1 தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! உலகெங்கிலும் உள்ள சகோதர சகோதரிகள் தங்கள் வாழ்த்துக்களை உங்களுக்கு அனுப்புகிறார்கள்! வீட்டின் கட்டிடம் முடிந்தவுடன் விரைவில் அவர்களை இங்கே பார்ப்போம் என்று நான் நம்புகிறேன்! அவர்கள் நம்மை போல் ஞானஸ்நானத்தை பெற்றுக்கொள்ள இங்கே வர வேண்டும்! மேலும் அவர்கள் ஞானஸ்நானம் பெற்ற பிறகு, தேவன் வேறொரு கட்டத்திற்கு செல்வார் என்று நான் நினைக்கிறேன்! ஆமென்!
2 நல்லது, நான் இங்கு பதிலளிக்க விரும்பும் இரண்டு கேள்விகள் உள்ளன… முதலாவது: "சகோதரர் பிலிப்பு, நாம் தேவதூதர்களை நியாயந்தீர்ப்போம் என்று எழுதப்பட்டுள்ளது, அது கச்சிதமாக எதை குறிக்கிறது?" நன்றி சகோதரரே, அதைத்தான் நாம் செய்வோம். நாம் அவர்களை பூமியில் கண்டனம் செய்வது போல அவர்களை பரலோகத்தில் கண்டனம் செய்வோம்! ஒவ்வொரு தீர்க்கதரிசியும் தனது தலைமுறையில் தேவனுக்கு எதிராக கலகம்பண்ணின கேருபீனையும், அதிகாரங்களும், தேவதூதர்களின் அனைத்து வர்க்கங்களுக்கும் நியாயந்தீர்ப்பார்கள்.
3 பரலோகத்தைப் போலவே பூமியிலும், ரெய்ன்ஹார்ட் பொன்கே, கிறிஸ் ஓயாகிலோம், டேவிட் ஓவூர், இம்மானுவேல் மக்காண்டிவா, யூபர்ட் ஏஞ்சல், டி. பி. ஜோசுவா மற்றும் டேவிட் ஓயெடெபோ ஆகியோரை நியாயந்தீர்ப்பது தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு தான்! பரலோகத்தைப் போலவே பூமியிலும், ஜோயல் ஓஸ்டீன், டி.டி. ஜேக்ஸ், டக் பேட்ச்லர், பில்லி கிரஹாம், எடிர் மாசிடோ, வால்டெமிரோ சாண்டியாகோ, சிலாஸ் மலாஃபாயா, பவுலா வைட், ஜாய்ஸ் மேயர், ஆல்பர்டோ மொட்டேசி, கிளாடியோ ஃப்ரீட்சன் மற்றும் டான்டே கெபல் ஆகியோரை நியாயந்தீர்ப்பது தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு தான்!
4 பரலோகத்தைப் போலவே பூமியிலும், பென்னி ஹின், மனாசே ஜோர்டான், ஜெஸ்ஸி ஜாக்சன், ஜான் ஹாகி, பாட் ராபர்ட்சன், ஜோக்விம் கோன்வால்ஸ், டொனால்ட் பார்னெல், அலெஜான்ட்ரோ புல்லன் மற்றும் கில்லர்மோ மால்டோனாடோ ஆகியோரை நியாயந்தீர்ப்பவர் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு தான். அவர்கள் பிசாசுகளாக இருக்கிறர்கள்! அவர்கள் விழுந்த போன துரதர்கள். யோவேல் 2:28 மற்றும் 1 கொரிந்தியர் 2:4 முதல் 5 ஆகியவற்றின் கீழ் சூனியக்காரர்கள் மற்றும் மந்திரவாதிகள். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
5 இரண்டாவது கேள்வி என்னவென்றால், "சகோதரர் பிலிப்பு, நான் செய்தியை விசுவாசிக்கிறேன், ஆனால் செய்தி என்ன சொல்கிறதோ அதற்கு முரணான ஒரு துறையில் நான் வேலை செய்கிறேன், நான் என்ன செய்ய வேண்டும்?" ... சகோதரரே, செய்திக்கு முரணான ஏதோ சில வேலையை நீங்கள் செய்யும் போது,நீங்கள் சில காலம் அந்த வேலையை வைத்துக் கொண்டு செய்திக்கு வரலாம் ஏனெனில் நீங்கள் அதினால் ஜீவிக்கிறீர்கள், ஆனால் நீங்கள் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்பு அதை விட்டுவிடுவதற்கான வழிகளை நீங்கள் தேட வேண்டும்! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
6 நல்லது, நாம் நம்முடைய வேதாகமங்களை யாத்திராகமம் 28 வசனம் 30-க்கு எடுத்துக்கொள்வோம். நான் ஊரீம் தும்மீம் பற்றி பேசப்போகிறேன். "ஊரீம் தும்மீம்" என்று அழைக்கப்பட வேண்டும் என நான் நினைக்கிறேன். இது அவ்வளவு தான் : ஊரீம் தும்மீம் அல்லது ஊரீம் மற்றும் தும்மீம்.
