(ஜூன் 27, 2010, ஞாயிற்றுக்கிழமை காலை அபிட்ஜான்-ஐவரி கோஸ்டுக்கு அருகிலுள்ள அன்யாமாவில் பிரசங்கிக்கப்பட்டது)
1தேவனுடைய கிருபையால், செய்தியில் ஒரு முக்கியமானஅடி எடுத்து வைத்துள்ளோம். மேலும் பிசாசு அதைஉணர்ந்து கொள்வதற்கு முன்பு, நம்முடைய சகோதரர்கள்ஃபிராங்கோயிஸ் முபூயி மற்றும் ஒபாமே ஆர்சேன்ஆகியோரின் விமானம் காபோனின் மண்ணில்தரையிறங்கியது. அபிட்ஜான்-லிப்ரெவில் விமானத்தில்நம்முடைய சகோதரர்கள் தாக்குதலைத் திட்டமிடுகிறார்கள்என்று இந்த அல்லது அந்த தூதரகத்திற்கு தெரிவிக்கபிசாசுக்கு நேரம் இல்லை. எல்லாம் அற்புதமாக நடந்தது. [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்]. இது ஆச்சரியமாக இருந்தது; அவர்கள் எப்போதும்நம்முடனேயே இருப்பதை நாம் விரும்பியிருந்தோம்.ஆனால் அவர்கள் திரும்பி போக வேண்டியிருந்தது, அங்கேபலருக்கு அவர்கள் தேவையாக இருந்தனர். செய்தியில்உள்ள எல்லா மேய்ப்பர்களுக்கும் மற்றும்பிரசங்கிகளுக்கும் அத்துமாக்களோடு அன்பு, தாழ்மைமற்றும் பொறுமையோடு இருக்கும்படியாகவும் மற்றும்செய்தியை விட மிக வேகமாக செல்ல வேண்டாம் என்றுஅனைவருக்கும் நான் அவர்களை பரிந்துரை செய்கிறேன்.
2இருப்பினும், நான் சொன்ன எல்லாம் கடினமானதாகஇருந்தாலும், அது முழுமையான தேவனுடையவார்த்தையாகும். செய்தி கடினமானது என்று எனக்குத்தெரியும், ஆனால் அதிலே உறுதியாக நிற்கவும்.பொறுமையோடு இருங்கள், ஒன்று அல்லது இரண்டுஆண்டுகளுக்குப் பிறகும் கூட மாறக்கூடிய அல்லதுபுரிந்துகொள்ளக்கூடிய சில ஆத்துமாக்கள் உள்ளன. நல்லமேய்ப்பராக இருங்கள். சுவிசேஷ சபைகளில் உள்ளஇயேசு தனது தோளின் மீது சுமக்கக்கூடிய ஆடுஅழகாகவும் பொறுமையாகவும், எந்த குறைபாடும்இல்லாமல், எந்த பலவீனமும் இல்லாமல் இருக்கும், ஏனெனில் அவர்களின் இயேசு பிசாசாக இருக்கின்றது,ஆனால் நல்ல மேய்ப்பன் தனது தோளில் அனைத்தும்தேவையாக இருக்கின்ற பலவீனமான ஆட்டுக்குட்டியைசுமக்கிறான். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!”என்கிறார்கள்].
3ஐவரி கோஸ்ட்டுக்கு வரும் மேய்ப்பர்கள் மற்றும்பிரசங்கிகளுக்கு, அவர்களுக்கு என்ன காத்திருக்கிறதுஎன்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் ... முதலில், அவர்கள் வரும்போது, ஞானஸ்நானம் இருக்கின்றது, பின்னர் பிரதிஷ்டை மற்றும் மூன்றாம் கட்டத்தில்மேய்ப்பர்கள், பிரசங்கிகள் மற்றும் மூப்பர்களுடன்கேள்விகள் மற்றும் பதில்கள் இறுதியாக, நான்காவதுமற்றும் இறுதியான கட்டமாக, தீர்க்கதரிசியினால் பிரசங்கபீடத்திற்க்கு அடையாள அழைப்பு. இது தான்ஜெயங்கொள்கிறவர்களின் வழி.
4மனித சரீரம் ஒரு குடியிருப்பு ஸ்தலமாக இருக்கிறது;நாம் பரிசுத்த ஆவிக்கு ஆலயமாக இருக்கின்றோம் என்றுவேதாகமம் சொல்கிறது. மேலும் அது அதை விட அதிகமாகஉள்ளது ஏனென்றால் நூற்றுக்கணக்கான பேய்கள் ஒரேஒரு மனித உடலில் தங்க முடியும். மேலும் கூடாரங்கள்முதல் ராஜாவின் அரண்மனைகள் வரை எல்லா வகையானவீடுகளும் உள்ளன. மேலும், எல்லா கண்டங்களிலும், ஆப்பிரிக்கா ஒரு கூடாரமாக இருக்கின்றது, எல்லாஇனங்களிலும், கருப்பு இனம் ஒரு கூடாரம் என்பதைநீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். ஐவரி கோஸ்டில் உள்ளஅனைத்து இனக்குழுக்களிலும், என்னுடையதை விடசிறியதாகவும் குறைவானதாக இருப்பதாக நான்கேள்விப்பட்டதே இல்லை.
5கட்டாட்ஜியில், என் குடும்பம் புத்திக்க்கூர்மையற்றமக்களின் வீடு என்று கூறப்படுகிறது. ஆனால் இந்தகூடாரத்தின் கீழ் தான் சர்வ வல்லமையுள்ள தேவன் இந்ததலைமுறையில் தனது மகிமையை வெளிப்படுத்ததீர்மானித்துள்ளார் அவர் வில்லியம் பிரன்ஹாமிற்குவாக்குறுதியளித்தபடியே கூறினார்: "நீங்கள்புகைப்படத்தில் காணும் அந்த ஒளியானது எனக்கு மேல்காணப்பட்ட ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தது. அதுஎன்னிடமிருந்து இவ்விதம் சுழன்று சென்று அந்தகூடாரத்தின் மேல் தங்கி, என்னை நோக்கி, 'உன்னை நான்அங்கு சந்திப்பேன் என்றது". பூமியில் ஒரு நாள்கூடாரத்தின் கீழ் ஒரு ஊழியம் இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளப்பட்ட எவரும் அறிவார்கள். தேவன்இராஜாதிபத்தியம் உள்ளவர், தேவன் அவருடைய சொந்தவியாக்கியானி, அவர் தனது வார்த்தையை அவர்விரும்பியபடி விளக்குவார், தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்அதை விசுவாசிப்பார்கள். [ஆசிரியர் குறிப்பு : சபையார்“ஆமென்!” என்கிறார்கள்].
6காங்கோ-கின்ஷாசாவின் அப்போஸ்தலர் க்ரெபின்,வில்லியம் பிரன்ஹாம் தனது பிரசங்கத்தில் கூறப்பட்டதில்என்னுடைய கவனத்தை ஈர்த்தார், ஜூன் 24, 1962, ஞாயிருமாலை தெற்கு வாசல், கலிபோர்னியாவில் வில்லியம்பிரன்ஹாம் பிரசங்கம் செய்த " மேம்பட்ட அடையாளம்", பத்தி. 64. இல் தேவனின் அசல் வார்த்தையைபிரசங்கிப்பதற்காக, இந்நாட்களில் ஒன்றில் தீர்க்கதரிசிஒருவன் வருவான் குட்டைத் தலைமுடியை அல்லதுஏதோவொன்றை நீங்கள் கொண்டிருப்பதைப் பற்றி நான்உங்களுக்கு சொல்லுவதின் பேரில் என்னைப்பற்றி நீங்கள்பேசுகிறீர்கள். அவனுடைய பிடி ஒன்று கிடைக்குமட்டும்காத்திருங்கள். நீங்கள் அவனுக்கு செவிகொடுக்குமட்டும்காத்திருங்கள். ஸ்தாபன அமைப்பின் மீது நான் கடுமையாகஇருக்கிறேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அவன்வரும்வரை காத்திருங்கள். இந்த ஆண்டுகளில் பச்சைப்புழுசாப்பிட்ட எல்லாவற்றையும் அவன் திரும்ப அளிப்பான். அதுஒரு செய்தி புறப்பட்டுச் செல்வதாக இருக்கும்...". இன்றுஇந்த வேதவாக்கியம் உங்களுக்கு முன் நிறைவேறியது! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்]. ஆனால் பிரன்ஹாமிஸ்டுகள் இதைப் பற்றி என்னநினைக்கிறார்கள் என்று கேளுங்கள். வில்லியம் பிரன்ஹாம்தன்னைப் பற்றி பேசுகிறாரா அல்லது வேறொரு நபரைப்பற்றி பேசுகிறாரா? நடுராத்திரி சத்தத்தை சாயங்காலசெய்தியுடன் ஒப்பிட்டு, இந்த தீர்க்கதரிசனம்நிறைவேறவில்லை என்று சொல்லுங்கள்! சகோதரரே, அமைதியாக இருங்கள்.
71993 ல் எனக்கு ஏற்பட்ட அனுபவம் உங்களுக்குநினைவிருக்கிறதா, நான் நியாயத்தீர்ப்பின் தூதனைப்போல இருந்தேன், அதாவது ஒரு கானல் நீரைப் போன்றஒளிரும் வெள்ளை மேகம். என் மனதுடனும், என்னுடையஎல்லா புலன்களுடனும் ஒரு சரீரம் இல்லாமல்என்னிடமிருந்து வெகு தொலைவில் நின்றுகொண்டிருந்தேன், நான் ஏற்கனவே ஆயிரவருடஅரசாட்சியில் இருப்பதைப் போல நான்காணக்கூடியவர்களை அடையாளம் கண்டுகொண்டேன்.ஒரு நாள், நம்முடைய சரீரங்கள் உயிரற்றவையாகஇருக்கும்போது, நாம் இன்னும் உயிருடன் இருப்போம், ஆனால் இந்த இன்னோரு தெய்வீக பரிமாணத்தில் சென்றுபூமியில் நாம் செய்யும் அனைத்து செயல்களுக்கும்தேவனுக்கு ஒரு கணக்கைக் கொடுக்க வேண்டும்.
8மரணம் என்பது வெறுமனே ஒரு பரிமாணத்திலிருந்துஇன்னொரு பரிமாணத்திற்கு செல்லும் பாதையாகும். இந்தவஸ்திரத்திலிருந்து வெளியேறுவதை போன்று இந்த சரீரம்கீழே விழுகிறது. நான் கண்ணுக்கு தெரியாதவனாகஇருந்தேன், ஆனால் என் முழு மனமும், என் மனசாட்சியும், என் கற்பனையும் அதன் ஸ்தானத்தில் இருந்தன! என்னால்கண்கள் இல்லாமல் பார்க்க முடிந்தது, என்னால் மூளைஇல்லாமல் சிந்திக்க முடிந்தது. நான் கண்ணுக்குதெரியாதவனாக இருந்தேன். இந்த சரீரம் உலகிற்குகொண்டு வரப்படுவதற்கு முன்பு நான் இவ்விதமாக தான்இருந்தேன். இந்த சரீரம் கருத்தரிக்கப்பட்டபோது, நான்தேவனுடைய பிரசன்னத்தில் இருந்து அக்னி அல்லதுமேகஸ்தம்பமாக என் தாயின் மீது வந்தேன், இந்த சரீரம்பிறந்தபோது, நான் அதற்குள் நுழைந்து, நான் கச்சிதமாகஎன்னவாக இருந்தாலும் அதை வெளிப்படுத்துகிறேன். நீங்கள் பார்க்கிறீர்களா? [ஆசிரியர் குறிப்பு : சபையார்“ஆமென்!” என்கிறார்கள்].
9நான் ஒரு நல்லவனாக அல்லது மோசமான மனிதனாகஇருந்தால், அது என்னிடம் இருக்கும் வஸ்திரத்தின்காரணமாக அல்ல, ஆனால் நான் உலகத்தின்அஸ்திவாரத்திற்கு முன்பே அவ்வாறாக இருந்தேன். ஆகவே, தேவனுக்குப் பயப்படுங்கள், அவருடையவார்த்தைக்குக் கீழ்படியுங்கள், அதைச் செய்வதற்கானதிறனை அவர் உங்களுக்குக் கொடுப்பார், இதனால் இந்தமாம்சமும் எலும்பு கூடும் விழும்போது, ஜீவன் அற்றவர்களாகஇருக்கும்போது, நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். பசியிலும், கைவிடப்பட்ட நிலையிலும், வறுமையிலும்மற்றும் வியாதி ஆகியவற்றிலும், நீங்கள் பிசாசின் பிள்ளைஎன்று நினைத்தாலும் அல்லது தேவன் உங்களைகைவிட்டுவிட்டார் என்று நினைத்தாலும், நல்ல ஜீவியத்தைஜீவிப்பதற்கு எதுவும் உங்களைத் தடுக்காது. லூக்கா 16-ல்உள்ள லாசரைப் போலவே, உங்கள் சூழ்நிலை மற்றும் உங்களுக்கு என்ன நடக்கும் என்பதைப் பொருட்படுத்தாமல் நன்றாக ஜீவியுங்கள்! [ஆசிரியர்குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
10இப்போது நான் ஒரு கேள்வியை வாசிக்கப் போகிறேன்,எனக்கு இங்கே ஒரு கேள்வி இருக்கிறது ... சகோதரர்பிலிப்பு, எங்கள் மேய்ப்பரின் பிரசங்கத்தை நாங்கள் பதிவுசெய்யலாமா? நிச்சயமாக, ஒவ்வொரு சபையிலும் ஒவ்வொரு பிரசங்கமும் பதிவு செய்யப்பட வேண்டும்.சபையில் குறைந்தபட்சம் 25 உறுப்பினர்கள் இருந்தால்,பிரசங்கமானது மாற்றமின்றி ஆடியோ அல்லது வீடியோ வடிவத்தில் நாட்டின் குழுவில் வைக்கப்பட வேண்டும்.மற்றொரு சபையின் உறுப்பினர் ஒருவர் தனது பக்திவிருத்திக்காக அதைக் கேட்கலாம். இவை யாவும் கூட, செய்தியுடன் அவர்களின் பிரசங்கங்களின் இணக்கத்தைசரிபார்க்கும் நோக்கத்துடனும் இருக்கும். ஒரு நாட்டின்அப்போஸ்தலர்கள் மற்றும் இடம் விட்டு இடம் செல்லும்பிரசங்கியின் ஒவ்வொரு பதிவும் நாட்டின் குழுவில் இருக்கவேண்டும். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
11யாரோ ஒருவர் "நாம் ஒன்று சேறும் போது ஆமென்!ஆதாம் அங்கே இருக்கிறார், ஆமென்! விலங்குகளுக்குபெயரிட்டுக் கொண்டு இருந்தான்...." என்ற பாடல்வரிகளின் அர்த்தம் என்ன என்று கேட்டார்கள் நான்சொன்னேன்: நீங்கள் அமைப்பாளரின் ஆவியில்இல்லாததால் அது உங்களுக்கு புரியவில்லை. மேலும் நான்சொன்னேன், தேவன் கத்தோலிக்கர்களை அருகில்கொண்டுவந்தார், நான் சொன்னேன்: இந்த விலங்கின்சந்ததி, அவை சிங்கங்கள், பின்னர் அவர்புராட்டஸ்டன்ட்டுகளை அருகில் கொண்டு வந்தார், நான்சொன்னேன்: இந்த விலங்குகள் செம்மறிஆட்டுக்குட்டிகள்! பின்னர் அவர் சுவிசேஷகர்களைஅருகில் கொண்டு வந்தார், நான் சொன்னேன்: இவைவெள்ளாடுகள்! தேவனுக்கு முன்பாக கத்தோலிக்கர்கள், புராட்டஸ்டன்ட்டுகள், சுவிசேஷகர்கள் மற்றும்பிரன்ஹாமிஸ்டுகள் விலங்குகளாக இருக்கின்றன! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
12இப்போது ஒரு சபையின் விசுவாசமானது அதன்மேய்ப்பரின் மனைவினுடைய விசுவாசமாக இருந்தால், என்சபையிற்கும் அது அப்படியே இருக்க வேண்டும் என்பதேஎனது ஜெபம். ஏனென்றால், எடுத்துக்கொள்ளப்படுதலுக்குமுன்பு, தேவனுடைய சித்தத்தை இந்த வழியில் நாம்வெளிப்படுத்துவோம். அவரே வார்த்தை மற்றும் நாம்வார்த்தையின் மணவாட்டியாக இருப்போம் மேலும்அவருடைய ஆவியானவர் நம்மில் முழுமையாக வசிப்பார்மேலும் நமக்கு இனி ஒரு போதும் எந்த போதனையும்தேவைப்படாது, நமக்கு இனி எந்த பிரமாணமும்தேவைப்படாது, நமக்கு இனி எந்த விதியும் தேவைப்படாது, நமக்கு இனி எந்தவொரு தீர்க்கதரிசனமும் தேவைப்படாதுஆகிலும் அவருடைய சித்தத்தை நாம் பூரணத்துடன்செய்வோம், ஏனென்றால் அவருடைய ஆவியானவர்நம்மிலும் நம்முடைய சுய ஆவியும், நம்முடைய சித்தமும், நம்முடைய சிந்தையும், மனசாட்சியும், நம்முடையநினைவும் என்றென்றைக்குமாக அழிக்கப்படும். இதுஅமைப்பாளரின் ஆவிக்கும் அப்பால் இருக்கும். [ஆசிரியர்குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
13ஆனால், ஒரு தீர்க்கதரிசியின் மனைவியாக இருப்பதுஉங்களுக்கு நித்திய பாதுகாப்பை அளிக்காது! யூதாஸ்கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷனாக இருந்தான்ஆனால் அவன் நரகத்தில் இருக்கிறான். கர்த்தருடையதாயான மரியாள் சீஷர்களுடன் மேல் அறையில் இருந்தாள். வெஸ்லியின் மனைவி இரட்சிக்கப்பட்டதாக நான்ஒருபோதும் சொல்லவில்லை. நீங்கள் பார்க்கிறீர்களா?அவள் ஒரு நல்ல ஜிவியத்தை ஜீவிக்க வேண்டும், எல்லாசகோதரிகளுக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும், பூமியின் கடைசி நாள் வரை வார்த்தையின் ஒவ்வொருஅணுவிற்க்கும் கீழ்ப்படிந்து மகிமையிலே தன்மனவாளனை சந்திக்கிறாள்.
14இதை குறித்து, டிம்போக்ரோவில் இருக்கும் சகோதரிஎலிசபெத்தை நான் பாராட்டினேன். அவரது கணவர் சிலமாதங்கள் சிறையில் இருந்தபோது, அவள் மோசமாகநடந்து கொண்டாள், மேலும் அவள் நடுராத்திரி சத்தத்தைவிட்டுவிட்டு பிரன்ஹாமிஸ்டுகளுடன் சேர்ந்து கொண்டாள். ஆனால் அவரது கணவர் சகோதரர் கிறிஸ்டோபர்பிப்ரவரி2006 இல் மரித்தபோது, "சகோதரர் பிலிப்பு, என்னை நம்புங்கள், நான் ஒருபோதும் நடுராத்திரிசத்தத்தை விடமாட்டேன்! எல்லாவற்றையும் இப்போதுபுரிந்துகொள்கிறேன்! அங்கே என் மணவாளனைசந்திப்பேன்" என்றாள். அவள் தன் வார்த்தையைக்கடைப்பிடித்தாள், அவள் மரிக்கும் வரை விசுவாசத்தைகொண்டிருந்தாள். அவளுடைய பிரன்ஹாமிஸ்ட்குடும்பத்தினர் அனைவரின் முன்பு இந்த சாட்சியத்தைஅளிக்க நான் தனிப்பட்ட முறையில் அவளதுஅடக்கத்திற்குச் சென்றேன். [ஆசிரியர் குறிப்பு : சபையார்“ஆமென்!” என்கிறார்கள்].
15நல்லது! முடிப்பதற்காக... காக்குவ் 64 அதிகாரத்தின்இரண்டு தரிசனங்களை நான் வாசிக்கப் போகிறேன் "நான்என்னுடைய வீட்டிலே அமர்ந்திருந்தேன், எனக்கு முன்பாகஒரு மேஜை இருந்தது மற்றும் முழுவதும் வெண்மையாகஉடுத்துவிக்கப்பட்ட ஒரு மனிதன் கடற்கரை மணலின் மீதுநிற்கிறதை கண்டேன். அவன் ஒரு கருப்பின மனிதன்.அவன் ஏதோ ஒன்றிற்காக காத்திருப்பதை போன்றுதண்ணீர்களின் மேற்பரப்பில் கவனித்துக்கொண்டிருந்தான் மற்றும் நான் அவனைபின்புறத்திலிருந்து கண்டேன். அவன் கவனித்துக்கொண்டிருக்கையில் ஒரு மீனைப் போன்ற ஒரு திமிங்கலம்தண்ணீர்களின் மேற்பரப்பில் எழும்பினது. பிறகு சிறிதுநேரம் கழித்து, மூச்சு விட்ட பிறகு தண்ணீர்களின்ஆழத்திற்கு மெதுவாக சென்று. மரித்து போனதை போன்றுகாற்று குமிழிகள் வெளியே வந்தது. பிறகு இரண்டாவதுமீன் அதே தோற்றத்துடன் வேரு ஒரு இடத்தில் தோன்றிமுதலாவதை போன்று அதே விதத்தில் மறைந்து போனது.பிறகு முன்றாவது, பிறகு நான்காவது, பிறகு ஐந்தாவது, பிறகு ஆறாவது மற்றும் ஏழாவது மற்றும் அனைத்தும் அதேவிதத்தில் நடந்தது. ஏழாவது மீன் மறைந்த போது,வெண்மையான வஸ்திரம் தரித்தவனுக்கு முன்பாகதண்ணீர்களின் மேல் ஒரு மின்னலின் மின்வெட்டொளிஅங்கே இருந்தது. அந்த மின்வெட்டொளியானதுஓலிகளை தீப்பொறியுடன் உள்ள சத்தங்களை போன்றுஉண்டாக்கினது. அது ஏதோ சில மின்னலோ அல்லது சிலஇடியோ அல்ல ஆனால் அந்த மின்வெட்டொளியானதுதீப்பொறிகளுடன் உள்ள வெடி சத்தம் போன்று சக்திவாய்ந்த இரைச்சல்களை உருவாக்கினது. அந்த ஒளியும்மின்வெட்டொளியின் சத்தங்களும் மனிதனுக்குள்ளாகசென்றது மற்றும் அவன் சிறிது அசைந்தான். மேலும் ஒளியும் மின்வெட்டொளியின் சத்தங்களும் அனைத்துசிருஷ்டியையும் தாக்கினது; மற்றும் காற்றானதுதண்ணீர்களின் மேலும் மரங்களின் மேலும் அடித்தது. அலைகள் பாறைகளை மோதியது. மேலும் இதற்காக தான்அந்த வெண்மையான வஸ்திரம் தரித்திருந்த மனிதன் காத்திருந்ததை போல அது இருந்தது பிறகு தரிசனம்முடிந்தது.
16அது என்ன? என்று நான் கேட்டேன். உடனடியாகஇரண்டாவது தரிசனம் ஒரே நேரத்தில் தொடர்ந்தது. அதேஆப்பிரிக்கன், நான் கண்ட அதே வெண்மையானவஸ்திரத்தால் உடையணிந்து இருந்த மனிதன் கடற்கரைமணலின் மேல் நின்று கொண்டு மிக உயர்ந்த மலை மேல்ஒரு வெள்ளை குதிரையின் மீது உட்கார்ந்திருந்தான். ஒருகூர்நுனி கோபுரம் போல வெறுமையாக இருந்தது. தண்ணீர் அதன் மீது ஒடிக்கொண்டிருந்தது. மலைகளின்தொடர்ச்சியோடு இல்லாமல் தனியாக இருந்தது. இந்தமனிதனின் முகத்தை நான் பார்க்க விரும்பினேன், ஆனால்நான் அவனை பின்னால் இருந்து பார்த்ததினால். அவன்மெதுவாக இறங்கி சென்றான், அவன் முன் நோக்கி நகர்ந்தபொழுது, அவன் நின்று கொண்டிருந்த அந்த மலைஅதனுடைய இடத்தில் இருந்தது ஆனால் பூமியின் மற்றமலைகளும் குன்றுகளும் அவனுக்கு முன் சிறிய கற்களாகஆனது மற்றும் எல்லா பெரிய சிறிய மரங்களும் வளைந்துஅதினுடைய இலை தழைகள் அவனுக்கு முன் தரையைதொடும் மட்டும் வனைந்தது மற்றும் அவன் ஒரு வயதானகருப்பின ஸ்திரீயிடம் சென்றான். இந்த வயதான கருப்பினஸ்திரீ நீண்ட காலமாக இந்த மனிதனுக்காககாத்துக்கொண்டிருந்ததை போல் இருந்தது. அவள்முதுமையால் வளைந்திருந்தாள், அவளுடைய முகத்தில்உள்ள சுருக்கங்கள் மிகவும் வலுவாக இருந்தன, அவளுடைய அசைவுகள் மிகவும் மெதுவாக இருந்தன.
17அவள் அந்த குதிரை வீரன் வருவதை ஒருவர்தன்னுடைய ஒரே நம்பிக்கையை கொண்டிருப்பதைபோன்று மற்றும் அது அவளுக்காகவே அவன் வருவதுபோன்று இருந்தது. வெண்மை நிறத்தில்உடையணிந்திருந்த அந்த மனிதன் அவளிடம் சவாரிசெய்தான். அவன் அந்த வயதான ஸ்திரீயை தொட்டபோது, அவள் மிகவும் அழகிய இளம் பெண்ணாக ஆனாள். அவளுடைய ஆடையும் கூட மறுரூபமானது. அந்த அற்புதம்நடைபெற்றதாக மகத்தான ஜன கூட்டத்தினர் மீண்டுமாகவந்து அந்த அற்புதத்திற்காக தேவனை துதித்து மற்றும்ஆராதித்தார்கள். அந்த ஜனக் கூட்டம் மிகவும் பெரியதாகஆனது. அங்கே ஆண்களும் பெண்களும், இளம்வயதினரும், வெள்ளையர்களும் கருப்பர்களும், பூமியிலுள்ள சகல இனத்தாரும் உரத்த குரலில், "நம்முடைய தேவனுக்கு மகிமை உண்டாவதாக! நம்முடைய தேவனுக்கு மகிமை உண்டாவதாக! நாங்கள்இரட்சிக்கப்பட்டோம்! நாங்கள் இரட்சிக்கப்பட்டோம்!". மேலும் இந்த செய்தி பரவியது மற்றும் ஜனக்கூட்டத்தினர்எல்லா இடங்களிலும் இருந்து வந்தார்கள். குதிரை வீரன்முன்னேறிச் சென்றான் மற்றும் திரளான கூட்டத்தினர்அவனை பின்தொடர்ந்து சென்றார்கள். தரிசனம் முடிந்தது, அதன் நிமித்தமாக பல நாட்கள் நான் கலங்கினேன். ஆமென்!