்றும் ஜெபங்களை பற்றி அதிகம் பேசுவதில்லை என்று கேட்டார்கள். நான் அதைப் பற்றி பேசவில்லை, ஏனென்றால் உபவாசம், ஜெபம், வேத வாசிப்பு மற்றவைகளும் புதிதாகப் பிறந்த எந்த கிறிஸ்தவரின் அன்றாட வாழ்க்கையிலும் உள்ளது ஆகையால் அதை குறித்து நான் பேசுவதில்லை! அவர்கள் நடுராத்திரி சத்தத்திற்கு வருவதற்கு முன்பு, அவர்கள் ஏற்கனவே தங்களுடைய கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷக, பிரன்ஹாமிஸ்ட் மற்றும் இஸ்லாமிய பூர்வீகத்திலும் கூட உபவாசம் இருந்தனர்!
4 மற்றொரு கேள்வி, சகோதரர் பிலிப்பு, "கேள்விகள் மற்றும் பதில்களில்" ஒருவர் வீட்டில் தொலைக்காட்சி வைத்துக் கொள்ளலாம், புருஷரும் அவரது மனைவியும் மட்டுமே அதை இயக்கவும் மற்றும் அணைக்கவும் அங்கீகாரம் பெற்றவர்கள் என்று கூறப்படுகிறது ஆயினும்கூட, "தங்க முலாம் பூசப்பட்ட சொரூபங்கள் மீது நீங்கள் ஜெயம் கொள்ள வேண்டும்" என்பதில், அவை வெளியேற்றப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது! நாங்கள் என்ன செய்ய வேண்டும்?
5 இப்போது பதில் இங்கே இருக்கின்றது: கேமரூனில் உள்ள சகோதரர்களுக்குப் பிறகு, இந்த வாரத்திற்குள், காபோனின் போதகர் சகோதரர் எம்.பூயியும், "கேள்விகள் மற்றும் பதில்களில்" கூறப்பட்டுள்ளவற்றிற்கும் "தங்க முலாம் பூசப்பட்ட சொரூபங்கள் மீது நீங்கள் ஜெயம் கொள்ள வேண்டும்" என்பதில் கூறப்பட்டுள்ளவற்றிற்கும் இடையில் என்ன செய்வது என்று தெரிந்துகொள்ளும்படியான கேள்வியை என்னிடம் வைத்தார். நல்லது, அவை இரண்டும் மோசமானவை அல்ல, ஆனால் ஒன்று கடவுளின் பரிபூரண சித்தம், மற்றொன்று கடவுளின் அனுமதிக்கப்பட்ட சித்தம்! ஒன்று அல்லது மற்றொன்றைச் செய்ய என்ன செய்ய வேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்துவது அல்ல !
6 மேலும், இதை கவனிக்கவும் "கேள்விகள் மற்றும் பதில்களுக்கு" பிறகு தான் "தங்க முலாம் பூசப்பட்ட சொரூபங்கள் மீது நீங்கள் ஜெயம் கொள்ள வேண்டும்" என்பது வருகின்றது. மேலும் வெளிப்பாடு முன்னேறுகிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் என்ன பார்க்க வேண்டும் என்பதை தொலைக்காட்சி உங்கள் மீது திணிக்கிறது ஆனால் கணினியின் விஷயத்தில் அவை இல்லை. ஆனால் ஒவ்வொரு வீடும், ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு மாணவனும் ஒரு கணினியைக் கொண்டிருக்கும்போது, கணினி அவனுடைய வித்தை வெளிப்படுத்தும். அவன் ஒரு சர்ப்பம் என்றால், அதில் அசுத்தமான பாடல்கள், அசுத்தமான படங்கள் மற்றும் பலவற்றைக் நீங்கள் காண்பீர்கள். நீங்கள் பார்க்கிறீர்களா?
