



Kacou 9 (Kc.9) : ஸ்திரீயின்ஊழியம்
(2003 மே 04 ஞாயிறு காலை லோக்காட்ஜ்ரோ, அபிட்ஜான்-ஐவரிகாஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
1 ஸ்திரீயின் ஊழியம் என்ற தலைப்பில் நான் பிரசங்கிக்க விரும்புகிறேன். கடைசியாக, ஆறாவது நாளில் தேவன் மனிதனைப் படைத்தார், ஸ்திரீ அங்கு இருக்கவில்லை என்பதை நாம் கவனிக்கிறோம். பின்பு அவர் ஏழாம் நாளில் ஓய்வெடுத்தார், அதில் நாம் ஆண்டாண்டுகளை காண வேண்டும். பின்பு மனிதன் தனிமையில் இருந்ததைப் பார்த்து, தேவன் அவனுக்கு ஒரு துணையை உண்டாக்க முடிவு செய்தார். இல்லையெனில், மூல திட்டத்தில், தேவன் அதை அவசியத் தேவையாக காணவில்லை. அதனால்தான் ஆதியாகமம் 2:18-ன் ஒரு நல்ல வாசிப்பு: "யெகோவா எலோஹிம், மனுஷன் தனிமையாயிருப்பது [மிகவும்] நல்லதல்ல; அவனைப் போன்ற, ஒரு துணையை நான் அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.”
2 ஆகையால், ஸ்திரீ தேவனின் மூல திட்டத்தில் இல்லை, ஆனால் அவள் மனிதனின் உபபொருளாக (by-product) இருக்கிறாள். பெண் நாய்கள், பெட்டைக் கோழிகள் மற்றும் பிற பெண்பால் வகைகள் தேவனின் அசல் உயிரினங்கள், ஆனால் ஸ்திரீயுடன் அது அவ்விதம் இருக்கவில்லை. எனவே, ஒவ்வொரு விலங்கு இனங்களிலும், இனசேர்க்கை மனிதரைப் போலல்லாமல் ஒரு குறிப்பிட்ட காலவேளையில் நிகழ்கிறது. ஒரு கர்ப்பிணி பெண்நாய் மீது ஒரு நாய் தொத்திக்கொண்டு இருப்பதை நீங்கள் காணமாட்டீர்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? மனிதர்களின் காரியம் இது இந்த விதத்தில் அல்ல. வயதான ஒரு ஸ்திரீ ஏற்கனவே மாதவிடாய் நின்றுபோன பின்பும் பாலியல் உறவுகளை வைத்திருக்கிறாள். நீங்கள் பார்க்கிறீர்களா? ஆகையால், ஸ்திரீ தான் படைப்புகளில் மிகக் கீழானவளாக இருகிறாள் என்று மரியாதையுடன் என்னால் கூறமுடியும்.
3 தேவனே தமது இராஜாதிபத்தியத்தினால் அவளை மனிதனுடைய அதிகாரத்துக்கு கீழாக வைத்து இருக்கிறார். இதனால், அவள் தன் தந்தையின் அதிகாரத்தில் இல்லாதபோது, அவள் புருஷனின் அதிகாரத்தின் கீழ் வைக்கப்படுகிறாள். அவளது தந்தைக்கு அல்லது புருஷனுக்கு அவளது பொருத்தனைகளை ரத்து செய்ய உரிமை உண்டு. எண்ணாகமம் 30-ஐ பார்க்கவும்... நீங்கள் பார்க்கிறீர்களா! கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த காரியங்களை அழித்துவிடுவதற்காக வரவில்லை.
4 ஆகையால் ஆதியாகமம் 2-ஆம் அதிகாரத்தில், ஏதேன் தோட்டத்திலுள்ள ஆதாமுக்கு தேவன் கட்டளைகளை கொடுக்கும்போது அந்த ஸ்திரீ அங்கு இல்லை என்பதை நாம் புரிந்துக்கொள்கிறோம். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது! ஆதாம் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இன்னும் பிறவற்றிற்கும் பெயரிடும்போது அவள் அங்கு இல்லை! நீங்கள் பார்க்கிறீர்களா? ஆதலால் அந்த ஸ்திரீ தாழ்மையுடன் தன் ஸ்தானத்தை அடையாளம் கண்டுகொள்ளும்படிக்கு, தேவன் அவ்விதமாக எல்லாவற்றையும் செய்தார்.
5 மேலும், அவளது ஊழியத்தை பற்றி பேசுகையில், யூதாஸ் இஸ்காரியோத்தைப் போல பணியை நிறைவேற்ற ஒரு மனிதன் பூமிக்கு வரவில்லையென்றால், அவனால் ஒரு ஸ்திரியை பிரசங்க பீடத்தில் அனுமதிக்க முடியாது; நீங்கள் ஒரு வெள்ளாடாக இல்லை என்றால், வஞ்சிக்கப்படுவதற்காக பிறக்கவில்லை என்றால், ஆண்கள் அங்கு இருக்கும்போது ஒரு ஸ்திரீ பிரசங்கிப்பதையோ அல்லது பாடல்களை நடத்துவதையோ கேட்கும்படிக்கு உட்கார உங்களால் முடியாது. அவள் அதை நன்றாக செய்தாலும் கூட, அதற்கு பின்னால் இருக்கிறது பிசாசு தான். ஒரு பெண் விதையை கொண்டிருப்பவள் அல்ல என்று இயற்கையே நமக்குப் போதிக்கிறது. எனவே அவள் பிரசங்கிக்கவும் நித்திய ஜீவனை கொண்டுவரவும் முடியாது. ஆயிரம் ஸ்திரீகளின் நடுவே உள்ள ஒரு பையன் நிமித்தம் "அவள்கள்" என்னும் பெண்பால் வார்த்தை, ஆண்களின் அதிகாரத்தின் காரணமாக "அவர்கள்" என்று ஆண்பாலாக மாற்றப்படுகிறது.
