(பிப்ரவரி 26, 2010, வியாழக்கிழமை மாலை அபிட்ஜான்-ஐவரி கோஸ்டுக்கு அருகிலுள்ள அன்யாமாவில் பிரசங்கிக்கப்பட்டது)
1ஹெய்டியை குறித்து பிரசங்கம் செய்ய வேண்டும் என்பதற்காக நான் இந்த தலைப்பை கொடுக்கவில்லை, ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் காலத்தில் கப்பர்நகூமுக்கு இருந்ததைப் போல, என்னுடைய காலத்தில் இந்த தேசத்தின் மீது நீயாயத்தீர்ப்பு எவ்வாறு வரும் என்பதைக் சுட்டிக்காட்டும் படியாகத்தான். என்னுடைய நாளின் நிமித்தம் இந்த தேசத்தின் மீது வரும் மகா சாபங்களால் மக்கள் நிச்சயம் அதை விட்டு வெளியேறும் காலம் வரும்.
2நல்லது வெளிப்படையான பாவ அறிக்கையின் போது, காரியங்கள் இப்படித்தான் செல்ல வேண்டும்: ஜெபத் தலைவர் கூறுகிறார்: "நாம் இப்போது வெளிப்படையான பாவ அறிக்கைக்கு வருகிறோம்! ஒரு சகோதரர் அல்லது சகோதரி வார்த்தையின் வரிசையில் இல்லை என்றால், அவர் பாவ அறிக்கை செய்ய இது ஒரு தக்க தருணமாக உள்ளது… ”. மேலும் பாவ அறிக்கை செய்ய வேண்டியவர்கள் அனைவரும் ஒன்றன் பின் ஒன்றாக எழுந்து அறிக்கை செய்வார்கள். மேலும் அவர்கள் முடித்த பின், சபையாருக்கு இடமானது கொடுக்கப்படுகிறது, கூடுமானால், அறிக்கையை குறித்துஏதாவது சொல்ல வேண்டுமானால் அதை செய்யலாம்.
3ஒரு சகோதரர் தன் கையை உயர்த்தி இவ்வாறு கூறலாம்: "அத்தகைய சகோதரரின் பாவ அறிக்கையைப் பற்றி, நான் இதை அறிய விரும்புகிறேன் அல்லது அவர் ஒரு முயற்சி செய்யட்டும் அல்லது அவரை உட்கார வைக்க விரும்புகிறேன்! இதுபோன்ற மற்றும் இதுபோன்ற காரணங்களுக்காக நாம் அவருக்காக ஜெபிக்கக்கூடாது என்று நினைக்கிறேன்! அல்லது, அவர் அத்தகைய நாட்கள் அல்லது வாரங்கள் அல்லது மாதங்களுக்கு தண்டனையை பெற வேண்டும் என்றும், அந்த நேரத்தில் அவர் சபைக்கு வெளியே இருப்பார் என்றும் நான் முன்மொழிகிறேன்." ஆனால் ஜெபத் தலைவரும் போதகரும் ஒரு முடிவை ரத்து செய்து கிருபை வழங்க முடியும்.
4தலையீடுகளுக்கு பிறகு, சபை ஜெபிக்க ஏற்றுக்கொண்ட அனைவருமே முழங்காற்படியிடுவார்கள் மேலும் அமர்ந்திருந்த சபையார் அனைவரும் அவர்களுக்காக ஒரே ஒரு ஜெபத்தை மட்டுமே ஏறெடுப்பார்கள்! அதன் பிறகு துதி ஆராதனையின் படிகளுக்கு ஒத்திருக்க சாட்சிகளுக்குள்ளே செல்வோம்! அவை யாவும் தாழ்மையோடும் அன்போடும் செய்யப்பட வேண்டும் ஆகையால் ஒருவரை சபையார் வீட்டில் நேரத்தை செலவிடும்படியாக கேட்டுக்கொண்டாலும் அவர் ஆராதனை முடிவு மட்டுமாக தங்கியிருப்பார்!
