



Kacou 93 (Kc.93) : பரிசுத்தவான்களின் விசுவாசம்
(ஜனவரி 14, 2010, வியாழக்கிழமை மாலை அபிட்ஜான் - ஐவரி கோஸ்டுக்கு அருகிலுள்ள அன்யாமாவில் பிரசங்கிக்கப்பட்டது)
1 இப்போது, நான் பரிசுத்தவான்களின் விசுவாசம் என்ற என்னுடைய பொருளுக்கு வருகிறேன். தீர்க்கதரிசன விசுவாசத்தை போதிக்காத எந்தவொரு பாஸ்டரும் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
2 இப்போது, நான் எசேக்கியேல்1-ஆம் அதிகாரத்தைப் படிக்கப் போகிறேன் ... நல்லது:இதோ, வடக்கேயிருந்து பூசல்காற்றும் பெரிய மேகமும், அத்தோடே கலந்த அக்கினியும் வரக்கண்டேன்; அதைச் சுற்றிலும் பிரகாசமும், அதின் நடுவில் அக்கினிக்குள்ளிருந்து விளங்கிய சொகுசாவின் நிறமும் உண்டாயிருந்தது.அதின் நடுவிலிருந்து நாலு ஜீவன்கள் தோன்றின; அவைகளின் சாயல் மனுஷசாயலாயிருந்தது.அவைகளில் ஒவ்வொன்றுக்கும் நந்நான்கு முகங்களும், ஒவ்வொன்றுக்கும் நந்நான்கு செட்டைகளும் இருந்தன. அவைகளுடைய உள்ளங்கால்கள் கன்றுக்குட்டியின் உள்ளங்கால்களுக்கு ஒப்பாயிருந்தன; அவைகள் துலக்கப்பட்ட வெண்கலத்தின் வருணமாய் மின்னிக்கொண்டிருந்தன. அவைகளுடைய செட்டைகளின்கீழ் அவைகளின் நாலு பக்கங்களிலும் மனுஷகைகள் இருந்தன; அந்த நாலுக்கும் அதினதின் முகங்களும் அதினதின் செட்டைகளும் உண்டாயிருந்தன. அவைகள் ஒவ்வொன்றின் செட்டைகளும் மற்றதின் செட்டைகளோடே சேர்ந்திருந்தன; அவைகள் செல்லுகையில் திரும்பாமல் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாய்ச் சென்றன. மேலும் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாய்ச் சென்றன. அவைகள் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாய்ச் சென்றது; ஆவி போகவேண்டுமென்றிருந்த எவ்விடத்துக்கும் அவைகள் போயின; போகையில் அவைகள் திரும்பிப்பார்க்கவில்லை." ஆமென்!
3 இந்த பத்தியை ஒரு பிரன்ஹாமிஸ்ட் பிரசங்கத்தை நான் சமீபத்தில் கேட்டேன். அவர் கூறினார்: "... என் சகோதரரே, நான்கு பேரும் செல்லும்போது, அவர்கள் ஒவ்வொருவரும் நேராக முன்னோக்கிச் சென்றார்கள் என்று வேதாகமம் கூறுகிறது; என்றார். அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி திரும்பிப் பார்க்கவில்லை! ... என் சகோதரரே, என் சகோதரியே, நீங்கள் சபையில் இருந்தால்! உங்கள் சகோதரனின் குறைபாடுகளை ஒருபோதும் பொருட்படுத்தாதேயுங்கள்! என் சகோதரி, உங்கள் சகோதரியின் காலணிகளை இச்சிக்காதீர்கள்! உங்களுக்கு முன்னே பாருங்கள். ”நீங்கள் பார்க்கிறீர்களா? இந்த பிரான்ஹாமிஸ்ட்கள் எசேக்கியேல்1 ஆம் அதிகாரத்தை இந்த விதமாக தான் புரிந்து கொண்டார்கள்.