6 தேவனின் பிள்ளை ஒருவன் தேவன் ஏற்படுத்தின ஒன்றுக்கு எதிராக செல்ல மாட்டான்; பரிசுத்த ஆவி இல்லாவிட்டாலும் கூட, அவன் தடுமாற்றமடையான். வேதாகமம் தன்னோடு தானே முரண்பட முடியாது. இயேசு ஒரு ஸ்திரீயை அப்போஸ்தல ஊழியத்தில் அல்லது சீஷியாக நிறுவியிருந்தால், அவர் மேசியாவாக இருக்க முடியாது. பிரசங்கிக்கும்படி ஒரு ஸ்திரீயை பவுல் அனுமதித்திருந்தால், பவுல் தவறானவனாக ஆகிவிடுவான். அவனது அற்புதங்கள் ஒரு பொருட்டல்ல, அவைகள் வஞ்சக அற்புதங்களாக இருக்கும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
7 ஸ்திரீயின் ஊழியமும் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணமும் முடிவுகாலத்தின் மிகப்பெரிய இரண்டு அருவருப்புகளாகும். ஸ்திரீகள் பிரசங்கிக்கும் ஒரு சபையில் நுழைந்த ஒரு நபர், ஓரினச்சேர்க்கையாளர்களின் அணிவகுப்பில் பங்கேற்கிற ஒரு நபரைப் போல இருக்கிறான். ஓரினச்சேர்க்கையாளர்கள் ஓர்நாளில் எருசலேமில் அணிவகுத்து நடப்பார்கள் என்று, 2000 ஆண்டுகளுக்கு முன்பு, மனிதகுலத்திற்கு தெரியாது. ஓர்நாள் ஒரு ஸ்திரீ, அவளுடைய மாதவிடாய் வேளையிலும், சில சபைகளில் மக்களுக்கு முன்பாகப் பிரசங்கிக்கப் போவாள் என்று, 2000 வருடங்களுக்கு முன் மனிதகுலம் அறிந்திருக்கவில்லை. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
8 பழைய ஏற்பாடு முழுவதிலும், எந்த பெண் ஆசாரிய ஊழியமும் இல்லை. உலகத்திலும் கூட, எந்த பெண் ஊழியக்காரியும் இல்லை. பெண்னை அங்கு வைத்தது பெண்சுதந்திரமாக இருக்கிறது! "ஆசாரியன்" என்பதற்கான பெண்பால் வார்த்தை அங்கு எதுவுமில்லை. பெண் விடுதலையினால் தான் புறஜாதிகளிடமிருந்து பெண்கள் காட்சியில் வந்தார்கள் என்பது நமக்குத் தெரியும்.
9 பூமியின் முதல் சுதந்திரமான பெண் நாமாள், காயீனின் மகள். இஸ்ரவேலில் விடுதலையடைந்த முதல் பெண் யேசபேல், ஒரு அன்னிய ஸ்திரீ. ஆனால் ஆதி முதல், அது அவ்வாறாக இருக்கவில்லை. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் வாக்களிக்கும் உரிமைக்காக போராடும் சில பெண்களைப் பார்த்தோம். ஆனால் பழைய ஏற்பாட்டின் துவக்கத்தில், உதாரணமாக இஸ்ரவேலில், ஸ்திரீகளை கணக்கிடவில்லை. ஆபிரிக்காவில், ஒரு பெண் ஒரு கிராமத் தலைவராக இருக்க முடியாது. கிராமங்களில் கூட, ஆண்கள் ஒன்றுகூடும் வேளையில், பெண்களுக்கு பேச உரிமை இல்லை.
10 தேவன் யூதர்களுக்கு எழுதிக்கொடுத்தது எதுவோ, அதையே அவர் அஞ்ஞானிகளுக்கு அவர்களுடைய இருதயத்தில் கொடுத்தார்! திருமணத்தில் சீதனம் கொடுக்கவும், முதற்பலன் அல்லது முதற் பிள்ளைக்கு தகப்பனின் பெயர் வைக்கவும் புறஜாதிகளுக்குப் போதித்து நீங்களா? தீவிர பாவங்கள் அல்லது கூட்டணிகளின் விஷயத்தில், இரத்த பலிகளை செலுத்த போதித்தீர்களா? அதைச் செய்தது தேவன்! அந்தப்பிரகாரமாக, தேவன் அவர்களுக்கு ஸ்திரீயின் ஸ்தானத்தையும் வெளிப்படுத்தினார். உதாரணத்திற்கு, எந்த போதனையுமின்றி, மூல பாவம் பாலியல் செயல் என்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.
11 ஆதாமும் ஏவாளும் செய்த பாவம், பாலியல் செயல்தான் என்று, எவ்வித போதனையுமின்றி தேவனுடைய உண்மையான குமாரன் ஒருவன் அவனது இருதயத்தில் அறிவான். ஆனால் அவர்கள் சபைகளுக்குச் செல்லும் போது, பிசாசு அவர்களிடமிருந்து அதை எடுத்துப் போடுகிறான். அதே பிசாசு தான் ஸ்திரீயை பிரசங்க பீடத்தில் வைக்கிறான். ஒரு சபை கிறிஸ்துவின் மணவாட்டியாக இருக்க வேண்டும். பிரசங்க பீடத்தில் ஒரு ஸ்திரீயை ஏற்றுக்கொள்ளும் சபை ஒரு லெஸ்பியன் சபையாகும. மேலும் பிரசங்க பீடத்திற்கு செல்லும் அனைத்து ஸ்திரீகளின் கனவிலும் ஆண் பிறப்புறுப்பு இருப்பதாக பலர் என்னிடம் ஒப்புக்கொண்டனர்.
12 மேலும் தங்கள் கரங்களில் வேதாகமத்தைக் வைத்துக்கொண்டிருக்கும் ஜனங்கள் இந்தப் பிரகாரமாக செயல்படுவதை, ஆண்கள் அங்கு இருக்கும்போது ஆராதனை பாடல்களை நடத்த அல்லது பிரசங்கிக்க ஸ்திரீகளை பிரசங்க பீடத்தில் வைப்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. மாதவிடாய் நிகழ்கிறபோதும் கூட, சில பெண்கள் அதனுடன் அவர்களுக்கு அடியில் சில உரிஞ்சு பட்டைகள் (pads) அணிந்து பிரசங்க பீடத்தில் நிற்க வருகிறார்கள். அத்தகைய சபைகளில் கலந்துகொள்கிறவர்களே, உங்களுக்கு மனசாட்சியே இல்லை! நீங்கள் மனிதயினத்திற்கும் கீழானவர்களாக (Sub-humans) இருக்கிறீர்கள், நீங்கள் சர்ப்பத்தின் சந்ததியினர், நீங்கள் கத்தோலிக்கர்கள் மற்றும் முஸ்லிம்களையும் விட மோசமாக இருக்கிறீர்கள், ஆயினும் நீங்கள் அவர்களை உங்கள் மார்க்கத்தாராக்க முயல்கிறீர்கள். நீங்கள் வேறொரு நோக்கம் கொண்டிருக்கவில்லை என்றால், நீங்கள் அத்தகையதொரு சபைக்கு போய் உட்கார மாட்டீர்கள்.
