(அக்டோபர் 29, 2009 வியாழக்கிழமை மாலை மற்றும் பின்னர் 2010 இல் அன்யாமா, அபிட்ஜன்-ஐவரி கோஸ்டுக்கு அருகில் பிரசங்கிக்கப்பட்டது)
1...இன்று காலையில், ஒவ்வொரு தீர்க்கதரிசி செய்தியாளனும் தனது கூட்டத்தினரிடம் சேர்க்கப்படுகிறார் என்பதைக் காண்பிப்பதற்கான எதிர்பார்க்கப்பட்ட தரிசனம் என்ற இந்த பொருளை பற்றி நான் பேசப் போகிறேன். ஒரு பரவசத்தின் மூலம், வில்லியம் பிரன்ஹாம் அதைக் கண்டார். வில்லியம் பிரன்ஹாம் கூறுகிறார், "என் ஜனங்கள் வெள்ளையங்கிகள் தரித்திருப்பதை நான் காண அவர் அனுமதித்தார். நான் ஒரு நாள் காலை படுக்கையை விட்டு எழுந்தேன். என் மனைவியைப் பார்த்து, “அன்பே” என்று கூப்பிட்டேன். அவன் அசையவேயில்லை. பிள்ளைகள்…நான் எழுந்திருந்து பள்ளிக்கு பிள்ளைகளைக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. சடுதியாக ஏதோ ஒன்று சம்பவித்தது. அப்பொழுது இச்சாரீரத்தை விட்டுப்போகும் உணர்ச்சி எனக்கு ஏற்பட்டது. “நான் ஏற்கனவே மரித்து விட்டேன், கடந்து போனேன்” என்று நான் எண்ணினேன். பாருங்கள்?
2நான் ஒரு ஸ்தலத்திற்கு வந்தேன். அப்பொழுது, “நான் திரும்பி பார்க்க விரும்புகிறேன்” என்று எண்ணினேன். நண்பர்களே, நான் உங்களுக்கு முன்பு நிற்பது போலவே, அது மிக உண்மையாகவே இருந்தது. பாருங்கள்? நான் திரும்பிப் பார்த்தேன். அப்பொழுது நான் அங்கே படுக்கையில் படுத்துக் கிடந்தேன். என் சரீரம் மாத்திரம் என் மனைவியின் பக்கத்தில் படுத்திருப்பதைக் கண்டேன். நான், “இது அநேகமாக மாரடைப்பாய் இருக்கலாம்” என்றே எண்ணிக்கொண்டேன். பாருங்கள்? “எனவே, பாருங்கள், நான் சடுதியாக இறந்து விட்டதாக எண்ணிக்கொண்டேன்.” நான் நோக்கிப் பார்த்து, “நல்லது, இப்பொழுது இது விநோதமாயுள்ளதே. அங்கே நான் படுக்கையில் படுத்திருக்கிறேன்; இங்கே நிற்கிறேன்” என்று எண்ணினேன்.
3ஆகவே, நான் திரும்பினேன், அது அங்கே பரவியிருந்த ஒரு ஊதா நிறப்புற்கள் போன்று காணப்பட்டது. நல்லது, “இது என்னவென்று நான் அதிசயப்பட்டேன்.” நான் பார்க்கையில், சடுதியாக லட்சக்கணக்கான வாலிபப் பெண்கள் வெள்ளையங்கி தரித்தவர்களாய், தலைமுடி இடுப்பு வரைக்கும் வளர்ந்து, காலில் ஒன்றும் அணியாமல் என்னை நோக்கி ஓடிவந்தனர். இவ்வித அழகான பெண்களை நான் ஒருபோதும் கண்டதேயில்லை. அவர்கள் என்னை நோக்கி ஓடி வந்தனர். அவர்கள் என்னிடம் ஓடி வந்தபோது… அவர்கள் என்னை ஒவ்வொருவராக கட்டித் தழுவி, “எங்கள்—எங்கள் அருமை சகோதரனே” என்றனர். என்னை ஒரு பெண் கட்டித் தழுவினாள். நான் அங்கே நின்று, பார்த்துக் கொண்டிருந்தேன்.
