(மார்ச் 21, 2010, ஞாயிற்றுக்கிழமை காலை அபிட்ஜான்-ஐவரி கோஸ்டுக்கு அருகிலுள்ள அன்யாமாவில் பிரசங்கிக்கப்பட்டது)
1நல்லது, நான் காக்குவ் 63 வது பிரசங்கத்தில் உள்ள இரண்டாவது கேள்வியை வாசிக்கப் போகிறேன். கேள்வி : “நீங்கள் பிரசங்கிக்கும் செய்திக்கு வெளியே ஒரு மனிதன் இரட்சிக்கப்பட முடியுமா?” எல்லா இடங்களிலிருந்தும் என்னிடம் அதிகமாக கேட்கப்படும் கேள்வி இது தான். இது பலரின் கவலையாக இருக்கிறது.
2தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவாகிய நான் பிரசங்கிக்கும் செய்தியைத் தவிர இன்று யாராவது இரட்சிக்கப்பட கூடுமென்றால் நான் ஒரு பொய்யனும், ஏப்ரல் 24, 1993 அன்று எனக்கு தோன்றிய தூதனும், ஆட்டுக்குட்டிம் சில பிசாசுளாக இருக்கும். நோவாவைத் தவிர ஒருவனால் எவ்வாறு இரட்சிக்கப்பட முடியும்? பரலோக ராஜ்யத்தின் சாவியை வைத்திருந்த பேதுருவைத் தவிர கொர்நெலியு இரட்சிக்கப்பட முடிந்தால், கிறிஸ்தவம் தவறானது. கல்வாரி சிலுவையில் பேதுரு மரிக்கவில்லை, ஆனால் பேதுருவாகிய அவன் தான் நித்திய ஜீவனின் வார்த்தைகளையும், பரலோக ராஜ்யத்தின் சாவியையும் வைத்திருந்தான்.
3காக்குவ் பிலிப்பு உங்களுக்காக கல்வாரி சிலுவையில் மரிக்கவில்லை, ஆனால் காக்குவ் பிலிப்புவாகிய அவர் தான், இந்த தலைமுறையில் உங்கள் இரட்சிப்புக்காக நித்திய ஜீவனின் வார்த்தைகளையும், பரலோக ராஜ்யத்தின் சாவியையும் வைத்திருக்கிறார். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்]. அவ்வப்போது மற்றும் குறிப்பாக சுவிசேஷங்கள் மற்றும் ஆராதனைகளின் போது, செய்தியை அறியாதவர்கள் இருப்பதால் அதைக் குறிப்பிட நினைவில் கொள்ளுங்கள்!
4நல்லது, நான் இப்போது வசிக்கும் கட்டாட்ஜியில் உள்ள வீட்டைப் பொறுத்தவரை, நான் அதைப் பிரித்துள்ளேன். இந்த பகிர்வு என்றென்றைக்குமாய் இருக்கிறது, எனக்குப் பிறகும், என்னை தவிர, நானே ஒரு பிரசங்கத்தில் வேறு ஏதாவது சொன்னாலொழிய. நீங்கள் பார்க்கிறீர்களா? இந்த வீடு நமக்கு நூறு லட்சத்திற்கும் அதிகமாக செலவானது. எந்த பெற்றோரும் எனக்கு ஒரு சென்டிமையும் (Centime) கொடுக்கவில்லை. நிலமும் கூட எனது தனிப்பட்ட சொத்து, உங்களுக்காக நன்றி; அது ஒரு குடும்ப உடைமை அல்ல.
5ஏழு குறுகிய ஆண்டுகள் ஊழியத்திற்குப் பிறகு, சபை போதகர்களுக்கும் சபைகளின் தீர்க்கதரிசிகளுக்கும் சொல்ல நான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன், தேவன் உங்களை உண்மையிலேயே பூமியில் ஒரு பணிக்காக அனுப்பியிருந்தால், நூறு லட்சத்திற்கும் அதிகமான செலவில் ஒரு சபை அல்லது வீட்டைக் கட்டுவதற்காக, நீங்கள் ஜனாதிபதி அலுவலகங்களிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் பிச்சை எடுக்கத் தேவையில்லை. இந்த வீட்டின் அனைத்து அறைகளும் செய்தியின் சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் மட்டுமானது. எந்தப் பெற்றோரும், எனக்குப் பிறகும், வந்து எதையும் உரிமை கோர மாட்டார்கள்; என்னுடைய மகன் அல்லது என் மகள் கூட, எனக்குப் பிறகு, ஒரு சகோதரனிடம் இந்த முற்றத்தையோ அல்லது வீட்டையோ விட்டுச் செல்லும்படி கேட்க மாட்டார்கள். இந்த செய்தியால் நான் பெற்ற அனைத்தும் இந்த செய்தியின் சகோதரர்களுக்கு சொந்தமானது.