5நல்லது, இப்போது, நான் இன்னுமொறு பெண்ணுக்கு தந்தை என்று உங்களுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! பெயரைப் பொறுத்தவரை, அது அதே வழி. முதலாவது, காக்குவ் கிரேஸ் மேரி-பிலிப்பு, இரண்டாவது: காக்குவ் அண்ணா மேரி-பிலிப்பு மற்றும் இது: காக்குவ் ரேச்சல் மேரி-பிலிப்பு. மற்றொன்று வரும்போது, அது காக்குவ் பிலிப்பு டேனியல் ஆகு இருக்கும். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
6மேலும் அன்னா தனது தாயின் வயிற்றில் இருந்து வெளியே வந்தபோது, அவ்வப்போது அவளது வலது கை மோசமாக அதிர்ந்தது மற்றும் அவளது பிறப்பு பதிவு தாளில் இவ்விதமாக கூறப்பட்டது: “வலது கையில் அசாதாரண அசைவுகள் இருக்கின்றன” மற்றும் அவளை ஒரு பெரிய மருத்துவமனை மையத்திற்கு அழைத்துச் செல்லும்படி நாங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டோம். "அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்" என்று நான் அவளுடைய தாயிடம் கூறினேன்.! மறு நாள், முதற்கொண்டு அவளுடைய கையில் ஒருபோதும் அதிர்வுகள் இல்லை [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
7நல்லது, இது இராசி மண்டலத்தை மற்றும் தேவனுடைய வார்த்தைக்கு இடையிலான உறவைப் பற்றி இரண்டு சகோதரர்கள் என்னிடம் கேள்வி எழுப்பினார்கள்… இது வெறுமனே ஒரு சிறந்த நினைவகமாகிறது! நீங்கள் பார்க்கிறீர்களா? நான்கு ஜீவராசிகளின் வரிசையின்படி, பரலோகத்திலும், இரட்சிப்பின் உலகளாவிய திட்டத்திற்கும், அது சிங்கம், கன்று, மனிதனின் முகம் மற்றும் கழுகாக இருக்கின்றது! ஆனால் அவை பெர்கமு, தியத்திரா அல்லது சர்தை சபைக்குள் தோன்றும்போது, நான் வரைந்த இரட்சிப்பின் திட்டத்தில் அவைகளைப் பார்க்கிறபோது. அது சிங்கம், கழுகு, கன்று மற்றும் மனிதனின் முகத்துடன் வாழும் உயிரினம்! ஆகவே, இராசி மண்டலம் என்பது வானத்தில் உள்ள வார்த்தையின் சிறந்த நினைவகம்! நீங்கள் பார்க்கிறீர்களா?
8தேவன் தாமே இராசி மண்டலத்தை பிரதிநிதிதுவப்படுத்துகிற நட்சத்திர கூட்டம், கோள்கள், வீண்மீன் திரள்கள், மற்றும் நட்சத்திர வீண்மீன் மண்டலங்களை படைத்தவரும் ஆக்கியோனாகவும் இருக்கின்றார்... அது தேவனினுடைய கரங்களினால் எழுதப்பட்ட முதல் வேதாகமாகும்! வியாழனைச் சுற்றியுள்ள நான்கு துணைக்கோள்களும் தீர்க்கதரிசி செய்தியாளனைச் சுற்றியுள்ள வார்த்தையின் நான்கு ஊழியங்கள். முழு வானமும் ஒரு வேதாகமம். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
9மறைப்பொருள் தத்துவங்கள் (Esotericism), மாயவித்தை, கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷ மற்றும் பிரன்ஹாமிஸ்ட் சபைகளில் உள்ள மந்திரத்தால் கட்டுப்படுத்துகிற காரியங்கள் ஆகியவை நம் கையில் இருக்கும் இந்த எழுதப்பட்ட வேதாகமத்திலிருந்து அவற்றின் உத்வேகத்தை ஆராய்ந்து வரைந்ததைப் போலவே, பூமியின் பழங்குடியினர், ஞானிகள், ஜோதிடர்கள், மாய வித்தைக்காரர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் எழுத்தின் தோற்றத்திற்கு முன்பு நட்சத்திர வீண்மீன் மண்டலங்களை ஆராய்ந்து வியக்கியானம் செய்தனர்!
10மனித இனத்திற்கு ஒரே ஒரு மொழி மட்டுமே இருந்த நேரத்தில், பாபேல் கோபுரத்திற்கு முன்பாக இந்த பரலோக விண்மீன்கள் தேவனுடைய முழுமையான வார்த்தையாக இருந்தன! ஆதாமிலிருந்து நாம் பூமியில் செய்யும் ஒவ்வொன்றும், வரவிருக்கும் காரியங்கள் அனைத்தும் நட்சத்திர விண்மீன்களில் எழுதப்பட்டிருந்தது!
11பருவங்கள், தட்பவெப்பநிலைகள், நிகழ்வுகள்… யாவும் அங்கே எழுதப்பட்டிருந்தது! "பெத்லகேமே, *நீ* சிறியதல்ல..." என்று வேதாகமத்தின் சுருள் சொல்வதற்கு முன்பே “கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ளவந்தோம்" என்று நட்சத்திர விண்மீன்கள் ஏற்கனவே வானத்தில் கூறியிருந்தன"! நீங்கள் பார்க்கிறீர்களா? கிசாவின் கூர்நுனிக் கோபுரம் மற்றும் நீங்கள் சத்தியம் செய்யும் எழுதப்பட்ட வேதாகமம் அனைத்தும் தொய்ந்துபோகும்போது இந்த பரலோக வேதாகமம் அப்படியே இருக்கின்றது!
