(ஏப்ரல் 25, 2010, ஞாயிற்றுக்கிழமை மாலை அபிட்ஜான்-ஐவரி கோஸ்டுக்கு அருகிலுள்ள அன்யாமாவில் பிரசங்கிக்கப்பட்டது)
1 தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! நான் கேள்விகளுக்கு வருகிறேன்! ... சகோதரர் பிலிப்பு, ஒரு சகோதரர் அல்லது சகோதரி ஒன்று அல்லது இன்னொரு காரணத்திற்காக பயணம் செய்கிறார் என்றால், அவர் அடிக்கடி செல்லும் திருச்சபை இடத்தில் எப்போது உறுப்பினராக இருக்க முடியும்? நேரமோ காரணமோ இல்லை, எல்லாமே அவரைச் சார்ந்தது. கால வரையறை எதுவாக இருந்தாலும், அவர் தனது விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்வார்.
2 நல்லது, இரண்டாவது கேள்வி இதுதான்: சகோதரர் பிலிப்பு, ஒரு சகோதரனின் மனைவி கீழ்படியாமல் அல்லது செய்தியை விசுவாசிக்காதவளாக இருக்க, சபையில் ஒரு பொறுப்பைக் கொண்டிருக்க முடியுமா? ஆம் சகோதரரே.மேய்ப்பரின் பொறுப்பைப் பொறுத்தவரை, பாலியல் பாவத்தில் குற்றவாளியாக அல்லது தனது ஞானஸ்நானத்துக்கு பிறகு தசமபாகம் மற்றும் காணிக்கைகளில் நேர்மையாக இல்லாத ஒரு சகோதரர், அவர் தன்னை ஒழுங்காக அமைத்துக் கொண்டாலும், இனி ஒரு மேய்ப்பராக இருக்க முடியாது என்று நான் குறிப்பிடுகிறேன்.
3 பிரான்சின் சகோதரர் பிரைஸ் எரோல்ட், செய்திக்கு வரும்போது, அவர் வைத்திருந்த இரண்டு ஆண்டு தசமபாகங்கள் மற்றும் காணிக்கைகளுடன் வந்திருந்தார். அவர் எந்த திருச்சபையிலும் பங்கு கொள்ளவில்லை, ஆயினும், அவர் தனது தசமபாகங்களையும் காணிக்கைகளையும் வைத்திருந்தார். அநேகர், செய்திக்கு வரும்போது, என்னிடம் சொல்வார்கள்: “தீர்க்கதரிசி, நான் எந்த திருச்சபையிலும் கலந்து கொள்ளவில்லை, ஆனால் நான் என் தசமபாகங்களை ஒதுக்கி வைத்தேன். நான் என்ன செய்ய வேண்டும்? ”மேலும், ஒருவர், ஞானஸ்நானத்திற்குப் பிறகு, தசமபாகம் செலுத்தத் தவறிவிட்டு, பின்னர் சில தசமபாகங்களை பெற ஒரு போதகராக எவ்வாறு இருக்க முடியும்? இல்லை ஐயா. அது சாத்தியமில்லை. [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
4 ஒவ்வொரு பொறுப்பிற்கும், சகோதரனின் மனைவி, அவள் ஒரு சகோதரியாக இருந்தால், அதைச் செய்வதற்கு தனது கனவர் தகுதியானவர் என்பதை சபைக்கு முன்பாக சான்றளிக்க வேண்டும் என்று நான் குறிப்பிடுகிறேன். இவ்வாறு, ஒரு சபை செய்தியை ஏற்றுக்கொள்ளப்படும்போது, அதுதான் செய்யப்படும். அனைவரின் சார்பாக ஒரு தலைவர், சபை முன் பணியை கொண்டிருக்கிற அனைவரையும், மேய்ப்பர்கள், பிரசங்கிகள் மற்றும் மற்றவர்களை தொடங்கி மதிப்பாய்வு செய்வார்.
