(2009 டிசம்பர் 03, வியாழக்கிழமை மாலை அபிட்ஜான் - ஐவரி கோஸ்டுக்கு அருகிலுள்ள அன்யாமாவில் பிரசங்கிக்கப்பட்டது)
1எனது கிராமம் இப்பொழுது ஒரு பெண் போதகரைக் கொண்டாடியது. நான் நிதி ரீதியாக பங்களிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். நிச்சயமாக நான் செய்யவில்லை, நான் அதை ஒருபோதும் செய்யவும் மாட்டேன்! தமஸ்குவுக்கு செல்லும் வழியில் பவுலுடன் இருந்தவர்கள் மீது விடுதலையின் தாற்றுக்கோல்களை போல, தேவதூதர்கள் அவர்களுக்கு மேலே பாடுவது அவர்கள் மீது எதையும் உருவாக்கவில்லை என்றால், அவர்கள் ஒருபோதும் என்னை தங்களுடைய சூனியத்திற்குள் இழுக்க முடியாது. ஒரு பெண்ணை அவளது மாதவிடாயின் காலத்தில் பிரசங்கபீடத்தில் வைப்பதை, முழு கிராமமும் ஒப்புக் கொள்ளலாம், ஆனால் யோசுவாவோ: நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் என்றான்! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கின்றனர்].
2நான் பதிலளிக்க வேண்டிய இரண்டு கேள்விகள் இங்கே உள்ளன, நல்லது, சகோதரர் பிலிப்பு, ஒரு தேவனுடைய ஊழியக்காரன் கன்னிகையை திருமணம் செய்துகொள்வது சிறப்பானதா அல்லது அவசியமானதா? அதற்கான பதில் இங்கே உள்ளது: எதுவாயினும் சரிதான், ஆனால் முதலில் முக்கியமானது என்னவென்றால், தேவனுடைய ஊழியக்காரர் அது அவர்தான்! அவரும் அவளைப் போலவே நன்றாக ஜீவித்திருந்தால், இந்த கிருபையானது அவருக்கு சரியானதாக இருக்கக்கூடும், இல்லையென்றால், கிருபையின் கீழாக, தேவனின் ஊழியனுக்கு ஒரு கன்னிகையை திருமணம் செய்ய வேண்டிய கடமை கிடையாது.
3இரண்டாவது கேள்வி: சகோதரர் பிலிப்பு, நம்முடைய பரலோக நகரத்தின் வாசல்கள் 2002 இல் மட்டுமே திறக்கப்பட்டிருந்தால், 1993 முதல் மரித்தவர்கள் எங்கே இருக்கிறார்கள், மேலும் யார் அங்கு செல்ல வேண்டும்? சகோதரரே, வாசல்கள், அவைகள் இங்கே வெவ்வேறு ஊழியங்களாக உள்ளன ஆனால் தீர்க்கதரிசி செய்தியாளர் தான் சுவரின் வாசலாக இருக்கின்றார். ஆகவே, மரித்தவர்கள், கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டிருந்த போதிலும், பழைய ஏற்பாட்டில் உள்ளவர்கள் போலவே வெறுமனே தூங்கிவிட்டார்கள். 2002 ஆம் ஆண்டில் சத்தம் பூமியில் ஒலித்தபோது, பரலோகத்தில் வாசல்கள் திறக்கப்பட்டன. கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷ மற்றும் பிரன்ஹாமிஸ்ட் திரைகள் மேலிருந்து கீழாகக் கிழிக்கப்பட்டன! மேலும் நடுராத்திரி சத்தத்தின் செய்தியானது பூமியின் மீது பிரசங்கிக்கும் போது, அது கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்ட் வலைகளை கிழித்தெறிந்து பாதாளத்தின் வாசல்களை அசைக்கிறது என்று நான் கூறினேன். ஆகவே, 2002 ஆம் ஆண்டில், நடுராத்திரி சத்தத்தின் எதிர்பார்ப்பிலும் நம்பிக்கையிலும் மரித்த அனைவரும் இரட்சிக்கப்படுகிறார்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் “ஆமென்! ” என்கின்றனர்].