6உதாரணமாக, முதல் மாடியில், இருபுறமும் இரண்டு கதவுகள் உள்ளது, நான் அவற்றை போதகர்களுக்கும் பிரசங்கிகளுக்கும், வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கும் கொடுத்தேன், அதை நான் என்றென்றைக்குமாக இருக்கும்படியாக தீர்மானித்தேன். என் மகன் அல்லது என் மகள் எனக்கு பின் வேலை செய்வதன் மூலம் பெற்றுக்கொள்வது அவனுக்கோ அவளுக்கோ சொந்தமானது. ஆனால் இந்த செய்தியின் மூலம் எனக்கு கிடைத்த அனைத்தும் இந்த செய்தியின் சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் சொந்தமானது. அது அவர்களின் சொத்து. எல்லா நேரங்களிலும் அவர்கள் இங்கு வருவார்கள், எனக்குப் பிறகும் அவர்கள் வீட்டில் இருப்பார்கள்.[ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
7நல்லது. முதல் குறிப்பு மேய்ப்பர்கள் மற்றும் பிரசங்கிகளைப் பற்றியது. அவர்கள் மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் போது, அவர்கள் சில காரியங்களை கேட்க வேண்டும். உதாரணமாக, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ கடந்த காலங்களில் தனது கணவன் அல்லது மனைவியிடம் உண்மை இல்லாமல் இருந்திருந்தால், ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்பு அவள் அதை அவனிடம் அறிக்கையிட வேண்டும்.
8இன்னும், குறிப்புகளில், யேஷூவா ஹமாஷியாவின் போதகத்தைப் பின்பற்றுபவர் என்னிடம் கூறினார்: தீர்க்கதரிசி, ஐவரி கோஸ்டில், உங்கள் பெயர் காக்குவ் பிலிப்பு? இல்லையா? நான் அவரிடம் சொன்னேன்: ஆம் ஐயா, அவ்வளவுதான்! அதற்க்கு அவர் கூறினார்: நீங்கள் சீனாவுக்குச் சென்றால், உங்கள் பெயர் மாறுமா? நான் சொன்னேன்: இல்லை, ஐயா! இது காக்குவ் பிலிப்பாகவே இருக்கும். அவர் கூறினார்: ஆனால் எங்கள் கர்த்தர் யேஷூவா ஹமாஷியாவின் பெயர் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு மாறுபடும் என்று ஏன் விரும்புகிறீர்கள்? நான் சொன்னேன்: ஐயா, நான் சீனாவுக்கு வரும்போது, நான் ஒரு மனிதனாக இருப்பதால் நான் அதே நபராக இருப்பேன். ஆனால், அவர், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, தேவனாக இருப்பதினால், அவர் ஒரு சீனர் அல்லது பூமியின் வேறு எந்த இனத்தினதும் தோற்றத்தின் கீழ் வெளிப்படுத்தப்படலாம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? அவர் வெவ்வேறு வடிவங்களில் பல முறை தோன்றினார் என்று வேதாகமம் கூறுகிறது.