13 பிரசங்கமாக அல்லது பாடல்களாக இருந்தாலும், அது ஒரே காரியம் தான். கொஞ்சத்தில் குற்றவாளி என்பது, அனைத்திலும் குற்றவாளி என்பது தான். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. ஒரு ஸ்திரீ சபையில் அமைதியாக இருக்க வேண்டும். ஒரு ஸ்திரீ சபையில் பிரசங்கிக்கக்கூடாது என்பது ஒரு கட்டளை என்ற காரியத்தை பவுல் கூறுகிறான். 1 கொரிந்தியர் 14:34-ல் பவுல் "சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; ஆனால் அவர்கள் கீழ்படிந்திருக்கவேண்டும்; நியாயப்பிரமாணமும் அப்படியே சொல்லுகிறது." என்கிறான். நீங்கள் பார்க்கிறீர்களா? ஒரு ஸ்திரீ சபையில் பேசக் கூடாது என்று நியாயப்பிரமாணம் சொல்கிறது. ஆசாரியத்துவத்தில் அங்கே ஸ்திரீ இல்லை.
14 சபையிலே ஸ்திரீ பேசக்கூடாதென்பதைப் பற்றி வசனம் 37-ல் பவுல், as "ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது, ஆவிக்குறியவன் என்றாவது எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகளென்று அவன் ஒத்துக்கொள்ளக்கடவன்." என்கிறான். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள். ஒரு ஸ்திரீ சபையில் பிரசங்கிக்கக்கூடாது என்ற உண்மையை பவுல் கூறுகிறான், இது கர்த்தருடைய கட்டளை. நீ பரிசுத்த ஆவியை உடையவனாக இருந்தால், நீ தேவனுடைய ஒரு குமாரன் என்றால், நீ கர்த்தருடைய கட்டளைக்கு எதிராக செல்லமாட்டாய்.
15 பரிசுத்த ஆவியை உடையவர்கள் என உரிமைகோருகின்ற அந்த சுவிசேஷக சபைத் தலைவர்கள் அதைப் பற்றி அவர்களுக்கு ஒன்றும் சொல்லுகிறதில்லை, ஆனால் அவர் வரும்போது, அவர் உங்களை சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்துவார் என்று வேதாகமம் கூறுகிறது! பழைய ஏற்பாட்டில், பிதாவின் யுகத்தில் கூட, தேவன் ஒரு ஸ்திரீயை ஆசாரிய ஊழியத்தில் பிரதிஷ்டை செய்யவில்லை, குமாரன் வடிவில், அவர் ஒரு ஸ்திரீ அப்போஸ்தலியைப் பிரதிஷ்டை செய்யவில்லை, அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் அல்ல என்பதுபோல், பரிசுத்த ஆவியின் வடிவில் அவர் அதை ஏன் செய்யவேண்டும் என்பதை என்னால் காணமுடியவில்லை. ஆனால், ஒரு ஸ்திரீயை பிரசங்கிப்பதற்கு பிரதிஷ்டை பண்ணவோ அல்லது அங்கிகரிக்கவோ செய்கிற எந்த ஆவியும் தேவனுடைய ஆவி அல்ல என்பதை அறிந்துகொள்ளுங்கள்! அதற்காக போராடுகிறவர்கள் ஒரு பிசாசை கொண்டுள்ளனர் மேலும் வார்த்தையை அல்லது தேவனுடைய ஆவியை அவர்கள் ஒருபோதும் அறியவில்லை. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
16 பெண் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ பல காரியங்களைச் செய்ய முடியும், ஆனால் இந்த பணிகளுக்கான அதிகாரம் ஆண்கள் அங்கு இருக்கிற வரையியில் அது அவர்களுக்கு கண்டிப்பாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. தெய்வீக ஒழுங்கிற்கு முரணாக, வீடுகளில், பொதுச் சேவைகளில், அரசியலில் நிகழ்ந்த பெண் விடுதலையின் துல்லியமான சித்திரம் தான் சபையிலும் சம்பவிக்கிறது. குடும்பங்களில் வேலையில்லாத தந்தையர்கள் இருக்கையில், தொலைக்காட்சி மற்றும் வீட்டு வேலைக்காரியின் கரங்களில் தங்கள் வீடுகளையும் குழந்தைகளின் கல்விகளையும் விட்டுவிடுகிற பெண்கள் இருக்கிறார்கள். குழந்தைக்கு தாய்வழி அரவணைப்பு அல்லது தாய் பால் அல்லது தாய்வழி கல்வியும் இருக்காது. அத்தகைய குழந்தை என்னவாக மாறும்?
17 மனிதகுலத்தின் மிக மோசமான துன்பம் ஏவாளின் சுதந்திரமாக இருந்தது மேலும் இன்று மறுபடியும், அது பெண் சுதந்திரமாக உள்ளது, அது இப்போது சபைக்குள் ஊடுருவுகிறது.
18 இரட்சிப்பிற்கு பிறகு, மனுஷனுக்குக் தேவன் கொடுத்த மிகப்பெரிய ஆசீர்வாதம் தான் ஸ்திரீ, ஆனாலும் அவன் அவளை ஆராதிக்க விரும்பி தெரிந்துகொண்டான்; மேலும் அவனை ஆளுகை செய்வதற்காக அவனது ஸ்தானத்தையும் அவன் அவளுக்கு கொடுத்தான். சரியாக பணத்தைப் போலவே, அவனுக்கு சேவை செய்ய வேண்டிய அது அவனுடைய தேவனாக மாறிவிட்டது.
19 ஒரு விளம்பரம் அல்லது ஒரு நிர்வாண பெண்ணை வெளிக்காட்டுகிற ஒரு பத்திரிகை இன்னும் அதிக கவனத்தைப் பெற்றுக்கொள்கிறது. பிள்ளைகளைப் பெறுதல், சமாரிய ஸ்திரீயைப் போல சாட்சி கூறுதல், ஆலயத்தைச் பெருக்குதல், இருக்கைகளை சுத்தப்படுத்துதல், அன்னாள் செய்தது போன்று உபவாசித்து ஜெபித்தல், என எல்லா நிலைகளிலும் தேவன் அவளுக்கு கொடுக்காததை ஆவலுடன் விருப்பம்கொள்ளவைக்க சாத்தான் எப்போதும் ஸ்திரீயை தள்ளுகிறான் யோவேல் 2:28-ன் படி தீர்க்கதரிசனம் உரைத்தல் அல்லது அன்னிய பாஷைகள் பேசுதல் என்பவைகள் தேவனுடைய வேலை அல்ல.