4நான் நினைத்தேன், "சரி இப்போது, இது என்ன"? பார்க்கிறீர்களா? நான் நினைத்தேன், "“என்ன சம்பவித்தது” அவ்வாறு என் சிறு வயது முதல் வாழ்ந்து வந்திருக்கிறேன். தேவன் அதை அறிவார். நான் சிறுவனாயிருந்தபோது கர்த்தருடைய தூதன் என்னிடம், நான் புகைப்பிடித்தல், மது அருத்துதல், அல்லது சரீரத்தை அசுசிப்படுத்தும் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்று கூறியிருந்தார். அது உண்மையாகவே இருந்து வந்திருக்கிறது. தேவகிருபையினால் நான் அதை அனுசரித்து வந்திருக்கிறேன். நான் பாவியாக இருந்த போதும் கூட நான் எந்தப் பெண்ணுடன் சுற்றித் திரிந்ததில்லை… ஆனால் அங்கே அங்குள்ளவர்களுக்கு அணுக்கள் இல்லாததால் அவர்கள் கட்டித் தழுவினாலும் பாவம் செய்வதில்லை.
5அங்கே ஒரு வித்தியாசம் இருந்தது. அந்தப் பெண்களிடம் சகோதர அன்பு காணப்பட்டதேயன்றி வேறல்ல. ஆகவே, அவர்கள் பரிபூரணராக இருந்தனர். அவர்கள் தங்களுடைய கரங்களினால் என்னை எவ்வளவாய்க் கட்டித் தழுவினாலும், கவலைப்படவேண்டியதில்லை, பாவம் என்பதே அங்கே ஒருபோதும் இல்லை. (அவர்கள் ஸ்திரீகள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்). ஏனெனில் ஆண் பெண் இருவரின் சுரப்பிகளும் சென்றுவிட்டது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
6அவர்கள் முழுமையான என் சகோதரிகளாக இருந்தனர். நான் நோக்கிப் பார்த்தேன். நான் என் கைகளைப் பார்த்தேன். அந்தப் பெண்கள் காண்பதற்கு மிகவும் வாலிபமாயிருந்தனர். நானும் வாலிபனைப் போலிருந்தேன். அவர்கள் ஓடிவருதைக் காண்கையில், ஹோப் (Hope) வருவதைக் கண்டேன். “இப்பொழுது அவள் இங்கே வந்து, அவள் என்னை, ‘பில்லி’ என்று கூப்பிடுவாள் என்று நினைத்தேன். அவள் என்னிடத்தில் வரும்போது, “அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று மாத்திரம் நான் பார்க்கப் போகிறேன்” என்று நான் நினைத்தேன். அவள் என்னை நோக்கிப் பார்த்து, “ஓ, எங்கள் அருமை சகோதரனே” என்றழைத்தாள். அவள் என்னைக் கட்டி தழுவிவிட்டு, பேசாமல் சென்றாள்.
7அடுத்தபடியாக மற்ற ஸ்திரீயும் என்னிடம் வந்து, என்னைக் கட்டித் தழுவி சென்றுவிட்டனர். ஒரு சத்தம் கேட்டது. நான் இவ்விதம் பார்த்தபோது, வாலிபர்கள் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் ஏறக்குறைய இருபது வயது நிரம்பியதுபோல் காணப்பட்டனர். அவர்களும் கறுப்பு, பொன்நிறம் என்று வித்தியாசமான தலைமுடியை உடையவராய் இருந்தனர். அவர்களும் வெள்ளையங்கி தரித்து, காலணிகளின்றி என்னை அணுகி, கட்டித் தழுவி, “அருமை சகோதரனே” என்று கூச்சலிட்டனர்.
8ஆகவே, அப்பொழுது ஒரு சத்தம் என்னிடம் பேச ஆரம்பித்தது. அந்த சத்தம் யாருடையது என்பதை ஒருபோதும் நான் காணமுடியவில்லை. அப்பொழுது அது, “நீ உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறாய்” என்று சொன்னது. அப்பொழுது ஒருவர் என்னை இதைப் போன்று ஒரு உயர்ந்த பீடத்தின்மேல் நிறுத்தினார். நான், “ஏன் அவ்வாறு செய்கின்றீர்?” என்று கேட்டேன். அவர், “பூமியில் எங்களுக்கு வழிகாட்டியாய் இருந்தீர்” (Leader) என்றார். ஆகவே நான், “நல்லது என்னால்—என்னால் இதைப் புரிந்து கொள்ள முடியவில்லையே” என்றேன்.