12முதல் வேதாகமம் ராசி மற்றும் நட்சத்திரங்களின் விண்மீன்களாகும். இரண்டாவது என்பது நம் கையில் இருக்கும் பேசப்பட்ட அல்லது எழுதப்பட்ட வார்த்தையாகும! மூன்றாவது வேதாகமம் பிரமிடுகளாக இருந்தது. ராசியின் முதல் அடையாளம் என்பது கன்னியும், ராசியின் கடைசி அடையாளம் என்பது சிம்மமும் ஆகும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒரு கன்னிப் பெண்ணின் மூலம் பூமிக்கு வருவதும், யூதா கோத்திரத்தின் சிங்கமாக ஆயிர வருட அரசாட்சியில மீண்டும் பூமிக்கு வருவதுமாக இருக்கிறது. ஆனால் மூன்றாவது வேதாகமம் என்பது பிரமிடுகளுக்கு பதிலாக தேவனின் ஒவ்வொரு உயிரினத்தின் இருதயம் என்று தற்போதைய வெளிப்பாடானது கூறுகிறது. மேலும் இந்த வேதாகமன்கள் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி போன்ற மூன்று காலகட்டங்களில் உள்ளன. [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
13பழங்காலத்திலிருந்து உலகின் ஏழு அதிசயங்களில் முதலாவதாக இருக்கும், 4650 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் உள்ள கிசா அல்லது மெம்பிஸில் ஏனோக்கின் காலத்தில் கட்டப்பட்ட சியோப்சின் (Cheops) இந்த கூர்நுனிக் கோபுரம். அந்த ஏழில், இது ஒன்று தான் மிகவும் பழமையானதும் இன்றும் இருக்கின்றது!
14கிசாவின் கூர்நுனிக் கோபுரத்திற்கு பிறகு 2600 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பாபிலோனின் "தொங்கும் தோட்டங்கள்" வருகின்றது, பின்னர்2437 ஆண்டுகளுக்கு முன்பு சியுசின்(Zeus) சிலை, பின்னர்2340 ஆண்டுகளுக்கு முன்பு எபேசியர்களின் டயானா தெய்வமாக இருக்கும் ஆர்ட்டெமிஸ் கோயில், பின்னர் ஹாலிகார்னாசஸின் கல்லறை, ரோட்ஸின் கொலோசஸ் மற்றும் அலெக்ஸாண்ட்ரியாவின் கலங்கரை விளக்கம். இந்த அதிசயங்கள் அனைத்திலும், கிசாவின் கூர்நுனிக் கோபுரம் மட்டுமே இன்றும் உள்ளது. மீதமுள்ள அனைத்தும், பூகம்பங்கள் மற்றும் பிறவற்றின் மூலம் தேவன் அவற்றை அழித்துவிட்டார்.
15மேலும் இன்று, மத மனிதகுலத்திற்கு வேதாகமம் என்னவாக இருக்கின்றதோ அப்படியாக அஞ்ஞான மனிதகுலத்திற்கு இராசிமண்டலம் இருக்கின்றது! இஸ்லாம் மற்றும் யூத மதம் உள்ளிட்ட நவீன விடுதிகளான கத்தோலிக்கம், புராட்டஸ்டன்ட், சுவிசேஷ மற்றும் பிரன்ஹாமிஸ்ட் சபைகளை கண்டனம் செய்யாமல், ஜோதிடர்கள், விடுதலைக் கட்டுநர்கள் (Freemasons), குரு மஹாராஜாக்கள் மற்றும் பிறரை நீங்கள் கண்டனம் செய்யக்கூடாது!
16போப் ஆண்டவன், சபை தீர்க்கதரிசிகள் மற்றும் சபை தலைவர்கள் அந்தந்த விடுதிகளின் சிறந்த எஜமானர்கள்! அவர்கள் பூமியின் குடிகளை கவர்ந்திழுக்கும் பேய்கள், ஆனால் தேவன் எப்போதும் தனது பிள்ளைகளுக்காக ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனை அனுப்புவார்! நீங்கள் எங்கிருந்தாலும், அவருடைய சத்தத்தைக் கேட்பீர்கள். நீங்கள் வார்த்தையால் சிருஷ்டிக்கப்பட்டிருந்தால் அந்த சத்தத்தைப் பெறுவீர்கள். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
17பூமியில் தேவனுடைய பிள்ளைகள் இருக்கும் வரை, அந்த சத்தம் பூமியில் கேட்கப்படும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும் வரை தலைமுறை தலைமுறையாக, பூமியில் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் எப்போதும் இருப்பார். என்னைப் போன்ற ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் இஸ்லாமிலிருந்து வரும் வரை எனக்குப் பிறகு தீர்க்கதரிசிகள் பின் தீர்க்கதரிசிகள் எழும்புவார்கள் என்று நான் கூறினேன்.