4 இப்போது உங்களுடைய காலத்தின் தீர்க்கதரிசி சொல்வதைக் கேளுங்கள்: சிங்கம், கன்று, மனிதன் மற்றும் கழுகு ஆகியவை நான்கு வெவ்வேறு ஜீவன்கள்; இருப்பினும் இது நான்கு அம்சங்களைக் கொண்ட ஒரு உயிரினம் மற்றும் ஒவ்வொரு உயிரினமும் பரிபூரணத்துடன் நடக்கிறது. அவைகளுக்கு ஒரே ஆவி இருக்கிறது, ஆனால் நான்கு ஜீவன்களும் ஒவ்வொன்றும் அதன் வகைக்கு ஏற்ப இனப்பெருக்கம் செய்யும்! ஆகவே, அத்தகைய காலகட்டத்தில் ஆவியின் கனிகள் இதுபோன்ற மற்ற காலங்களின் ஆவியின் கனிகளிலிருந்து வேறுபடும்! அத்தகைய காலத்தின் விசுவாசம் அத்தகைய பிற காலத்தின் விசுவாசமாக இருக்காது. அத்தகைய ஒரு காலத்தில் உள்ள கணிகள் இன்னொரு காலத்தில் அதே ஆவியின் கனிகளிலிருந்து வேறுபட்டு இருக்கும்! அத்தகைய ஒரு காலத்தின் பாவமானது இன்னொரு காலத்தின் பாவமாக இருக்காது. [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
5 யோவான் ஸ்நானகன் பிரசங்கிக்கும்போது, எடுத்துக்கொள்ளப்படுதலுக்கென்று ஒரே முறையாக பரிசுத்தவான்களுக்காக அனுப்பபட்ட பரிபூரண விசுவாசமாக அது இருந்தது! அது முடிந்தது! ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் அப்போஸ்தலர்களும் யோவான் ஸ்நானகனுக்குப் பிறகு வந்தார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் அப்போஸ்தலர்களுக்கும் பிறகு பவுல் வந்தான்!
6 பவுல் பிரசங்கிக்கும்போது, அது தானே எடுத்துக் கொள்ளப்படுதலுக்கான பரிபூரண விசுவாசமாக இருந்தது! 1 தெசலோனிக்கேயர் 4:15 முதல் 18-ல், அது முடிந்துவிட்டது என்று பவுல் கூறுகிறார்! இது முத்திரிக்கப்பட்டுள்ளது! ஆனால் மற்றொரு செய்தியாளன் தோன்றியபோது, தன்னுடைய காலத்தில் தான் ஒரே முறையாக எடுத்துக்கொள்ளப்படுதலின் விசுவாசமானது பரிசுத்தவான்களுக்கு அனுப்பப்படும்படியாக இந்த செய்தியாளன் வந்தான். மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானத்தை யோவான் ஸ்நானகன் பிரசங்கிக்கும்போது, அவனுடைய ஞானஸ்நானம் பொய்யானது என்றும், ஞானஸ்நானமானது பாவ மன்னிப்பிற்காக இருக்க வேண்டும் என்றும் யாராவது கூறினால்; இந்த மனிதன் எவ்வளவு சொற்பொழிவாற்றினாலும், அவனது விளக்கம் எவ்வளவு தெளிவாக இருந்தாலும், பிசாசுதான் அவனை ஊக்குவித்தான். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
7 மேலும் 15 ஆம் நூற்றாண்டில், மார்ட்டின் லூதர் தன்னுடைய விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல் என்ற செய்தியைப் பிரசங்கம் செய்து, பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் முழுக்கு ஞானஸ்நானம் கொடுக்கின்ற போது, அது தவறானது என்றும் பாவ மன்னிப்பிற்க்காக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்றும் யாராவது கூறினால், அப்போஸ்தலர்2:38-ஐ அடிப்படையாகக் கொண்ட அவனது விளக்கம் எவ்வளவு தெளிவாக இருந்தாலும், பிசாசுதான் அவனை ஊக்கப்படுத்தியது! அத்தகைய மனிதனின் பாதையில் நீங்கள் நிற்க்கக்கூடாது. அவனது தலையில் அக்கினி புழம்புகள் அவனுடைய தலையின் மீது தோன்றினாலும், அபிஷேகம் அவனை முன்னும் பின்னுமாகத் முறுக்கிக் கொண்டிருந்தாலும், அது பிசாசு! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
8 அவன் எத்தனை மரித்தவர்களை உயிர்த்தெழுப்பினாலும், அவனது கைகளால் எத்தனை அற்புதங்கள் செய்யப்பட்டாலும், அது ஒரு முனையிலிருந்து மற்றொன்று வரை அது பிசாசாக இருக்கிறது. அந்த சுவிசேஷ தலைவர்களிடமும் இன்று அதே காரியமாக உள்ளது. அவர்களின் பிரசங்கங்கள் அவர்களுடைய தலைமுறையின் உயிருள்ள தீர்க்கதரிசியின் எதிரொலியாக இல்லாத மாத்திரத்திலேயே, அவர்களை ஊக்குவிப்பது ஒரு பிசாசு மற்றும் அவர்களின் அற்புதங்கள் வஞ்சிக்கும் அற்புதங்கள். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்]. இப்போது, எசேக்கியேல்1 ஐக் கருத்தில் கொள்வோம். கன்றின் காலத்தில், நான்கு பேரும் ஒன்றுதான் என்பதைக் காண்பிப்பதற்கு சிங்கம், மனிதன் மற்றும் கழுகு ஆகியவற்றின் சுவடு இருக்கும். ஆமென்!
9 இவை அனைத்தையும் தவிர, அவையாவும், யெஷ்வா-ஹமாஷாயாக்கள் (Yehshwah-ha'mahshyahs) உள்பட மற்றும் மீதமுள்ள அனைத்தும், சாத்தானின் நகச்சாயம் மற்றும் உதட்டுச்சாயமாக இருக்கின்றன! இப்போது அது அந்த பெயரை பதினாறு வழிகளில் எழுத அது உருவாக்குகிறது; ஆனால் அதுவே ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனாக இருந்திருந்தால், முழு உலகிலும் ஒரு வழி இருந்திருக்கும். நீங்கள் பார்க்கிறீர்களா?
10 யோவான் ஸ்நானகனின் விசுவாசத்திலும் வெளிச்சத்திலும் பவுல் நடக்கவில்லை! ஐரேனியஸின் வெளிச்சத்தில் கொலம்பா நடக்கவில்லை! பரிசுத்த டூரீஸின் மார்ட்டினுடைய வெளிச்சத்தில் மார்ட்டின் லூதர் நடக்கவில்லை! மார்ட்டின் லூதர் வெளிச்சத்தில் ஜான் வெஸ்லியி நடக்கவில்லை! மெதடிஸ்டின் விசுவாசத்தில் வில்லியம் பிரன்ஹாம் நடக்கவில்லை மற்றும் வில்லியம் பிரன்ஹாமின் அப்போஸ்தல விசுவாசத்தில் நான் நடக்கவில்லை என்பது தெளிவாகிறது! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
11 இப்போது, தீர்க்கதரிசிகளைப் பற்றிப் பேசுகையில், தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளுக்கு கிருபைகளை வழங்கியுள்ளார். உதாரணமாக, என் ஊழியக்காரர்களான தீர்க்கதரிசிகளுக்கு நான் விடுகதை மூலம் என்னை வெளிப்படுத்துகிறேன், என்று தேவன் கூறுகிறார்: என் தாசனாகிய மோசேயோடு அவ்விதமாக இல்லை, அவனோடு நான் முகமுகமாய் பேசுகிறேன். நீங்கள் பார்க்கிறீர்களா? அவர் விரும்புகிறவர்களின் மேல் அவர் இருக்கமாயிருக்கின்றார்.!