9அந்த சத்தம் என்னிடம் பேசிக்கொண்டிருந்தது. ஆனால் நான் அந்த சத்தத்திற்கு சம்மந்தப்பட்டவரையோ ஒருபோதும் காணமுடியவில்லை. இப்பொழுது அது எனக்கு மேலாக இருந்தது. என்னுடன் பேசிக்கொண்டிருந்தது. நான், “நல்லது நான் கடந்து வந்திருப்பேனாகில், நான் இயேசுவைக் காணவிரும்புகிறேன். அவரே என் ஜீவன், நான் அவரைக் காண விரும்புகிறேன்” என்று கூறினேன். அதற்கு அவர், “அவரை நீ இப்பொழுது காணமுடியாது. அவர் இன்னும் உயர்ந்த ஸ்தலத்தில் இருக்கிறார்” என்றார். பாருங்கள்? ஏழாம் பரிமாணத்தில் இருக்கிறார். இது ஆறாவதாகும். அங்கே இருந்தனர். ஒவ்வொருவரும் கடந்து சென்றுக் கொண்டிருந்தனர். அங்கே உண்மையாகவே அவர்கள் அங்கே லட்சக்கணக்கில் இருந்தனர். அப்பொழுது அந்தச் சத்தம், “யாக்கோபு தன் ஜனங்களோடு சேர்க்கப்பட்டது போல, நீயும் உன் ஜனங்களுடன் சேர்க்கப்பட்டிருக்கிறது” என்று கூறிற்று.
10“இவர்களெல்லாம் என் ஜனங்களா? இவர்கள் பிரான்ஹாம் குடும்பத்தைச் சார்ந்தவர்களா?” என்று நான் கேட்டேன். அவர் “இல்லை, அவர்களெல்லாம் உன் மூலமாகவே கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள்” என்று பதில் கூறினார். நான் சுற்றிலும் நோக்கினேன். அப்பொழுது மிக அழகிய ஒரு ஸ்திரீ என்னிடத்தில் ஓடி வந்தாள். அவளும் மற்ற பெண்களைப் போலவே இருந்தாள். அவள் தன் கரங்களால் என்னைச் சுற்றி, என்னைத் தழுவி, “ஓ, என் அருமை சகோதரனே” என்று கூறி, என்னை நோக்கிப் பார்த்தாள். “என்னே! அவள் ஒரு தூதனைப்போன்று காணப்பட்டாள்” என்று நான் எண்ணினேன். அவள் கடந்து சென்றாள்.
11அப்பொழுது அந்த சத்தம், “நீ அவளை அடையாளங்கண்டு கொண்டாயா?” என்றது. அதற்கு நான், “இல்லை, என்னால் அவளை அடையாளங்கண்டு கொள்ள இயலவில்லை” என்றேன். அதற்கு அது, “அவள் தொண்ணூறு வயது கடந்த பிறகு அவளை நீ கிறிஸ்துவனிடம் வழி நடத்தினாய். ஆகவே அவள் உன்னை அதிகம் மதிக்கிறாள்” என்றது. “அந்த அழகிய பெண் தொண்ணூறு வயது கடந்தவளா?” என்று நான் கேட்டேன். “ஆம், அவள் இனி ஒருபோதும் வயது சென்றவளாக மாறுவதில்லை.”
12“ஆகவேதான் அவள், ‘அருமையான சகோதரனே’ என்று அழைக்கிறார்” என்று அது கூறினது. "தீர்க்கதரிசிகள் தன் ஜனதாரோடு சேர்க்கப்படுவார்கள் என்று வேதாகமங்களில் எழுதப்பட்டுள்ளது என்று உனக்கு தெரியுமா,?" அதற்கு நான், "ஆம், வேதவசனங்களில் அதை நினைவில் கொள்கிறேன்" என்று சொன்னேன். பின்னர் திரளான ஜனக்கூட்டம் ஒன்றாக கூச்சலிட்டனர் "நீர் நற்செய்தியுடன் வெளியே செல்லவில்லை என்றால், நாங்கள் இங்கே இருந்துதிருக்க மாட்டோம்."