20 தேவ ஊழியக்காரர்கள் சிலருக்கு தங்குமிடத்தை ஏற்பாடுசெய்து உதவி அளித்ததற்காக ரோமர் 16:1 முதல் 2 வரை இருந்த பெபேயாளைக் கூட தேவனின் ஊழியக்காரியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 1 கொரிந்தியர் 14:34 முதல் 38 வரை மற்றும் 1 தீமோத்தேயு 2:11 முதல் 15 வரை ஆகிய வசனங்களில் பவுல் எழுதிய எச்சரிப்புகளெல்லாம் செவிட்டுக் காதுகளில் விழுந்தன, பிசாசின் குமாரர்கள் தங்களுடைய இலக்குகளை அடைவதற்கு தங்களின் சொந்த வழியில் அவைகளை வியாக்கியானித்தனர். நீங்கள் பார்க்கிறீர்களா?
21 இந்த ஊழியம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தில் ஒன்றை போன்றது, எந்த அதிகாரப்பூர்வ ஊழியத்திலும், தேவனுடைய ஊழியக்காரர்களை நாம் கண்டதில்லையா? சகோதரிகள் ஆஹோ பிரிஸ்கா (Ahou Prisca) மற்றும் ஆங்கி சிசிலி (Ange Cecile) எனக்கு உதவி செய்யவில்லையா?
22 மேலும் இந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பைத் தயாரிப்பதற்கு நாம் பங்களிப்புச் செய்ய வேண்டியிருந்தபோது, மிக முக்கியமான பங்களிப்பை வழங்கியது ஒரு சகோதரி அல்லவா? மேலும் இரண்டாவது பதிப்பிற்கு, ஒரு சகோதரி முழு பதிப்பிற்கும் தேவைப்படும் தொகையை என் கைகளில் வைக்கவில்லையா? நீங்கள் பார்க்கிறீர்களா? ஏனெனில் அவர்கள் நல்ல நோக்கங்களைக் கொண்டிருப்பதாலும், ஏதாவது செய்ய வேண்டுமென விரும்புவதாலும், தேவனே அதைச் செய்ய அவர்களுக்குக் கொடுக்கிறார். நீங்கள் பார்க்கிறீர்களா? அன்னாள், பெபேயாள், தபீத்தாள், சூசன்னாள் இன்னும் மற்றவர்களைப் பற்றி வேதாகமம் பேசவில்லையா? ...
23 குணசாலியான ஸ்திரீ ஒரு ஆசாரியனாக (priest) தகுதியானவள் என்றா நீதிமொழிகள் 31-ல் உங்கள் வேதாகமம் சொல்கிறது? ஒரு நாள் நீங்கள் தேவனுக்கு முன்பாக இதற்கெல்லாம் பதில் சொல்லுவீர்கள்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
24 திருமணம் செய்துகொள்வதன் மூலமும், பிள்ளைப்பேற்றினாலும், பிள்ளைகளுக்கு நல்ல அறிவொழுக்கம் ஊட்டுவதின் மூலமும் ஒரு ஸ்திரீயானவள் இரட்சிக்கப்படுவாள் என்று 1 தீமோத்தேயு 2:15 கூறுகிறது. ஒவ்வொரு ஸ்திரீயும் தன் பிள்ளைகளின் நடத்தைக்கு நியாயத்தீர்ப்பில் பதிலளிக்க வேண்டியவளாக இருக்கிறாள். தேவன் அவளை தன் பிள்ளைகளுக்கு அறிவொழுக்கம் ஊட்டுவதற்கு அழைக்கிறார். இந்த காரியங்களைப் பற்றி யோசித்துப் பார்க்காமல், அவள் பிரசங்க பீடத்தை ஆவலுடன் விரும்புகிறாள். சகோதரனே, அது பில்லி சூனியம். பெண்கள் ஞானஸ்நானமளிக்கக் கூட செய்யலாம் என்று டாமி ஆஸ்போர்ன் கூறுகிறான் ... அப்படிப்பட்ட மனிதர்கள், அவர்கள் மனந்திரும்பாவிட்டால், நரகத்தில் தங்களைக் கண்டுபிடித்தாலும் வருத்தமடையார்கள்.
25 அவர்கள் சங்கீதம் 68:11-ஐ வாசிக்கும்போது, 12-ஆம் வசனத்தை அவர்கள் விட்டுவிடுகிறார்கள்; அதனால் அவர்கள் கொல்வதற்கு விரும்புகிற அந்த ஆத்துமாக்கள் அது நற்செய்தியின் யுத்தத்தை பற்றியது என்பதை அறிகிறதில்லை. 1 சாமுவேல் 18:6 முதல் 7 வரை வாசிக்கலாம்: “அவர்கள் எல்லா நகரங்களிலிருந்தும் வெளியே வந்தார்கள்” ... நீங்கள்: "ஓ சகோதரர் பிலிப்பு, எங்கள் சபையில் அவர்கள் பாடல் தலைவர்களாக மட்டுமே உள்ளனர்" என்கிறீர்கள். சகோதரனே, அது அதே காரியம் தான்! ஒரு ஸ்திரீ பாடல் தலைவியாக ஏற்படுத்தப்பட்ட வேதாகம பகுதி ஒன்றை மட்டும் எனக்கு காட்டுங்கள்! நாளாகமம், எஸ்றா, நெகேமியாவை வாசித்து, தேவனிடம் திரும்பி வாருங்கள்! 2 நாளாகமம் 35-ஐ வாசியுங்கள், தாவீது, ஆசாப், தீர்க்கதரிசிகள்... ஆகியோரின் கட்டளையின்படியே ஆசாப்பின் புத்திரராகிய லேவியர் தான் பாடல் தலைவர்கள் என்பதை காண்பீர்கள்.