18இஸ்லாமிலிருந்து வரும் இந்த தீர்க்கதரிசி எதைப் பிரசங்கிப்பார் என்று தெரிந்துக்கொள்வதற்கு, பொறுமையோடு இருங்கள், தேவன் தன்னுடைய வார்த்தையை அவர் விரும்பும் விதத்தில் வியாக்கியானம் செய்வார்! ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள் என்று தேவன் கூறின போது, ஒரு நாள் ஒரு கன்னிகை பூமியில் கருத்தரித்தாள்! இந்த செய்தியை நீங்கள் விசுவாசித்த வேளையில், இது பூமியில் ஒரு மனிதன் பெறக்கூடிய மிகப்பெரிய பொக்கிஷம் ஆகும். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்]. எல்லாமே அழிந்துபோகும், ஆனால் இது இந்த நூற்றாண்டிலோ அல்லது வரவிருக்கும் நூற்றாண்டிலோ ஒருபோதும் அழிந்து போகாது. எவ்விதமான சுகவீனம், வாழ்க்கையின் பாடுகள் இருந்தாலும், சந்தோஷமாய் இருங்கள், ஏனெனில் உங்களுடைய காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசியை நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
19இப்போது, நான் ஹெய்டிக்கு வர விரும்புகிறேன்… சகோதரர்களே, நான் ஒரு இடையூறாக இருக்கிறேன் மற்றும் நான் ஒரு இடையூறாக இருக்க வேண்டும் ஆனால் என்னில் இடறல் அடையாதவர்கள் எவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
20நல்லது, இப்போது இதைக் கேளுங்கள்: நான் மத்தேயு 11:23 ஐப் வாசிக்கப் போகிறேன் "வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, *நீ* பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய்..." கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கப்பர்நகூமை குற்றம் சாட்டினார், நிலமுனை அல்லது தேவதூதர்களின் நகரம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, வில்லியம் பிரன்ஹாம் தேவதூதர்களின் நகரமான லாஸ் ஏஞ்சல்ஸின் மீது தீர்க்கதரிசனம் உரைத்தார்! மேலும் இங்கே, மத்தேயு25:6 நேரத்தில், கிரகணம் பிரேசிலிலிருந்து வெளியேறி ஹெய்ட்டியைக் கடக்கிறது, 16 ஆம் நூற்றாண்டின் அடிமைப் படகுகளின் பாதைக்கு ஏற்ப அதை இங்கே பாதையில் காணலாம். அதன் தலைநகரம் போர்ட்-ஓ-பிரின்ஸ் ஆகும்! ஹாலிவுட்டின் கடற்கரைகளுடன் தேவனின் இளவரசர்களின் துறைமுகம்!
21நான் எதிர்பார்க்கப்பட்ட தரிசனம் பற்றிய பிரசங்கத்தில் ஹெய்ட்டியின் மீது சில அதிருப்தியை வெளிப்படுத்தியபோது, கடந்த செவ்வாய்க்கிழமை, ஜனவரி12 அன்று அந்த கப்பர்நகூமுக்கு என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும். ஒரு தூதன் வானத்திலிருந்து இறங்கி, போர்ட்-ஓ-பிரின்ஸ் மேலே ஒரு புழுதி திரையை உயர்த்தினான்.
22ஒரு நிமிடத்திற்குள், 3,00,000 க்கும் அதிகமானோர் மரித்துவிட்டனர் மற்றும் போர்ட்-ஓ-பிரின்ஸ் இடிபாட்டில் இருந்தது! ஜனாதிபதி மாளிகையும் கூட ஒரு கனவைப் போல் தணிந்தது! மரணம், பல நாட்களாக மிகவும் தாக்கியது, அமைச்சரவை கூட்டங்கள் இல்லை, பாராளுமன்றக் கூட்டம் இல்லை, இராணுவம் இல்லை, காவற்படை இல்லை, காவலர்கள் இல்லை! சிறை உடைந்து கைதிகள் விடுதலையானார்கள்! ஹெய்ட்டியர்கள் வீடு இல்லாமல் இருந்தார்கள், அந்த நேரத்தில், அவர்கள் தொடர்ந்து பாடிக் கொண்டும் ஜெபித்துக் கொண்டும் இருந்தார்கள், எந்தக் கடவுள் என்று எனக்கு தெரியாது, ஆனால் தேவனும் காக்குவ் பிலிப்பும் தவிர வேறு தேவன் இல்லை, மேலும் காக்குவ் பிலிப்பு என்பது நிகழ்காலத்திற்குறியது, பூமியில் அவருடைய தீர்க்கதரிசி! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
23அனைத்து சர்வதேச அமைப்புகளுக்கும், ஐ.நா முதல் தரத்தில் இருப்பதால், அறிவிப்புகள் ஒன்றாகவே இருக்கும்: இது பெரும் குழப்பத்தில் உள்ளது! பாவத்தின் கலாச்சாரம் உருவாக்கப்படும் போது, அது அவ்வாறாகவே இருக்க வேண்டும். தேவனுடைய ஒவ்வொரு பிள்ளைகளும் பாவியான ஹெய்டியின் தீர்ப்பிற்காக தேவனை மகிமைப்படுத்துவார்கள். ஆயினும், ஹெய்டி பாவத்தை பயிரிட்டு கொண்டிருக்கும் வரை, சர்வவல்லமையுள்ள தேவனின் கை இந்த தேசத்தின் மீது கனமாகிவிடும். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
24இப்போது நான் ஓசியா 12:13 ஐ வாசிக்க விரும்புகிறேன்! "யெகோவா ஒரு தீர்க்கதரிசியைக் கொண்டு இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; தீர்க்கதரிசியினால் காக்கப்பட்டான்." நம்முடைய விசுவாசம் அதன் மீது இளைப்பாறிக்கொண்டிருக்கிறது, இதனால்தான் பிசாசு என்ன சத்தியத்தை பேசினாலும் அதை பொருட்படுத்தாமல் நாம் ஒருபோதும் அசைக்கப்படாமல் இருப்போம்!