4இப்போது, நான் இதைச் சொல்லட்டும், தேவன் தர்க்கரீதியானவராக இருந்தால், இஸ்ரவேல் தேசம் முழுவதும் யூதர்களுக்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும் ஆனால் நீங்கள் ஓரினச்சேர்க்கையாளர்களையும் பெண்புணர்ச்சியாளர்களையும் தேர்வு செய்யும்போது, பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் நாட்டில் அவர்கள் தற்போது இருக்கும் இடத்தில் இருக்க தெய்வீக உரிமை உண்டு என்று தேவன் கற்பிக்கிறார்! பிசாசை வழிபட்டதன் மூலம் அவர்களின் மூதாதையர்கள் எதை இழந்தார்களோ, அதே பிசாசை நீங்களும் வணங்க விரும்பினால், அதையேத்தான் அவர்களுக்கு மீட்டு அளிக்க வேண்டும்! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கின்றனர்].
5ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் பெண்புணர்ச்சியாளர்கள் அரேபியர்களின் மண்ணில் அணிவகுக்க முடியுமா? இல்லை! பழங்காலத்தில், இஸ்ரவேலின் தேவன், அது பரிசுத்த தீர்க்கதரிசிகள் பிரசங்கித்த யெகோவா ஆனால் இன்றைக்கு அமெரிக்காவே இஸ்ரவேலின் தேவன்! அவர்களிடம் அதை சொல்ல வேண்டியவன் நான் அல்ல, அதனால்தான் நியாயத்தீர்ப்பு மற்றும் கண்டனத்தின் செய்தியுடன் எலியாவையும் மோசேயையும் தேவன் அனுப்புகிறார். [ஆசிரியர் குறிப்பு: சபையார் “ஆமென்!” என்கின்றனர்].
6நல்லது, களைகளின் இரகசியத்தைப்பற்றி பிரசங்கித்த பிறகு, அத்தகைய குழந்தையானது உண்மையில் தங்கள் கணவரின் குழந்தை அல்ல என்பதை சகோதரிகள் ஐந்து பேரை இப்போது ஒப்புக் கொள்ளும்படி செய்திருக்கிறது! அதை அவர்கள் ஒருபோதும் தங்கள் கணவரிடம் சொல்லவில்லை மேலும் அவர்கள் ஞானஸ்நானத்தின் போது கூட அதை அறிக்கை செய்யவில்லை! தேவன் அதைப் பற்றி பேச வேண்டியிருந்து அது அவர்களை அறிக்கை செய்யும்படியாக தொல்லைக்கு உள்ளாக்கியது. வெளிப்படையான பாவ அறிக்கையானது அவ்வண்ணமே எடுக்கப்படுவதில்லை என்ற முடிவிற்கு நான் வந்தேன். மக்கள் தங்கள் மனசாட்சியின் பாரசுமையை இறக்கி வைப்பதற்காக அறிக்கையிடுகிறார்கள். ஏனெனில் அவர்கள் சுத்தமாக்கப்படவும், வெண்மையாக்கப்படவும், புடமிடப்படவும் அதை செய்ய வேண்டும் என்று தானியேல் 12 கூறுகிறது, ஆனால் அவர்கள் தங்கள் மனசாட்சியின் சுமையை இலகுவாக்கிக் கொள்ள அதைச் செய்கிறார்கள். இவ்வாறாக அறிக்கையிட்ட பாவங்களும், முடிந்தும் ஒரு போதும் அறிக்கையிடப்படாத மற்றவைகளும் உண்டு. ஆனால், நீங்கள் வேண்டுமென்றே அறிக்கையிட மறுத்த பாவங்களுடன் நீங்கள் ஒருபோதும் பரலோகத்திற்கு செல்ல மாட்டீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் வேண்டுமென்றே அறிக்கையிட மறுத்த பாவங்களோடு மரணம் உங்களை முந்திக்கொள்ளும்படி தேவன் செய்வார். அவற்றை அறிக்கையிடாமல் இருக்க நீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்கள் ஆனால் அதனுடன் நீங்கள் பரலோகத்திற்கு செல்ல மாட்டீர்கள்! இப்போது, சகோதரர்களே, அவள் அதை அறிக்கையிடும் போது, "ஓ சகோதரர் பிலிப்பு, இது ஒரு கடினமான காரியம், ஏனெனில் நீங்கள் என் இடத்தில் இல்லை, சகோதரியை மன்னிப்பது கடினமானது ..." என்று சொல்லாதீர்கள்.