26 ஒரு ஸ்திரீ, யாராவது ஒருவர் மீது தன் கரங்களை வைப்பது எப்படி? ஒருவேளை அவள் தன் மாதவிடாயில் இருக்கலாம், அப்படிப்பட்ட காரியமாக இருந்தால், ஒரு தேவதூதன் கூட உன்னைக் விடுவிக்க முடியாது. குறிப்பாக இது அந்த கணத்தில் கூட நிகழலாம். ஒரு உணர்சி வசப்படும்போது அல்லது எந்தவிதமான சூழ்நிலையிலும் கூட, பிரசவ வேதனை மற்றும் மாதவிடாய் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதனால்தான், பிரசங்கிக்கும் ஸ்திரீகள் எப்பொழுதும் அடியில் சில உரிஞ்சு பட்டைகளை அணிகிறார்கள்.
27 ஒரு ஸ்திரீ பிரசங்கிப்பதை உட்கார்ந்து கேட்கிறவன், மனித இனத்திற்கும் கீழானவனாக, ஒரு உப-மனிதனாக இருக்கிறான், அவன் ஒரு மிருகம். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. யூதர்கள் மேசியாவை நிராகரித்தார்கள் ஆனால் பலிபீடத்தில் ஒரு ஸ்திரீயை ஒரு யூதன் ஒருபோதும் அனுமதிக்க மாட்டான்! அந்த பவுல் சேவித்த யூதர்களின் தேவனை நீங்கள் ஆராதிக்கிறதில்லை என ஒப்புக்கொள்கிறீர்கள். ஒரு சுவிசேஷக சபைக்கு அல்லது பிறவற்றுக்குச் செல்ல இஸ்லாமியத்தை விட்டுவிடுகிற ஒரு முஸ்லீம், பிசாசின் குமாரனாக இருக்கிறான். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
28 1 கொரிந்தியர் 14:34 முதல் 38 வரைக்கு மறுபடியும் போகலாம்! உங்களிடம் தான் பிசாசின் குமாரர்களே குமாரத்திகளே, பரிசுத்த ஆவியின் ஊற்றப்படுதலுக்குப் பின் பவுல் சொன்னது என்னவென்று கேளுங்கள்: "சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; ஆனால் அவர்கள் கீழ்படிந்திருக்கவேண்டும்; நியாயப்பிரமாணமும் அப்படியே சொல்லுகிறது. ஆனால் அவர்கள் எதையாவது கற்றுக்கொள்ள விரும்பினால், அவர்கள் வீட்டில் தங்கள் சொந்த புருஷர்களிடம் கேட்கட்டும்;ஒரு ஸ்திரீ சபையில் பேசுவது அவளுக்கு அயோக்கியமாக இருக்கிறதே... ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது, ஆவிக்குறியவன் என்றாவது எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகளென்று அவன் ஒத்துக்கொள்ளக்கடவன்." [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
29 பவுல்: "நியாயப்பிரமாணமும் கூட இதை சொல்லுகிறதே!" என்கிறான். அவன்: "இது கர்த்தருடைய கட்டளை" என்கிறான் ... ஒரு ஸ்திரீ சபையில் பிரசங்கிக்கக்கூடாது என்ற உண்மையை, நியாயப்பிரமாணம் கூருவதுபோலவே, கர்த்தருடைய கட்டளையாகவும் கூட இது இருக்கிறது! நீங்கள் பார்க்கிறீர்களா?
30 மோசேயின் ஐந்து புத்தகங்களை ஏற்றுக்கொண்டிருப்பதால், முஸ்லிம்களுக்கு எந்த ஒரு பெண் இமாமும் இல்லை. மாதவிடாய் நின்றுபோன பெண்களே அவர்கள் மசூதிக்குச் செல்ல முடியும், நீங்கள் அவர்களை உங்கள் மார்க்கத்தாராக்க விரும்புகிறீர்களா? எனவே, உங்கள் ஸ்திரீகள் மாதவிடாயில், அடியில் உரிஞ்சு பட்டைகளை அணிந்துகொண்டு, தங்கள் கரங்களை அவர்கள் மீது வைக்கப்போகிறீர்களா? காயீனின் குமாரர்களே! நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்! இதினிமித்தமே, பாவத்தினுடைய மற்றும் கேட்டினுடைய குமாரர்களாகிய உங்களை அவர்கள் வெருக்கும்படிக்கு தேவன் அவர்களது இருதயத்தை வைத்திருக்கிறார். அப்போஸ்தலர் 2:16-ஐ வாசியுங்கள், யோவேல் 2:28 அங்கே நிறைவேறவில்லையா என்பதை நீங்கள் பார்ப்பீர்கள்! ...
31 ஆனால், மனிதயினம் தேவனிடம் எதை நிரூபிக்க விரும்புகின்றது? சுவிசேஷக சபைகள் தேவனிடம் எதை நிரூபிக்க விரும்புகின்றன? தேவன் ஸ்திரீயானவளுக்கு குறைக்கின்ற காரியங்கள் பலவற்றை ஸ்திரீ கொண்டிருக்க முடியும் என்று காண்பிக்கவா? ஸ்திரீயானவள் மனிதனை போலவே திறமையான மற்றும் புத்திசாலித்தனமானவளா? ஆசாரியன், சுவிசேஷகன், அப்போஸ்தலன், பாஸ்டர் அல்லது பாடல் தலைவர் இப்படியாக ஒரு ஸ்திரீ எந்தவொரு ஆணைவிடவும் தனது பணியை சிறப்பாகச் செய்திருக்க முடியுமா? அவளால் நிச்சயமாக முடியும்! ஆனால் நாம், தேவனின் பிள்ளைகள், நாம் அதை எதிர்க்கிறோம், அது அவமதிப்பினால் அல்ல, அல்லது மனிதர்களின் பார்வையில் அவள் அதை செய்ய திறமையற்றவளாக இருப்பதினாலல்ல, ஆனால் தேவன் அதை செய்ய அவளுக்கு அருளவில்லை என்பதால். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
32 1 தீமோத்தேயு 2:11 முதல் 12 வரை வாசிக்கலாம் பரிசுத்த ஆவியின் ஊற்றப்படுதலுக்குப் பின்: "ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள். உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ் செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்கவேண்டும்." நீங்கள் பார்க்கிறீர்களா? ஒரு ஸ்திரீ தலைமையிலான சபை ஒன்றில் தேவன் நுழைய வேண்டுமென்றால், அந்த ஸ்திரீ வெளியே தள்ளப்பட வேண்டும், பிரசங்க பீடம் வெளியே எரியப்பட வேண்டும், அந்த சபை கழுவப்பட வேண்டும். ஏன்? ஏனென்றால் அது ஒரு சபிக்கப்பட்ட சபை. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. ஒரு ஆசாரியத்தியாக (woman priest) ஆவதற்கு தேவன் ஒருபோதும் ஒரு ஸ்திரீக்கு அதிகாரம் கொடுத்ததில்லை, மேலும் தேவனுடைய மனுஷன் ஒருவனால் இந்த ஸ்தானத்தை ஒரு ஸ்திரீக்கு கொடுக்க முடியாது.