25இப்போது இதைக் கேளுங்கள்: தேவனால் செய்ய முடியாத காரியம் என்று ஒன்று இருந்தால், அவர் தேவன் அல்ல! அவர் பூமியின் எல்லா தேசங்களுக்கும் தேவன்! நான் என் தந்தையின் பெயரை உச்சரிப்பதைபபோல் அவருடைய பெயரை உச்சரிக்க முடியும், இதனால்தான் அவர் தேவன்! ஒரு முகமதியர்களின் தேவனால் அரபியை மட்டுமே புரிந்து கொள்ள முடியும், எனவே அவருக்கு அரபு பெயர் இருக்க வேண்டும் என்பதும், அவர் அரபு மொழியில் ஜெபிக்கப்பட வேண்டும் என்பதும் தெளிவாகிறது!
26ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பூமியின் எல்லா தேசங்களின் தேவன்! அவர் 100% ஐவோரியன்! அவர் 100% பிரெஞ்சு, அவர் 100% அமெரிக்கர், அவர் 100% எபிரேயர்… அவர் இஸ்ரவேலில் இல்லை! அவருக்கு தந்தை இல்லை, தாய் இல்லை, பரம்பரை இல்லை, தாய்மொழி இல்லை! அவர் சமாரிய ஸ்திரியை நோக்கி, ஒரு காலம் வருகிறது, மேலும் அது ஏற்கனவே வந்துவிட்டது, இனி நீ திரும்பி கிழக்கை நோக்கி ஜெபம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றார். ஒரு காலம் வருகிறது, மேலும் அது ஏற்கனவே வந்துவிட்டது, நீங்கள் கத்தோலிக்கர்கள் மற்றும் இஸ்லாமியர்களை போன்று இனி ஒரு போதும் சில மொழிகளில் ஜெபம் செய்ய வேண்டியதில்லை. ஒரு காலம் வருகிறது, மேலும் அது ஏற்கனவே வந்துவிட்டது, நீங்கள் இனி ஒரு போதும் ஒரு குறிப்பிட்ட மொழி, எபிரேயு என்று அழைக்கப்படும் மொழியில் என்னை உச்சரிக்க தேவையில்லை!
27யோவான் 1:1 கூறுகிறது, ஆதியிலே வார்த்தை இருந்தது, எல்லாவற்றிற்கும் முன்பே, யாவும் அதினால் உருவாக்கப்பட்டது, அதனால்தான், மொழிகளின் குழப்பம் இருந்தபோதிலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் தேவனுடைய வார்த்தையின் சாட்சிக்கும் அங்கு ஒரே ஒரு மொழி மட்டுமல்ல. உதாரணமாக, என் தாய்மொழி எபிரேயு பாஷை அல்ல, ஆனால் மூல பாவத்தின் போதகத்தை உறுதிப்படுத்துவதற்காக ஒரே ஒரு வார்த்தையானது ஆண்பால் இனத்தையும் பாம்பையும் நியமிக்கிறது அது ஏன்? ஒரு தலைமுறையில் தேவனுடைய மொழி அவருடைய உயிருள்ள தீர்க்கதரிசி. [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
28தாவீது, கோலியாத்தை எதிர்கொண்ட போது விசுவாசத்தை எடுத்துக் கொண்டான் என்று வில்லியம் பிரன்ஹாம் பிரசங்கித்தபோது, விசுவாசத்தின் ஐந்து எண்கள், (FAITH), ஐந்து எண்கள், அதை அவர் பிரெஞ்சு மொழியில் சொல்ல முடியுமா? இயேசு, (JESUS) என்ற ஐந்து எழுத்துக்களை தாவீது எடுத்ததாக நீங்கள் நீண்ட காலத்திற்கு முன்பு பிரசங்கித்தீர்கள். இப்போது ஏழு எழுத்துக்களைக் கொண்ட உங்கள் யேஷுவாவை (Yeshoua) கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்? நீங்கள் பார்க்கிறீர்களா? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஒரு எபிரேயப் பெயர் இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டால், ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனைக் கொண்டுதான் ஆமோஸ்3:7 ன் படி தேவன் அதை வெளிப்படுத்துவார்! இல்லையெனில் அது வேறுவிதமாக சாத்தியமில்லை!