7சகோதரர்களே, அதை மோசமாக எடுத்துக் கொள்ளாதீர்கள், அந்த சகோதரியை நேசியுங்கள் மேலும் அந்த சிறிய குற்றமற்ற குழந்தை ஒருவேளை தேவனுடைய பிள்ளையாக இருக்கக்கூடும். நீங்கள் பார்க்கிறீர்களா? ஞானஸ்நானத்தின் போது பாஸ்டர் அந்த தம்பதியினரிடம் இந்த காரியங்களை கேட்க வேண்டும், மேலும் ஒருவர் மற்றவருக்கு உண்மையில்லாமல் இருக்கிறார் என்று அறிக்கையிடும் போது அது பரிசத்திற்கு பிறகு அல்லது பரிசம் இல்லாமலோ அவள் அவனுடைய வீட்டில் இருக்கும் வேளையில், அந்த சகோதரர் அல்லது சகோதரி ஞானஸ்நானத்தைப் பெற முடியாது, ஆனால் அவர் அதை அறிக்கையிட்டு மற்றவரால் மன்னிக்கப்பட்ட பிறகே இது கூடும்.
8இவை நித்திய ஜீவனின் வார்த்தைகள்! அந்த கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷ மற்றும் பிரன்ஹாமிஸ்ட் சபைகளில் நீங்கள் கேட்கும் அனைத்தும் அவை மனிதனின் கற்பனைகள். நீங்கள் பார்க்கிறீர்களா? அவை பாவனைகள்! இந்த பாவனைகள் இப்போது நடுராத்திரி சத்தத்திற்கு மிக நெருக்கமாகி வருகிறது அதனால் அமெரிக்காவில் வட கரோலினாவில் மார்க் கிரிசார்ட் என்ற வெள்ளை போதகன் சபையின் தலைவராக அமேசிங் கிரேஸ் பாப்டிஸ்ட் சபையில் நூற்றுக்கணக்கான தவறான வேதாகமங்களை எரிப்பதாக அறிவித்தான்; இருப்பினும், அவன் ஒரு பாப்டிஸ்ட். இது நடுராத்திரி சத்தத்திற்கு முன் பூமியில் ஒருபோதும் ஏற்படாத ஒரு காரியம்! அவை பாவனை விதைகள். இந்த போதகனைப் பொறுத்தவரை, ஜேம்ஸ் மன்னன் பதிப்பு மட்டுமே ஒரே ஆங்கில வேதாகமம், ஆனால் பிரெஞ்சு மொழியைப் பொறுத்தவரை, அவன் எதுவும் சொல்லவில்லை, அதேசமயம் ஜேம்ஸ் மன்னன் பதிப்பு பிரெஞ்சு மொழியில் இருக்கவில்லை. டாமி ஆஸ்போர்ன், யோங்கி சோ மற்றும் மற்றவர்களின் புத்தகங்களை எரிக்காமல் பில்லி கிரஹாம், ரிக் வாரன், ஜிம்மி ஸ்வாக்கார்ட், பென்னி ஹின், ஜான்-பால் II மற்றும் பெனடிக்ட் XVI ஆகியோரின் புத்தகங்களையும் அவன் எரித்தான். இது என்ன? இது பாசாங்குத்தனம்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் “ஆமென்!” என்கின்றனர்].
9ஜேம்ஸ் மன்னன், லூயிஸ் செகாண்ட் மற்றும் டார்பி பதிப்புகள் மட்டுமே நல்லவை என்றும், மற்ற அனைத்தும் பிசாசிலிருந்து வந்தவைகள் எரிக்கப்பட வேண்டும் என்றும் போதிக்கும் மற்றொரு போதகனும் இருக்கிறான். ஆனால் அதைச் செய்வதற்கு முன், அவன் தனது அழைப்பையும் பணி நியமனத்தையும் கொடுக்க வேண்டும், எந்த தெய்வீக ஆணைப்படி அவன் அதைச் செய்கிறான். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கின்றனர்]. உங்கள் காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசி செய்தியாளனிடமிருந்து வராத அனைத்தும், அவை சாத்தானின் கவனச்சிதறல்கள். அது உங்களை திசை திருப்பக்கூடாது. ஆமென்!
10முடிப்பதற்கு, ஒரு பத்தியை நான் விளக்க விரும்புகிறேன்: ஓசியா 1: 4…இல் தேவன் உங்களிடம் செய்யச் சொல்லாத ஒன்றை ஒருபோதும் செய்ய வேண்டாம். ஒரு காரியத்தைச் செய்ய உங்களுக்கு தெய்வீகமான உரிமை உண்டு. உங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தால் அதை செய்யுங்கள். "... உமது எஜமானாகிய ஆகாபின் வீட்டை நீ அடித்து விடுவாய்; என் ஊழியக்காரர்களான தீர்க்கதரிசிகளின் இரத்தத்தையும், யெகோவாவின் எல்லா ஊழியர்களின் இரத்தத்தையும் நான் பழிவாங்குவேன்" என்று தேவனே யெகூவிற்கு கட்டளையிட்டார். மற்றும் யெகூ தேவனுக்குக் கீழ்ப்படிந்தான், இவ்வாறு அவன் செய்தான்! நீங்கள் பார்க்கிறீர்களா?
112 இராஜாக்கள் 9 மற்றும் 10 ஐ வாசியுங்கள், தேவன் அவருக்கு கொடுத்த பணியில் யெகூ அதிக வைராக்கியம் கொண்டிருந்தார் என்பதை நீங்கள் காண்பீர்கள்! நீங்களோ, "ஓ சகோதரர் பிலிப்பு, தேவனே அதைச் செய்யச் சொன்னார், எலியா தீர்க்கதரிசி கூட அதைச் செய்வார் என்று சொன்னார்!" என்று சொல்கிறீர்கள். சரிதான், ஆனால், தேவன் கண்டுபிடிக்காத ஒரு வழியை சவுல் எடுத்துக் கொண்டாலும், நீங்கள் எப்படி அவர் மீது கை வைக்க முடியும்? உங்களுடைய எஜமானன் உங்களிடம் கேட்டுக் கொண்டால் அவருடைய மகன்களை நீங்கள் ஒழுங்குபடுத்தலாம் ஆனால் பயத்தோடும் மிகுந்த நிதானத்தோடும் செய்ய வேண்டும் ஏனெனில் அவர்கள் உங்களுடைய எஜமானரின் பிள்ளைகள்! உங்களுடைய எஜமானரிடம் அவருடைய பிள்ளைகளின் நிமித்தம் மன்னிப்பு கேட்க தவறினால், நீங்கள் உங்கள் எஜமானருக்குக் கீழ்ப்படிவதில்லை.
12ஒரு எதிரியின் தேசத்தை எதிர்த்துப் போராடுவது போல் யெகூ நடந்து கொண்டான், ஒரு நாள், தேவன் கோபத்திலிருந்து திரும்பும்போது, யெகூவின் நகரத்திற்குச் சென்று, யெகூ யெஸ்ரேயல் நகரத்தில் செய்த எல்லா தீமைகளுக்கும் அவனைச் செலுத்தும்படி செய்ய வேண்டும். நீங்கள் பார்க்கிறீர்களா? தேவன் தனது கோபத்திலிருந்து விலகி, பாழடைந்த ராஜ பட்டணமான யெஸ்ரயேலைக் கண்டபோது, அவர் இஸ்ரவேலை நினைவு கூர்ந்தார், "என் வேலைக்காரன் ஆகாபின் வீட்டார் யாவரையும் அழிக்க யெகூ ஏன் அஞ்சவில்லை! சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள், சுதந்திரமானவர்கள், அடிமைகள், நீதி உள்ளவர்கள் மற்றும் அநீதியுள்ளவர்கள்?" தேவன் ஆகாபை நினைவு கூர்ந்தார், தேவன் துக்கமடைந்து யெகூவின் வீட்டை அடித்தார்!
13கலகக்காரராகிய இஸ்ரவேல் அவளுடைய தேசத்திலிருந்து நாடு கடத்தப்படுவார் என்றும் எருசலேம் ஒரு வயலாக உழவு செய்யப்படும் என்றும் தேவன் சொன்னபோது, அவர், “இஸ்ரேலே, நான் உன்னைக் கைவிட்டால், என் வலது கை என்னைக் கைவிடட்டும்! என்றும் சொன்னார், இஸ்ரவேல் என்றால் "தேவனுக்கு மணமுடிக்கப்பட்டவள்" என்று அர்த்தமாகும். ஆனால் 1947 ஆம் ஆண்டில் தேவன் அவளை நினைவு கூர்ந்த போதும் இஸ்ரவேல் தனது சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கு முன்பு சுமார் 2000 ஆண்டுகள் தனது நிலத்திலிருந்து நாடு கடத்தப்பட்டாள். கேட்பதற்கு காதுகளுடையவன் கேட்கக்கடவன்.