9மாற்கு 16:12 கூறுகிறது, இவற்றிற்குப் பிறகு, அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியாத அவருடைய தன்னுடைய இரண்டு சீஷர்களுக்கு அவர் வேறொரு ரூபத்தில் வெளிப்பட்டார். அவரால் ஒரு மனிதனாக, தேவ தூதனாக, அக்னி ஸ்தம்பமாக அல்லது மேக ஸ்தம்பம் போன்ற வடிவங்களில் தோன்ற முடியும், ஏனெனில் அவர் தேவன், ஆனால் என்னால் அதைச் செய்ய முடியாது, ஏனென்றால் நான் ஒரு மனிதன், அதனால்தான் என்னுடைய பெயரை மாற்ற முடியாது.[ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
10அப்பொழுது அந்த மனிதன் இடைநிறுத்தப்பட்டு, “ஆம், அவர் வெவ்வேறு வடிவங்களில் தோன்றலாம்! என்றார். நான் கூறினேன்: ஆனால் அவர் வெவ்வேறு வடிவங்களில் தோன்ற முடியுமானால், ஒரு சீனராக, அவர் ஏன் ஒரு சீன பெயரை கொண்டிருக்க முடியாது? நீங்கள் பார்க்கிறீர்களா? நான் அவரிடம் கூறினேன்: அவர் ஒரு பிரெஞ்சு, ஒரு இந்தியர், ஒரு ஆப்பிரிக்கர் மற்றும் ஒருவேளை உங்களுடன் பேசும் நான் அவர் தான் என்று கூட வெளிப்படலாம். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
11நான் அவரிடம் கூறினேன்: ஐயா, இதில் எது உங்களுக்கு மிகவும் கடினமாகத் தெரிகிறது: ஒரு சீனப் பெயரைக் கொண்டிருப்பதா அல்லது சீன வடிவத்தில் தோன்றுவதா? அவர் என்ன சொல்வது என்று தெரியாமல் அங்கே இருந்தார். மேலும் இங்கே, ஏற்கனவே இரண்டு எதிர்மறையான போக்குகள் உள்ளன. ஒருவர் ஜோஷ்வா ஹமாஷியா என்ற பெயரில் ஞானஸ்நானம் கொடுக்கின்றார், மற்றவர் யோஷூவா ஹமாஷியா என்ற பெயரில் ஞானஸ்நானம் கொடுக்கின்றார். ஒருவர் ஜோஷ்வா என்றும், மற்றவர் யோஷூவா என்றும் கூறுகின்றனர்! மற்றவர் யஹவா மற்றும் பலவற்றைக் கூறுகிறார். நீங்கள் பார்க்கிறீர்களா!
12அவர்கள் ஒரு உயிருள்ள தீர்க்கதரிசியைப் பின்பற்றாததால் அது குழப்பமாக உள்ளது. ஆனால் இந்த வெளிப்பாடு எவ்வளவு மகிமையானது என்பது ஒரு பொருட்டல்ல, அது ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனிடமிருந்து வராதவுடன் அது ஒரு சர்ப்பத்தின் சீற்றமாக தான் இருக்கிறது. மேலும் தேவனுடைய புத்திரர்கள் அதிலிருந்து விலகி இருப்பார்கள். என்கிறார்கள்[ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
13பிரன்ஹாமிஸ்ட் மேய்ப்பர்கள் மற்றும் பெரிய ரோசிக்ரூசியன் குருக்கள் ஒரே நாணயத்தின் இரண்டு தலைகளைப் போன்றவர்கள் என்றும், அவர்களின் கோயில்கள் மாந்திரீக விடுதிகள் என்றும் நான் கூறும்போது, அவை அனைத்தையும் நான் விதிவிலக்கு இல்லாமல் குறிக்கிறேன் மேலும் உங்களுடைய பெற்றோர்கள் இந்த பிரன்ஹாமிஸ்டுகளில் இருந்தால், அவர்களிடம் அதை கூறுங்கள்! அவர்கள் உங்களிடம் காவலருடன் வந்தால் அல்லது அவர்கள் உங்களை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றால், உங்களுடைய 21 ஆம் நூற்றாண்டின் பரிசேயர்களுக்கும் அவர்களின் ரோமானிய படை வீரர்களுக்கும் முன்னால் நீங்கள் இருப்பதை அறியுங்கள்! அவர்கள் அதைச் செய்வார்கள் என்று நான் உங்களுக்கு கூறுகிறேன்.