7 இப்போது இன்னொரு கேள்வி… இன்று காலையில் நமக்கு நிறைய கேள்விகள் உள்ளன, சகோதரர் பிலிப்பு, வெளிப்படுத்துதல் 12:14-ன் பெரிய கழுகின் இரண்டு சிறகுகளும் எலியா மற்றும் மோசேயைக் குறிக்க முடியுமா? அதற்கான பதில் இங்கே : ஒரு வேதவசனத்திற்கு பல வியாக்கியானங்கள் இருக்கலாம், ஆனால் இங்கே, எலியாவையும் மோசேயையும் குறித்த கேள்வி இல்லை! அப்படியானால், ஆதியாகமம் 18 முதல் அவர்கள் கடவுளோடு வந்தபோது அது நமக்குத் வெளிப்பட்டிருக்கும்! மேலும் மத்தேயு 17-ல் எலியாவும் மோசேயும் கர்த்தராகிய இயேசுவோடு மலையில் நின்றபோது! பெரிய கழுகின் இரண்டு சிறகுகள், அது கடவுளின் முழு வேதாகமமாகும்; அதாவது, உங்களுக்கும் எனக்கும் வரையிலான நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகளாகும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
8 மறுபுறம், கடவுளின் வலது கையைப் போல, வெளிப்படுத்துதல் 12:14-ன் இரண்டு சிறகுகள் தீர்க்கதரிசிகளின் ஆவியாகும். வெளிப்படுத்துதல் 12 வசனம் 1-ஐப் பாருங்கள், உயிருள்ள திருச்சபையாக இருக்கும் இந்த ஸ்திரீ சந்திரனையும் சூரியனையும் கொண்டு உடுத்துவிக்கப்பட்டிருந்தாள் என்று கூறப்படுகிறது. அது என்ன? வானங்களின் மேகங்களான பெரிய கழுகின் இரண்டு சிறகுகளில் மேல் அமர்ந்து அவள் கீழே வருகிறாள்! நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகளும் இல்லாமல் திருச்சபை பூமியில் இறங்கி வர முடியாது, நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகளும் இல்லாமல் திருச்சபையால் எடுத்துக்கொள்ளப்பட முடியாது, ஆனால் சட்டம் மற்றும் தீர்க்கதரிசிகளால்!
9 ஆபிரகாம் லூக்கா 16 ல், "அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு" என்று கூறினார்! மோசேயும் எலியாவும் அல்ல ஆனால் மோசேயும் தீர்க்கதரிசிகளும்! உலகத்தின் அஸ்திவாரம் போட்டது முதல், ஒரு தீர்க்கதரிசிக்கு கடவுளுடைய ஒவ்வொரு செய்தியும் பெரிய கழுகின் இரண்டு சிறகுகளைக் குறிக்கிறது! பெரிய கழுகின் இரண்டு சிறகுகளில்தான் இஸ்ரவேல் எகிப்தை விட்டு வெளியேறியது மற்றும் யாத்திராகமம் 19:4 அதை கூறுகிறது!
10 ஒவ்வொரு செய்தியும், ஒவ்வொரு பிரசங்கமும் ஓசியா 12:13, 2 நாளாகமம் 20:20 மற்றும் யோவான் 6:28 முதல் 29 குறிப்பிடுவதை போன்ற ஒவ்வொரு முக்கிய வார்த்தையும் பெரிய கழுகின் இரண்டு சிறகுகள்! நீங்கள் பார்க்கிறீர்களா? சந்திரனானது நியாயத்தீர்ப்பின் நியாயப்பிரமாணம் மற்றும் தேசங்களின் ஆக்கினைத்தீர்ப்பு என்றும் அதேவேளையில் சூரியனானது பரிசுத்தவான்களின் இரட்சிப்பிற்கான கிருபையாக இருக்கிறது என்பதை நாம் அறிவோம்.
11 வெளிப்படுத்துதல் 12:1-ல், சந்திரன் தான் நியாயப்பிரமாணம் என்பது உண்மைதான், அது மோசே, ஆனால் எலியா கிருபையை மாதிரியாக கொண்டிருக்க முடியாது. நீங்கள் பார்க்கிறீர்களா? எலியா சோதோம் மற்றும் கொமோரா மீது அக்கினியை அழைத்தார். 1 இராஜாக்கள் 18-ல் எலியா புறஜாதிகளின் நானூறு தீர்க்கதரிசிகளைக் கொன்றார்! 2 இராஜாக்கள் 1-ல் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் மீது அக்கினியை அழைத்தார், மேலும் வெளிப்படுத்துதல் 11-ல் அவர் இதை மீண்டும் செய்வார் என்று வேதாகமம் கூறுகிறது! எலியா கிருபையாக இருக்க முடியாது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
12 நல்லது, ஏப்ரல் 24, 1993-ன் தரிசனத்திலுள்ள கூர்நுனி கோபுரத்தின் சிகரத்துடன் நான் வர விரும்புகிறேன்…! கடவுளின் தீர்க்கதரிசிகள் அனைவரும் மலை உச்சிகளை விரும்புவார்கள் அவை தான் கூர் நுனி கோபத்தின் உச்சியாகும் … நல்லது, நான் தானியேல் 12:4 ஐயும் தானியேல் 12:8 முதல் 10 ஐயும் வாசித்து பிறகு ஏப்ரல் 24, 1993-ன் தரிசனத்திற்கு வரப்போகிறேன். நல்லது, தானியேல் 12:4 முதல் 7 ஐ வாசிக்கலாம். "தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப் புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போகும் என்றான்."