7 நல்லது, அங்கே என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை வாசிக்கலாம். ", ஊரீம் தும்மீம் என்பவைகளை வைப்பாயாக; ஆரோன் கர்த்தருடைய சந்நிதானத்தில் பிரவேசிக்கும்போது, அவைகள் அவன் இருதயத்தின்மேல் இருக்கவேண்டும்; ஆரோன் தன் இருதயத்தின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய நியாயவிதியைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் எப்பொழுதும் தரித்துக்கொள்ளவேண்டும். ஆமென்!
8 ஊரீம் தும்மீமான நியாயவிதி மார்ப்பதக்கத்தை மோசே செய்தான், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களின் பெயர்களுக்கு ஏற்ப மோசே, பன்னிரண்டு கற்களை சுத்த தங்கத்தில் இணைத்துள்ளார். யாக்கோபின் ஒவ்வொரு மகனுக்கும் ஒரு பிறப்புக் கல் இருந்தது. ஆனால் பூமியிலுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பிறப்புக் கல் இருக்கிறது என்று சொல்வது, நான் அதைச் சொல்லவில்லை! ஒரு கல்லை உங்களுடன் வைத்திருப்பது உங்களை செழிக்க வைக்கும் என்று சில பிரன்ஹாமிஸ்டுகள் விசுவாசிக்கிறார்கள், ஆனால் நான் காரியத்தை இந்த வழியில் பார்க்கவில்லை! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
9 நல்லது, பழைய ஏற்பாட்டின் ஊரீம் தும்மீம், அது தான் தேவன் பன்னிரண்டு கோத்திரபிதாக்களின் மத்தியில் மேலும் புதிய ஏற்பாட்டில் பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் மத்தியில் இயேசு கிறிஸ்து!
10 இப்போது இதைக் கவனியுங்கள்: [ஆசிரியர் குறிப்பு : சகோதரர் பிலிப்பு பலகையில் ஏதோ ஒன்றை வரைகிறார்] நான்கு செங்குத்து வரிசைகள், ஒவ்வொன்றும் மூன்று விலைமதிப்பற்ற கற்களால் சுத்த தங்கத்தால் மூடப்பட்டிருக்கும்: முதலாம் பத்தி: பத்மராகமம், புஷ்பராகம் மற்றும் மாணிக்கம்; ... இரண்டாம் பத்தி: மரகதம், இந்திரநீலம் மற்றும் வைரம் ... மூன்றாம் பத்தி: கெம்பு, வைடூரியம் மற்றும் சுகந்தி; ... நான்காம் பத்தி: படிகப்பச்சை, கோமேதகம் மற்றும் யஸ்பி! நியாயவிதி மார்ப்பதக்கத்தில் அது ஊரீம் தும்மீமை உருவாக்கியது.
11 நல்லது, மீண்டுமாக ஊரீம் தும்மீமுக்கு வருவோம், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களின் மீதும், 12 கற்களின் மீதும், அது மோசேயின் ஆவிதான் இருந்தது மேலும் இப்பக்கத்தில் பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் மீது இயேசு கிறிஸ்து இருந்தார். நீங்கள் பார்க்கிறீர்களா? ஊரீம் தும்மீமானது நியாத்தீர்ப்பிற்கான நியாயவிதி மார்ப்பதக்கமாக இருந்தது! மோசேயின் ஸ்தானத்திலிருந்து யெகோவாவுக்கு முன்பாக ஆரோன் அதை அணிந்து ஜனங்களின் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவான் என்று தேவன் கூறுகிறார், ஏனென்றால் தெய்வீக தீர்ப்பை பூமி அனைத்துக்கும் தீர்க்கதரிசி நிறைவேற்றுபவராக இருக்கின்றார்!
12 இப்போது தீர்க்கதரிசிகளின் புத்தகங்களை எடுத்துக்கொள்வோம்… அசீரியாவுக்கு எதிரான நீயாயத்தீர்ப்பு, இவனுக்கு ஐயோ, அதற்கு எதிராக வாதிடுதல், அதற்கு எதிரான புகார்… நீங்கள் பார்க்கிறீர்களா? அது ஒரு ஆசாரியனுக்கு ஒருபோதும் வழங்கப்படவில்லை! பழைய ஏற்பாட்டின் அனைத்து ஆசாரியர்களிலும், எபேசியர் 4:11-ன் ஊழியங்களிளும் மிகப் பெரியவனான ஆரோன், ஊரீமையும் தும்மீமையும் காணக்கூடிய பிரதிநிதியாக அணிந்திருந்தான்.