13இவர்கள் தத்ரூபமாக இருக்கிறார்களே, இவர்கள் வேறெங்கும் செல்வதில்லை. அவர்கள் அங்கு சதாகாலமும் இருப்பதால் சலிப்பு கொள்வதில்லை” என்று நான் நினைத்துக்கொண்டேன். “நான் ஏன் இயேசுவைக் காணமுடியாது?” என்று நான் கேட்டேன். அப்பொழுது அந்த சத்தம் என்னிடம், “அவர்—அவர் ஒரு நாள் வருவார். அவர் முதலில் உன்னிடம் வருவார், அப்பொழுது உனக்குத் தீர்ப்பளிக்கப்படும்” என்றது. மேலும் அது, “இவர்கள் நீ வழிநடத்தின உன்னுடைய ஜனங்கள்—உன்னால் மனமாற்றமடைந்தவர்கள்” என்று உரைத்தது.
14அதற்கு நான், “இவர்களுக்கு வழிகாட்டினதினாலே அதை அனுசரித்து, அவர் எனக்குத் தீர்ப்பளிக்க வேண்டுமா?” என்று கேட்டேன். “ஆம்” என்று பதில் வந்தது. “ஒவ்வொரு வழிகாட்டிற்கும் இவ்வாறே தீர்ப்பளிக்கப்பட வேண்டுமா?” என்றேன். அது “ஆம்” என்றது. நான், “பவுலைக் குறித்து என்ன?” என்றேன். அவர், “அவனும் அவனுடைய கூட்டத்துடன் நியாயந்தீர்க்கப்படுவான்” என்றார். அப்பொழுது நான், “பவுலின் கூட்டம் பிரவேசிக்குமேயானால், என் கூட்டமும் பிரவேசிக்க வேண்டும். ஏனெனில் அவன் பிரசங்கித்த அதே வார்த்தையையே நானும் பிரசங்கித்தேன்”. அதற்கு லட்சக்கணக்கான அவர்கள் எல்லாரும் ஒன்றாக, “அதன் பேரில்தான் நாங்கள் இளைப்பாறிக்கொண்டிருக்கிறோம்” என்றனர்.
15அப்பொழுது அங்கு ஒரு சத்தம் கேட்டது. அது, “நீ நேசித்த அனைவரையும், உன்னை மனப்பூர்வமாக சிநேகித்த அனைவரையும் தேவன் உனக்குக் கொடுத்திருக்கிறார்” என்றது. நான் “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்றேன். ”[ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
16வில்லியம் பிரன்ஹாம் இந்த வெளிப்பாட்டைப் பற்றி "யேசேபெல் மார்க்கம்" என்ற பிரசங்கத்தில் 1961 இல் பேசினார். ஏழு சபை காலங்கள் பிரசங்கத்தில் அவர் அதைப் பற்றி பேசினார், 1963 ஆம் ஆண்டில் ஏழு முத்திரைகள் வெளிப்பாட்டில் அவர் அதைப் பற்றி பேசினார். பத்து கன்னிகைகள் என்ற பிரசங்கத்தில், அவர் இதைப் பற்றி பேசினார்: "நிராகரிக்கப்பட்ட ராஜா" வில் இதைப் பற்றி பேசினார். "காலத்தின் திரைக்கு அப்பால்"- இல் இதைப் பற்றி பேசினார். "உன்னுடைய நாளையும் அதன் செய்தியையும் அடையாளம் கண்டு கொள்ளுதல்" - இல் அவர் அதைப் பற்றி பேசினார், "தானியேலை சந்தித்த காபிரியேலின் ஆறுவித நோக்கங்கள்"- இல் அவர் அதைப் பற்றி பேசினார். "வெளிப்படுத்துதல் நான்காம் அதிகாரத்தில்"- அதைப் பற்றி பேசினார் மற்றும் பல பிரசங்கங்களிலும் பேசி இருக்கின்றார். ஏன்? ஏனெனில் இது பிரதான முக்கியத்துவமான வெளிப்பாடு. ஒரு தலைமுறையில் ஒவ்வொரு தீர்க்கதரிசியும் தனது கூட்டத்தாரோடு சேர்க்கப்படுகிறார். நியாயத்தீர்ப்பில், ஒவ்வொரு தலைமுறையினரிடமிருந்தும் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள், பூமியின் மேல் அவர்களுடைய காலத்தில் அனுப்பப்பட்ட ஒரே ஒரு தீர்க்கதரிசியோடு இனங்கண்டு கொல்லப்படுவார்கள்.