13 இப்போது தானியேல் 12:8 முதல் 10 வரை படிப்போம், "நான் அதைக் கேட்டும், அதின் பொருளை அறியவில்லை; ஆகையால்: என் ஆண்டவனே, இவைகளின் முடிவு என்னமாயிருக்கும் என்று கேட்டேன். அதற்கு அவன்: தானியேலே, போகலாம்; இந்த வார்த்தைகள் முடிவுகாலமட்டும் புதைபொருளாக வைக்கப்பட்டும் முத்திரிக்கப்பட்டும் இருக்கும். அநேகர் சுத்தமும் வெண்மையாக்கப்பட்டு, புடமிடப்பட்டவர்களாய் விளங்குவார்கள்; துன்மார்க்கரோ துன்மார்க்கமாய் நடப்பார்கள்; துன்மார்க்கரில் ஒருவனும் உணரான், ஞானவான்களோ உணர்ந்துகொள்ளுவார்கள். "
14 மேலும், அறியாத மொழியின் முக்கியத்துவத்தை ஆதியாகமத்திலிருந்து நான் எப்படிக் காண்பித்தேன் என்பதையும், உலகத்தின் அஸ்திவாரத்திற்கு முன்பிருந்தே கடவுள் அதை மறைத்து முத்தரிக்கப்பட்டதையும் நீங்கள் பார்த்தீர்கள்! ஒரு தூதன் உண்டாக்கப்படுவதற்கு முன்பே, கடவுள் அதை ஏற்கனவே முத்திரித்திருந்தார்! நீங்கள் பார்க்கிறீர்களா? 4 வது வசனத்தில் தேவனால் இப்படி சொல்லமுடியும் "நீ கேட்டு புரிந்துகொண்ட வார்த்தைகளை புதைபொருளாக வைத்து, நீ பார்த்த ஏழு முத்திரைகளின் வெளிப்பாட்டை முத்திரையிடு, அதை எழுத வேண்டாம்! காலங்களின் முடிவில், அவற்றை வெளிப்படுத்த வில்லியம் பிரன்ஹாமை அனுப்புவேன், அப்பொழுது அறிவு அதிகரிக்கும்!
15 ஆனால் 8 வது வசனத்தில், "நான் கேட்டேன், ஆனால் எனக்கு புரியவில்லை" என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் தானியேலுக்கு ஏன் புரியவில்லை? ஏனென்றால் அது அறியாத மொழியில் இருந்தது! [ஆசிரியர் குறிப்பு: சபையார் “ஆமென்!” என்கிறார்கள்]. நான் அதைக் கேட்டும், அதின் பொருளை அறியவில்லை; ஆகையால்: என் ஆண்டவனே, இவைகளின் முடிவு என்னமாயிருக்கும் என்று கேட்டேன். அதற்கு அவன்: தானியேலே, போகலாம்; இந்த வார்த்தைகள் முடிவுகாலமட்டும் புதைபொருளாக வைக்கப்பட்டும் முத்திரிக்கப்பட்டும் இருக்கும். தேவன் அவனை நோக்கி, இவை அனைத்தும் காலங்களின் முடிவுமட்டும் புதைப் பொருளாக வைக்கப் பட்டிருக்கும், தேவன் அவனை நோக்கி: அவைகளை வெளிப்படுத்த சர்வவல்ல தேவனாகிய நான் உன்னைப்போன்ற ஒரு தீர்க்கதரிசியை அனுப்பும் மட்டும் இந்த காரியங்கள் என்னால் புதைக்கப்பட்டு முத்தரிக்கப்பட்டுள்ளது! பெந்தேகோஸ்தேர்களின் அறிவை அதிகரிப்பதற்காக அல்ல, ஆனால் திருச்சபையைச் சுத்திகரிக்கவும், வெண்மையாக்கவும், புடமிடப்படுவதற்காக. [ஆசிரியர் குறிப்பு: சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
16 ஜூலை 2007 இல், இராணுவ அலங்கார விழாவில் இருந்ததை போல் அந்த ஏப்ரல் 24, 1993 அன்று, நான் அங்கே, நின்று கொண்டு காத்திருந்தேன்… காலையில் இருந்து மணிக்கணக்கில் படையினர் அதே நிலையில் நிற்பதை நான் கவனித்தேன்! நாங்கள் அங்கு சென்றதும், அவர்கள் ஏற்கனவே அதே நிலையில் நின்று கொண்டிருந்தார்கள்! பின்பு அங்கே அநேக காரியங்கள் இருந்தன, அவற்றில் காற்றுடன் கலந்த பலத்த மழை இருந்தது. பிறகு இராணுவத் தளபதி வந்தார்! மேலும் பல உயர் அதிகாரிகள் வந்தார்கள்! பின்னர் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி வந்தார்! மேலும் பல உயர் அதிகாரிகள் மீண்டும் வந்தார்கள்! பிறகு புர்கினா பாசோவின் ஜனாதிபதியும் வந்தார்! அதன் பிறகு மேலும் பல உயர் அதிகாரிகள் மீண்டும் வந்தார்கள்! அதன்பிறகு, ஐவரி கோஸ்ட்டின் தலைவர் தனது அங்கியின் அனைத்து கவசங்களுடனும் வந்தார், அதாவது அவரது மேல் அங்கி! இராணுவத்தின் வெவ்வேறு படைகள் கடந்து சென்றன, பல மற்றும் பல விஷயங்கள் இருந்தன, அது இருட்டாகிவிட்டது, அலங்காரம் இன்னுமாக நடக்கவில்லை! நீங்கள் பார்க்கிறீர்களா?