13 இவ்வாறு, இஸ்ரவேல் ஒரு பெரிய தீர்மானத்தை எடுக்க வேண்டியிருந்தபோது, ஜனங்கள் அனைவரும் ஊரீம் தும்மீமுக்கு முன்பாகச் செல்வார்கள், ஜனங்களின் சார்பாக யாராவது ஒருவர் ஊரீம் தும்மீமிடம் இந்த வார்த்தைகளில் பேசுவார்கள்: " எங்களுடைய தேவனாகிய யெகோவாவே… அத்தகைய அல்லது அத்தகைய மக்களுக்கு எதிராக இது உமது விருப்பமும் உமது மக்கள் போரிடுவதற்கான உம்முடைய விருப்பமும் தருணமுமாக இருக்கின்றதா?" மார்ப்பதக்கத்தின் பன்னிரண்டு கற்களும் ஒன்றாக மின்னினால், இஸ்ரவேல் போருக்குச் செல்ல வேண்டும் என்பது கடவுளின் பரிபூரண விருப்பம்! யாராவது ஒருவருக்கு வெளிப்பாடு இருந்து அவர் உங்கள் மாமா அல்லது உங்கள் அத்தை, அவரது வயது அல்லது அவரது சமூக நிலை எதுவாக இருந்தாலும், எவ்வளவு பெரிய வெளிப்பாட்டை கொண்டிருந்தாலும், அவர் ஊரீம் தும்மீம் முன் கொண்டுவரப்பட்டார்! ஒரு மந்திரவாதி அல்லது ஒரு வேதபாரகருக்கு முன் அல்ல, ஆனால் ஊரீம் தும்மீமுக்கு முன்பாக தான்!
14 அவை எல்லாம் மிகவும் நன்றாக தான் உள்ளது ஆனால் வேதாகமத்தில் ஆரோன் அல்லது ஒரு ஆசாரியன் ஊரீம் தும்மீமை வைத்து என்ன செய்தார்கள் என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.
15 நல்லது, நான் சந்தித்த அல்லது கேட்ட அனைத்து போதகர்களும் தீர்க்கதரிசிகளும் இன்றைக்கு ஒருமிதமாக ஊரீம் தும்மீம், அது பரிசுத்த வேதாகமம் தான் என்று இருக்கிறார்கள், குறிப்பாக பிரன்ஹாமிஸ்டுகள்! ஒருவர் வேறொரு காரியத்தை வித்யாசமாக சொல்லி நான் ஒரு போதும் கேள்விப்பட்டதில்லை ! நீங்கள் பார்க்கிறீர்களா? இது நன்றாக இருக்கிறது, இது இப்படியே இருக்க விரும்புகிறேன்! நான் அவர்களுடன் கருத்து வேறுபாடு கொள்ள விரும்பவில்லை, ஆனால் ஒரு வரலாற்று புத்தகம் எப்படி - அது இரட்சிப்பின் வரலாற்றின் புத்தகமாக இருந்தாலும் - ஊரீம் தும்மீமாக இருக்க அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் முற்றிலுமாக ஊரீம் தும்மீம் வகையாக இருக்க முடியும்? ஒரு வரலாற்று புத்தகத்தைக் குறித்து என்ன - அது நம் முன்னோர்களின் வரலாற்றின் புத்தகமாக இருந்தாலும் - அது ஊரீம் தும்மீம் ஆக எப்படி இருக்கும்? இல்லை! அது சாத்தியமில்லை!
16 அங்கே யூத மதத்தில் கீழே அது சாத்தியமில்லை அதனால் தான் தீர்க்கதரிசிகளின் சுருள்களுக்கு பதிலாக மார்ப்பதக்கம் உள்ளது, அது ஒருபோதும் சாத்தியமாக இருக்கவில்லை மற்றும் அது ஒருபோதும் சாத்தியமில்லை ! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்]. அந்த தவறான ஒன்று மற்றும் இவ்வளவு பெரிய தவறுடன் நீங்கள் தேவனுடைய பரதேசிக்குள் நுழையமுடியாது. நீங்கள் பார்க்கிறீர்களா? வேதாகமமானது ஊரீம் தும்மீம்மாக இருக்க முடியாது மற்றும் அதின் தீர்க்கதரிசியுடைய பாகம் கூட ஊரீம் தும்மீம்மாக இருக்க முடியாது.