29ஓசியா 12:13, 2 நாளாகமம் 20:20 மற்றும் ஆமோஸ் 3:7 ஆகியவற்றை யாராவது விசுவாசித்தால், ஒரு அப்போஸ்தலன், ஒரு சபை தீர்க்கதரிசி, ஒரு சுவிசேஷகன் அல்லது போதகன் என்ன சொல்வார் என்பதில் அவர் திசை திருப்பப்பட மாட்டார். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்]. மிகப் பெரிய ஆயரோ, பேராயரோ அல்லது ரோமின் போப்பாண்டவராக இருங்கள், ஆனால் நீங்கள் சொல்கிற எதுவும் தேவனின் பிள்ளையை திசைதிருப்பாது, ஏனென்றால் தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசியிடம் மாத்திரமே வருகிறது. [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
30வில்லியம் பிரன்ஹாம் என்ற தீர்க்கதரிசியை தேவன் எனக்கு முன் பூமியில் அனுப்பியிருந்தார் மற்றும் இந்த தீர்க்கதரிசி கர்த்தராகிய இயேசு-கிறிஸ்துவின் நாமத்தில் பிரசங்கித்தார், குணப்படுத்தினார், மரித்த சிலரை உயிருடன் எழுப்பினார் மேலும் நான் வரும் வரை அவருக்குப் பின் எந்த ஒரு தீர்க்கதரிசியும் எழுந்ததில்லை! எனவே மற்றொரு வெளிப்பாடு இருந்தால், அந்த வெளிப்பாடு உண்மை அல்லது அறிவுக்கு பொருத்தமானதாக இருந்தாலும் பிசாசிலிருந்து வருவதாக இல்லாமால் இருக்க முடியாது!
31நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை அவர்கள் புசித்தால், அவர்களின் கண்கள் திறக்கப்படும் என்று சாத்தான் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் சொன்னபோது, அவர்களின் கண்கள் திறக்கப்படும் என்பது உண்மைதான், மேலும் காரியங்களும் அப்படியாக மாறிவிட்டன ஆனால் அவர்கள் தேவனிடத்திலிருந்து விரட்டப்பட்டனர், ஏனென்றால் ஏவாள் அவளுடைய தீர்க்கதரிசி ஆதாமின் சத்தம் அல்லாத மற்றொரு சத்தத்திற்கு செவி கொடுத்தாள், இன்றும் அது அப்படியே இருக்கிறது.
32தேவனின் பிள்ளை அவனுடைய காலத்தில் உயிருள்ள தீர்க்கதரிசி மூலம் தேவன் கூறுவதை மட்டுமே கேட்பான். ஒரு சுவிசேஷ புத்தகத்திலிருந்து வெளிவருவதெல்லாம் சர்ப்பத்தின் சீற்றமாக இருக்கிறது. வேதாகம பள்ளியிலிருந்து வெளியே வரும் அனைத்தும் சர்ப்பத்தின் சீற்றமாக இருக்கிறது. ஒரு கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷக அல்லது பிரன்ஹாமிஸ்ட் சபையிலிருந்து வெளிவரும் அனைத்தும் சர்ப்பத்தின் சீற்றமாக இருக்கிறது. தேவனுடைய வார்த்தையானது ஒரு தீர்க்கதரிசியினாலன்றி வராது மற்றும் தேவனுடைய பிள்ளைகள் ஓசியா 12:14 மற்றும் 2 நாளாகமம் 20:20 ஆகியவற்றின் படி ஒரு தீர்க்கதரிசி சொல்வதை மட்டுமே கேட்கிறார்கள். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
33வில்லியம் பிரன்ஹாம் இடைவிடாமல் சத்தமிட்டார்: "ஒளி நாடாக்கள் என்ன கூறுகிறதோ! அதை மாத்திரம் சொல்லுங்கள், "ஒளி நாடாக்கள் என்ன கூறுகிறதோ! அதை மாத்திரம் சொல்லுங்கள்!" என்னைப் போன்ற மற்றொரு தீர்க்கதரிசியை தேவன் பூமியில் அனுப்பும் வரை ஒலிநாடாக்கள் என்ன சொல்கின்றனவோ அதை சொல்லுங்கள். ஏனென்றால் வில்லியம் பிரன்ஹாம் என் நாளைக் கண்டு அவர் மகிழ்ச்சியடைந்து அவர் சத்தமிட்டார்: "உன்னுடைய நாளையும் அதன் செய்தியையும் இணங்கண்டு கொள்ளுதல்!". என்ற செய்தியில் அவர் புத்திசாலித்தனமாக செய்தி ஒன்று வருவதை அறிவித்தார்.