12 மேலும் வில்லியம் பிரன்ஹாம் இவ்விதமாக சொல்லலாம்: எனக்கு மேலே இருக்கும் இந்த அக்கினி ஸ்தம்பம் பேசின அந்த நபர், எனக்கு பின்னே வருபவர், என்னனை விட பெரியவராக இருக்கின்றார். அவர் கூர் நுனி கோபுரத்தில் மீட்டளிப்பின் தலைக்கல்லை கண்டார். ஏப்ரல் 24, 1993 இன் தரிசனத்தில் உள்ள தூதன், ஆட்டுக்குட்டி மற்றும் எலியாவின் விண்மீன் தொகுப்பே தலைக்கல்லாகும். நீங்கள் பார்க்கிறீர்களா? இவை அனைத்தும் பத்மு தீவில் யோவானின் சிந்தையில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
13 குறிப்பாக இந்த ஏப்ரல் 24, 1993 இன் செய்தியாளன் அவரைப் போன்ற தோற்றத்தை கொண்டிருந்தார் என்று தூதன் கூறியபோது! ஆகவே, யோவான் அவரை ஆராதிக்க விரும்பினான், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வேறு வடிவத்தில் இருக்கிறார் என்பதை அவனால் காண முடிந்தது! ஆனால் அவன் யோவானை நோக்கி: “நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; நான் உன்னோடும் உன் சகோதரரோடும் இயேசுவின் சாட்சியை கொண்டிருக்கிற ஒரு ஊழியக்காரன். தேவனைப் பணிந்து கொள், ஏனென்றால் தீர்க்கதரிசன ஆவி இயேசுவின் சாட்சியாகும்.” யோவானே, இதை யாரிடமும் சொல்லாதே! நீங்கள் பார்க்கிறீர்களா? அது உண்மையிலேயே நான் தானா என்று, எனக்குத் தெரியாது, ஆனால் ஒன்று நிச்சயம்: சர்வவல்லமையுள்ள தேவன் பூமியில் இந்த மகிமையான பணியை நிறைவேற்ற ஒரு ஆப்பிரிக்கனை எழுப்புவார். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
14 நல்லது, நான் பரிசுத்தவான்களின் விசுவாசத்தைப் பற்றி பேசுகையில், அப்போஸ்தல விசுவாசமும் தீர்க்கதரிசன விசுவாசமும் இரண்டு வெவ்வேறு காரியங்கள் என்பதைக் காண்பிக்க விரும்புகிறேன். அப்போஸ்தல விசுவாசம், அப்போஸ்தலர்களின் விசுவாசம் என்பது வேதாகமங்களில் தெளிவாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அப்போஸ்தலர்களின் காலம் முழுவதிலும் இந்த விசுவாசம்தான் செல்வாக்கு செலுத்தியது! உயிர்த்தெழுதலின் போது ஒருவேளை, மூன்றாம் நாள் அதிகாலையில், மகதலேனா மரியாள் இவ்விதமாக: "ஆண்டவரே, நான் உம்மை தொடத் வேண்டியதில்லை, நான் விசுவாசிக்கிறேன்!" என்று கூறியிருந்தால், பின்னர் அங்கே ஏதோ தவறாக இருந்திருக்கும்! ஆனால் அவள் அவரைத் தொட விரும்பினாள் மேலும் கர்த்தராகிய இயேசு அவளை நோக்கி : "என்னைத் தொடாதே!" என்றார். இது என்ன? இதுதான் அப்போஸ்தல விசுவாசம்! விசுவாசிப்பதற்கு முன்பே! பார்க்கின்ற விசுவாசம், விசுவாசிப்பதற்கு முன்பே தொடுகிற விசுவாசம் மேலும் இதுதான் பெந்தேகோஸ்தே மற்றும் பிரன்ஹாமிஸ்ட் விசுவாசம். மேலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களின் மத்தியில் மிகவும் ஆவிக்குரிய அப்போஸ்தலனாக அப்போஸ்தலன் தோமா இருந்தான் என்று என்னால் உங்களுக்கு கூற முடியும். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
15 மாற்கு 16 அதை கூறுகிறது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தபோது, அப்போஸ்தலர்கள் அனைவரும் திடீரென்று அதை விசுவாசித்தார்களேயானால், ஏதோ தவறு இருக்கும்! நீங்கள் பார்க்கிறீர்களா? மற்ற அப்போஸ்தலர்கள் யாரும் தோமாவை விட ஆவிக்குரியவர்கள் அல்ல, இயேசு கிறிஸ்து நேசித்த மற்றும் வெளிப்படுத்துதல் புத்தகத்தை எழுதிய அப்போஸ்தலனாகிய யோவானும் இல்லை! எல்லா அப்போஸ்தலர்களின் சார்பாக 1 யோவான் 1:1 முதல் 3-ல் யோவான் கூறினதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்!