17 ஒரு மனிதன் முழு வேதாகமத்தையோ அல்லது வில்லியம் பிரன்ஹாமின் செய்தியையோ முழுமையாக மனப்பாடம் செய்தாலும், அது ஏனெனில் அவனுக்கு ஒரு நல்ல நினைவாற்றல் இருப்பது என்பது தான். இத்தகைய ஒரு மனிதர் எனக்கு ஒன்றுமேல்லை! இது ஒரு நல்ல மாணவன் தன்னுடைய வரலாறு மற்றும் புவியியல் பாடத்தை மனப்பாடம் செய்வதை போன்றதாகும்! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்]. கிறிஸ்தவர்கள் மற்றும் பாலஸ்தீனியர்களின் வரலாற்றுப் புத்தகமாக மட்டுமே வேதாகமம் உள்ளது! ஆவிக்குரியரீதியாக அது செய்வதெற்கென்று எதுவும் இல்லை !
18 யாராவது ஒருவர் எல்லா நேரமும் இப்படியாக " வேதாகமத்திற்கு திரும்பி வாருங்கள்! வேதாகமத்திற்கு திரும்பி வாருங்கள்! வேதாகமம் கூறுகிறது ...! வேதாகமம் கூறுகிறது ...!" என்று கூறுவதை கண்டால் அமைதியாக இருந்து அந்த மனிதனை நன்றாக கவனியுங்கள் அது ஒரு பிசாசு என்பதை நீங்கள் காண்பீர்கள்! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்]. இது பார்ப்பதற்கு நல்லது தான் ஆனால் அது பிசாசு. வார்த்தைக்குத் திரும்புவது என்பது "வேதாகமத்திற்கு திரும்பி வருவதிலிருந்து" வேறுபட்டது! அப்போஸ்தலர்கள் 16 ஆம் அதிகாரத்தில் அந்த ஸ்திரீயை பயன்படுத்திய அதே பிசாசு தான் இது.
19 மேலும் வார்த்தையின் பரிட்சை என்பது ஒருவர் வேதாகமத்தோடு பேசுகிறாரா என்பதை நேருக்கு நேர் எதிர்கொள்வது அல்ல! ஏனெனில் வேதாகமமானது ஒரு வரலாற்று புத்தகம், அது கடந்துவிட்டது மேலும் அது உங்கள் மனம் புண்படும்படி செய்தால் உங்களுக்கு அதிலிருந்து விடுதலை தேவை! இந்த வரலாற்று புத்தகத்தை தேவன் பயனுள்ளதாக கண்டார், இது தீர்க்கதரிசிகளின் நினைவாகவும் அல்லது தேவாலயங்களின் கலாச்சாரத்தின் காரணமாக அல்ல ஆனால் அதன் தீர்க்கதரிசன பாகத்தின் காரணமாகவே!
20 வேதாகமம் ஒருபோதும் ஊரீம் தும்மீம் ஆக இருக்க வில்லை மற்றும் இருக்கவும் முடியாது! "தேவனே, நான் வேதாகமத்தை நேசிக்கிறேன்" என்று நீங்கள் சொன்னால், நீங்கள் சென்று ஒரு கலைக்களஞ்சியம் போன்று பெரியதாக ஒன்றை வாங்கி மற்றும் அதை உங்கள் தலையணையாக மாற்றிக் கொள்ளுங்கள் அல்லது உங்கள் இதயத்திற்கு நேராக அழுத்திக் கொண்டால் உங்களுக்கு பொருத்தமான இடம் கத்தோலிக்க தேவாலயம்! நீங்கள் பார்க்கிறீர்களா? வேதாகமத்தில் முதல் வசனத்தில் இருந்து கடைசி வசனம் வரை, மேலுரையிலிருந்து கடைசி உரை வரைக்கும் விசுவாசியுங்கள், ஆனால் ஒரு தீர்க்கதரிசி இல்லாமல், அது ஒன்றுமில்லை! வேதாகமம் இல்லாமல், உங்கள் தலைமுறையின் தீர்க்கதரிசியை நீங்கள் ஏற்றுக்கொண்டால் நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்]. இதனால்தான் அது ஊரீம் தும்மீமாக இருக்க முடியாது! நீங்கள் பார்க்கிறீர்களா?