5 அவர் முதலில் தனது மனைவியிடம் உரையாற்றுவார்: "சகோதரி தேவனுக்கு முன்பாகவும் மனிதர்களுக்கு முன்பாகவும், நாம் அவரிடம் ஒப்படைக்கும் பணிக்கு சகோதரர் தகுதியானவர் என்று நீங்கள் சான்றளிக்கிறீர்களா?" அவள் தனது வலது கையை உயர்த்தி, "ஆம், அவர் தகுதியானவர் என்று நான் சான்றளிக்கிறேன்!" சகோதரர் அதற்கு தகுதியானவர் என்று சபை சான்றளிக்கிறதா என்று கேட்க சபையிடமும் உரையாற்றப்படும். ஆனால், சபையின் பதிலுக்கு மாறாக, சகோதரர் தகுதியற்றவர் என்று அவள் சொன்னவுடன் அவள் எந்த காரணத்தையும் கூறத் தேவையில்லை, அவர் உடனடியாக உட்கார வேண்டும்.
6 மேய்ப்பர், பிரசங்கி, முப்பர் மற்றும் மற்றவர்களின் இரகசிய மற்றும் நெருக்கமான வாழ்க்கையில் உங்களிடமிருந்து வந்த ஒரே நபர் அவள் மட்டும் தான். இவருக்கு அசுத்தமான காரியங்கள் கொண்டிருந்தால் அல்லது தகுதியற்ற காரியங்களைச் செய்தால், அவளுக்கு அது தெரியும், மேலும் அவள் சபையை காட்டிக் கொடுத்தால், அவள் அதற்க்காக தேவனுக்கு முன் ஒரு நாள் கணக்குக் கொடுக்க வேண்டியிருக்கும். அவளும் ஒரு நாள் அதை அறிக்கையிட வந்தால், சபை அவளுக்காக ஜெபிக்க முடியாது.
7 பின்னர், அவளுக்குப் பிறகு, தலைவர் சபையிடம் கூறுவார்: "சகோதரர் இந்த பணியைச் செய்கிறார் என்பதை சபையில் ஏற்றுக் கொள்ளாத யாராவது சபையில் இருக்கிறார்களா?" கையை உயர்த்துவோர் ஒரு நல்ல காரணத்தைக் கூற வேண்டும்; இல்லையெனில் சபை ஜெபிக்கும், தலைவர் அடுத்தவருக்கு வருவார். ஆனால் வேறொரு திருச்சபையைச் சேர்ந்த ஒருவர் தலையீடு செய்து, அந்த சகோதரர் பதவி நீக்கம் செய்யப்படுவார். ஏனெனில் நாம் கிறிஸ்துவில் அதே சரீரத்தை உருவாக்குகின்றோம். ஆண்டுதோறும், மிகவும் கடுமையான தவறைத் தவிர இது புதுப்பிக்கத்தக்கதல்ல. ஆனால் உங்களுடைய காலத்தின் செய்திக்கு ஒரு போதகர் உங்களை வழிநடத்தியபோது, கூடுமானால் அவரையே மீண்டும் போதகராக வைத்திருப்பது நல்லது என்று நான் நினைக்கிறேன். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
8 யோவான் ஸ்நானகன் ஆசாரியர்களில் மிகப் பெரியவர், ஏனென்றால் பரலோகத்திலிருந்து இறங்கி வந்த ஒரு ஆவிக்குரிய ஆட்டுக்குட்டியை, அவர் ஒரு நித்திய பலியை வழங்கினார். ஒரு தீர்க்கதரிசியாக, அவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை வழங்கினார், வார்த்தை மாம்சமானது, அதேசமயம் மற்ற தீர்க்கதரிசிகள் அனைவரும் இயேசு கிறிஸ்துவை எழுதப்பட்ட அல்லது உரைக்கப்பட்ட வடிவத்தில் முன்வைத்தனர்.
9 நல்லது. இப்போது அழைப்பிதழ்கள் அனுப்பப்படுகிறது, ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து வெளிநாடுகளில் உள்ள நம்முடைய சகோதரர்கள் ஞானஸ்நானம் மற்றும் பிரதிஷ்டை செய்வதற்காக ஐவரி கோஸ்டுக்கு வரத் தொடங்குவார்கள் என்று நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். இங்கே மீண்டுமாக குண்டுகள் வெடிப்பதற்கு முன்பு அவர்கள் வர வேண்டும். காபோன் தான் தொனியை அமைக்கும்! உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் வருவார்கள். மனந்திரும்பும் இதயங்களுடன் செம்மறியாட்டுக்குட்டிகள் வருகின்றன! எல்லா இடங்களிலிருந்தும், வெள்ளை மற்றும் கறுப்பின மக்கள், நீதிமான்கள், அநீதியானவர்கள், நல்லவர்கள், கெட்டவர்கள், பூமியின் எல்லா இனங்களையும் சேர்ந்தவர்கள் வருவார்கள். நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், இந்த செய்தியை எல்லா இடங்களிலும் பரப்ப வேண்டும்.
10 சமீபத்தில், சகோதரர்கள் சில இஸ்லாமிய தலைவர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தினார்கள். அந்த சபைகளில் உள்ள எந்தவொரு கிறிஸ்தவனையும் விட அந்த இஸ்லாமியர்கள் ஒரு தீர்க்கதரிசி என்ற கருத்தை நன்கு புரிந்துகொள்கிறார்கள் ... ஒரு தீர்க்கதரிசி வந்து ஏற்கனவே வேதாகமங்களில் எழுதப்பட்டதை மீண்டும் சொல்ல வேண்டியதில்லை என்பதை அவர்கள் அறிவார்கள்! அவர்கள் சகோதரர்களிடம் சொன்னார்கள்: "ஒரு செய்தியாளன் (ரசூல்) ஒரு தீர்க்கதரிசி, அவரிடம் ஒரு செய்தி வெளிப்படுத்தப்பட்டுள்ளது, இது ஒரு ஷாரியா (Sharia) தான், இது முன் கூறப்பட்டதை உயயோகமில்லாமல் செய்கிறது. ஆனால் நபி என்பவர் ஒரு செய்தி இல்லாத, ஒரு புத்தகம் இல்லாத ஒரு தீர்க்கதரிசி. குர்ஆன் இவ்வாறு கூறப்படுகிறது: "லைஷா குலா நபி ரசூல், வா லக்கின் குலு ரசூல் நபி" அதாவது "எந்தவொரு தீர்க்கதரிசியும் ஒரு செய்தியாளன் அல்ல, ஆனால் எந்த செய்தியாளனும் ஒரு தீர்க்கதரிசி" என்று பொருள். இறுதியில் அவர்கள் எனக்கு ஒரு ரசூலின் அனைத்து அம்சங்களையும் பெற்றுள்ளதாக ஒப்புக்கொண்டார்கள்! ஆனால். இதை, இந்த கத்தோலிக்கர்கள், புராட்டஸ்டன்ட்டுகள், சுவிசேஷகர்கள் மற்றும் பிரன்ஹாமிஸ்டுகள் அறியார்கள். முஸ்லிம்கள் அத்தகையவர்களை சந்தித்தது இதுவே முதல் முறை! நான் சகோதரர்களிடம் சொன்னேன்: அவர்களை விட்டுவிடுங்கள், அவர்களுக்கு இன்னும் நேரம் வரவில்லை. [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
11 நல்லது, இப்போது நான் தானியேல் 7:13 பற்றி பேச விரும்புகிறேன் ... பழைய ஏற்பாட்டில், தேவன் அனேக தூதர்களை இஸ்ரவேலுக்கு அனுப்பினார், அவர் ஒரு தூதனை அனுப்பியபோது, அந்த தூதனானவன் பூமியில் தான் எதற்க்காக அனுப்பப்பட்டானோ அதை அவன் நிறைவு செய்தான். அவன் அனுப்பபட்டதற்கான மீட்பானது இன்னும் வாங்கப்படவில்லை. அவர் பூமியின் மேல் ஒரு சரீரத்தை எடுத்துக்கொண்டு வரும் வரை அவர் மற்றொருவரை அதன் பின் மற்றொருவரை அனுப்பினார் ஏனெனில் அவர் தாமே இஸ்ரவேலுடனான தேவனின் உடன்படிக்கையின் தூதராக இருக்கின்றார். ஆனால் அவர் தேசங்களுடனும் தேவனின் உடன்படிக்கையின் தூதராக இருக்கிறார், அதனால்தான், ஏழு தூதர்களுக்கு பிறகு, அவரே பூமிக்கு வந்தார்! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
12 "இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டுவரப்பட்டார்." என்று தானியேல் சொன்னான். ஆமென்! தானியேல் 7:13. மனுஷக் குமாரன் போன்றவன்! "சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும், அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
13 பழைய ஏற்பாட்டில், எஸ்தர் புத்தகத்தில், அகாஸ்வேரு ராஜாவின் ஏழு பிரதானிகள் தோல்வியடைந்தபின் அவர் தோன்றினார்! அவரது வலது கையில் உள்ள ஏழு நட்சத்திரங்கள் தோல்வியுற்றபோது, அவர் தாமே வந்தார், ஏனென்றால் அவர் நட்சத்திரங்களில் மிகப் பெரியவர், அவர் தாவீதின் நட்சத்திரம், வெளிப்படுத்துதல் 11 இன் படி எலியா மற்றும் மோசேயுடன் இஸ்ரவேல் தேசத்திற்கு முன்னதாக அவர் ஆசியா மற்றும் அரபு தேசங்களுடன் பிரகாசமான மற்றும் காலை நட்சத்திரமாக தன்னைக் காண்பிப்பார் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆமென்! யாக்கோபிலிருந்து ஒரு நட்சத்திரம் வெளியே வரும் என்று பிலேயாம் சொன்னபோது, அந்த நட்சத்திரம் பவுல், ஐரேனியஸ், மார்ட்டின், கொலம்பா, மார்ட்டின் லூதர், ஜான் வெஸ்லி அல்லது வில்லியம் பிரன்ஹாம் அல்ல, ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே!
14 புத்தகத்தின் அட்டைப்படத்தில் பாருங்கள், பிரன்ஹாமிஸ்டுகளின் கூற்றுப்படி அங்கே ஏழு நட்சத்திரங்கள் மட்டுமே உள்ளன, ஆனால் நடுராத்திரியில், தன்னுடை சிறகுகளால் அவர்களை சுமந்து செல்லும் பெருங் கழுகானது, அவர் தாமே, ஒரு பெரிய நட்சத்திரம் என்பதை நாம் காணலாம்! ஆமென்! எசேக்கியேல் 1 இன் நான்கு ஜீவன்களுக்குப் பிறகு, ஒரு ஐந்தாவது ஜீவன் வானத்தின் மேகங்களின் மீது வெளியே வருகிறது. அவருக்கு இயேசுவின் ஊழியம் இருக்கிறது! ஆமென்! பத்மு தீவில் உள்ள அப்போஸ்தலன் யோவான் கூறுகிறான்: நான்கு உயிரினங்களுக்கிடையில், அடிக்கப்பட்ட ஒரு ஐந்தாவது ஜீவன் இருந்தது. அவர்தான் ஏப்ரல் 24, 1993அன்று அறியாத மொழியின் இரகசியத்துடன் இறங்கினார். அவர் வந்து அதை பூமியில் பிரசங்கித்தார்! ஆமென்!
15 தானியேல் 7:13 முதல் 14-ஐ பாருங்கள், நீண்ட ஆயுசுள்ளவர் அவருடைய ஏழு மூப்பர்களுடன் தனக்கு முன்பாக அமர்ந்திருந்தார்! அதற்கு அவர்: பிசாசை திரை நீக்கி பூமியில் ஆட்சி செய்யும் வஞ்சனையை யார் முடிவுக்குக் கொண்டு வர முடியும்? என்றார். பவுல் சொன்னான்: "ஆண்டவரே, இதோ நான் இருக்கிறேன், என்னை அனுப்புங்கள்!" பின்னர் பவுல் சுத்திகரிக்கப்பட்டு, வெண்மையாக்கப்பட்டு, புடமிடப்பட்டு, வார்த்தையுடன் பூமியில் ஒரு தலைவனாக அனுப்பப்பட்டான், வேதாகமத்தை நிலைநிறுத்துவதற்காக தவறிழைக்காத முத்திரையுடன் பவுல் அடையாளங்களுடனும் அதிசயங்களுடனும் அனுப்பப்பட்டான்! அவன் தனது பணியை முடித்து அவனுடைய கூட்டத்தினருடன் சேர்க்கப்பட்டான். இதோ, பூமியின் மேல் இன்னுமாக வஞ்சனை நிறைந்ததாக இருந்தது.
16 தேவன் இன்னும் பல தேவசெய்தியாளர்களை அனுப்பினார், இன்னுமாக பூமியானது இன்னும் வஞ்சிக்கப்பட்டிருந்தது, பிசாசு தன் பிள்ளைகளை ஒழுங்கமைத்து, வஞ்சனை மற்றும் பாவத்தின் புதிய முறைகளைக் கண்டுபிடித்து பூரணப்படுத்தியிருந்தான். நீண்ட ஆயுசுள்ளவர் இன்னொரு தீர்க்கதரிசி, பின்னர் இன்னொரு தீர்க்கதரிசி, பின்னர் இன்னொருவர், பின்னர் இன்னொருவர், ஏழாவது வரை இன்னொருவர் ...
17 தேவனுடைய பிரசன்னத்தில் வில்லியம் பிரன்ஹாம் அங்கு இருந்தபோது, அவரால் பிசாசை தெளிவாகக் காண முடிந்தது . அவனை தனது மொழிகளிலும், அவனுடைய அசைவுகளையும், அவனுடைய மறைவிடங்களிலும் அவரால் காண முடிந்தது ... ஆனால் அவர் கீழே வந்ததும் எல்லாம் மங்கலாகிவிட்டது! ஒரு கழுகாக, கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட் மற்றும் சுவிசேஷ சபைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிசாசை அவர் திரை நீக்கினார், பிசாசு தனது ஜேம்ஸ் மன்னன் வேதாகமத்திற்குள் சென்றபோது, அவனை இனி பார்க்க முடியவில்லை! திடீரென்று எல்லாம் மங்கலாகிவிட்டது! அவர் எழுந்து, அசைத்து, தன்னுடைய ஜேம்ஸ் மன்னன் வேதாகமத்தை தவிர்த்து, பிரசங்க பீடம் உட்பட, எல்லாவற்றையும் பார்த்தார், ஆனால் பிசாசு அங்கே இல்லை ... தேவன் அவரைத் திரும்ப அழைத்தார்; அவரும் தனது மக்களுடன் நித்திரை அடைந்தார்!
18 தேவன் ஏழு மூப்பர்களை அனுப்பனார் என்பதை தானியேல் கண்டபோது, அவருடைய வலது கையில் ஏழு நட்சத்திரங்களாக இருந்த ஏழு தேவசெய்தியாளர்களும், அதன் பிறகு பிரன்ஹாமிஸ்டுகளும் "மதம்"(ism) மற்றும் "மதமாக" (ism) என்று பிரிந்து சென்று மகிழ்ந்தனர், வில்லியம் பிரன்ஹாமின் சந்ததியினர் என்னவானார்கள் என்பதின் நிமித்தம் சோகமாகி தானியேல் அழுதான். ஆனால் ஒரு வார்த்தை வெளிவந்து: "தானியேலே அழாதே ..."
19 மேலும் தானியேல் சொன்னதாவது: "இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டுவரப்பட்டார். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்]. தானியேல் 7:13. இல் மனுஷகுமாரனுடைய சாயலான! "சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும், அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும்." அது வெளிப்படுத்துதல் 5:4 முதல் 5. நீங்கள் பார்க்கிறீர்களா?
20 இது தான் இங்கே வெளிப்படுத்துதல் 12-ல் நடக்கிறது. பூமியில் கிறிஸ்துவின் மணவாட்டி க்கு பெருங்கழுகு தனது இரண்டு சிறகுகளையும் கொடுப்பதை யோவான் கண்டான். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்]. மலைகள் சமமாக்கப்பட்டு இருக்கும் என்று ஏசாயா சொன்னபோது, இது எந்தவொரு பூகம்பம் இல்லாமல் நிறைவேறியது. [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்]. பூமியில் கிறிஸ்துவின் மணவாட்டிக்கு தனது இரண்டு சிறகுகளை கொடுக்கும் இவர் யார்? யோவான் அவரை பணிந்துக்கொள்ள தொடங்கினார் என்று வேதாகமம் கூறுகிறது, வில்லியம் பிரன்ஹாம் அவர் ஒரு மகிமை வாய்ந்த கதாபாத்திரமாக இருப்பார் என்று சொன்னார், அதாவது கிறிஸ்துவின் பிரத்தியட்சம் என்று கூறுவதாகும் மகிமை வாய்ந்தது ஏனெனில் கிறிஸ்து இருப்பதால்; சரி அவர் எங்கே? உங்களுக்கு முன் எளிமையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளார். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
21 இப்போது இதைக் கவனியுங்கள்: இங்கே, தேவனுடைய வல்லமையில், வலகரத்தில் உள்ள நான்கு ஜீவன்களும், பிசாசின் வழக்கத்தில் உள்ள நான்கு குதிரை வீரர்களும்! ஏழு முத்திரையின் நான்கு குதிரைவீரர்களை நீங்கள் காணும்போது, தேவனின் ஏழு செய்தியாளர்களும் நான்கு குதிரைவீரர்களாக இருக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்! அதன்பிறகு, பெரிய குதிரைவீரன் வெளிப்படுத்துதல் 19-ல் தோன்றுகிறான்! நான்கு ஜீவன்களும் பின்னர் சிறிய புத்தகத்துடன் ஆட்டுக்குட்டி; நான்கு ஜீவன்களும் பின்னர் அழியாத மொழியுடன் ஆட்டுக்குட்டி.
22 பழைய ஏற்பாட்டில் ஏழு பரலோக தூதர்களும் பிறகு யெகோவாவின் தூதன்! அகாஸ்வேரு ராஜாவின் முகத்தை நோக்கும் ஏழு பிரபுக்கள் பரலோகத்தில் இருந்தார்கள். ஆனால் பூமியில், அங்கே ஏழு பிரதானிகள் இருந்தார்கள் மற்றும் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மற்றொரு பிரதானி ஏழாவது பரலோக தூதனின் உத்வேகத்தினால் இருந்தான் அவன் தான் மெமுகான்.
23 இப்போது, இந்த கழுகு யார்? இந்த கழுகு தான் ஏழு நட்சத்திரங்களை கொண்டிருக்கும் பெருங்கழுகு! ஆட்டுக்குட்டியின் ஏழு நட்சத்திரங்களின் முத்திரையை புத்தகத்தின் மேல் நாம் சரியாகக் காணலாம்!... அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? அந்த கன்னிகைகளை உற்சாகப்படுத்தி எழுப்புகிற இந்த சத்தம் எங்கிருந்து வருகிறது?
24 வில்லியம் பிரன்ஹாம், "சத்தியத்தின் ஆவி" என்ற பிரசங்கத்தில், அதை ஜனவரி 18, 1963 அன்று அரிசோனாவின் பீனிக்ஸ் நகரில் அவர் பிரசங்கித்தார். பத்தி 43: "இது நான் வீட்டிற்குச் செல்லும் நேரமாக இருக்கலாம், அது மிகவும் அவ்விதமாக தான் தோன்றுகிறது. அப்படியானால், எனக்குப் பின் யாரோ ஒருவர் எழும்பி செய்தியைக் கொண்டு செல்வார். அவர் ஒரு வினோதமான நபராக இருப்பார், ஆனால் அவர் இதற்குப் பிறகு எழும்பி செய்தியை கொண்டு செல்வார். நீங்கள் அதற்கு செவி கொடுங்கள். அது வேதமாக இருக்கும் வரை, அதனுடன் தரித்திருங்கள். " ஆமென்!
25 வில்லியம் பிரன்ஹாம் கூறினார்: "வினோதமான நபர்", ஒருவர் தனது செய்தியிலிருந்து வருவதில்லை, ஆனால் சாயங்கால வேளை செய்திக்கு வெளியே வேறு இடத்திலிருந்து வருவார். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்]. ஆகவே அது ஒரு பிரன்ஹாமிஸ்டாக இருக்காது, ஏனென்றால் பத்து கன்னிகைகளும் நித்திரை மயக்கமடைந்து, தூங்கினார்கள், எவால்ட் ஃபிராங்க், அலெக்சிஸ் பாரிலியர், பருட்டி கசோங்கோ, டொனால்ட் பார்னெல், பியர் காஸ் உட்பட... பிரன்ஹாமிஸ்டுகளில் மிகச் சிறந்த மற்றும் மிகவும் ஆவிக்குரியவர்கள் உள்பட அது அவர்கள் மத்தியில் இருக்காது. ஆனால் அதைச் செய்ய வேறு எங்காவது இருந்து ஒரு விந்தையான நபர் வந்து, ஞானிகளும், விவேகமுள்ளவர்களும், புத்தியில்லாத கன்னிகைகளும் கூட புறப்பட்டு வருவார்கள்! அதற்கு அவர்கள்: ஆமென் என்று சொல்வார்கள்!
26 வில்லியம் பிரன்ஹாமின் பெயரை நான் முதன்முதலில் கேட்பதற்கு முன் நான் அழைப்பும் பணி நியமனமும் மற்றும் எல்லாவற்றையும் பெற்றேன். ஏன்? வேதவசனங்கள் குழப்பமடையக்கூடாது என்பதற்காக, ஏனெனில் சத்தமானது வேறொரு இடத்திலிருந்து வர வேண்டும். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
27 வில்லியம் பிரன்ஹாமின் ஊழியம், இது பெந்தேகோஸ்தலிசத்திற்கும் நடுராத்திரி சத்தத்திற்கும் இடையிலான ஒரு மதத் தலைவரின் ஊழியத்தைத் தவிர வேறொன்றுமில்லை! இப்போது பிரன்ஹாமிசம் என்பது நடுராத்திரி சத்தத்தை அனுப்பிய சர்வவல்லமையுள்ள தேவனின் கைகளில் ஒரு பெந்தேகோஸ்தே சல்லடை போன்றது. நடுராத்திரி சத்தத்தின் ஒவ்வொரு பிரசங்கமும் அந்த பெந்தேகோஸ்தே சல்லடையை நடுங்க செய்கிறது. ஒட்டகமானது ஒரு ஊசியின் காதில் நுழைய முடிந்தால், உண்மையிலேயே நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருந்தால் பிரன்ஹாமிஸ்டுகளாகிய நீங்கள் நுழைய முடியும் [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்]. உணர்ந்து கொள்ளக் கூடியவன் எவனோ அவன் உணர்ந்து கொள்ளட்டும்!