17 ஏப்ரல் 24, 1993 இன் தரிசனத்தை முன்வைப்பதற்கான மற்றொரு வழியை அது கொடுக்கும்! மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவானின் சுவிசேஷத்தை போல; கடவுளின் மகத்தான தரிசனங்கள் மற்ற வடிவங்களின் கீழ் காணமுடியும். இப்போது, இதைக் கவனியுங்கள்: அந்த புகழ்பெற்ற நபர்கள் அங்கு வந்தார்கள், ஏனெனில் இது ஒரு பெருமிதமான விழா.
18 நான் அங்கே கடல் மணலின் மேலும் கூட்டணி கூர்நுனி கோபுரத்தின் மேலும் நின்று கொண்டிருந்தேன்! கூர்நுனி கோபுரங்கள் பழங்காலத்தின் முக்கிய நினைவுச்சின்னங்கள்! கூர்நுனி கோபுரம் உலகின் ஏழு அதிசயங்களுக்கு சொந்தமானது மற்றும் கூர்நுனி கோபுரம் வளர்ச்சியின், உடன்படிக்கை மற்றும் நித்தியத்தின் சின்னமாகும். நித்தியத்தைத் தேடுவதில் தான் பார்வோன்கள் பழங்காலத்தில் கூர் நுனி கோபுரங்களை கட்டினார்கள்! கூர்நுனி கோபுரத்தை பாருங்கள், நீங்கள் எவ்வளவு அதிகமாக மேலே செல்கிறீர்களோ, அவ்வளவு நிறங்கள் கருநீலம் மற்றும் ஊதா நிறங்கள் வரை மாறுகின்றன! ஆனால் தலைக்கல் மட்டும் வானவில்லின் ஏழு வண்ணங்களை கொண்டுள்ளன! ஆமென்!
19 கூர்நுனி கோபுரத்தின் உச்சி தான் ஆரோனின் ஆசாரியத்துவத்தினுடைய மிக புனிதமான இடம்! கூர்நுனி கோபுரத்தின் ஏழு படிகள் திருச்சபையின் ஏழு காலங்களாக இருக்கின்றது! கூர்நுனி கோபுரத்தின் ஒவ்வொரு அடியும் ஆரோனின் ஆசாரியத்துவத்தின் நிலைகளை குறிக்கிறது! நம்மிடம் பிரகாரங்கள், கிருபாசனம், வெங்கல பலிபீடம், விசாரணையுடன் கூடிய பலிகளின் பலிபீடம் அதாவது கன்றுக்குட்டியின் காலம் என்று சொல்லலாம், அத்தோடு கூட கூடார ஊழியம் மற்றும் பேழையிலிருந்து மகா பரிசுத்த ஸ்தலம் வரை உள்ளது ! ஆமென்!
20 அதன்பிறகு, அவர்கள் மீண்டும் வருவார்கள் என்று நான் கடற்கரை மணலின் மீது காத்திருந்தேன். முதலாவதாக தண்ணீர்கள் இருந்தது, அதாவது மக்கள், மொழிகள், திரளான ஜன கூட்டத்தினர், கோத்திரங்கள் மற்றும் பூமியின் தேசங்கள்! நான் அங்கே இருந்தேன்! பின்னர் இரண்டு புறாக்கள் தோன்றினது, அவை மோசே மற்றும் எலியா. மோசே ஒரு புறா வடிவத்தில் இங்கு வருகிறார் ஏனெனில் அது ஒரு பெருமிதமான விழா! கடவுள் தாமே சேனைகளின் யெகோவாவாக வராமல், ஆட்டுக்குட்டியாக வந்தார், மேலும் எலியாவும் மோசேயும் புறாக்களாக வந்தார்கள்! நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகளும் எல்லா பரிசுத்தவான்களும் பிரதிநிதித்துவ படுத்தியபடியாக மோசேயும் எலியாவும் இருந்தார்கள்!