21 மார்ட்டின் லூதரின் பிரசங்கங்கள் வேதாகமத்திற்கு முரணாக இருந்தன. அவரது திரித்துவ ஞானஸ்நானம் வேதாகமத்திற்கு முரணானது மற்றும் யூதர்களுக்கு எதிரான அவரது நிலைப்பாடு தவறானது! அடோல்ஃப் ஹிட்லர் உள்ளிட்ட ஜெர்மானியர்கள் யூதர்களை அழிப்பதில் ஈடுபடும்படியாக மார்ட்டின் லூதர் செய்தார்! பெரியாவின் கிறிஸ்தவர்கள் மார்ட்டின் லூதரை ஒருபோதும் பின்பற்றியிருக்க மாட்டார்கள்! பெரியாவின் கிறிஸ்தவர்கள், தாமஸுடனான அப்போஸ்தல நாட்களுக்கு இது நன்றாக இருந்தது! இருப்பினும், மார்ட்டின் லூதர் கடவுளின் தூதராக இருந்தார், வெளிப்படுத்துதல் 1: 16-ன் ஏழு நட்சத்திரங்கள் பூமியில் எழுப்பின தூதர்களில் அவரும் ஒருவர். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
22 கர்த்தராகிய இயேசு யோவான் 8-ல் பெண்ணைக் கல்லெறிய வேண்டாம் என்று சொன்னபோது, பரிசேயரும் சதுசேயர்களும் தங்கள் கைகளில் இருந்த சுருள்களால் நேர்மாறாகச் சொன்னார்கள்! ஊரீம் தும்மீம் இவ்வாறு பழைய ஏற்பாட்டின் சுருள்களாக இருந்தால், அவற்றில் எவற்றுக்காக அந்த நாளில் அது மின்னும்? பரிசேயர்களுக்காகவோ அல்லது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்காகவோ? நிச்சயமாக பரிசேயர்களுக்குதான்! நான் மேலும் சென்று சபைகளுக்கு இதைக் கூறுகிறேன், அவர்களுக்காக அனுப்பின ஒவ்வொரு தீர்க்கதரிசியையும் யூதர்கள் கொன்றபோது ஊரீம் தும்மீம் மற்றும் பழைய ஏற்பாட்டின் சுருள்கள் அங்கே இருந்தது! நீங்கள் பார்க்கிறீர்களா?
23 ஊரீம் தும்மீம் வேதாகமமாக இருந்தால், அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு மின்னுவதில்லை, ஏனென்றால் பிரதான ஆசாரியரான மெல்கிசேதேக்கு லேவி கோத்திரத்திலிருந்து வர வேண்டியதாக இருக்கிறது! ஊரீம் தும்மீம் வேதாகமமாக இருந்தால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மீட்டளிப்பிற்கென்று நான் ஞானஸ்நானம் கொடுக்கும்போது அது மின்னுவதில்லை! ஆனால் பாவமன்னிப்புகென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எந்த ஞானஸ்நானத்திற்கும், எந்த சபையால் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டிருந்தாலும் அதற்கு முன்பாக அது மின்னும்! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
24 ஒரு நாள், யாரோ ஒருவர் என்னிடம், "ஆனால் தீர்க்கதரிசியே, நீங்கள் பாவமன்னிப்புகென்று தான் நீங்கள் ஞானஸ்நானம் கொடுக்கவேண்டும்! அது எழுதப்பட்டிருக்கிறது!" என்றார். நான் அவரிடம், "ஐயா, என்னை கடந்த காலத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டாம்! என்றேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அப்போஸ்தலர்களுடன் கல்வாரி மரத்தில் பாவ மன்னிப்பை நான் பெற்றுக்கொண்டேன்!" அதற்கு அவர், "நீங்கள் இவ்வாறு பேதுருவின் காலத்தில் வாழ்ந்து, நீங்கள் மரித்து, நீங்கள் மீண்டும் பிறந்தீர்களா?" என்றார். நான் சொன்னேன், "ஐயா! நான் யோர்தானில் யோவான் ஸ்நானகனின் கைகளிலிருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றேன், மேலும் நான் ஒருபோதும் மரிக்கவில்லை! என்றேன்.
25 அப்போஸ்தலர் 2:38 எனக்கானது அல்ல, ஆனால் பேதுருவின் தலைமுறையினருக்கானது! ஞானஸ்நானத்திற்கு என்று ஒரே ஒரு சூத்திரம் மட்டும் இருக்க வேண்டுமென்றால் , இது மனந்திரும்புதலுக்காக இருக்க வேண்டும், ஏனென்றால் எந்தவொரு நபரும் ஒரு கெட்ட வாழ்க்கைக்கான மனந்திரும்புதலின் அடிப்படையில் கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்காக ஞானஸ்நானத்தைப் பெறுகிறார் என்ற அடிப்படையில் இது இருக்கிறது. மேலும் இது மனந்திரும்புதலில் இருந்து பாவங்களை நீக்குவதற்கு முன்னேறியிருந்தால், நிச்சயமாக ஒரு நாள் அது வேறொன்றாக, வேறு ஒன்றாக இருக்கும். அது தன்னுடைய தலைமுறைக்கென குறிப்பிடுகிற உயிருள்ள தீர்க்கதரிசி செய்தியாளனுடையதாக இருக்கின்றது ". [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