14கத்தோலிக்கர்கள், புராட்டஸ்டன்ட்டுகள், சுவிசேஷகர்கள் மற்றும் பிரன்ஹாமிஸ்டுகள் நம்மை துன்புறுத்துவதில்லை, ஏனெனில் நேரம் இன்னும் வரவில்லை. ஆனால் இது பரிசேயர்கள், சதுசேயர்கள், ஹெலனிஸ்டுகள், செலோத்தேயினர் மற்றும் பலரின் சந்ததியினர் என்பதால் இது அவர்களின் இரத்தத்தில் உள்ளது.[ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்]. ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருபோதும் பரிசேயரை பிலாத்து அல்லது ரோமானிய படை வீரர்களுக்கு முன்பாக அழைத்து வரவில்லை மேலும் ஒரு கிறிஸ்தவர் அதை ஒருபோதும் செய்ய மாட்டார்.[ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
15நல்லது, ஒரு சிறிய தகவலாக, மற்றொரு திருச்சபை காங்கோ கின்ஷாசா, புனியா நகரத்தில், இட்டூரியில் விசுவாசித்துள்ளது. இன்னும் காங்கோவில், நேற்று மாலை நான் ஒரு இளம் காங்கோலியனுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர் கூறினார்: தீர்க்கதரிசி, அழைப்பிற்க்கும் பணி நியமனத்திற்க்கும் என்ன வித்தியாசம்? நான் கூறினேன்: நான் உன்னிடம் "என் ஊழியக்காரனே வா!" என்று சொன்னால், இது தான் அழைப்பு என்று அழைக்கப்படுகிறது! இப்போது, அவை நீங்கள் சென்று ஏதாவது செய்ய வேண்டும் என்று அர்த்தமா? அதற்கு அவன்: "இல்லை, தீர்க்கதரிசி!" என்றான்.
16நான் கூறினேன்: நீங்கள் அமைதியாக இருந்து பணி நியமனத்திற்க்காக காத்திருக்க வேண்டுமா அல்லது உபவாசம் இருந்து மற்றும் என்னை தொந்தரவு செய்யவதினால் நான் உங்களை அனுப்பினேனா? அவர் கூறினார்: "நான் அமைதியாக காத்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்." நான் கூறினேன்: எவ்வளவு காலம்? அவர் கூறினார்: எனக்குத் தெரியாது, அது என்னை அனுப்பப் போகிற ஒருவரை பொறுத்தது! நான் கூறினேன்: நீங்கள் சரியாக பதிலளித்தீர்கள், இருப்பினும் நீங்கள் அதை நடைமுறைக்குக் கொண்டுவரவில்லை! நீங்கள் பார்க்கிறீர்களா? ஏனென்றால் பணி நியமனத்திற்கு முன்பு நீங்கள் எதையும் செய்யக் கூடாது ஏனெனில் நீங்கள் எதை செய்ய வேண்டும் என்பதை பணி நியமனமானது அதை உங்களுக்கு சொல்லும்! ஆனால் நான் உங்களிடம்:ஐயா, போய் அத்தகைய ஒரு பொருளை வாங்கவும் என்று சொன்னால்; அது தான் பணி நியமனம்! அங்கே, நீங்கள் செல்லும் போது, அது ஒழுங்கில் இருக்கிறது! நீங்கள் உபவாசித்து தேவனை தொந்தரவு செய்ய வேண்டியதில்லை!
17ஏப்ரல் 24,1993 அன்று தேவன் என்னை அழைத்தபோது, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, நான் இப்படியாக கூறினால்: மூன்று, அது பரிபூரணம், நான் எதற்காக காத்திருக்கிறேன், சில ஆத்துமாக்கள் மரித்து கொண்டிருக்கின்றன... நான் இப்போது இருப்பதை போன்று இருந்திருக்க மாட்டேன்! ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நான்: அவ்வளவுதான், நான் புறப்படுகிறேன் என்று சொன்னால்! அது தவறாக இருக்கும்! ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, ஏழு, அது நிறைவேற்றுதல், நான் போகிறேன் என்று சொன்னால்... அது தவறு! நீங்கள் பார்க்கிறீர்களா?
18மோசே ஏன் இந்த எகிப்தியனைக் கொன்றான்? ஏனெனில் அவன் தன்னுடைய வேளைக்கு முன்பே சென்றதால் தான்! வில்லியம் பிரன்ஹாம் தனது பிரசங்கங்களில் சிலவற்றைச் சரிசெய்தார் உதாரணமாக வெளிப்படுத்துதல்6-ல், முதல் முத்திரையின் குதிரைவீரன் பரிசுத்த ஆவியானவர் என்று கூறினார். ஏன்? ஏனென்றால் அவர் அதைப் குறித்து துரிதமாக இருந்தார். ஆனால் இங்கே, செய்தியாளனால் அதை செய்ய முடியவில்லை, ஏனெனில் அவர் பெருங் கழுகாக இருக்கிறார்.[ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
19நல்லது. இப்போது, நான் யாத்திராகமம் 19:4 ஐப் வாசிக்க போகிறேன் ... நான் இந்த பொருளை பற்றி பேசப் போகிறேன்: "கழுகுகளின் சிறகுகளின் மேல்". ஆமென்! அத்தகைய ஒரு பொருளைப் பற்றி நாம் பேசும்போது, அது நம்மை சிந்திக்க வைக்கிறது அல்லது மோசே, ஏசாயா மற்றும் பிறரிமும், ஆனால் கூட மத்தேயு 25:6 மற்றும் வெளிப்படுத்துதல்12:14 ஆகியவற்றிற்கு அழைத்துச் செல்கிறது. ஆமென்.