16 அப்போஸ்தல விசுவாசத்தின் சின்னமாக தோமா இருக்கிறான், அவன் திருத்தூதுப்பணியின் பிரதான ஆசாரியன் மற்றும் பிரன்ஹாமிஸ்டுகளின் தந்தையாக இருக்கிறான். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்]. அப்போஸ்தலர்களின் காலத்தில் இது பொதுவான விசுவாசமாக இருந்தது, அந்த நேரத்தில், பெரேயர்கள் வாழ்த்தபட்டார்கள்! அப்போஸ்தல விசுவாசத்தில், அவர்கள் இவ்விதமாக பாடலாம்: "என் தேவனே உமக்கு அருகினில் ... என்பதை புரியாமல் ஏற்றுக்கொள்வார்கள் !". அவர்கள் அதைப் பாடினார்கள், ஆனால் அவர்கள் ஏற்றுக்கொள்வதற்கு முன்பு வசனங்களை ஒப்பிட்டு சரிபார்க்கிறார்கள்! அதையும் மீறி, அவர்கள் தங்கள் காலத்தின் மிக ஆவிக்குரிய கன்னிகைகளாக இருந்தார்கள்! ஆனால் இன்று, பெரேயர்களின் விசுவாசமானது பிசாசுக்குரியதாக இருக்கிறது ஏனென்றால் நாம் கழுகின் காலத்தில் இருக்கிறோம். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
17 இங்கே, ஆயிரக்கணகான மக்கள் இப்போது விசுவாசிக்கின்றார்கள், உலகெங்கிலும் விசுவாசிப்பார்கள், ஏனென்றால் தேவன் இந்த தீர்க்கதரிசன விசுவாசத்தை உலகத்தின் அஸ்திவாரத்திற்கு முன்பே அவர்களுக்கு பரிசாக அளித்துள்ளார். உலக தோற்றத்திற்கு முன்பு நாம் ஒரே குடும்பத்தின் ஒரு பங்காக இருந்தோம், அதனால்தான் நமக்கு ஒரே விசுவாசம் இருக்கிறது. இந்த செய்தியை விசுவாசித்தவர்களே எனக்கு உண்மையான பெற்றோர்கள். மேலும் ஒரு பிள்ளை என்னை நேசிக்கிறான் என்றால், உங்களை தவிர வேறு எவரையும் கொண்டிருக்க மாட்டான். உலகத்திற்கு அஸ்திவாரமிடுவதற்கு முன்பு, நாம் ஒன்றாக இருந்தோம்! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
18 நம்முடைய சரீர பிரகாரமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள், நாம் அவர்களை ஒருபோதும் பார்க்க மாட்டோம், ஆனால் சபையைப் பொறுத்தவரை, நாட்களின் முடிவில், நான் எங்கே இருக்கின்றேனோ, அவளும் அங்கே இருப்பாள்! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்]. என்னை நன்கு அறிந்தவர்களும், என்னை நேசிப்பவர்களும் இங்கே நடுராத்திரி சத்தத்தில் இருக்கிறார்கள்! சகோதர சகோதரிகளாகிய, உங்களிடமிருந்து தான், என்னுடைய உண்மையான குழந்தைகள் அறிவுறுத்தல்களைப் பெற வேண்டும் ... ஏனென்றால் நீங்கள்தான் என்னை நேசிப்பவர்கள், உங்களை தான் நான் நேசிக்கிறேன். நான் போதிக்கும் வார்த்தையை நேசிக்காமல் யாரும் என்னை நேசிக்க முடியாது! உணர்ந்து கொள்ளக் கூடியவன் எவனோ அவன் உணர்ந்து கொள்ளட்டும்!