26 அவர், "ஆனால் அது மீட்டளிப்பிற்கென்று உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்டார். நான் சொன்னேன், "ஐயா, இது மத்தேயு 16:19 ன் படி, அப்போஸ்தலர் 13:48 மற்றும் தானியேல் 12:10 ஆகியவற்றின் நிறைவேற்றத்தில் அதை நம்புவது உங்களைப் பொறுத்ததாக இருக்கிறது!" அதற்கு அவர், “அங்கே, நான் ஜெபிப்பேன்”! நான் அவரிடம், "பேதுருவைக் கேட்டபின் அவர்கள் ஜெபிக்கச் சென்றதாக அப்போஸ்தலர் 2:38 கூறுகிறது ஆகவே போய் ஜெபியுங்கள்"! என்றார். நீங்கள் பார்க்கிறீர்கள்! பரலோக ராஜ்யத்தின் திறவுகோலை வைத்திருந்த பேதுரு தான் இதைச் சொன்னார், நீங்கள் யாரிடம் சென்ற ஜெபிக்கப் போகிறீர்கள்? நீங்கள் பார்க்கிறீர்களா? இன்று, ஏப்ரல் 24, 1993 இன் தரிசனத்தின் அடிப்படையில் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு இதைச் சொன்னார், நீங்கள் எந்த கடவுளிடம் சென்று ஜெபிக்கப் போகிறீர்கள்? [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
27 இந்த மனிதனின் காரணங்கள் தீர்க்கதரிசியைத் தவிர டார்பி வேதாகமம் உட்பட அனைத்து வேதாகம பதிப்புகளையும் மின்ன செய்யும்! ஊரீம் தும்மீம் வேதாகமமாக இருந்தால், அது ஒரே மாதிரியான பல சீற்றங்களுக்கு முன்பாகவும் மின்னும்! ஒவ்வொரு தேவாலயக் கோட்பாட்டிற்கும் முன்பாகவும் அது மின்னும்! இது ஒவ்வொரு கத்தோலிக்க தேவாலயத்திற்கும் ஒவ்வொரு புராட்டஸ்டன்ட், சுவிசேஷ மற்றும் பிரன்ஹாமிஸ்ட் கிளைக்கும் முன்பாக மின்னும்! நீங்கள் பார்க்கிறீர்களா? ஊரீம் தும்மீம் மோசேயின் மரணம் வரை சரியாக வேலை செய்தது, ஏனெனில் மார்ப்பதக்கத்தின் பன்னிரண்டு கற்களை மின்னச் செய்த ஆவி அது மோசேயின் ஆவி! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
28 லேவியராகமம் 8-ல், மோசே தன்மீது இருந்த தீர்க்கதரிசியின் ஆவியை எடுத்து, யாத்திராகமம் 7-ல் தேவன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக ஆரோனின் மீது வைத்தார், அதன்படி ஆரோன் மோசேயின் தீர்க்கதரிசியாக இருப்பார்! தீர்க்கதரிசியின் ஆவி தான் ஊரீம் தும்மீம்! உயிருள்ள தீர்க்கதரிசி மற்றும் ஊரீம் தும்மீம், அது மரமும் அதன் பழமும்! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
29 ஆயினும், ஒரு உயிருள்ள தீர்க்கதரிசியைத் தேடுவதற்குப் பதிலாக, யூதர்கள் ஊரீம் தும்மீம் பற்றி கவலை கொண்டார்கள்! தீர்க்கதரிசி தான் ஊரீம் தும்மீமின் மூல உரிமையாளர் ! உபாகமம் 33: 8 ல், மோசே, கோத்திரங்களை ஆசீர்வதித்தபோது, லேவியிடம், "லேவியரைக்குறித்து: நீ மாசாவிலே பரீட்சைபார்த்து, மேரிபாவின் தண்ணீரிடத்தில் வாக்குவாதம்பண்ணின உன் பரிசுத்தரிடத்தில் உன்னுடைய தும்மீம் ஊரீம் என்பவைகள் இருப்பதாக.;" ஆமென்!
30 யூதர்கள் இந்த வார்த்தைகளைப் புரிந்துகொண்டிருந்தால், எஸ்ரா மற்றும் நெகேமியாவின் காலத்தில் ஊரீம் தும்மீம்மை ஆசாரியத்துவத்தில் திரும்ப கொண்டுவர அவர்கள் முயற்சித்திருக்க மாட்டார்கள்! நீங்கள் பார்க்கிறீர்களா? உயிருள்ள தீர்க்கதரிசியைத் தேடுவதற்குப் பதிலாக, அவர்கள் ஊரீம் தும்மீம்மை பற்றி கவலை கொண்டார்கள்! அவர்களுக்கு உயிருள்ள தீர்க்கதரிசி தேவை இல்லை! நீங்கள் பார்க்கிறீர்களா? ஏனெனில் சபைகள் நீயாயத்தீர்ப்பை விரும்பாததால் அவர்கள் ஊரீம் தும்மீம்மிற்க்கு பதிலாக வேதாகமத்தை மாற்றினார்கள்! அவர்கள் வேதாகமத்தை முற்றிலுமானதாக கொண்டிருந்தார்கள்; பின்புறக் கண்ணாடியால் ஒரு வாகனத்தை ஓட்டுவதைப் போல் உலகம் முழுவதையும் வேதாகமத்தை கொண்டு வழிநடத்துகிறார்கள்! நீங்கள் பார்க்கிறீர்களா?