21 மோசே நியாயப்பிரமாணத்தையும், நித்திரையில் இருக்கும் அனைத்து பரிசுத்தவான்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் அதே வேளையில் எலியா மரணத்தை கடந்து செல்லாத உயிருள்ள எல்லா பரிசுத்தவான்களையும் மாதிரியாக கொண்டுள்ளார். தரிசனத்தின் மற்றொரு தோற்றமாக எலியா மற்றும் மோசேயால் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குப் பதிலாக அவர்களை எல்லாம் காண்பிக்க கூடும் என்று நான் கூறினேன்.
22 பின்னர், யெகோவாவின் தூனும் ஆட்டுக்குட்டியும் வானத்தின் மேகங்களுடன் தோன்றினார்கள்! காபிரியேல், மிகாவேல், சேராபீன், பிரதான தூதர்கள் மற்றும் பரிசுத்த தேவதூதர்கள், முழு பரலோக இராஜ்ஜியம், இருபத்து நான்கு மூப்பர்கள் மற்றும் நான்கு ஜீவன்களும் இருந்தன! புறஜாதி தேசங்களின் திருச்சபையின் இந்த வேலைக்காக அவர்கள் அனைவரும் அங்கே இருந்தார்கள்!
23 ஆட்டுக்குட்டியின் திருமணத்தில் இஸ்ரவேல் பங்கேற்குமா என்று ஒரு சகோதரர் என்னிடம் கேட்டார். நிச்சயமாக என்று நான் சொன்னேன்! மணமகன் திருமண அறைக்குள் நுழையும் போது மணமகனின் பெற்றோராக இஸ்ரவேல் ஏற்கனவே அங்கு உள்ளனர்! சரியாக இங்கே மேயருக்கு முன்பாக இருப்பதை போன்று! ஆபிரகாம், மோசே, தாவீது மற்றும் அனைத்து பரிசுத்தவான்களும் இருப்பார்கள்! தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எல்லா நேரங்களிலிருந்தும், ஏப்ரல் 24, 1993 போன்று இரட்சிப்பின் செயல்களிலிருந்து ஒருபோதும் வெகு தொலைவில் இல்லை! [ஆசிரியர் குறிப்பு: சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
24 ஏப்ரல் 24, 1993 அன்று, பரலோகத்தில் அனைத்து ஆராதனையும் நிறுத்தப்பட்டது! அது தான் காரியம்! இருபத்தி நான்கு மூப்பர்களும் நான்கு ஜீவன்களும் தங்கள் ஆராதனையை நிறுத்தின! எக்காளங்கள் நின்றுவிட்டன! அவர்கள் அனைவரும் தேவதூதனுடனும் ஆட்டுக்குட்டியுடனும் இறங்கி வந்து தண்ணீர்களின் மேல் நின்றார்கள்! அவர்கள் ஒரு விண்மீன் தொகுப்பை உருவாக்கினர், இது தான் கூர்நுனி கோபுரத்தின் மேற்புறத்தின் தலைக்கல் ஆகும். இது எடுத்துக்கொள்ளபடுதலின் பரிமாணம், அங்கே கடவுளின் பரிபூரணமும் பரிபூரண சித்தம் மட்டுமே நுழைய முடியும்! நான் மற்றொரு பரிமாணத்தில் கடல் மணலில் அங்கே நின்று கொண்டிருந்தபோது, தேசங்கள் ஆயிரம் வருட அரசாட்சியில் நிற்கும் இடத்தில் நான் நின்று கொண்டிருந்தேன். மத்தேயு 17-ல் பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் நின்ற இடத்தில் நான் அங்கே நின்றேன், பின்னர், தானியேல் 7-ன் படி நான் அவர்களுக்கு அருகில் கொண்டு செல்லப்பட்டேன்..