33 அப்போஸ்தலனாகிய பவுல், பரிசுத்த மார்ட்டின், கொலம்பா, ஜான் வெஸ்லி, மார்டின் லூதர், வில்லியம் பிரன்ஹாம் மற்றும் பூமியில் தேவனால் அனுப்பப்பட்ட எல்லா உண்மையுள்ள ஊழியர்களும் பிரசங்க பீடத்தில் ஒரு ஸ்திரியை ஒருபோதும் வைத்தது இல்லை என்பதை குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். வரலாற்றை முழுவதும் சரிபார்த்துவிட்டு வந்து, தேவனுடைய மனுஷன் ஒருவன் ஒரு ஸ்திரியை பிரசங்க பீடத்தில் வைத்து இருந்ததை என்னிடம் சொல்லுங்கள். 18-ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் கூட, முழு கிறிஸ்தவத்திலும் அத்தகையது எப்போதும் இருந்ததில்லை, கத்தோலிக்கத்திலும் கூட! இது பெண் சுதந்திரத்தினுடையதும் சுவிசேஷக சபைகளினுடையதுமான வேலையாக இருக்கிறது.
34 இந்த 20-ஆம் நூற்றாண்டில், மனித உருவத்தில் ஒரு பிசாசு, அதனுடைய பெயர் தான் டாமி ஆஸ்போர்ன், ஸ்திரீகளிடம் சென்று ஞானஸ்நானம் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டது ... டாமி ஆஸ்போர்னை கண்ட எவரும் சாத்தானை கண்டிருக்கின்றனர். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
35 மேலும் இந்த வார்த்தைகளுக்குப் பிறகு, தேவனின் பிள்ளை ஒருவனை ஒரு பிசாசு இன்னும் பிடித்திருக்கவில்லை என்றால் மட்டும் தான் அவன் மனந்திரும்ப முடியும். அசுத்தமான ஆவிகளால் முழு உலகமும் பீடிக்கப்பட்டிருப்பதை நான் காண்கிறேன், அவர்களை விடுவிக்க அதிக வல்லமை தேவை. அவர்களுடைய ஆத்துமாக்கள் விழுந்துபோன தூதர்களால் மூடப்பட்டுள்ளது. இனிமேலும் ஜீவிப்பதும், யோசிப்பதும் அல்லது சிந்திப்பதும் அவர்களல்ல ஆனால் அந்த பிசாசாகும். சரியாக பயித்தியக்காரனைப் போலவே. இப்போது அவர்களை கட்டுப்படுத்துகிற ஒரு வல்லமையின் கைதிகளாக அவர்கள் இருக்கிறார்கள். இது மேக மேலாடை ஒன்றினால் அவர்கள் மூடப்பட்டிருக்கிறது போன்றதாகும். அதை சிறந்த முறையில் அவர்களுக்கு விளக்க முயல்வது பற்றின கேள்வி அல்ல இது, ஆனால் அவர்களை விடுவிப்பதாகும். ஒரு பயித்தியக்காரனை உன்னால் சிந்திக்கவைக்க முடியாது! நீங்கள் பார்க்கிறீர்களா? அவர்கள் வெறுமனே அந்த பிசாசின் விசுவாசமும் மற்றும் சித்தமும் உள்ளவர்களாக இருக்கின்றனர்.
36 ஒவ்வொரு சபைக்கும் ஒரு பிசாசு உண்டு, வெறுமனே அந்தச் சபையின் வேதசாஸ்திரத்தை நம்புவதன் மூலம் அல்லது அதன் பிரமுகர்கள் உங்கள் மேல் கரங்களை வைப்பதின் மூலம் அதை நீங்கள் பெற முடியும். அதனால்தான், அதனுடைய உள்ளடக்கம் உண்மையானதாக இருந்தாலும், மத புத்தகங்களை வாசிக்க உங்களுக்கு நான் தடைவிதிக்கிறேன்!
37 2 தெசலோனிக்கேயர் 2-ல் சொல்லப்பட்டுள்ளதை நிறைவேற்றுவதற்காக சில தீர்க்கதரிசனங்கள், அன்னிய பாஷைகள் சிலவற்றை பேசுதல் மற்றும் சில அற்புதங்களுடன் அது அவர்கள் சத்தியத்தில் இருப்பதாக அவர்களை நம்பும்படி செய்கிறது, முழு உலகமும் குறிசொல்லும் ஆவியின் பிடியில் சிக்கியுள்ளது:... சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும், சகலவித வஞ்சகத்தோடும் அது இருக்கும்... இரட்சிக்கப்படுவதற்கேதுவாக சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனடியால் அப்படி நடக்கும். ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்!
38 மத்தேயு 24:24-ன் படி தேவன் தாமே மார்க்கந்தப்பி அலையும் இந்த நட்சத்திரங்களான காக்கு செவரின், மோரிஸ் செருல்லோ, டாமி ஆஸ்போர்ன், சிசில் ராபெக், ரியின்கார்டு பொன்ங்கெயி, பென்னி ஹின், இன்றும் மற்றவர்களை பூமியின் குடிகளை பரீட்சிப்பதற்கு "எழும்பப் பண்ணியுள்ளார்". வெவ்வேறு உபதேசங்களை கொண்டிருக்கும் ஜனங்கள் மற்றும் சபைகள் எவ்வாறு ஒன்றிணைய முடியும், மேலும் அது உங்களுக்கு ஒரு அர்த்தத்தையும் கொடுக்கிறதில்லையா? ஆடுகள், மாடுகள், வெள்ளாடுகள், பன்றிகள், மற்றும் பல்வேறு வகையான விலங்குகளை கொண்ட ஒரு மந்தையை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? மேலும் அதை அன்பு என்று உங்களால் அழைக்கமுடியுமா? டாமி ஆஸ்போர்ன் ஒரு நாட்டிற்கு செல்லும் போது, பாப்டிஸ்டுகள், பெந்தேகோஸ்தேயினர், மெத்தடிஸ்டுகள், தேவர்களின் கூட்டுச்சபையினர்கள் ... மகிழ்ச்சி கொள்கின்றனர்!