20தேவன் கழுகின் மூலம் அடையாளம் கண்டுக் கொள்ளப்படுகிறார்! பறக்கும் அனைத்து ஜீவன்களிலும், கழுகு மிகவும் சக்தி வாய்ந்தது! ஒரு மனிதனால் கடினமாக 400 மீட்டர் தொலைவில் பார்க்க முடிந்ததை; ஒரு கழுகு அதை 1600 மீட்டர் தொலைவில் தெளிவாகக் பார்க்கும் மற்றும் 4000 மீட்டர் உயரம் வரை பறக்க முடியும். தேவன் தனது பிள்ளைகளை தங்கள் தாய்நாட்டிற்கு அழைத்து வர கழுகைப் பயன்படுத்துவார் என்பது அப்போது தெளிவாகத் தெரிகிறது. தேவன் போப்பைப் அல்ல ஆனால் கழுகுகளைப் பயன்படுத்துகிறார்.
21மேலும் 1947 ஆம் ஆண்டில், யூதர்கள் விமானங்களால் ஏந்திய படி தங்கள் தாய்நாட்டிற்கு திரும்பி வந்தனர், ஏசாயா தீர்க்கதரிசி, மேகங்களுக்கு மேலே இதைக் கண்டு: அவர்கள் கழுகுகளின் சிறகுகளில் திரும்பி வருகிறார்கள் என்று சொன்னார். ஒரு நாள் துபல்-காயினின் கொள்ளுப்பேரன் அத்தகைய சாதனையை அடைவார்கள் என்று அவருக்குத் தெரியாது; ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் உயரத்தில் டன் கணக்கான இரும்புகளை பறக்க வைப்பது. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானவர்களைச் ஆகாயத்தில் சுமந்து செல்லும் டன் கண்கான இரும்பு. அவர்கள் கழுகுகளின் சிறகுகளில் மேல் திரும்பி வருகிறார்கள். அது சரிதான்! அது அங்கே புத்தகத்தின் பின்புறத்தில் எழுதப்பட்டுள்ளது. ஆமென்!
22ஒரு பறவை திரும்பி வருவதைப் போல தீர்க்கதரிசி கண்டார், தேவன் அவரிடம் கூறினார்: அது இஸ்ரவேல் தன் சொந்த தேசத்திற்கு திரும்பி வருகிறது. அவன்: "கழுகுகளின் சிறகுகளின் மேல்." என்றான். சிதறலின் நேரத்தில், அவர்கள் கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு நோக்கி, பூமியின் அனைத்து நாடுகளையும் சபைகளையும் நோக்கி சிதறினார்கள், ஆனால் திரும்பும் வேளையில், அவர்களை சிறகுகளின் மீது கொண்டு செல்லும் கழுகின் தரிசனத்துக்கு ஏற்ப ஒரே ஒரு இடத்திற்குத் திரும்புகிறார்கள்.[ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்]. தேவன் தன் தாய்நாட்டை சந்தித்தார் என்று நவோமி கேள்விப்பட்டபோது விஜயம் செய்ததாகக் கேள்விப்பட்ட, கழுகுகளின் சிறகுகளில் மேல் உள்ள இஸ்ரவேலைப் போல திரும்பினாள்.
23இப்போது இதைக் கவனியுங்கள்: பழைய ஏற்பாட்டில் நான் விரும்பும் பத்திகளில் ஒன்று ஓசியா 12:14. ஆனாலும், பழைய ஏற்பாட்டில் ஓசியா 12:14 தான் புதிய ஏற்பாட்டில் உள்ள வெளிப்படுத்துதல் 12:14 ஆகும். மறுபுறத்தில், ஒரு பெருங் கழுகின் இரண்டு சிறகுகளில்தான் தேவன் இஸ்ரவேலை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தார். மேலும் மோசே தான் அந்த கழுகு. தீர்க்கதரிசிகள் கழுகுகளாக இருக்கிறார்கள். மோசே ஒரு கழுகு, எரேமியா ஒரு கழுகு, ஏசாயா ஒரு கழுகு, தானியேல் ஒரு கழுகு... ஒவ்வொரு தீர்க்கதரிசியும் ஒரு கழுகு!
24நான்கு ஊழியங்கள் உள்ளன, ஒவ்வொரு ஊழியமும் ஒரு உயிருள்ள ஜீவனால் அடையாளம் காணப்படுகின்றன, மேலும் தீர்க்கதரிசியை அடையாளம் காணும் உயிரினம் அது கழுகாக உள்ளது. யாத்திராகமம்19:4-இல் இஸ்ரவேல் எகிப்திலிருந்து கழுகுகளின் சிறகுகளின் மேல் புறப்பட்டது என்று கூறுகிறது, இப்பக்கத்தில், வேதாகமம் ஒரு கழுகின் சிறகுகளில் என்று கூறவில்லை ஆனால் பெரிய கழுகின் சிறகுகளில் தாமே என்று கூறுகிறது. [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்]. வெளிப்படுத்துதல்12:14-இல் காலங்களின் முடிவில், எல்லா கழுகுகளிலும் மிகப் பெரியதை தேவன் அந்த ஸ்திரீக்கு அனுப்புவார் என்று கூறுகிறது.
25பழைய ஏற்பாட்டில், மத்தேயு 11:7 முதல் 9-ல், யோவான் ஸ்நானகனைப் பற்றிய ஒரு தெய்வீக சாட்சி உள்ளது மற்றும் புதிய ஏற்பாட்டில் வெளிப்படுத்துதல்12:14 பற்றிய மற்றொரு சாட்சி உள்ளது! வெளிப்படுத்துதல் 19-ல் உள்ளதைப் போல, வெளிப்படுத்துதல்12:14-இல் இந்த ஸ்திரீயை பாலைவனத்திற்கு அழைத்துச் செல்லும் இந்த தீர்க்கதரிசி ஒரு பெரிய கழுகின் பாத்திரத்தை வகிப்பார் என்று வேதாகமம் கூறுகிறது,.[ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
26இயேசு, யூதர்களுக்கு தன்னைக் காண்பிப்பார், என்று வேதாகமம் கூறுகிறது, அவர்கள் அவரைக் காண்பார்கள், அவருடைய கரங்களில் உள்ள ஆணிகளை காண்பார்கள், அவர்கள் அழுது புலம்புவார்கள், ஆனால் உண்மையிலே, அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அல்ல, ஆனால் அது வெளிப்படுத்துதல் 11 ன் படி எலியா மற்றும் மோசேயின் ஊழியத்தின் மூலமாக தான்.
27பழைய ஏற்பாட்டின் முடிவில், ஆட்டுக்குட்டியை வழங்குவதற்காக மிகப் பெரிய வெகுமதி சுற்றப்பட்டு அனுப்பப்பட்டது. இந்த கடைசி காலங்களில், தேவன் ஒரு சுற்றப்பட்ட வெகுமதியை சபைக்கு அனுப்புகிறார்.[ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
28மறுபுறம், ஒரு பெரிய கழுகின் சிறகுகளின் மேல் தேவன் இஸ்ரவேலை சரீரப்பிரகாரமான பாபிலோனிலிருந்து ஜோதிடர்கள் முகத்திலிருந்து விலக்கினார். நீங்கள் பார்க்கிறீர்களா?
29ஜாதகம் மற்றும் டோப், ஜேம்ஸ் மன்னன், தோம்ப்சன், ஸ்கோஃபீல்டு, லூயிஸ் செகாண்ட் வேதாகமங்கள் ... இது இடது கை மற்றும் வலது கை போன்றது. எந்தவொரு கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷ அல்லது பிரன்ஹாமிஸ்ட் சபையின் இரட்டை சகோதரியாக ரோஸிகுருஸியனிஸம் உள்ளது, அந்த சபை எவ்வளவு சிறியதாக இருந்தாலும். அவை ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகும். ஒரே நாணயத்தின் இரண்டு தலைகளும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்]. உணர்ந்து கொள்ளக் கூடியவன் எவனோ அவன் உணர்ந்து கொள்ளட்டும்.