25 அவருக்கு அறியாத மொழி கொடுக்கப்பட்ட பிறகு, தெரிந்துக்கொள்ப்பட்டவர்கள் வந்து அவரைக் கட்டிப்பிடித்து, கர்த்தரை துதித்தார்கள்! சகோதரர்கள் மார்ட்டின், கட்ஜோ அகோப்… வந்து அவரைக் கட்டிப்பிடித்து “ஓ எங்களுடைய விலைமதிப்பற்ற சகோதரர்”! சகோதர சகோதரிகள் வந்து அவரை அணைத்துக்கொண்டு "ஓ, நீர் எங்கள் விலைமதிப்பற்ற சகோதரர்"! பூமியின் எல்லா தேசங்களிலிருந்தும் மக்கள் வந்து அவரைக் கட்டிப்பிடித்து, "எங்கள் விலைமதிப்பற்ற சகோதரர்"! அவர்கள் எல்லா இடங்களிலிருந்தும் கடவுளைப் துதித்து வந்தார்கள்! உலகத்திற்கு அஸ்திபாரம் இடுவதற்கு முன்பே கடவுள் விதித்த அந்த மனிதனுக்கே அறியாத மொழி கொடுக்கப்பட்டது! அது அவரைத் தவிர இருக்க முடியாது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
26 நாங்கள் மென்பொருள் சகாப்தத்தில் வாழ்ந்து வருவதை நீங்கள் காண்கிறீர்கள், இந்த அழியாத மொழி ஒரு மென்பொருளாக பொருத்தமான நபரின் ஆத்துமாவில் வைக்கப்பட வேண்டும்! அது அங்கு தவிற வேறு எங்கும் வேலை செய்யாது! உலகத்திற்கு அஸ்திவாரம் இடுவதற்கு முன்பே செயல்படுத்தும் விசையானது கண்டம், தேசம், மொழி, நபர் மற்றும் கடவுளின் மனதில் இருக்கும் நபரின் பெயர் ஆகியவற்றை கொண்டு வடிவமைத்துள்ளது! இது அங்கே தவிற வேறு எங்கும் வேலை செய்ய முடியாது!
27 மேலும் 1993 க்கு முன்னர், பிற கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷக அல்லது பிரன்ஹாமிஸ்ட் மென்பொருள்கள் அங்கு நிறுவப்பட்டிருந்தால், அது அவராக இருந்தாலும், அது சரியாக இயங்காது! அனைத்து வகையான பிழைகளும் கண்டறியப்படும்! நீங்கள் பார்க்கிறீர்களா?
28 மோசே யோசுவாவுடன் ஒவ்வொரு நாளையும் கழித்திருந்தார், ஆறாவது பரிமாணத்தில் மலையில் காத்திருந்தார், ஆனால் மோசே ஏழாவது பரிமாணத்திற்குள் நுழைந்தவுடன், மக்கள் தானாகவே ஐந்தாவது பரிமாணத்தில் நுழைந்து ஆரோனிடம் ஒரு தங்க கன்று குட்டியை கேட்டார்கள்! அது வேறு விதமாக இருக்க முடியாது! [ஆசிரியர் குறிப்பு: சபையார் “ஆமென்!” என்கிறார்கள்]. இதுபோன்ற மற்றும் இத்தகைய கிறிஸ்தவ போக்கை நீங்கள் காணும்போது, நூற்றுக்கணக்கான யெகோவா, யாஷ்வா, யாஹோவா, யெகுவா மற்றும் பிறரைவற்றை பிரன்ஹாமிஸ்ட மத்தியில் கேட்கும்போது, இவை ஐந்தாவது பரிமாணத்தின் கிரியைகள்! ஒரு எதிரி தான் அதைச் செய்தான்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
29 இப்போது, நான் சொன்னது போல், தரிசனம் பல அம்சங்களின் கீழ் வரக்கூடும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்! மத்தேயுவின் தரிசனம், மாற்கின் படியான தரிசனம், லூக்கா மற்றும் யோவானின் தரிசனம்! இதை நான் சொல்ல விரும்புகிறேன், "கடலின் மணலின் மேல் நின்று பின்னர் ஒரு உயர் கூர்நுனி கோபுரத்தின் மேல் நின்று மீண்டும் கடலின் மணலின் வேறொரு இடத்தில்…"! அது என்ன? கூர்நுனி கோபுரத்தின் மேல் மற்றும் இரண்டாவதாக கடல் மணலில் மேல், அவை ஒரே இடமாக இருக்கின்றது! தூதன் வரைந்த ஏழு சபை காலங்களின் கூர்நுனி கோபுரத்தை கவனியுங்கள்! ஏழு படிகள் பின்னர் ஒரு வெற்றிடம் பின்னர் தலைக்கல்!
30 முதலாவது கடற்கரை மணலை கவனியுங்கள், இது பிரன்ஹாமிஸ்டு பெந்தேகோஸ்து மதம், பிரன்ஹாமிஸ்டுகள் பெந்தேகோஸ்தேக்களாக இருக்கிறார்கள், அவர்கள் வார்த்தையை கொண்டுள்ள ஒரு தீர்க்கதரிசியைப் பெற்றார்கள். வெவ்வேறு போக்குகளைப் பாருங்கள், குறிப்பாக கோல்மனிஸ்டுகள், அது அவர்களை ஒருபோதும் விட்டுவிடவில்லை என்பதை நீங்கள் காண்பீர்கள்! அவர்கள் பெந்தேகோஸ்த்துக்கள்!