39 ஒரு மெத்தடிஸ்டு பாஸ்டர் ஒரு நாற்சதுர சபையில் அல்லது அட்வென்டிஸ்டுகளின் மத்தியில் பாஸ்டராக இருக்க முடியுமா? ஒரு மெத்தடிஸ்டு பாப்டிஸ்டுகளின் மத்தியில் பரிசுத்த இராப்போஜனத்தில் பங்குபெற முடியுமா? அப்படியிருக்க நீங்கள் ஒன்றாக என்ன செய்கிறீர்கள்? நீங்கள் அனைவரும் பரிசுத்த ஆவியைக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் பிறகு ஏன் இந்த முரண்பாடுகள்? மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் பரிசுத்த ஆவியை உடையவர்களாக கர்த்தராகிய இயேசுவின் நான்கு சுவிசேஷங்களை எழுதினார், அவைகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டதா? [ஆசிரியர் குறிப்பு: சபையார் "இல்லை!" என்கிறார்கள்].
40 ஆதியிலே வார்த்தை இருந்தது, மேலும் அந்த வார்த்தையினால் தேவனுடைய பிள்ளைகள் சிருஷ்டிக்கப்பட்டுள்ளனர், எனவேதான் அவர்கள் இந்த செய்தியின் மூலம் தங்களை அடையாளம் கண்டுகொள்வர், இது அவர்களது வேளைக்கு தேவனுடைய வாக்குத்தத்தமாக இருக்கிறது. உலகம் முழுவதும் நாற்பது பேர்தான் விசுவாசித்தவர்களாக இருந்தாலும், தேவன் தமக்கென்று மீதமாக ஒதுக்கி வைத்தது அது மட்டும் தான்!
41 கத்தோலிக்கர்கள் சீர்திருத்தத்தை புறக்கணித்தது போலவே, பிரன்ஹாமிஸ்டுகள் நடுராத்திரி சத்தத்தை புறக்கணித்து சாயங்கால நேரத்திலேயே தங்கி, வேசிகளின் முகாமில் சேர்கின்றனர். மேலும் 1993-ஆம் ஆண்டின் தரிசனத்தில் தூதனும் செம்மறி ஆட்டுக்குட்டியும் இறங்கி வருவதற்கு முன், ஒரு கிரகணம் ஏற்பட்டது, சூரியனின் இடத்தில் ஒரு கருப்பு பந்தை தெளிவாக நான் பார்த்தேன். அவர்கள் பரலோகத்திலிருந்து வந்ததும் பூமி பிரகாசித்தது ... மேலும் 1993-ல் சாயங்கால நேரம் முடிவடைந்தது என துல்லியமான முறையில் என்னால் சொல்ல முடியும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
42 வெளிப்படுத்துதல் 4:7-ன் படி, நாம் நான்காம் ஜீவனின் காலத்தில் இருக்கிறோம், அனைத்து பொய்களுக்கும், ஒவ்வொரு இறையியலுக்கும், அனைத்து வஞ்சக ஆவிக்கும் மேலே கழுகு உயரும். அந்த நேரத்தில் கழுகுகள் புதிய வார்த்தையைச் சுற்றிச் சேரும் என்று வேதாகமம் கூறுகிறது. கலப்படமற்ற வார்த்தை எங்கு இருக்கிறதோ அங்கே, மத்தேயு 24:28-ன் படி தெரிந்துகொள்ளப்பட்டவர்கள், தேவனுடைய பிள்ளைகள் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள். ஆமென்!
43 காகங்கள், சவந்தீனிகள், வல்லுருக்கள், கொன்றுண்ணிப் பறவைகள்... ஆகியவை உயரமாக பறக்காது, அதனால் அவைகள் எதை வேண்டுமானாலும் தங்களுக்கு ஏற்றதாக கண்டடைகின்றன. எதில் அவர்களுக்கு அக்கரையுள்ளதென்றால், அவர்களை திருப்தி செய்யக் கூடிய ஏதாவது ஒன்றில் தான். ஞானஸ்நானம் இயேசு கிறிஸ்துவின் பெயரிலா அல்லது திரித்துவத்திலா, ஸ்திரீ பிரசங்கிகளா அல்லது பாடல் தலைவர்களா ... என அவர்கள் அவைகளின் பேரில் தசாப்தங்களாக இறையியலைக் கொண்டு சண்டையிட்டு வருகின்றனர், கழுகுகளோவெனில் அவைகளை விட்டுச்சென்றுவிட்டது.
44 மேலும் ஏப்ரல் 24, 1993-க்குப் பிறகு, ஒரு தரிசனத்தில், நாங்கள் ஒர் இளங்கலைப்பட்ட அளவிலான தேர்வு நடக்கும் அறையில் உட்கார்ந்து இருந்தோம், தேர்வு நடத்துபவர் பரிட்சைத் தாள்களை வினியோகம் செய்துகொண்டிருந்தார். நான், "ஆனால் நான் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறேன்? நான் ஒரு சிறந்த பள்ளிப் படிப்பைக்கூட உடையவனாக இல்லையே, எதை நான் எழுதப்போகிறேன்?" என்று என் இதயத்தில் சொல்லிக்கொண்டிருந்தேன்.
45 சற்று பின்னர், என்னிடம், “இதே விதமாகத்தான் மரியாள் எந்தவொரு மனிதனையும் அறியாமல் அதிசயமான விதத்தில் கர்ப்பம் தரித்தாள், இதே விதமாகத்தான் சிருஷ்டிப்பின்போது நிகழ்ந்தவைகளின் விபரங்களை மோசே பெற்றுக்கொண்டான், நீயும் நித்திய ஜீவ வார்த்தைகளை இந்த ஏப்ரல் 24, 1993-ல் பெற்றுக்கொண்டாய், இது தேவனால் நியமிக்கப்பட்டதாக இருக்கிறது. குறிக்கப்பட்ட நேரத்தில் நீ புரிந்துக்கொண்டு, முறைமையின்படி நீ கற்றரியாததை நீ போதிப்பாய் அதை விசுவாசிக்கிறவன் எவனோ அவனுக்கு நித்திய ஜீவன் உண்டு" என்று எனக்கு சொல்லப்பட்டது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
46 நான் ஒரு குருமார் பள்ளி அல்லது ஒரு வேதாகம பயிற்சியில் ஒருபோதும் கலந்து கொள்ளவில்லை, அவர்களுடைய கிறிஸ்தவ புத்தகக்கடைகளின் புத்தகங்களை நான் படிக்கவில்லை, ஆனால் வேதவசனங்களைப் பற்றிய அறிவு எனக்கு கிடைத்தது ... ஒரே பிரச்சனை எனக்கு நல்லநிலையிலான பள்ளிக் கல்வி இல்லை என்பதுதான், ஆனால் தேவனின் கிருபையானது காக்கும்.