17நோவாவின் காலத்தில், தெரிந்து கொள்ளப்பட்ட அனைவரும் "நோவா" என்ற ஒரே ஒரு மனிதனைச் சுற்றி இருப்பார்கள். எரேமியாவின் காலத்தில், தெரிந்து கொள்ளப்பட்ட அனைவரும் "எரேமியா" என்ற ஒரே ஒரு மனிதரைச் சுற்றி கூடிவருவார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் காலத்தில், 2000 ஆண்டுகளுக்கு முன்பு, தெரிந்து கொள்ளப்பட்ட அனைவரும் பன்னிரண்டு அப்போஸ்தலர்களைச் சுற்றி கூடிவருவார்கள். அந்த பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் பூமியை நியாயம் தீர்ப்பார்கள் அதேபோன்று இன்றும், தெரிந்து கொள்ளப்பட்ட அனைவரும் ஒரே ஒரு மனிதனைச் சுற்றி கூடிவருவார்கள், அது தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு. பின்னர், நான், தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு மற்றும் என்னுடைய அப்போஸ்தலர்கள், அனைத்து பூமியின் குடிகளையும் நம்முடைய காலத்தில் நியாயந்தீர்ப்போம். அவர்கள் நான் உயிருடன் இருந்து பூமியில் பிரசங்கித்த போது ஜீவித்திருந்தவர்கள். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
18ஒவ்வொரு தீர்க்கதரிசியும் அவனுடைய கூட்டத்தாரோடு கூடிவருவார்கள். "தானியேலே, நீ இளைப்பாறிக்கொண்டிருந்து பிறகு எழும்பி உன் கூட்டத்தாரோடு சேர்ந்து கொள்வாயாக" என்று தான் தானியேலுக்கு சொல்லப்பட்டது. நோவா தன்னுடைய கூட்டத்தினருடன், மோசே தன்னுடைய கூட்டத்தினருடன், ஒவ்வொரு தீர்க்கதரிசியும் அவனுடைய கூட்டத்தினருடன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் அவர் பூமியில் பிரசங்கிக்கும்போது அவரை விசுவாசித்தவர்களும்.
19கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் அப்போஸ்தலர்களும், பவுலும் அவனுடைய கூட்டத்தாரும், மார்ட்டின் லூதர் மற்றும் அவனுடைய கூட்டத்தாரும், கொலம்பா மற்றும் அவனுடைய கூட்டத்தாரும், வில்லியம் பிரன்ஹாம் மற்றும் அவனுடைய கூட்டத்தாரும், ஜான் வெஸ்லி மற்றும் அவனுடைய கூட்டத்தாரும், அவர்கள் உயிரோடிருந்து பூமியில் பிரசங்கித்த போது அவர்களை விசுவாசித்தவர்கள். மேலும் இன்று, நியாயத்தீர்ப்பில் ஒரு குழு மட்டுமே எழும்பும், அது தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு மற்றும் அவரது குழுவாக இருக்கும். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