31 பிரன்ஹாமிஸ்டுகளே, கோழியின் கீழ் ஒரு கழுகின் முட்டைகளின் உவமையை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? வில்லியம் பிரன்ஹாம் உங்களைப் பற்றி சில கோழிகளின் கீழ் வைக்கப்பட்ட கழுகு முட்டைகள் என்று பேசினார். நீங்கள் சில கோழிகளின் கீழ் பிறந்தீர்கள். ஆனால் இன்று, நீங்கள் ஒரு கழுகு சத்தத்தை கேட்கிறீர்கள். ஒன்று கழுகுடன் உங்களுடைய அடையாளத்தை கைப்பற்ற பறக்க புறப்படுங்கள், அல்லது நீங்கள் என்றென்றைக்கும் சில கோழி கழுகுகளாகவே இருப்பீர்கள். இஸ்லாமியர்களை போலவே, பிரன்ஹாமிஸ்டுகளும் வில்லியம் பிரன்ஹாமின் மரணத்திற்குப் பிறகு பிறந்தார்கள். தகப்பன் இறந்து ஒரு வருடம் கழித்து பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஒரு முறைகேடான குழந்தை. [ஆசிரியர் குறிப்பு: சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
32 இப்போது பிரபலமான ஏழாவது முத்திரையைப் வாசிக்கலாம், பத்தி. 298, 299 மற்றும் 300: "அப்பொழுது ஒரு சத்தம் உண்டானது அது, "பெந்தகோஸ்தே குழந்தைகளுக்கு இயற்கைக்கு மேம்பட்ட பரம காரியங்களை கற்பிக்க உன்னால் இயலாது. அவர்களை தனியே விட்டுவிடு" என்றது. அப்பொழுது அவர் என்னைக் கொண்டு சென்று, ஒரு கூட்டம் நடக்கும் இடத்தில் உட்கார வைத்தார். அது ஒரு கூடாரத்தை போன்று அல்லது ஆலயத்தை போன்று காட்சியளித்தது. அங்கு நான் பார்த்த பொழுது, ஒரு மூலையில் பெட்டியை போன்ற ஒரு சிறு ஸ்தலம் இருந்தது. நீங்கள் புகைப்படத்தில் காணும் அந்த ஒளியானது எனக்கு மேல் காணப்பட்ட ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தது. அது என்னிடமிருந்து இவ்விதம் சுழன்று சென்று அந்த கூடாரத்தின் மேல் தங்கி, என்னை நோக்கி, 'உன்னை நான் அங்கு சந்திப்பேன். இதுதான் மூன்றாம் இழுப்பு. இதை யாரிடமும் கூற வேண்டாம்' என்றது. சபீனோ கான்யாவிலும் அவர், "இது தான் முன்றாம் இழுப்பு" என்றார். அதனுடன் முன்று மகத்தான காரியங்கள் சம்பந்தப்பட்டுள்ளன அவைகளில் ஒன்று எனக்கு இன்று அல்லது நேற்று வெளிப்பட்டது மற்றொன்று இன்றைக்கு வெளிப்பட்டது மூன்றாவது என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஏனெனில் அது ஒரு அறியாத மொழியில் இருந்தது ".
33 தேவன் தாமே அவருடைய 1963 ஆம் ஆண்டில் வில்லியம் பிரன்ஹாமிடம், அவருடைய ஊழியத்தின் முடிவில் அவருடைய விசுவாசிகளை குறித்து, "பெந்தேகோஸ்தே குழந்தைகளுக்கு இயற்கைக்கு மேம்பட்ட காரியங்களை நீ கற்பிக்க முடியாது" என்று சொன்னார்.