341965 டிசம்பரில் பிரசங்கிக்கப்பட்ட எடுத்துக்கொள்ளப்படுதல் பத்தி 58 என்ற செய்தியில் ", அவர் இறப்பதற்கு முன்பே, அவர் கூறினார்: "ஏழுநாள் அளவும், புளிப்புள்ள அப்பம் உன்னிடத்தில் காணப்படலாகாது; இன்று சாப்பிடுவதும் கூட, நாளைக்கு அதை வைக்க முயற்சிக்காதீர்கள். பகல் வருவதற்கு முன்பு அதை நெருப்பால் எரிக்கவும், ஏனென்றால் ஒரு புதிய செய்தி வெளிவருகிறது, ஒரு புதிய காரியம் இருக்கிறது. "
35இன்று, நடுராத்திரி சத்தத்தின் மூலம் அவர் நமக்குக் கொடுத்த இரட்சிப்புக்காக தேவனை மகிமைப்படுத்துகிறோம். நீங்கள் பார்க்கிறீர்களா? 1 தெசலோனிக்கேயர் 4:16 - ன் சத்ததின் அறியாத மொழி, மத்தேயு 27:46 - ல் உள்ள அறியாத மொழி தேவனின் ஆட்டுக்குட்டியின் சத்தத்தின் அறியாத மொழி, ஏப்ரல் 24, 1993 இல் ஆட்டுக்குட்டியின் சத்தம் ஆகியவை ஒரே சத்தம்! தூங்கும் கன்னிகைகள் நித்திய ஜீவனுக்கான செய்திக்காக உயிர்த்தெழுப்பப்படுகிறார்கள்! இது உயிர்த்தெழுதலின் சத்தம்!
36இஸ்லாம் மற்றும் யூத மதம் உள்பட கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷ மற்றும் பிரன்ஹாமிஸ்ட் சபைகளில் மரித்து அடக்கம்பன்னப்பட்ட நாம், கடந்த காலத்தில், ஆட்டுக்குட்டி கல்வாரியில் சத்தமிட்டபோது, நாம் மீண்டும் உயிரோடு வந்தோம். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்]. ஆனால் பிரன்ஹாமிஸ்டுகள்: "அவன் எலியாவை அழைக்கிறான்." என்றார்கள்.
37நம்முடைய சுத்திகரிப்புக்குத் தேவையான அனைத்தையும் தேவன் நமக்குக் கொடுத்திருக்கிறார். அவளுடைய சுத்திகரிப்புக்காக, எஸ்தர் பிரதானியாகிய யேகாய் கொடுத்ததை மட்டுமே எடுத்துக் கொண்டாள் என்று வேதாகமம் சொல்கிறது. தானியேல் 12:10-ன் இந்த மணி நேரத்தில், உதட்டுச்சாயங்கள் மற்றும் நகச்சாயம் நம்மை சுற்றி இருக்கும், ஆனால் அது நமக்கு இல்லை. உண்மையான சபையானது தேவன் அவளுக்காக தனது பிரதாணிகள் மூலம் கொடுக்கும் ஒரே ஒளியின் கீழ் நடக்கிறது.
38ராஜாக்களின் பிராகாரத்தில் உள்ள பிரதானிகள் எந்த வித்தையும் உற்பத்தி செய்ய முடியாது. ஒரு பிரதானி என்றால் ஒரு அப்போஸ்தலன், ஒரு சபை தீர்க்கதரிசி, ஒரு சுவிசேஷகன் அல்லது போதகன் என்பவர் அவருடைய காலத்தின் தீர்க்கதரிசி செய்தியாளன் கூறியதை மட்டுமே எடுத்துக்கொண்டு அதை அவர் சபைக்குக் கொடுப்பார். இந்த தீர்க்கதரிசி செய்தியாளன் பூமியை விட்டு வெளியேறும்போது, அந்த பிரதானி தனது எஜமானரின் இடத்தை எடுத்துக் கொள்ளமாட்டான், ஆனால் அவன் இப்படியாக: “தேவனே, எங்களுக்கு ஒரு தீர்க்கதரிசியை அனுப்புங்கள்! தீர்க்கதரிசிகள் தேவனின் வாய் என்பதால் நாங்கள் ஒரு தீர்க்கதரிசியை விரும்புகிறோம்." என்பான். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
39எனது வெளிப்பாட்டின் ஆதாரம் இணையம் அல்லது, புதிய போதகத்தின் வதந்திகள் அல்ல. நான் ஒரு சுவிசேஷ புத்தகத்தில் படித்ததில்லை. ஸ்கோஃபீல்ட், தாம்சன் அல்லது பிறரின் கருத்துக்களை நான் ஒருபோதும் படித்ததில்லை, ஏனெனில் அவர்கள் தீர்க்கதரிசிகள் அல்ல. எபேசியர் 4:11-ல் உள்ள ஊழியக்காரர்கள் சொல்லும்போது, ஒரு அப்போஸ்தலன், ஒரு சபை தீர்க்கதரிசி, ஒரு சுவிசேஷகன் அல்லது போதகன், ஒரு புதிய வெளிப்பாட்டைக் கொண்டுவர முயற்சிக்கும்போது, அவை தேவனுக்கு முன்பாக அலங்காரம், உதட்டுச்சாயம் மற்றும் நகச்சாயமாக இருக்கின்றது. இன்று எஸ்தர்க்கு அது தேவையில்லை. சபைக்கு அது தேவையில்லை [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
40இது ஒரு பிரன்ஹாமிஸ்ட் போதகரைப் போன்றது, ஒவ்வொரு முறையும் இரட்டையர்கள் பிறக்கும்போது, இரண்டில் ஒன்று பிசாசைச் சேர்ந்தது என்று பிரசங்கித்துக் கொண்டிருந்தார். இன்னொருவர் தசமபாகம் செலுத்தக்கூடாது என்பதைக் காண்பித்துக் கொண்டிருந்தார். இவற்றைச் சொல்ல அவர்களுக்கு உரிமை இருக்கிறதா? இது 2 நாளாகமம் 26:15-21-ல் உள்ள உசியா ராஜாவைப் போன்றது, ஒரு ராஜாவாக, அவனுக்கு தூபம் காட்ட உரிமை இல்லை. அவன் அதைச் செய்தான், உடனே குஷ்டரோகம் தோன்றியது! அவருடைய காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசி செய்தியாளன் கூறினதை மீண்டும் கூறுவதை தவிற வேறு எபேசியர்4:11-ன் ஒரு ஊழியத்தால் எதுவும் முடியாது! வில்லியம் பிரன்ஹாம் : "ஒளி நாடாக்கள் என்ன கூறுகிறதோ! அதை மாத்திரம் சொல்லுங்கள்!" என்றார். நீங்கள் பார்க்கிறீர்களா?