20நியாயதீர்ப்பில், பூமி முழுதும், தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவின் பெயரைக் கேட்கும்போது, அவர்கள் பூமியில் உயிருடன் இருந்தபோது பூமியில் அழைக்கப்பட்டது அந்த பெயர் என்பதை அறிந்து கொள்வார்கள். எரேமியாவின் தலைமுறையை நோவா நியாயந்தீர்க்கமாட்டார். ஆமோஸின் தலைமுறையை ஏசாயா நியாயந்தீர்க்கமாட்டார். யோவான் ஸ்நானகன் இன்றைய தலைமுறையை நியாயந்தீர்க்கமாட்டார். அப்போஸ்தலர்களும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் இன்றைய தலைமுறையை நியாயந்தீர்க்க மாட்டார்கள். ஆனால் இந்த தலைமுறையை நியாயந்தீர்ப்பவர் ஒருவர் இருக்கிறார், அவர் தான் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு. ஏப்ரல் 24, 1993 அன்று மத்தேயு 23:34 முதல் 35-ன் படியாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அனுப்பினார். முழு வேதாகமும் அவ்வாறு கூறுகிறது. [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
21ஒவ்வொரு தீர்க்கதரிசியும் மரித்து அவருடைய ஜனதாரிடத்தில் சேர்க்கப்பட்டார்கள்! ஆபிரகாமிலிருந்து வந்த கோத்திரப்பிதாக்கள் தீர்க்கதரிசிகள் என்பதால் தங்கள் ஜனதாரிடத்தில் சேர்க்கப்பட்டார்கள்! ஒவ்வொரு தீர்க்கதரிசியும் தனது கூட்டத்தாரும். நோவாவும் அவனுடைய கூட்டத்தாரும் ! எலியாவும் அவனுடைய கூட்டத்தாரும்! யோவான் ஸ்நானகன் மற்றும் அவனுடைய கூட்டத்தாரும்! யோவான் ஸ்நானகனுக்குப் பிறகு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் அவர்களுடைய கூட்டத்தாரும் அங்கே இருந்தனர்.
22கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குப் பிறகு, பவுல் தன்னுடைய கூட்டத்தாரோடு வந்தார். தீமோத்தேயு, தீத்து, சில்வானு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மற்றும் அப்போஸ்தலர்களின் கூட்டத்தாரோடு இல்லை, ஆனால் பவுலின் கூட்டத்தாரோடு இருந்தனர். பவுலுக்குப் பிறகு, பல தீர்க்கதரிசிகள் புறஜாதி தேசங்களுக்காக எழுப்பப்பட்டனர், ஏனென்றால் அவர் நேற்றும், இன்றும் என்றென்றும் மாறாதவராக இருக்கிறார். நேற்று பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகளுடன் மற்றும் மத்தேயு 23: 34 முதல் 35 படி அவர் தனக்குப் பின் தீர்க்கதரிசிகளை வாக்களித்தார். ஒவ்வொரு தீர்க்கதரிசியும் தம்முடைய நியாயத்தீர்ப்புடன் வருவார்கள், நியாயத்தீர்ப்பில், ஒவ்வொரு தீர்க்கதரிசியும் தம்முடைய ஜனத்தாரோடு வந்து தங்களுடைய தலைமுறையைக் கண்டனம் செய்வார்கள். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
23என்னை அனுப்பிய சர்வவல்லமையுள்ள தேவன் இன்று மாலை நான் என்ன பிரசங்கிக்கிறேன் என்பதைக் காண அனுமதித்தபோது, அது ஏப்ரல் 24, 1993 அன்று ஒரு பரவசத்தில் இருந்தது. பரவசங்கள் வெளிப்பாட்டின் மிக உயர்ந்த வடிவமாகும். நீங்கள் விழிப்புடன் இருப்பீர்கள், இயற்கையான காரியங்களை நீங்கள் வெளிப்பாட்டில் காண்பீர்கள். நான் பரலோகத்தில் கொண்டு செல்லப்பட்டேன், நான் பரலோகத்தில் இருப்பதை அறிந்தேன், பூமிக்கு மிக உயரத்தில் இருந்தேன்.