34 1963 ஆம் ஆண்டில், வில்லியம் பிரன்ஹாமின் ஊழியம் அதன் முடிவை எட்டும்போது, பிரன்ஹாமிஸ்டுகள் இன்னும் பெந்தேகோஸ்தே குழந்தைகளாக இருப்பதை தேவன் கண்டார்! மூன்றாம் இழுப்பு மற்றும் அறியாத மொழி ஆகியவற்றால் தான் கடவுள் அதைச் சொன்னார்! நீங்கள் பார்க்கிறீர்களா? விதையை மூடியிருந்த உண்மையான பதில் தான் பிரன்ஹாமிசம்! அவர்கள் இன்னும் பெந்தேகோஸ்தேக்கள், ஏனென்றால், வளரும் போது ஒரு காக்கை குஞ்சு ஒருபோதும் கழுகாக மாற முடியாது! [ஆசிரியர் குறிப்பு: சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
35 நான் முதலில் கடற்கரை மணலின் மீது நின்றேன் என்று சொன்னேன், மேலும் சில குழந்தைகள் எனக்கு முன்பு அந்த நீரில் குளிப்பதைக் கண்டேன். அவர்கள் என்னிடம் கவனம் செலுத்தவில்லை! அவர்கள் தான் வில்லியம் பிரன்ஹாம் கூர்நுனி கோபுரத்தின் உச்சத்திற்கு கொண்டு வந்த பெந்தேகோஸ்தேக்கள்! ஆனால் அவர் அவர்களை விட்டு சென்ற போது, அங்கேயே, கூர்நுனி கோபுரம் உச்சியில், வார்த்தையின் வித்து நடுராத்திரி சத்தத்திற்கு வந்தது, காட்டு சந்ததியினர் அதன் தாய்வழி பெந்தேகோஸ்தலிசத்திற்கு திரும்பினர்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
36 கூர்நுனி கோபுரத்தின் உச்சியானது கடலின் இரண்டு மணல்களாகப் பார்க்க வேண்டும்! நான் கூர்நுனி கோபுரத்தின் உச்சியில் நின்று கொண்டிருந்தேன், குழந்தைகள் குளிப்பதை நான் காண முடிந்தது, நான் மீண்டும் கூர்நுனி கோபுரத்தின் மேல் நின்று கொண்டிருந்தேன், பழைய இராணுவ டிரக்கில் குளித்துக்கொண்டிருக்கும் பெந்தேகோஸ்தே பிரன்ஹாமிஸ்டுகள் உட்பட அனைத்து பெண்களோடு தண்ணீரிலிருந்து வெளியே வருவதைக் கண்டேன்!
37 இப்போது, நான் நின்று கொண்டிருந்த கூர்நுனி கோபுரத்தின் உச்சிக்கு பிறகு, தலைக்கல் வருகிறது, மேலும் தலைக்கல் தான் ஏழாவது பரிமாணம்! மறுபுறத்தில், இந்த ஏழாவது பரிமாணத்தில்தான் அனைத்து பரலோகவாசிகளின் விண்மீனும் தண்ணீருக்கு மேலே நின்றது, கூர்நுனி கோபுரத்தின் உச்சிக்கு மேலே இறங்கிவந்த தலைகல் இதுதான், கூர்நுனி கோபுரத்தின் உச்சியில், தண்ணீர்களுக்கு மேல், கடற்கரை மணலின் மீது நான் அங்கு நின்று கொண்டிருந்தேன்.
38 வில்லியம் பிரன்ஹாமின் சரீரம் ஏழு முத்திரைகள் பெறும்போது ஏழு தேவதூதர்களின் விண்மீனுக்குள் செல்ல முடியாததைப் போல், இந்த அழிவுள்ள சரீரம் தலைக் கல்லுக்கு உள்ளே செல்லமுடியவில்லை. நியாயப்பிரமாண பலகைகளை மோசே பெறும்போது எந்த நேரத்திலும் ஏழாவது பரிமாணத்துக்கு உள்ளே போக முடியவில்லை.
39 பிறகு காக்குவ் பிலிப்புவாகிய நான் யார்? ஒரு காலத்திற்குப் பின்பு இன்னொரு காலமாக, எனக்கு முன் வந்த இந்த மகத்தான தூதர்கள் அனைவரும் கூர்நுனி கோபுரத்தை கட்டியது, நான் வந்து அதன் மீது நிற்க வேண்டும் என்பதற்காகவா? இவ்வளவு பெரிய கிருபையைப் பெற்றவர் இவர் யார்? மெய்யாகவே, இது தான் கூர்நுனி கோபுரத்த்து காலங்களின் பரலோக வாசல் அதினுடைய அடித்தளங்கள் தண்ணீர்களாக இருக்கின்றது. ஆனால் அது தாழ்மையுடன் அடிநிலை வாசலால் மனிதகுலம் என்னைச் சந்தித்து இரட்சிப்பை சந்திக்கும்.
40 பெருமையான பிரன்ஹாமிஸ்டுகளே, வெள்ளை இன மனி தர்களே, பூமியின் மகத்தான மனிதர்களே, கூடாரத்தின் கீழுள்ள ஊழியம் இங்கே இருக்கின்றது, கூடாரத்துக்குள் நுழைய நீங்கள் குனிந்து தான் செல்ல வேண்டும். தாழ்மையுடன் இருங்கள், கூடாரத்துக்குள் நுழைய நீங்கள் குனிந்து செல்ல வேண்டும். கூடாரத்தின் கீழுள்ள ஊழியம் இங்கே இருக்கின்றது, நீங்கள் இந்த ஆப்பிரிக்கனுக்கு முன் குனிந்து கொள்ள வேண்டும். இந்த ஆப்பிரிக்கருக்கு முன் குனிந்து கொள்ள வேண்டும். கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக!