



Kacou 98 (Kc.98) : தேவனோடு பழக்கப்படுத்திக் கொள்ளுதல்
(2010 ஆகஸ்ட் 22, ஞாயிறு காலை, அட்ஜாமே அபிட்ஜன் - ஐவரி கோஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
1 தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்! இங்கே என்னிடம் பல குறிப்புகள் உள்ளன! ... என்கிறார்கள்டூவாலாவில் இருக்கும் நம்முடைய சகோதரர் மேய்ப்பர் ஃபேபியன் மெடோவை நான் வாழ்த்துகிறேன். கேமரூனில் டூவாலாவின் பிரன்ஹாமிஸ்ட் போதகர்களால் அவர் சண்டையிட பட்டார்! ஆனால் தேவனுடைய வார்த்தையினாலும் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் மிருகத்தை அவர் தோற்கடித்தார் என்று வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
2 இப்போது எல்லோரும் ரப்பர் மரம் விவசாயத்தில் அதற்க்கு ஒரு பெரிய எதிர்காலம் இருப்பதாகத் தெரிவதால் முதலீடு செய்கிறார்கள்! அது என்றென்றைக்கும் அவ்விதமாக இருக்கட்டும் ஆனால் அவை இப்படியே இருக்க முடியாது என்று நான் உங்களுக்கு கூறுகிறேன்! நீங்கள் ஏற்கனவே அதில் ஈடுபட்டிருந்தால், அதை தொடருங்கள், ஆனால் நடவு செய்தவர்களில் பலர் கனிகளை அறுவடை செய்வதற்கு முன்பு, ரப்பர் மதிப்பற்றதாக இருக்கும். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
3 நான் சமீபத்தில் கனடாவுக்குச் சென்ற நம்முடைய சகோதரி பெர்டினுடன் பேசினேன், நான் அவளிடம், "சகோதரியே, அங்கே ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குப் பிறகு, நீங்கள் விசுவாசத்தில் ஜீவிக்க முடியும் என்று பார்த்தீர்களா? நீங்கள் வேறொரு உலகில் இருப்பதைப் போல உணரவில்லையா? என்று நான் சொன்னேன்". அதற்க்கு அவள், "நேர்மையாக சகோதரரே, இங்கே கடினமாக இருக்கிறது, நாங்கள் உண்மையிலேயே வேறொரு உலகில் இருக்கிறோம், உலகம் இங்கே தலைகீழாக இருக்கிறது என்று கூட நான் சொல்லுவேன். பெண்கள் உள்ளாடைகளால் உடையணிந்து இருக்கிறார்கள், ஏனென்றால் இப்போது, இங்கே உஷ்ணமாக இருக்கிறது, இது கோடைகாலமாகும்." ஆண்களும் சிறிய உள்ளாடைகளோடு வெற்று மார்புடன் இருக்கிறார்கள். அது சுரங்கப்பாதையாக இருந்தாலும், பேருந்தாக இருந்தாலும், தெருக்களாக இருந்தாலும், அவர்கள் அவ்வாறே இருக்கின்றனர்! நான் சில சமயங்களில் அதிர்ச்சியடைகிறேன் ஏனென்றால் நம் நாட்டில், இதுபோன்ற ஆடைகள் ஒழுக்கக்கேடானவை, ஆனால் இங்கே, அது அவர்களுடைய வாழ்க்கை முறையாக இருக்கிறது" என்றாள்.
4 நான் சொன்னேன், "சகோதரி, எந்நிலையிலும் நமக்கு துரோகம் செய்ய வேண்டாம்! எல்லாவற்றையும் எனக்குத் தெரியப்படுத்துங்கள்! இங்கே நான் உங்களுக்காக இருக்கிறேன்! 2 இராஜாக்கள் 5 ஐப் போலவே அந்த யூதப் பெண் சீரிய புறமதத்தை வென்றாள், ஆனால், நீயோ சோதோமையும் கொமோராவையும் வென்றுவிட்டாள் என்றோ ஒருநாள் சொல்லப்படும்! மீண்டுமாக, தேவனுக்கு துரோகம் செய்ய வேண்டாம், அவருடைய தீர்க்கதரிசிக்கு துரோகம் செய்ய வேண்டாம், உங்களுடைய கூட்டத்தினருக்கு துரோகம் செய்ய வேண்டாம்! " [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
5 மற்றொரு குறிப்பு ... சகோதரர் அப்பாவின் கேள்வியைத் தொடர்ந்து, காக்.44: இல் பரிசுத்த இராபோஜனம் பற்றி நான் கூறியது போல் பரிசுத்த போஜனமானது மது அல்லாத திராட்சை சாறுடன் மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும் என்று கூற விரும்புகிறேன். திராட்சை சாற்றுக்கு பதிலாக எதையும் மாற்றி வைக்க முடியாது. இது புளித்துபோகாத திராட்சை சாறாக இருக்க வேண்டும், அதாவது மது இல்லாமல் இருக்க வேண்டும். மேலும் இந்த திராட்சை ரசத்தை, பரிசுத்த இராபோஜனத்தை தவிர்த்து நீங்கள் அதை குடிக்கலாம். இது மது இல்லாத திராட்சை ரசம். இது இனிப்பான ரசம். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
6 சகோதரர் ஃபேபியன் மெடூவைப் பற்றி நான் இப்போது பேசியது போல, நாம் உலகம் முழுவதிலும் பல எதிரிகளை கொண்டிருக்கலாம், அதில் ஆர்வமான விஷயம் என்னவென்றால், நடுராத்திரி சத்தத்தின் பிரசங்கங்களை நம் விரோதிகள் கற்று தேர்ந்திருக்கிறார்கள் என்பது தான்! செய்தியை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற எளிய நோக்கத்திற்காக யாராவது ஒருவர் செய்தியை மிகச் சிறப்பாக கற்று தேர்ச்சியடைய முடியும் என்பதைப் பார்த்து நான் வருந்துகிறேன். அதன் பிறகு, அந்த நபர் நேராக நரகத்திற்கு செல்வார்!
7 இதுபோன்ற பிரசங்கம், அத்தகைய பிரசங்கம், அத்தகைய பிரசங்கம், நான் இதைச் சொல்லக்கூடாது என்று சொல்வதற்கு இதுபோன்ற குறிப்பு ஆகியவற்றை மேற்கோள் காட்டக்கூடிய ஒருவர் இருந்தார்! ஆனாலும், அவருடைய வித்தை வெளிப்படுத்துவதற்காக அவருடைய விசுவாசத்திற்கு இது வெறுமனே ஒரு சோதனையாக இருந்தது. ஆனால் மார்ட்டின் லூதர் திரித்துவத்தை பிரசங்கித்தும், பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் நாமத்தில் தெளிப்பு ஞான ஸ்தானத்தின் மூலம் ஆத்துமாக்கள் இரட்சித்தார் என்றும் மற்றும் அவர் தவறிழைக்காதன்மையின் முத்திரையைகொண்டிருந்தார் என்பதை அவருக்குத் தெரியப்படுத்துங்கள். எசேக்கியேல்1 இன் நான்கு ஜீவன்கள், அவை எந்த மனிதன் மூலம் தங்களை வெளிப்படுத்தினாலும் அல்லது எந்த வகையினாலும் அவைகள் தவறிழைக்காதவை . [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
8 அதே விதமாக, மற்றொரு வாரத்தில், நான் எம்ப்ரா பர்ஃபைட்டுடன் பேசிக் கொண்டிருந்தேன், அவர் கூறினார், "சகோதரர் காக்குவ், உங்கள் தீர்க்கதரிசியின் மேலங்கியை ஒதுக்கி வைத்துவிட்டு, வேதாகமத்தை எடுத்துக் கொள்ளுங்கள், வேதாகமத்தின் படி அதைச் செய்வதற்கான உரிமை உங்களிடம் இல்லை என்பதை நீங்கள் காண்பீர்கள்!". நான் அவரிடம், இது ஒரு இரகசியமாக இருக்குமானால், எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் ஒரு தீர்க்கதரிசி என்பதால், என் தீர்க்கதரிசியின் மேலங்கியுடன் தான் அதைச் செய்ய முடியும்! ஒரு காவலாளி தனது காவலாளியின் மேலங்கியை விட்டு வெளியேறி, அவர் கையில் துப்பாக்கியை வைத்திருக்கும்போது அவர் என்னவாகிறார்? அவர் ஒரு கொள்ளைக்காரன். நீங்கள் பார்க்கிறீர்களா? ஏப்ரல்24,1993 இன் அழைப்பு மற்றும் பணி நியமனத்தின் நற்பண்புகளில், ஒரு தீர்க்கதரிசியாக நான் அதையெல்லாம் செய்கிறேன்! மேலும் ஒவ்வொரு தீர்க்கதரிசியும் தலைமுறை தலைமுறையாக இந்த அழைப்பு மற்றும் பணி நியமத்தின் நற்பண்புகளின் வழியில் செயல்பட்டனர்.
9 வேதாகமம் என்பது தேவனுடைய முழு வெளிப்பாடு, உத்வேகம் மற்றும் தவறிழைக்காத தன்மை என்று சொல்லி நீங்கள் ஒரு தீர்க்கதரிசி கூறியதை ஒருவர் திருத்த முடியும் என்று விசுவாசிக்க முடியாது! நீங்கள் வேதாகமத்தில் ஒரு குறைபாட்டைக் காணாமல் ஒரு தீர்க்கதரிசியிடம் குறைபாட்டைக் காண முடியாது. இல்லையெனில் நீங்கள் தேவனுடைய தவறிழைக்காத தன்மையை விசுவாசிக்கவில்லை மற்றும் வேதாகமத்தின் நல்ல முழுமையான ஏவுதல், தவறிழைக்காத தன்மை மற்றும் பரிசுத்தத்தை நீங்கள் விசுவாசிக்கவில்லை!
10 வேதாகமம் தவறிழைக்காதது என்று நீங்கள் கூறும்போது, அது ஒவ்வொரு தீர்க்கதரிசி செய்தியாளனும் தவறிழைக்காதவன் என்று அர்த்தமாகும்! வேதாகமத்தின் முழுமையான தவறிழைக்காத தன்மை மற்றும் பரிசுத்தத்தை விசுவாசிப்பது என்பது உங்களுடைய தலைமுறை உட்பட பூமியில் தேவன் அனுப்பிய ஒவ்வொரு தீர்க்கதரிசியின் முழுமையான தவறிழைக்காத மற்றும் புனிதத்தன்மையை விசுவாசிப்பதாகும்! ஒவ்வொரு தீர்க்கதரிசி செய்தியாளனும் சாத்தானால் இழுக்க முடியாத ஒரு தூதன். அவனுக்குள் இருக்கும் யாவும் தவறிழைக்காத தன்மையாக இருக்கிறது ... [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
11 "யோவான் ஸ்நானகனுக்கு ஏரோதிடம் செய்தியை எப்படிக் கொடுக்க வேண்டும் என்று தெரியவில்லை அதனால்தான் அவனுடைய தலை வெட்டப்பட்டது, அவன் நாத்தான்வேல் தாவீதை எதிர்கொண்டது போல் அவன் நடித்திருக்கலாம்" என்று நீங்கள் சொன்னால் உங்களுக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. யோவான் ஸ்நானகன் தவறிழைக்க முடியாதவனாக இருந்ததினால் அவன் தோல்வியடைய முடியவில்லை! ஆபிரகாமும் சாராவும் அவர்களுடைய முதுமையைப் பற்றி தங்களுக்குள் நியாயப்படுத்தி, ஆபிரகாம் ஆகாரை எடுத்துக் கொண்டு இஸ்மவேலைப் பெற்றெடுத்தான், ஆனால் ஆபிரகாம் ஒரு தீர்க்கதரிசி என்பதால் தேவனை ஒருபோதும் சந்தேகிக்கவில்லை என்று வேதாகமம் கூறுகிறது. ஆபிரகாம் ஒரு முறையாவது சந்தேகித்ததாக தேவன் நினைவில் இல்லை!
12 தவறிழைக்காத தன்மையை குறித்து இன்னுமாக பேசுகையில், உதாரணமாக, யூதர்களின் ஞானஸ்நானமானது மூன்று கட்டங்களாக இருந்தது, மூன்று முறை முழுக்காட்டுதல் (Triple Immersion). ஒருவருக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் போது யூதர்கள் அவரை மூன்று முறை முழுக்கினர்! அது வார்த்தையின் ஒழுங்கிற்க்கேற்ப்ப இருந்தது. சபையின் வரலாற்றில், இந்த வகையில் அனேக காரியங்கள் இருந்தன! ஆனால் இன்று, நாம் நேரடியாக, ஒரே ஒரு முறை மாத்திரமே ஞானஸ்நானம் கொடுக்கிறோம் இது ஒழுங்கில் இருக்கிறது ஏனென்றால் மூன்றும் ஒன்றாக இருக்கிறது என்ற வெளிப்பாட்டை நாம் கொண்டிருக்கிறோம் மேலும் இந்த "ஒன்று" அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
13 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் என்பது ஒருவருடைய செய்தியின் மணி வேளைக்கானது. மேலும் பவுல் அப்போஸ்தலர்19-ல், அப்பொலோவின் சீஷர்களிடம் நீங்கள் எந்தப் பெயரில் அல்லது எவ்விதமாக ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்று கேட்கவில்லை, ஆனால் எந்த ஞானஸ்நானம் என்று கேட்கப்பட்டது? ஏனெனில் ஞானஸ்நானம் என்பது செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்]. ஞானஸ்நானம் எல்லா காலத்திலும் இருந்தது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்! ஜலப்பிரளயம் கூட ஒரு ஞானஸ்நானமே!
14 இப்போது இதைக் கவனியுங்கள்: எகிப்திய தெய்வங்களுக்கு எதிராக உள்ள மனந்திரும்புதலுக்காகவும் நானூறு வருடங்களாக எகிப்திய அஞ்ஞான மதத்தினால் இஸ்ரவேல் தொலைத்த யூத விசுவாசத்திற்காகவும் மோசே சிவந்த சமுத்திரத்தில் யூதர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். மோசேயிக்கு பின் வந்த யோசுவாவும் கூட, கானானுடைய மீட்டளிப்பிற்க்கென்று யோர்தானில் புதிதாக ஞானஸ்நானம் கொடுக்க வேண்டியிருந்தது! இவை இரண்டு வெவ்வேறு ஞானஸ்நானங்கள்! மேலும் அது வெவ்வேறு விதத்தில் இருந்தது ...
15 மோசேயின் காலத்தில்! மோசே தனது கோளை நீட்டினான், யோசுவாவின் நாட்களில், ஆசாரியர்களுடைய பாதங்களே அதைச் செய்தன. நாற்பது வருட கடுமையான பாலைவனத்தில், ஜனங்களை விட்டு கடந்து செல்வதற்கு முன்பாக இரட்சிப்பின் ஒவ்வொரு அடியையும் மோசே கடந்து வந்தான். நெபோ மலை தான் சபினோ கனியனாக உள்ளது மேலும் உபாகமம் 32:48 முதல் 52 தான் ஏழாவது முத்திரை. [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்]. மோசேயைப் போலவே, எலியாவும் யோர்தானை 2இராஜாக்கள் 2 இல் இரண்டாகப் பிளந்தான், எலிசாவும் அதைச் செய்தான்! இவை இரண்டு வெவ்வேறு ஞானஸ்நானங்களாக இருக்கிறது! இது ஒரு ஞானஸ்நானம் என்று யார் சொன்னார்கள்? என்று நீங்கள் கேட்க்கிறீர்கள். சிவந்த சமுத்திரத்தை கடந்து வந்தது தான் ஞானஸ்நானம் என்று சொன்ன அதே தீர்க்கதரிசன ஆவிதான் இதையும் சொன்னது! ஆமென்!
16 திரும்ப அளிக்கப்படுதலுக்காக கடந்த தலைமுறையான சாயங்கால வேளையிலே வில்லியம் பிரன்ஹாம் ஞானஸ்நானம் கொடுத்த போது, சபையை மீட்டளிக்கப்படுதலுக்கு கொண்டுவருவதற்காக நடுராத்திரி சத்தத்தின் செய்தியாளனும் அதிலே மிகவும் எளிய காரியமான ஞானஸ்தானத்தை கொடுக்கின்றான். அங்கு அமர்ந்து கொண்டிருக்கும் எளிமையானவர் கூட எவால்ட் ஃபிராங்க் வஞ்சிக்க முடியாது அங்கே சபையானது இருக்கிறது, ஆகையால் எவால்ட் ஃபிராங்க்கும் அங்கு இருக்கும் சிறியவர்களை கூட வஞ்சிக்க முடியாது, பிரன்ஹாமிஸ்டுகள் ஏற்கனவே மரித்துவிட்டனர், சிலர் மோவாபியர்களை திருமணம் செய்தனர் மற்றவர்கள் நிலங்களை கொண்டுள்ளனர், மற்றவர்கள் எருது ஜோடிகளை வாங்கினர். அதனால்தான் இங்கே நடுராத்திரி சத்தத்திற்கு வருவதற்கு அவர்களுக்கு நேரமில்லை [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்]
17 நல்லது, தேவனோடு பழக்கப்படுத்திக் கொள்ளுதல் என்ற பொருளின் பெயரில் இப்பொழுது நான் பேச விரும்புகிறேன்: முன்னேறாத எல்லாவற்றோடும் நாம் பழக்கமாகிவிடுவோம்! உலகமும் மாறிக்கொண்டிருக்கிறது, ஆண்டுகள் கடந்துக்கொண்டிருக்கிறது, அதே வகுப்பில் பாடபுத்தகங்கள் மாறுகிறது, ஏனெனில் உலகம் மாறுகிறது! ஒருவர் தனது வீட்டிற்குப் பழக்கமாகிக் கொள்ளலாம், ஒருவர் சபையுடன் பழக்கப்படுத்திக் கொள்ளலாம், ஆனால் ஒருவர் தேவனுடன் பழக்கப்படுவதில்லை!
18 நீங்கள் ஒரு வீட்டில் வசித்தீர்களானால், இறுதியில் நீங்கள் அதனோடு கூட பழக்கப்படுத்திக் கொள்வீர்கள் ஏனெனில் வீடு நகராது, எங்கும் செல்லாது, பரிணாமம் அடையாது. ஒரு நாளிலே நீங்கள் பார்வையற்றவராக இருந்தால், உங்களுடைய வழியைக் கண்டுபிடிப்பீர்கள் ஏனெனில் நீங்கள் உங்கள் வீட்டுக்கு பழக்கமாகி விட்டீர்கள்! இன்ன இன்ன கதவுகள் எங்கு வைக்கப்பட்டுள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள், ஏனென்றால் கதவுகள் அசைவதில்லை, எனவே மனிதனுக்கும் மதத்திற்கும் அது அவ்விதமாகத்தான்.
19 தன்னை பழக்கப்படுத்திக்கொள்ளும்படியான இயற்க்கையான ஆற்றலை தேவன் மனிதனுக்கு வழங்கியுள்ளார்! அதனால் சிம்சோனை போன்ற ஒரு பெரிய மனிதன் கூட எதோ ஒன்றோடு பழகப்படுத்தியதால் தெலீலாவுடன் விளையாடி, தன்னுடைய ஜடைகள் வெட்டப்பட்ட பிறகு அவன்: "இந்த முறையும் நான் எப்போதும் போல உதறிப் போட்டு வெளியே போவேன் என்றான்!" சிறு வயதிலிருந்தே நூற்றுக்கணக்கான முறை, தேவன் அவனுடன் அவ்வாறே நடந்து கொண்டார், அதனால் அவன் அவ்விதமாக பழக்கமாகி விட்டான்! நீங்கள் பார்க்கிறீர்களா? தேவனுடன் பழக்கப்படுத்திக் கொள்ளுதல்!
20 எல்லா நேரங்களிலும், தேவனுடன் பழக முற்படாத ஒரு மனிதன் இருந்ததில்லை. ஆனால் அது உண்மையான கிறிஸ்தவத்துடன் அப்படி இருக்க முடியாது ஏனெனில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நகர்ந்துக் கொண்டிருக்கிறார். ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் அவர்தான் என்று வேதாகமம் சொல்கிறது! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்]. அவர் பொற்க்குத்துவிளக்கு வடிவ பாலத்தில் நடக்கவில்லை, அவர் ஒரு பெரிய விளக்குத்தண்டு வடிவத்தின் விளக்குகளுக்கு இடையில் நழுவுகிறார் என்று அல்ல, ஆனால் அவர் ஏழு பொன் குத்துவிளக்குகளின் உலாவுவதாக வேதாகமம் கூறுகிறது. அவர் தூதர்கள் மத்தியில் உலாவுகிறார், தூதன் என்றால் செய்தியாளன் என்று பொருள். அவர் ஏழு பெற்குத்துவிளக்குகள் மத்தியில், ஏழு பொன் குத்து விளக்குகளினுடாக நடந்து செல்கிறார். அவை ஏழு பொருட்கள் அல்லது ஏழு மாம்ச பிரகாரமான விளக்குகள் அல்ல ஆனால் பூமியில் உள்ள சரீரப் பிரகாரமான நபர்களை ஆளுகை செய்யும் ஏழு பரலோக தூதர்களாவார்கள்! நீங்கள் பார்க்கிறீர்களா?
21 பரலோகத்தில் உள்ள ஏழு தூதர்கள் மற்றும் பூமியிலுள்ள சரீர பிரகாரமான செய்தியாளர்களும், அவர்களில் ஏழு பேர், முதல் இடத்திலுள்ள ஏழு பேர், தேசங்களின் திருச்சபையை நிறைவு செய்து, கறை திரையற்றவளாக தேவனிடம் சமர்ப்பிக்கிறார்கள்! இவ்வாறு, முதல் நூற்றாண்டில், அவர் பொன் குத்துவிளக்கின் முதல் விளக்கான பவுலுடன் ஆசியாவில் இருந்தார், இரண்டாவது காலத்தில், அவர் பிரான்சில் ஐரினேயஸுடன் இருந்தார், பொன் குத்துவிளக்கின் இரண்டாவது விளக்கு, இது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே! அங்கே ஒரேயொரு ஏழு விளக்குகள் உள்ள பொன் குத்துவிளக்கு உள்ளது. அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் அவருடைய ஏழு செய்தியாளர்களும். யாராவது ஒருவர் இன்னும் ஆசியவை பார்த்துக் கொண்டிருந்தால், அவர் எவ்வளவு ஆவிக்குறியவராக இருந்தாலும் அல்லது எவ்வளவு நன்றாக ஜிவித்தாலும் அது தவளையின் ஆவிதான்! இப்போது அவர் ஏழாவது தூதனாக இருக்கும் வரை அவ்விதமாக தான் இருந்தது!
22 நீங்கள் தேவனுடனும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடனும் பழக்கப்பட முடியாது. பேதுரு, யோவான், யாக்கோபு , மகதலேனா மரியாள், எலிசபெத், சூசன்னா மற்றும் பிறருடன் நடந்து கொண்டிருந்த இந்த மனிதருடன் நீங்கள் பழக்கப்பட்டிருந்தால்... ஐரேனியஸ் மூலம் தன்னை வெளிப்படுவது அவர்தான் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள், மார்ட்டின் லூதர் மூலம் தன்னை வெளிப்படுவது அவர்தான் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள், ஜான் கால்வின் மூலம் தன்னை வெளிப்படுவது அவர்தான் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள், ஜான் வெஸ்லி மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர் அவர்தான், வில்லியம் பிரன்ஹாம் மூலம் தன்னை வெளிப்படுத்துகிறார் என்பதையும் அவர் தான் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு மூலம் இன்று தன்னை வெளிப்படுத்துகிறார்! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
23 நீங்கள் வேதாகமத்தோடும், மதத்தோடும் பழக்கப்பட முடியும், ஆனால் நீங்கள் தேவனுடன் பழகப்பட முடியாது. 2இராஜாக்களில், பிரன்ஹாமிஸ்டுகள், "எலியாவைக் கண்டுபிடிக்க மலைகளுக்குச் செல்ல எங்களை அனுமதிக்கவும்" என்று சொன்னார்கள், இருப்பினும், எலிசா என்ற நபரில் எலியா அவர்களுக்கு முன் இருந்தான். எலிசா இதை அவர்களுக்கு அனுமதித்தான், அவர்கள் இயந்திர மற்றும் தியோபனிக் இடிமுழக்கங்களுக்குள் கூட பெரிய இரகசியங்களுக்குள் சென்றார்கள்! இதோ, எலியா அங்கே இல்லை. இன்னும் அவர்களுக்கு முன்பாக, எலியாவை காட்டிலும் மேலான ஒன்று அங்கு இருந்தது, ஆனால் அக்கினி வானத்திலிருந்து இறங்கவில்லை! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்]. நீங்கள் பார்க்கிறீர்களா? எலியா வேறொரு வடிவத்தில் அங்கே சென்று ஆசகேலையும் யெகூவையும் அபிஷேகம் செய்தான்! மேலும் இந்த பக்கத்தில், மோசேயுடன் பழக்படுவதற்கு எல்லா நேரத்தையும் தேடிய சிப்போராளுடன் இது வேலை செய்யவில்லை, ஆனால் அவளால் முடியவில்லை.
24 ஒரு கட்டளை அல்லது ஒரு நியாயப்பிரமாணம் இருப்பதற்கு முன்பே, சிப்போராள் அங்கே இருந்தாள். அவள் நியாயப்பிரமாணத்தின் முன் இருந்தாள். ஆனால் சகோதரரே, வனாந்தரத்தில் காரியங்கள் இப்படி நடக்கும் என்று அவள் அறிந்திருந்தால், அவள் எகிப்திலிருந்து வெளியேயிருக்க மாட்டாள். ஆனால் அவள் எகிப்துக்குத் திரும்ப முடியாது என்பதைக் கண்டதும், அவள் மோசேயுடன் பழக்கப்படுத்திக்கொண்டாள். அது தோல்வியுற்றது, ஏனென்றால் அது இப்போது மோசேக்குள் தேவன் என்பதால் அவளால் தேவனுடன் பழக்கப்டுத்திக்கொள்ள முடியவில்லை. இது எகிப்திலிருந்து இஸ்ரவேல் வெளியே வருவதற்கான சரியான மாதிரியாகும், அதே வேளையில் நியாயப்பிரமாணத்தின் நிமித்தம் எத்தியோப்பிய பெண் பாலைவனத்தில் தோன்றினாள்.
25 ஞானஸ்நானத்திற்காக ஒருவர் தூரத்திலிருந்து வரும் அதே வேளையில், ஞானஸ்நானத்தின் மதிப்பு தெரியாத அனைவரையும் இங்கே தூக்கி எறிய வேண்டும் என்பது தெளிவாகிறது. [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
26 இஸ்ரவேல் தன்னை ராஜாக்களுடன் நன்கு பழக்கப்படுத்திக் கொண்டதால், அவள் தீர்க்கதரிசிகளுடன் ஒருபோதும் வெற்றி பெறவில்லை. மேலும் வார்த்தையின் ஊழியம் இல்லாத மேய்ப்பருடன் மதம் சாற்ப்பாக பழக்ப்படுகிறது, அதேசமயம் கிறிஸ்தவம், உண்மையான திருச்சபை, உயிருள்ள தீர்க்கதரிசியைப் பார்த்து பெருமூச்சு விடுகிறது. நீங்கள் பார்க்கிறீர்களா?
27 மனிதன் அவனைக் கொண்டிருக்கும் காரியத்துடன் பழக்கப்படுத்திக்கொள்ள விரும்புகிறான், ஏவாள் சர்பத்தினுடன் செய்த அதே விதமாக தான், பாவத்துடன் பழக்ப்படுத்திக்கொள்வது! பல முறை, ஏவாள் தன் செய்திகளையும் ஆதாமின் செய்திகளையும் விசாரித்த சர்பத்தின் பாதையில் நின்றாள்! வெளிப்படையாக அது தேவனுக்கு முன்பாக ஒன்றுமில்லை, அது ஒரு பாவம்! அவள் சர்பத்தினுடன் பழகப்படுதிக்கொள்ள ஆரம்பித்தாள்! நரகத்தின் பாதையை சுதந்திரமாகத் தேர்ந்தெடுப்பது. நீங்கள் பார்க்கிறீர்களா?
28 மேலும் தேவன் இஸ்ரவேலை விரட்டிவிட்டு அவளைத் திரும்பக் கொண்டுவந்தார்; அவன் அவளை விரட்டி அவளைத் திரும்பக் கொண்டு வந்தார், அவளை விரட்டித் திரும்பக் கொண்டுவந்தார். தேவன் ஒவ்வொரு முறையும் அவருடைய நாமத்தினிமித்தமும், அவருடனான அவருடைய உடன்படிக்கையின் நிமித்தமும் தேசங்களுக்கு எதிராக வெற்றியைக் கொடுத்தார் ... அவள் அதைப் பழக்கப்படுத்திக்கொண்டு, இலகுவானவளாக இருந்ததால், ஏனென்றால் தேவன் அவளை பல முறை விரட்டி அவளை மீண்டும் கொண்டு வருவார் என்று அவள் அறிந்திருந்தாள்!
29 தேவன் தனக்கு எச்சரிப்பு கொடுத்த அந்த குறிசொல்லும் மற்றும் விபச்சாரத்தால் குடித்து வெறித்த அந்த அசுத்தமான நாடுகளிலிருந்து, அவளுக்குப் பதிலாக ஒரு மணவாட்டியை தேவன் எடுத்துக்கொள்வார் என்று இஸ்ரவேல் நினைத்ததில்லை! சிப்போராளுக்குப் பதிலாக மோசே ஒரு ஆப்பிரிக்கப் பெண்ணை அழைத்துச் சென்றபோது, அது தேவன் தனக்குக் கொடுத்த அடையாளம் என்று இஸ்ரவேல் பார்க்கவில்லை. நீங்கள் பார்க்கிறீர்களா?
30 இதுதான் இஸ்ரவேலுக்கு மிகவும் புண்படுத்தியதாக உணர்ந்தது. தேசங்களின் ஒரு பெண். அது தான் ராஜஸ்திரீயாகிய வஸ்தியின் தவறாகவும் இருந்தது, அவள் மந்திரிகள், இளவரசர்கள் மற்றும் அகாஸ்வேரு ஆகியோருடன் அவள் மிகவும் பழக்கமாகிவிட்டாள், அவள் ஒருபோதும் அதை நினைத்துப் பார்த்ததில்லை! வஸ்தி மெமுகானை நன்கு அறிந்திருந்தாள் ... ஆனால் இந்த முறை, தேவன் தாமே தனது வார்த்தையை நிறைவேற்றுகிறார்! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
31 இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நாளிலே, ஒரு கறுப்பின நபர், ஒரு ஆப்பிரிக்கன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருப்பான் என்று அமெரிக்காவின் அந்த வெள்ளை மக்களால் நினைக்க முடியவில்லை! இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நாள், தேவன் ஒரு ஆப்பிரிக்கனை கொண்டு பூமியெங்கும் பேசுவார் என்று வெள்ளையர்களால் நினைக்க முடியவில்லை. அவர்கள் தென்னாப்பிரிக்காவில் வில்லியம் பிரன்ஹாமிடம், "கறுப்பர்களை இணைக்காதீர், அவர்களை அழைக் வேண்டாம்! அவர்களுக்கு ஆத்துமா இல்லை, அவைகள் வெறுமனே விலங்குகள்" என்று சொன்னார்கள்! ஆனால் இன்று, பிலேயாமின் கழுதையைப் போலவே, விலங்கு எல்லா மனிதர்களிடமும், பூமியின் மதத்தினரிடமும் பேசுகிறது. [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
32 நல்லது, நாம் இங்கே திரும்பி வருவோம் ... மோசேயுடனான நடைப்பயணத்தில், மோசே ஊழியத்தின் ஒவ்வொரு "படி"க்கும் இஸ்ரவேல் பழகிவிட்டது. மற்றொரு படி வந்தபோது, அது ஒன்றும் செய்யவில்லை! தேவன் அதற்கு ஒரு தீர்க்கதரிசியை அனுப்பியபோது, அதை ஒன்றும் செய்யவில்லை மேலும் அந்த தீர்க்கதரிசி மரித்தபோது, அது அவனிடமிருந்து ஒரு மதத்தை உருவாக்கி, அதற்கு அது பழகிவிட்டது, மற்றொரு தீர்க்கதரிசி வந்ததும், அது அதே விதமாக, அது தான் லூத்தரன்கள், கால்வினிஸ்டுகள், ஸ்விங்லியன்ஸ், மெதடிஸ்டுகள் மற்றும் பிரன்ஹாமிஸ்டுகளின் நிலையாகும். மேலும் என் பிரார்த்தனை என்னவென்றால், உங்களுக்கு அது அவ்விதமாக இருக்காது. நீங்கள் தேவனுடன் பழக்கிவிக்கப்பட முடியாது! நீங்கள் பார்க்கிறீர்களா?
33 அவரால் வெவ்வேறு வடிவங்களில் தோன்ற முடியும்! மேலும் தோற்றத்தைப் பற்றி, ஓ சகோதரர் பிலிப்பு, ஆபிரகாமுக்கு அவர் எப்படி இருந்தார் என்ற ஒரு யோசனை இருந்தது, அதனால்தான் அவரை மம்ரேவின் கூடாரத்தில் இனங்கண்டுகொண்டார், என்று நீங்கள் கூறுகிறீர்கள்! இல்லை, சகோதரரே, தேவனுக்கு தோற்றம் ஏதுமில்லை! தெய்வீக வெளிப்பாட்டினால் தான் ஆபிரகாம் அதைச் செய்தார்! கர்த்தருடைய தூதனும் பழைய ஏற்பாட்டில் வெவ்வேறு வடிவங்களில் தோன்றினார்! அவர் அத்தகைய ஒரு தீர்க்கதரிசியுடன் ஒரு குறிப்பிட்ட வழியில் செயல்பட்டார், அவர் வேறு சில தீர்க்கதரிசியுடன் வேறு வழியில் செயல்பட்டார், மேலும் அவர் நூற்றுக்கணக்கான வெவ்வேறு வழிகளில் செயல்பட்டார், அதனால் மனிதன் இன்னும் புரிந்து கொள்ளவில்லை, என்னை அனுப்பிய சர்வவல்லமையுள்ள தேவனை ஒருபோதும் புரிந்து கொள்ள மாட்டான்! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
34 ஆனால் புரிந்து கொள்ள முடியாததை ஒருவரை எவ்வாறு பழக்கப்படுத்திக் கொள்ள முடியும்? ஆனால் ஒருவன் தேவனை புரிந்துகொண்டால் அல்லது பழக்கப்படுத்திக் கொண்டால், ஒருதலைமுறை விட இன்னொரு தலைமுறைக்கு பாரபட்சம் காட்டப்படும். ஆனால் அப்படி இருக்க முடியாது! அதனால்தான் நடுராத்திரி சத்தமும் வில்லியம் பிரன்ஹாமின் செய்தியிலிருந்து வேறுபட்டது. [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
35 வில்லியம் பிரன்ஹாம் தேவன் அவரை திரும்ப அழைத்தபோது அவரது காலத்தின் கள்ள போதகர்களின் பெயரைக் கூற விரும்பினார் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. "நியாயத்தீர்ப்பை திட்டவட்டமாக அறிவித்தல்!" என்று அவர் பிரசங்கிக்க விரும்பினார். அவர் அவ்வாறு செய்திருந்தால், தேவனின் ஊழியர்களாக இல்லாதவர்கள் தங்களை அவ்விதமாக அழைத்துக்கொள்வார்கள் என்பதற்கு ஜனங்கள் பழக்கப்பட்டு இருப்பார்கள்.
36 இந்த பிரசங்கத்தைப் பற்றிப் பேசும்போது, இது சிகென்சியில் தனது சபையை கொண்டிருந்த ஒரு சிறிய தீர்க்கதரிசியின் அழைப்பையும் மற்றும் பணிநியமத்தையும் நினைவூட்டுகிறது. அவர் தனது "அழைப்பிற்கு" இதை கூறினார், "ஒரு சொப்பனத்தில், தேவன் என்னை ஒரு மிக உயர்ந்த மலையில் வைத்திருந்தார். என் கையில் ஒரு பெரிய கின்னத்தை (Calabash) வைத்திருந்தேன் அதில் கொஞ்சம் தண்ணீர் இருந்தது, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் என்னிடம்," பூமியில் உள்ள எல்லா விலங்குகளுக்கும் தண்ணீர் காட்டு!" என்றது. உடனடியாக பூமியின் அனைத்து விலங்குகளும் என்னிடம் வருவதைக் கண்டேன்: எருதுகள், கொரில்லாக்கள், கங்காருக்கள், ஆப்பிரிக்கா ஒட்டகங்கள், சிறுத்தைகள், காண்டாமிருகங்கள், முதலைகள், ஒட்டகச்சிவிங்கிகள், செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள், கோழிகள் மற்றும் பல இருந்தன. எனக்குள்ளே நான் இவ்விதமாக சொல்லிக்கொண்டேன்: " நான் பெரியவைகளுடன் துவங்கினால், சிறியவைகளுக்கு இருக்காது, எனவே நான் சிறியவைகளுடன் தொடங்குவேன். மேலும் நான் கோழிகளுக்கு முன்னால் கின்னத்தை வைத்தேன், பின்னர் வாத்துகளுக்கு முன்னால் வைத்தேன், பின்னர் பூனைகள், நாய்கள் , செம்மறி ஆடுகள், பன்றிகள் ... மேலும் எல்லா விலங்குகளும் தண்ணீரைக் குடித்தபோது, நான் உள்ளே பார்த்தேன், அதில் சிறிது இருந்தது, நான் திரும்பிச் சென்றபோது, எருமைகள், மிருகங்கள் மற்றும் ஏராளமான பெரிய விலங்குகளைக் கண்டேன் பெரிய கொம்புகள், இந்த விலங்குகளில் கடைசியாக குடித்து முடித்ததும், கின்னத்தில் தண்ணீர் இல்லை.
37 தேவன் தாமே இதை உண்மையில் அவருக்குக் காட்டினார், மேலும் அவர் செய்தியை விசுவாசிப்பார் என்று சொன்னேன். ஒரு நாளிலே, அவர் செய்தியை விசுவாசிக்கிறேன் என்று என்னிடம் சொல்ல திரும்பிவந்த போது, நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், நான் அவருடன் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் இரவு உணவின்போது கழித்தேன், ஏனென்றால் என்னைப் பொறுத்தவரை, இறுதியாக என்னை போன்ற அதே இனத்தைச் சேர்ந்த முதல் போதகர் இங்கே இருக்கிறார் . பின்னர் அவர் ஞானஸ்நானம் பெற்றார். "உன்னுடையதைத் தவிர பூமியின் எல்லா விலங்குகளுக்கும் அவர் தண்ணீர் கொடுப்பார்" என்று வெளிப்பாட்டில் என்னிடம் கூறப்பட்டது. [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்]. நான் சொன்னேன்: உமக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக, நீர் தீர்க்கதரிசிகளின் ஆவிகளான தேவன். உலகத்தின் அஸ்திவாரத்திற்கு முன்பாக நீங்கள் இரட்சிப்பிற்காக விதிக்கப்பட்டவர்களைச் சுத்திகரிக்கவும், வெண்மையாக்கவும், செம்மைப்படுத்தவும் தகுதியானவர் நீரே!