47 இந்த வேலை தேவனிடத்திலிருந்து வருகிறது என்று நான் விசுவாசிக்கிறேன்; அதனால்தான் சில மாணவர்கள், புத்திஜீவிகள், முன்னாள் சபை பிரசங்கிகள் மற்றும் பாஸ்டர்கள் இங்கே அமர்ந்திருப்பதை நாம்மால் காண முடியும்... மேலும் தேவன் என்னை வலுசர்ப்பத்தினிடமிருந்து பாதுகாத்துவைத்தால், ஒரு நாள், ஒவ்வொரு ஒழுங்கின் கீழும் இருக்கும் நீதிபதிகள் உங்கள் மத்தியில் இருக்க நீங்கள் காண்பீர்கள், ஏனெனில் அவர்களுக்குள்ளும் சில தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் உள்ளனர்... [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
48 சர்ப்பத்தின் முகத்திற்கு விலக்கி தூரமாகக் கொண்டு செல்ல கழுகுக் குஞ்சுகளுக்கு பெருங்கழுகின் இரண்டு செட்டைகள் கொடுக்கப்படும் என்று வேதாகமம் வெளிப்படுத்துதல் 12:14-ல் கூறுகிறது, மேலும் 15-ஆம் வசனத்தில் நாம் உபத்திரவம் துவங்குவதையும் காண்கிறோம். அதே நேரம், பிசாசு தன்னையும் அதே வசனத்தில் சர்ப்பமாக வெளிப்படுத்துகிறது, குறிசொல்லும் ஆவி தான் அது, மேலும் சபைகள் அதனால் நிரப்பப்பட்டுள்ளது.
49 மத்தேயு 25:6-ன் பிரசங்கத்தை நிராகரிக்கிற எவர்களோ அவர்கள் குறிசொல்லும் ஆவியை மட்டுமே பரிசுத்த ஆவி (holy spirit) என பெற முடியும்! நீங்கள் சிலுவையில் அறைந்திருக்கிற இயேசு கிறிஸ்துவை மறுபடியும் உங்களுக்குத் தெரியப்படுத்தினேன். மேலும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதுதான் அதன் பொருள்: "அவனுடைய இரத்தப்பழி எங்கள் மீதும் எங்கள் பிள்ளைகள் மீதும் இருக்கட்டும்". அங்கே ஒரு ஈர்ப்பு இருக்கும் மேலும் உலகம் முழுதும் அதை காணும்.
50 நல்லது. அந்த சத்தமும் (Cry) மணவாளனும் ஒன்று என்பதால், "அவரை சந்திக்கப் புறப்பட்டு போகுதல்" என்னும் வார்த்தை அது சரியானதல்ல. அதனால்தான் சத்தம்: "இதோ" என்கிறது மற்றபடி, "அங்கே" என்றல்ல. பூமியின் அருவருப்புகளை நீங்கள் விட்டுவிடு, அதாவது கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகளை விட்டு வெளியேறி, கிறிஸ்துவிடம் வரவேண்டும். நீங்கள் இந்த மாந்திரிக பொருட்களை, இந்த சிலுவை உருவங்களை, தேவனிடமிருந்து உங்களை வேறுபிரிக்கும் சகலவற்றையும் நீங்கள் நிராகரித்து விட்டு இந்த செய்திக்கு வரவேண்டும்.
51 இந்நாள் வரைக்கும், லூயிஸ் செகண்டு, ஜேம்ஸ் மன்னன், ஆஸ்டர்வால்டு, செமெயுர், கொலெம்பி வேதாகம பதிப்புகள், நம்மிடம் இல்லை, நாம் அவற்றை சுட்டெரித்துவிட்டோம். இரண்டாவது தரிசனத்தில் நான் பாலைவனத்தில் நின்று கொண்டிருந்தேன், அதை நினைவு கூறுங்கள், இது மோசேயின் காலத்தில் பாலைவனத்தில் இருந்ததைப்போல, வார்த்தை பரலோகத்தின் மேகங்களால் சுமந்து கீழேகொண்டு வரப்பட்டது, அது பரிசுத்த தூதர்களாக இருக்கிறனர். நீங்கள் தேவனின் பிள்ளையாக இருப்பீர்களெனில் அல்லது நீங்கள் பரிசுத்த ஆவியை பெற்றிருந்தால், நீங்கள் அதை விட்டு விலகி வெகுதொலைவில் இருக்க முடியாது, ஏனென்றால் வார்த்தை எங்கே இருக்கிறதோ, அங்கே கழுகுகள் கூட்டிச் சேர்க்கப்படும் என்று வேதாகமம் கூறுகிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
52 ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, அமெரிக்காவின் சகோதரர்களே! உங்கள் நாட்டில் மத்தேயு 25:6-ன் செய்தியை நீங்கள் எதிர்பார்த்திருக்கலாம், ஆனால் தேவன் அதை வேறு வழியில் செய்தார். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நினைத்துக்கொள்ளுங்கள்! பிரதான ஆசாரியரான மெல்கிசேதேக்கு, லேவியின் கோத்திரத்திலிருந்து வரவேண்டும் என்று அந்த ரபீக்களும் வேதபாரகரும் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவர் யூதா கோத்திரத்திலிருந்து வந்தார். பின்னர், அவரது செய்தியும் அவரது கிரியைகளும் அது அவர்தான் மேசியா என்பதை உறுதிப்படுத்தியது.
53 இன்று, பூமியின் மீதெங்கும், நீங்கள் தேவனின் பிள்ளை என்றால், உங்களது ஸ்தானம், அது உங்கள் காலத்தின் தீர்க்கதரிசியாம், தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவுடனாம். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.