41இன்று அது இயேசு கிறிஸ்துவின் பெயர், நாளை அது வேறொரு காரியமாக இருக்கும், மேலும் அவர்கள் தங்கள் சபைகளில் எபிரேய மொழியில் ஒரு வேதாகமத்தை பெறும் வரை இன்னும் பல இருக்கும்! ஆனால் தேவன் தனது தீர்க்கதரிசி மூலம் வெளிப்படுத்துவதை அல்லாமல், அவர்கள் தங்களுக்கென புதிய காரியங்களை விரும்புகிறார்கள்.
42நல்ல காரியங்கள், அவற்றில் பலவற்றை நான் கேட்டதுண்டு, ஆனால் என் மீது விசுவாசமுள்ளவர்களுக்கு நான் நகச்சாயம் மற்றும் உதட்டுச்சாயம் கொடுக்க மாட்டேன். அவர்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசமானது, அது நான் அறுவடையில் ஒரு கொள்ளைக்காரனோ அல்லது சாகசக்காரனோ அல்ல. எனக்கு மோசே மற்றும் வேதாகமத்தின் தீர்க்கதரிசிகள் போன்று ஒரு அதிகாரபூர்வமான அழைப்பு மற்றும் பணி நியமனம் உள்ளது. நீங்கள் பார்க்கிறீர்களா?
43தீர்க்கதரிசிக்குப் பிறகு தொடர்ச்சியை நாம் விசுவாசிக்கிறோம், ஆனால் பூமியில் உயிருள்ள தீர்க்கதரிசி-செய்தியாளன் மூலம் தேவனோடு தொடர்ச்சியில் இருக்கிறோம். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
44பழைய ஏற்பாட்டில், தேவன் ஒருபோதும் ஒரு ஆசாரியரின் மூலமாக தனது வார்த்தையை வெளிப்படுத்தவில்லை, புதிய ஏற்பாட்டில் தேவன் எபேசியர் 4:11 ஊழியக்காரன் மூலம் தனது வார்த்தையை ஒருபோதும் வெளிப்படுத்தவில்லை, ஒரு அப்போஸ்தலன், சபை தீர்க்கதரிசி, சுவிசேஷகன் அல்லது போதகன் எவ்வளவு தான் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தாலும், தேவன் ஒருபோதும் அவருடைய வார்த்தையை வெளிப்படுத்த மாட்டார், ஏனென்றால் அவர் நேற்றும், இன்றும், சதாக்காலங்களும் மாறாதவராக இருப்பதினால். அவர் தீர்க்கதரிசிகளின் ஆவிகளின் தேவன் என்பதினால்! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
45வேதாகமத்தின் ஒரு பதிப்பு, அதில் இயேசு கிறிஸ்து என்று இருக்கின்ற யாவும் யேஷுவாவை ஹமாஷியா (Yeshoua Hamashia) என்று மாற்றப்படும், [அந்த வேதாகமம்] திருத்தப்பட்டு வருகிறது, மற்ற பதிப்புகள் அதே வரிசையில் பின்பற்றப்படும் என்பதை நான் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். ஆனால் அவை மொழிபெயர்ப்பதையும் திருத்துவதையும் முடிக்கும்போது, மார்ப்பதக்கத்தின் பன்னிரண்டு கற்கள் மின்னுமா என்பதை அறிய ஊரீம் தும்மீம் முன் கொண்டு வருவோம். மார்ப்பதக்கத்தின் பன்னிரண்டு கற்கள் மின்னவில்லை என்றால், அவை அனைத்தையும் அப்போஸ்தலர்19:19 பலிபீடத்திற்கு எடுத்துச் செல்வோம். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].. உணர்ந்து கொள்ளக் கூடியவன் எவனோ அவன் உணர்ந்து கொள்ளட்டும்!