24மேகங்களுக்கு மேலே மற்றொரு பூமி இருந்தது. பல்வேறு குழுக்களை என்னால் காண முடிந்தது, ஒவ்வொன்றும் ஒரு இராஜ்ஜியத்தில் கிலோமீட்டர்கள் பரப்பளவில் பரவி இருந்தது. ஒவ்வொரு இராஜ்யத்திற்கும் ஒரு வாசல் இருந்தது, மற்ற இராஜ்யங்களிலிருந்து பிரிக்கப்பட்டது. மெதடிஸ்டுகளின் இராஜ்யம் என்று எனக்குத் தெரிந்த மற்றொரு இராஜ்யத்தைக் காணும் வரை நான் அவர்களைப் பார்த்தேன். நான் நெருங்கும்படியாக அனுமதிக்கப்படவில்லை, ஆனால் பூமியில் ஆர்வமுள்ள ஒரு மெதடிஸ்டாக இருந்த ஒரு பெண்ணை தூரத்திலிருந்து பார்க்க முடிந்தது, அது மெதடிஸ்ட் இராஜ்யத்தின் வாசல் என்பதை நான் இனங்கண்டுகொண்டேன்!
25பரவசத்தின் முடிவில், இன்னொரு வெண்மையான இடத்தை நான் கண்டேன், அதை அணுக முடியவில்லை, ஏனென்றால் அதைச் சுற்றி ஒரு பெரிய இடைவெளி இருந்தது! இது ஏராளமான விண்மீன் வீடுகளைக் கொண்ட ஒரு நகரமாக இருந்தது, இது ஒரு மகத்தான மற்றும் பரவலான வெண்மையான மலையை உருவாக்கியது. இது ஒரு மங்கலான வெள்ளை மேகத்தால் மூடப்பட்டிருந்தது மற்றும் அதன் மூலம் கிலோமீட்டர் பரப்பளவில் ஒருவரால் ஒரு வீட்டைப் பார்க்க முடியும். நான் எந்த ஊதா பூக்களையும் பார்க்கவில்லை; அது அனைத்தும் மேகத்தால் மூடப்பட்டிருந்தது! நான் பார்த்த மற்ற எல்லா இராஜ்யங்களில் உள்ளே மக்கள் இருந்தார்கள், ஆனால் அங்கே யாரும் இல்லை, எந்த பறவையும் மேலே பறக்க முடியவில்லை! அந்த இடம்தான் என் கவனத்தை ஈர்த்தது, நான் மிகவும் கவனித்தேன். நான் பரவசத்திலிருந்து வெளியே வந்தபோது, அது பரதீசு என்பதை நான் நினைவில் வைத்திருந்தேன், ஆனால் அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை!
26ஆனால் ஒரு மாதத்திற்கு முன்பே, சர்வவல்லமையுள்ள தேவன் எனக்காகவும் என் மக்களுக்காகவும் ஒரு பகுதி ஒதுக்கியதை அங்கே எனக்குக் காட்டுகிறார் என்பதை நான் புரிந்துகொண்டேன். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்]. இந்த நகரத்தை பாதுகாக்கும் பரிசுத்த தேவதூதர்கள் தான் மேகங்களாக இருந்தனர். ஜூலை 8, 2002 முதல் நடுராத்திரி சத்தம் பூமியில் ஒலித்தபோது, இந்த இராஜ்யத்தின் வாசல்கள் பரலோகத்தில் திறக்கப்பட்டன! பூமியில் ஒலிக்கும் ஒவ்வொரு பிரசங்கமும், அவை பரிசுத்தவான்களின் பெயர்கள் உச்சரிக்கப்படுவதாகும்.
27தெரிந்துகொள்ளப்பட்ட ஒருவர் இந்தச் செய்தியைக் கேட்டு, "அல்லேலூயா நான் விசுவாசிக்கிறேன்!" என்று சொல்லும்போது "அல்லேலூயா, இது என் பெயர் உச்சரிக்கப்படுகிறது." என்று தேவனுக்கு கேட்கப்படுகிறது. ஆனால் நீங்கள் பிசாசின் புத்திரர் என்றால், நீங்கள் முழு செய்தியையும் கேட்பீர்கள், அது உங்களுக்கு ஒரு அர்த்தத்தையும் கொடாது, ஏனென்றால் உங்கள் பெயர் இந்த புத்தகத்தில் எழுதப்படவில்லை, உலகத்தின் அஸ்திவாரத்திற்கு முன்பிருந்தே உங்கள் தலைமுறையின் ஜீவ புத்தகம் இது தான். புரிந்து கொள்ளக்கூடியவன் எவனோ, அவன் புரிந்து கொள்ளக்கடவன்!