31 வேதாகமமானது சபையின் பின்புற கண்ணாடியாகவும் மற்றும் உயிருள்ள தீர்க்கதரிசி முகப்பு கண்ணாடியாக இருக்கின்றார். உயிருள்ள தீர்க்கதரிசி தான் முழு குழுவினரையும் முன்னேற அனுமதிக்கிறார், இன்றைக்கு, நீங்கள் வேதத்தின் படி நடப்பதினால் கிறிஸ்தவர்கள் அல்ல ஆனால் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவின் படி நடப்பதால் தான். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்]. யூத மதத்தில், தலைமுறை தலைமுறையாக யூதர்கள் மோசேயின் சுருள்களின் மூலம் யெகோவாவைப் பின்பற்றவில்லை, ஆனால் 2 நாளாகமம் 20:20-ல் உள்ளபடி யோசபாத் ராஜாவின் பரிந்துரையின் படி அவர்கள் உயிருள்ள தீர்க்கதரிசிக்கு செவிகொடுத்தார்கள்.
32 எண்ணாகமம் 11:25-ல் தேவன் மோசேயின் ஆவியை எடுத்து இஸ்ரவேலின் எழுபது மூப்பர்கள் மீது வைத்தார், இதனால் இஸ்ரவேல் தீர்க்கதரிசிகளின் சபையாக மாறியது, ஆனால் அதற்குப் பிறகு, அவர்கள் மோசேக்கு எதிராக எழும்பினார்கள். மேலும் இந்த பக்கத்தில், புதிய உடன்படிக்கையில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து யூதாஸ்காரியோத்து உட்பட எழுபது சீஷர்கள் மீது தம்முடைய ஆவியை ஊதினார். இது தான் கச்சிதமாக எண்ணாகமம் 11: 25 ஆக உள்ளது! அதன்பிறகுதான், ஆரோன் யாத்திராகமம் 28-ல் ஊரீம் தும்மீம் பெற்ற பிறகு, அவர்கள் ஒன்றாக, யாத்திராகமம்32-ல் தங்கக் கன்றை உருவாக்கினார்கள்! நீங்கள் பார்க்கிறீர்களா? அந்த உண்மையான சுருள்களோடு, யூதர்கள் தீர்க்கதரிசிகளைக் கொன்று கர்த்தராகிய இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள்!
33 இன்று, வேதாகமத்தை கொண்டு தான் முழு உலகமும் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவை நிராகரிக்கின்றது! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
34 இவை யாவும் ஊரீம் தும்மீம்மை சுமந்து செல்வதற்காக ஒரு பூசாரி உருவாக்கப்படவில்லை என்பதை முடிவாக சொல்வதற்காக உள்ளது! நீங்கள் பார்க்கிறீர்களா? இன்று எபேசியர் 4:11 ஊழியர்களாக இருக்கும் ஆரோனுக்கும் அவனுடைய புத்திரர்களுக்கும் ஊரீம் தும்மீம் ஒரு பட்டயம் அல்லது மிகவும் கனமான பாதரட்சை போன்றது. தீர்க்கதரிசி செய்தியாளனை தவிர எந்த மனிதனும், எந்த மிருகமும், எந்த மரமும் ஊரீம் தும்மீம் அணிய முடியாது! சினாய் மலை மேல் ஊரீம் தும்மீம் வைக்க தேவன் முயன்றபோது, அது மிக கடினமாக நடுங்கியது என்று தேவன் கூறுகிறார்! அது நிற்க முடியவில்லை! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
35 நல்லது, இப்போது முடிப்பதற்காக காக்குவ்.64 இன் முதல் தரிசனத்தை எடுத்துக் கொள்வோம். அதில் ஒரு பகுதியை நான் வாசிக்க போகிறேன். நல்லது, அவள் கூறுகிறாள், "நான் என்னுடைய வீட்டிலே அமர்ந்திருந்தேன், எனக்கு முன்பாக ஒரு மேஜை இருந்தது மற்றும் முழுவதும் வெண்மையாக உடுத்துவிக்கப்பட்ட ஒரு மனிதன் கடற்கரை மணலின் மீது நிற்கிறதை கண்டேன். அவன் ஒரு கருப்பின மனிதன். அவன் எதோ ஒன்றிற்காக காத்திருப்பதை போன்று தண்ணீர்களின் மேற்பரப்பில் நோக்கிக் கொண்டிருந்தான் மற்றும் நான் அவனை பின்புறத்திலிருந்து கண்டேன். அவன் கவனித்துக் கொண்டிருக்கையில் ஒரு மீனைப் போன்ற ஒரு திமிங்கலம் தண்ணீர்களின் மேற்பரப்பில் எழும்பினது. "
36 சகோதரி தொடர்ந்து கூறுகிறாள், "ஏழாவது மீன் மறைந்த போது, வெண்மையான வஸ்திரம் தரித்தவனுக்கு முன்பாக தண்ணீர்களின் மேல் ஒரு மின்னலின் மின்வெட்டொளி அங்கே இருந்தது. அந்த மின்வெட்டொளியானது ஓலிகளை தீப்பொறியுடன் உள்ள சத்தங்களை போன்று உண்டாகினது. அது ஏதோ சில மின்னலோ அல்லது சில இடியோ அல்ல ஆனால் அந்த மின்வெட்டொளியானது தீப்பொறிகளுடன் உள்ள வெடி சத்தம் போன்று சக்தி வாய்ந்த இரைச்சல்களை உருவாக்கினது. அந்த ஒளியும் மின்வெட்டொளியின் சத்தங்களும் மனிதனுக்குள்ளாக சென்றது மற்றும் அவன் சிறிது அசைந்தான். மேலும் ஒளியும் மின்வெட்டொளியின் சத்தங்களும் அனைத்து சிருஷ்டியையும் தாக்கினது; மற்றும் காற்றானது தண்ணீர்களின் மேலும் மரங்களின் மேலும் அடித்தது. அலைகள் பாறைகளை மோதியது. மேலும் இதற்காக தான் அந்த வெண்மையான வஸ்திரம் தரித்திருந்த மனிதன் காத்திருந்ததை போல அது இருந்தது பிறகு தரிசனம் முடிந்தது. " ஆமென்! இது என்ன? அது தான் ஊரீம் தும்மீம்! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
37 அதன்பிறகும் கூட, அவர் எந்த ஒரு தேவாலயத்திலும் கால் வைப்பதற்கு முன் "நியாயத் தீர்ப்பை திட்டவட்டமாக அறிவி" என்று அவருக்குச் சொல்லப்பட்டது!. ஆமென்! இது என்ன? கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்ட் தலைவர்களுக்கு நீயாயத்தீர்ப்பு வழங்க உரிமையில்லை ஆனால் பூமியின் மீதெங்கும் அங்கே ஒரு மனிதனுக்கு நியாயம் தீர்க்க உரிமை உண்டு, தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு. [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்]. ஒவ்வொரு தீர்க்கதரிசியும் அவருடைய தலைமுறையில் தேவனுடைய நீதிபதியாக இருக்கின்றார். ஆமென்!
38 லேவியராகமம் 8 கூறுகிறதாவது: மோசே ஆரோனை அருகில் அழைத்து, ஊரீம் தும்மீமை அவன் மீது வைத்தான் இதனால் தரிசனத்தில் இருப்பதைப் போலவே தன்னுடைய சார்பாக மக்கள் மீது நீயாயத்தீர்ப்பை அறிவிக்க முடியும் மேலும் ஆரோன் அதை அணிய முயன்றான், ஆனால் அது வேலை செய்யவில்லை! இது ஆரோனுடன் வேலை செய்யவில்லை மற்றும் அது பூமியில் இனி ஒருபோதும் வேலை செய்யாது! ஒரு பொருளானது தீர்க்கதரிசி செய்தியாளனுக்கு பதிலாக மாற முடியாது. ஒரு வேதாகமம் ஒருபோதும் பூமியின் மேல் ஊரீம் தும்மீமாக இருக்க முடியாது. [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்]. ஆரோனால் அணிய முடியாததை யோசுவா மோசேக்கு முன்பாக அணிந்திருந்தான். எலிசா அதை எலியாவுக்கு முன்பாக அணிந்திருந்தார்! மேலும் காக்குவ் பிலிப்பு வில்லியம் பிரன்ஹாமிற்கு முன்பு அதை அணிந்திருந்தார்! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
39 ஏப்ரல் 24, 1993 தரிசனத்தில், தேசங்களின் நீயாயத்தீர்ப்புக்காக மார்ப்பதக்கத்தைப் பெற தீர்க்கதரிசி கடலின் மணலின் மேல் நின்றார்! இது என்ன? தானியேல் 7:13 நிறைவேறும் பொருட்டு அவர் அவர்களை தண்ணீருக்கு முன்பாகக் கொண்டுவந்தார். தேவதூதனும் செம்மறிஆட்டுக்குட்டியும் அவருக்கு ஊரீம் தும்மீம்மை கொடுத்தார்கள். ஆமென்! தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!